இந்த வாரம் இப்படித்தான் - நட்சத்திரப் பலன்கள்; எந்தக் கிழமைகளில் என்னென்ன பலன்கள்? அஸ்தம்  முதல் விசாகம்  வரை (டிசம்பர் 16 முதல் 22-ம் தேதி வரை)

By செய்திப்பிரிவு


- ஜோதிடர் ஜெயம் சரவணன்

அஸ்தம் -
இந்த வாரம் பயணங்கள் அதிகமாக இருக்கும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வியாபார ஒப்பந்தங்கள் மன மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தொழில் தொடர்பாக எடுத்த முயற்சிகள் வெற்றியாகும். அதிக பயணத்தின் காரணமாக உடல்நல பாதிப்புகள் ஏற்படும். ஆனால் கவலை கொள்ளும் விதத்தில் இருக்காது. சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சுமூகமாக முடிவடையும். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். சொத்து விற்பதும் சாதகமாக இருக்கும்.குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை தோன்றும். குழந்தைகளின் பெயரில் சேமிப்புகளைத் தொடங்குவீர்கள்.

உத்தியோகம் -
பணியிடத்தில் பெரிய பாதிப்பு ஏதும் இருக்காது. வேண்டிய உதவிகள் அலுவலகத்திலேயே கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். சக ஊழியர் ஒருவரின் வேலையை நீங்கள் செய்யவேண்டியது வரும். புதிய பொறுப்புக்கள் உங்களிடம் கொடுப்பார்கள்.
அரசு ஊழியர்களாக இருந்தால் இடமாற்றம் தொடர்பான விஷயங்கள் இந்த வாரம் சாதகமாக இருக்கும். மற்றபடி வேலையில் பெரிய பிரச்சினைகள் ஏதும் இருக்காது. கடைகளில் பணிபுரிபவர்களுக்கும், மற்றும் வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கும் வேறு நிறுவனத்திற்கு மாறும் முயற்சி சாதகமாக இருக்கும்.

தொழில் -
தொழிலில் எதிர்பார்த்த அத்தனை உதவிகளும் கிடைக்கும். அதிலும் வெளிநாட்டிலிருந்து முதலீடுகள் எதிர்பார்த்து இருந்தால் அது இந்த வாரம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சியில் வங்கிக் கடன் கிடைக்க பெறுவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு அதிக அளவிலான ஒப்பந்தங்கள் கிடைக்கும். பங்கு வர்த்தகத் துறையினர் இருமடங்கு லாபம் உண்டு. வியாபாரிகள் தங்கள் கடையை விரிவுபடுத்துவது அல்லது புதிய கிளைகளை ஆரம்பிப்பது என சாதகமாக இருக்கும். ஒரு புதிய பொருளை மொத்த விற்பனையாளராக பெறுவதற்கு முயற்சி செய்வீர்கள்.

பெண்களுக்கு -
வேண்டிய உதவிகள் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இப்பொழுது பதவி உயர்வு கிடைக்கும். ஆனாலும் மனதில் ஏதோ ஒருவித இறுக்கம் இருந்து கொண்டே இருக்கும்.

மாணவர்களுக்கு -
கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கல்வி தொடர்பான உதவிகள் கிடைக்கும். ஆசிரிய பெருமக்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கும்.

கலைஞர்களுக்கு -
ஒரு சில பேச்சுவார்த்தைகளில் சுமுகமான நிலை ஏற்படும். ஒப்பந்தங்கள் ஏற்பட இன்னும் இரண்டு வாரங்கள் காத்திருக்க வேண்டியதிருக்கும். ஆனாலும் பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வெளிநாடு செல்லும் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

பொதுப்பலன் -
நன்மைகள் அதிகமாக நடக்கும். ஆரோக்கியத்தில் மட்டும் சிறுசிறு பிரச்சினைகள் வரும். ஆனால் பெரிய பாதிப்புகள் எதுவும் இருக்காது. குறிப்பாக மூச்சுப்பிடிப்பு, கை கால் சுளுக்கு போன்றவை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

இந்த வாரம் -

திங்கள் - பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினை இன்று முடிவுக்கு வரும். வங்கியில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். தொழில் சம்பந்தமாகவோ அல்லது வியாபார சம்பந்தமாகவோ பேச்சு வார்த்தைகள் ஏதும் நடந்து கொண்டிருந்தால், இன்று அது நல்ல சுமுகமான முடிவுக்கு வரும்.

செவ்வாய் -செலவுகள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கும். ஒரு சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வாகனப் பழுது போன்றவை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. சந்திப்புகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் ஏதும் இருந்தால் தள்ளி வையுங்கள்.

புதன் - வெளிநாட்டில் இருந்தோ அல்லது வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களிடம் இருந்தோ நல்ல தகவல் வந்து சேரும். அது வேலை சார்ந்ததாக இருக்கும். வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும். ஒப்பந்தங்கள் ஏற்படும்.

வியாழன் - பணியிட மாற்றம் எதிர்பார்த்த மாதிரியே இன்று கிடைக்கும். அல்லது அது தொடர்பான தகவல் உங்களுக்கு வந்து சேரும். சொத்து சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும். வழக்குகள் ஏதேனும் இருந்தால் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும்.

வெள்ளி - வியாபார விஷயமாக வெளியூர் செல்ல வேண்டி வரும். அல்லது அலுவலக விஷயமாக வெளியூர் செல்ல வேண்டியது இருக்கும். தொழில் தொடர்பான முக்கிய நபரை சந்திப்பீர்கள். அது ஆதாயம் தருவதாக இருக்கும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும்.

சனி- திட்டமிட்ட காரியங்கள் மட்டுமல்லாமல், திட்டமிடாத காரியங்களும் வெற்றிகரமாக முடிப்பீர்கள். அலுவலகத்தில் தேங்கியிருந்த வேலைகள் அனைத்தையும் இன்று செய்து முடித்து விடுவீர்கள்.

ஞாயிறு - குடும்பத்தோடு நேரத்தைச் செலவிடுவது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும். நண்பர்களோடு வெளியே எங்கும் செல்ல வேண்டாம். வீண் பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீமகா விஷ்ணுவுக்கு துளசி மாலை அணிவித்து, தீபம் ஏற்றி வழிபடுங்கள். நன்மை அதிகமாகும். ஆரோக்கியம் சீராகும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.

***************************************


சித்திரை -
எடுத்த முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும்.ஒரு சில முயற்சிகள் தாமதமானாலும் முடிவில் உங்களுக்கு சாதகத்தையே தரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்ப பிரச்சினைகள் ஏதும் இருந்தால் அவை இப்பொழுது சுமுகமாகத் தீரும். ஆரோக்கியத்தில் இருந்த ஒரு சில குறைபாடுகள் குறையும்.புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி தரும்.நண்பர்களிடம் ஏற்பட்ட மன வருத்தங்கள் அகலும். கடன் சம்பந்தமான பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். வங்கிக் கடனுக்கு எடுத்த முயற்சிகள் சாதகமாக இருக்கும்.

உத்தியோகம் -
பணியிடத்தில் பெரிய மாறுதல்கள் ஏதும் இருக்காது. கடந்த வாரத்திலிருந்த நிலையே இப்போதும் தொடரும். அரசு ஊழியராக இருந்தால் ஒரு சில கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். வேலையில் இடமாற்றம் விரும்பியவர்களுக்கு இந்த வாரம் இடமாற்றத்திற்கான வாய்ப்பு உள்ளது. வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வேறு நல்ல நிறுவனத்திற்கு மாறும் முயற்சி எடுப்பார்கள். அந்த முயற்சி நன்மையைத் தரும்.

தொழில் -
தொழிலில் எதிர்பார்த்த நன்மைகள் நடக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். உற்பத்தியான பொருட்கள் தேங்கி இருந்த நிலைமை மாறி, வேகவேகமாக விற்பனையாகும். புதிதாக தொழில் தொடங்கும் எண்ணம் உடையவர்களுக்கு இந்த வாரம் சாதகமாகவே அமையும். பங்கு வர்த்தகத் துறையினர் ஓரளவுக்கு லாபம் கிடைக்கப் பெறுவார்கள். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் வளர்ச்சி காண்பார்கள். புதிய வியாபாரத்தை ஆரம்பிப்பார்கள்.

பெண்களுக்கு -
எதிர்பார்த்த சகோதர உதவி கிடைக்கும். வீடு மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. இதுவரை வேலை இல்லாத பெண்களுக்கு இப்பொழுது நல்ல வேலை கிடைக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். ஆடை ஆபரணம் பரிசாகக் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

மாணவர்களுக்கு -
கல்வியில் எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். புதிதாக கல்வி கற்கும் ஆர்வம் ஏற்படும்.

கலைஞர்களுக்கு -
எதிர்பார்த்த ஒரு சில விஷயங்கள் சாதகமாக இருக்கும். ஆனாலும் ஒப்பந்தங்கள் ஏற்படுவது இன்னும் தள்ளிப் போகும்.

பொதுப்பலன் -
ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் இருக்கும். ஆனாலும் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட காலமாக மருந்து எடுத்துக் கொண்டிருந்தவர்களுக்கு இப்பொழுது அதில் பாதியாக குறையும். சொந்த வீடு வாங்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு அதற்கான உதவிகள் கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.

இந்த வாரம் -

திங்கள் -பெரிய அளவிலான நன்மைகள் கிடைப்பதில் தாமதமாகும். ஒரு சில உதவிகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நீண்டு கொண்டே போகும்.

செவ்வாய் - நேற்றைக்கு பாதியில் விட்ட விஷயங்கள் இன்று தொடரும். அது சாதகமாகவே இருக்கும். பணத்தேவைகள் எதிர்பார்த்தபடியே கிடைக்கும்.

புதன் - ஒரு சில ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். சந்திக்கவேண்டிய நபரை சந்திக்க முடியாமல் போகும். எதிர்பார்த்த உதவி இன்று கிடைப்பது அரிது. .

வியாழன் -வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும். ஒப்பந்தங்கள் ஏற்படும். வங்கியில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். தொழில் நிமித்தமாக உதவிகள் அதிக அளவில் கிடைக்கப் பெறுவீர்கள்.

வெள்ளி - வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றியாகும். அலுவலக விஷயமாக வெளியூர் செல்ல வேண்டியது வரும். வியாபார விஷயமாக பயணங்களை மேற்கொண்டால் இன்று அது வெற்றிகரமாக முடியும்.

சனி- குடும்ப நலன் சார்ந்து ஒரு சில நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். சேமிப்புகளை அதிகப்படுத்தும் முயற்சியில் இறங்குவீர்கள். வாகனத்தை மாற்றும் சிந்தனை மேலோங்கும். புதிய வாகனம் வாங்கும் முயற்சியில் இறங்குவீர்கள்.

ஞாயிறு - சொத்து சம்பந்தமான விஷயங்கள் சுமுகமாக இருக்கும். பூர்வீகச் சொத்தை விற்று புதிய சொத்து வாங்கும் எண்ணம் செயல்பாட்டுக்கு வரும். அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும்.

வணங்கவேண்டிய தெய்வம் -
காவல் தெய்வங்களான எல்லை தெய்வங்கள் உங்களுக்குத் துணையாக இருப்பார்கள். குறிப்பாக அய்யனார், முனீஸ்வரன் முதலான தெய்வங்களை வணங்குவது பிரச்சினைகளைத் தீர்க்கும். தடைகள் தாமதங்கள் அகலும். ஆரோக்கியம் மேம்படும்.

**********************************************************************


சுவாதி -
நினைத்ததை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். தடைபட்டிருந்த திருமண விஷயங்கள் இப்பொழுது சாதகமாகும். இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு இப்பொழுது நல்ல வேலை கிடைக்கும். இதுவரை தொழில் முயற்சியில் இறங்காதவர் கூட, இந்த வாரம் தொழில் தொடங்குவது பற்றிய சிந்தனை ஏற்படும்.

உத்தியோகம் -
எதிர்பார்த்த பதவி உயர்வு எதிர்பாராத நேரத்தில் கிடைக்கும். அது இந்த வாரம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. பதவி உயர்வு மட்டுமல்லாமல் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அரசு ஊழியர்களுக்கு விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். அலுவலகத்திலிருந்து வரவேண்டிய நிலுவைத் தொகைகள் இந்த வாரம் கிடைக்கும். கடைகள் வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு இப்போது பணிபுரியும் இடத்தை விட, வேறு நல்ல நிறுவனத்திற்கு மாறுவீர்கள்.

தொழில் -
தொழிலில் எதிர்பார்த்த அத்தனை உதவிகளும் கிடைக்கும். குறிப்பாக ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைப்பது மட்டுமல்லாமல், அதிக ஒப்பந்தங்களும் கிடைக்கப் பெறுவார்கள். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். வியாபாரிகள் மிகப்பெரிய அளவிலான வியாபாரம் வளர்ச்சியைக் காண்பார்கள், புதிய கிளைகளை துவங்குவார்கள், புதிய ஏஜென்சிகளை பெறுவார்கள்.

பெண்களுக்கு -
நீங்கள் விரும்பியது அனைத்தும் கிடைக்கும். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். அடகு வைத்த பொருட்கள் அனைத்தையும் மீட்க வழி கிடைக்கும். சகோதரர்கள் பெருமளவு உதவுவார்கள். தாமதப்பட்டு கொண்டிருந்த திருமணம் நிச்சயமாகும்.

மாணவர்களுக்கு -
கல்வியில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். வெளிநாடு சென்று கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு இப்பொழுது அந்த விருப்பம் நிறைவேறும். கல்வி தொடர்பான வங்கிக் கடன் கிடைக்கும்.

கலைஞர்களுக்கு -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் முழு திருப்தியை தரும் வண்ணமாக இருக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். அயல் நாடுகளில் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.

பொதுப்பலன் -
அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். ஒரு சில தடைகள் வந்தாலும் அந்த தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள். எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும். ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்திலும் தொழிலிலும் லாபம் அதிகமாக இருக்கும். சேமிப்புகள் உயரும் . அசையாச் சொத்து வாங்குவீர்கள்.

இந்த வாரம் -
திங்கள் - சொத்து வாங்குவது விற்பது போன்ற விஷயங்கள் சிறப்பாக முடியும். ஒப்பந்தங்கள் ஏற்படும். எதிர் பார்த்த பணம் கிடைக்கும்.

செவ்வாய் - வியாபார பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இருக்கும். தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும். ஆனாலும் அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். உடலில் ஒருவித சோர்வு ஏற்படும்.

புதன் - கடன் சம்பந்தமான பிரச்சினை முடிவுக்கு வரும். வங்கி தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். சொந்த வீடு வாங்கும் முயற்சி முழு வெற்றியை ஏற்படுத்திக் கொடுக்கக் கூடிய நாளாக இந்த நாள் இருக்கும்.

வியாழன் - ஒரு சில தேவையில்லாத பிரச்சினைகள் வரும். அதை உங்கள் சாமர்த்தியத்தால் சமாளிப்பீர்கள். முடிந்தவரை அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது.

வெள்ளி - வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அது தொடர்பான தகவல் இன்று உங்களுக்குக் கிடைக்கும். தொழில் தொடர்பான ஒரு பெரிய உதவி கிடைக்கும், அது பண உதவி யாகவும் இருக்கலாம்.

சனி - உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். புதிய வாகனம் வாங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்வீர்கள். கொடுத்த கடன் திரும்ப கிடைக்கும்.

ஞாயிறு - குடும்பத்தினருடன் அல்லது நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். வியாபார விஷயங்களில் இன்று வெற்றி நிச்சயம். எதிர்பார்த்த உதவி இன்று கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் - அருகிலிருக்கும் ஐயப்பன் கோயிலுக்குச் செல்லுங்கள். ஐயப்பனின் அபிஷேகத்திற்கு நெய் வாங்கித் தாருங்கள். நன்மைகள் அதிகமாக நடக்கும். சகோதர ஒற்றுமை ஏற்படும். தேவைகள் பூர்த்தியாகும்.
************************************************

விசாகம் -
எடுக்கும் முயற்சிகளில் பாதிக்குமேல் வெற்றி கிடைக்கும். மீதி முயற்சிகள் தாமதமானாலும் சாதகமாக இருக்கும்.குடும்பத்தில் தேவையில்லாத விவாதங்கள் ஏற்படும். கருத்து வேறுபாடுகளும் ஏற்படும். எனவே விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் பிரச்சினைகளை சமாளிக்க முடியும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வேலைக்குச் செல்பவர்களுக்கு உங்களுக்கு தொடர்பு இல்லாத வேலைகளை செய்யச் சொல்லி நிர்பந்திக்கப்படுவீர்கள்.

உத்தியோகம் -
பணியில் ஒரு சில அழுத்தங்கள் ஏற்படும். அடுத்தவர் வேலையையும் நீங்கள் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும். இடமாற்றம் விரும்பியவர்களுக்கு இப்பொழுது அந்த இடமாற்றம் கிடைக்கும். வேறு வேலைக்கு மாறும் முயற்சியில் இருப்பவர்களுக்கு, அந்த முயற்சிக்கு இந்த வாரம் சாதகமான பதில் கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு வேலையில் அதிகச் சுமை ஏற்படும். வேலை நேரம் கடந்தும் வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். கடைகள் வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு அந்த நிறுவனத்தின்வேறொரு கிளைக்கு மாற்றப்படுவீர்கள், அது உங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தும்.

தொழில் -
தொழிலில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து சில முதலீடுகள் கிடைக்கும். அரசு தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக மாறும். வழக்கு ஏதேனும் இருந்தால் வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு பெரிய பாதிப்புகள் ஏதும் இருக்காது, சுமுகமான நிலையே தொடரும். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்கள் முதலீடுகளை குறைத்துக்கொள்ளுங்கள். வியாபாரிகள் நல்ல வளர்ச்சி காண்பார்கள், கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். நிலுவைகளை கறாராக வசூலிக்க வேண்டும்.

பெண்களுக்கு -
சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். மனதில் தேவையில்லாத ஒரு சங்கடம் உருவாகும். ஆலய வழிபாடு மன அமைதி தரும்.

மாணவர்களுக்கு -
கல்வியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். புதிய கல்வி பயிலும் ஆர்வம் ஏற்படும்.

கலைஞர்களுக்கு -
புதிய ஒப்பந்தங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் தொடங்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும்.

பொதுப்பலன் -
அதிக சிரத்தையுடன் கூடிய முயற்சிகளை எடுக்க வேண்டாம். உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டாலே போதும். உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆனாலும் ஒரு சில தேவைகளுக்கு பண நெருக்கடி ஏற்படும். சேமிப்பு கரையும். ஆரோக்கியத்தில் சிறுசிறு உபாதைகள் ஏற்படும். கவலைப் படும்படியாக ஏதும் இருக்காது. ஒரு சிலருக்கு வாயில் புண், பல் வலி, தொண்டை வலி போன்றவை ஏற்படும். தந்தையின் உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும்.

இந்த வாரம் -

திங்கள் -மனம் வருந்தும்படி ஒருசில செயல்கள் நடக்கும். அதைப் பற்றி அதிகம் கவலை கொள்ளாமல் உங்கள் வேலையை மட்டும் செய்யுங்கள்.

செவ்வாய் - சொத்து விற்பனை தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.

புதன் - அலைச்சல்கள் அதிகரிக்கும். தந்தையின் உடல்நலத்தில் சில அசவுகரியம் ஏற்படும். மருத்துவச் செலவுகள் ஏற்படும். வீண் செலவுகள் அதிகமாக இருக்கும்.

வியாழன் - கடன் சம்பந்தப்பட்ட பிரச்சினை முடிவுக்கு வரும். ஏதாவது ஒரு வகையில் பணம் கிடைத்து ஒரு முக்கிய கடனை அடைப்பீர்கள். தொழில் தொடர்பாக வங்கியில் எதிர்பார்த்த கடன் கிடைக்கும்..

வெள்ளி -வியாபார பேச்சுவார்த்தைகள் அல்லது முக்கிய நபர்களின் சந்திப்பு போன்றவை ஏதேனும் இருந்தால், அவற்றை தள்ளி வையுங்கள். பண நெருக்கடி ஏற்படும்.

சனி- உத்தியோகம் சம்பந்தமான ஒரு சில விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வெளிநாடு செல்லும் முயற்சி சாதகமாக இருக்கும்.

ஞாயிறு - எதிர்பார்த்த வியாபார ஒப்பந்தம் ஒன்று ஏற்படும். சொத்து சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.

வணங்கவேண்டிய தெய்வம் -
ஸ்ரீகாலபைரவர் வழிபாடு நன்மை தரும். எதிர்ப்புகள் விலகும். தடைகள் அகலும். தேவைகள் பூர்த்தியாகும்.

****************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

20 hours ago

ஜோதிடம்

20 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்