இந்த வாரம் இப்படித்தான் - நட்சத்திரப் பலன்கள்; எந்தக் கிழமைகளில் என்னென்ன பலன்கள்? ஆயில்யம் முதல் உத்திரம் வரை (டிசம்பர் 16 முதல் 22-ம் தேதி வரை)

By செய்திப்பிரிவு


- ஜோதிடர் ஜெயம் சரவணன்

ஆயில்யம் -
முன்னேற்றமான தகவல்கள் கிடைக்கும் வாரம். எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும் சாதகமாக இருக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வழக்குகள் சாதகமாகும். திருமண முயற்சிகள் கைகூடும். குழந்தை பாக்கியத்திற்கான மருத்துவ செலவு செய்து கொண்டிருந்தவர்களுக்கு இனி, மருத்துவ உதவி இல்லாமலே குழந்தை பாக்கியம் உண்டாகும். இதுவரை தொழில் தொடங்கும் சிந்தனை இல்லாதவர்கள் கூட இப்போது சொந்த தொழில் செய்ய முனைவார்கள்.

உத்தியோகம் -
வேலை செய்யும் இடத்தில் சுமூகமான நிலையே நீடிக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பதவி உயர்வு உள்ளிட்டவை தானாக தேடிவரும். நெருக்கடி தந்து கொண்டிருந்த சக ஊழியர்கள் அலுவலகத்தை விட்டு வெளியேறுவார்கள். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். துறை சார்ந்த நடவடிக்கைகள் ஏதும் இருந்தால் இப்போது கைவிடப்படும். அல்லது உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். ஊதிய உயர்வு உண்டாகும். வேறு நிறுவனத்திற்கு மாறும் முயற்சியும் சாதகமாக இருக்கும்.

தொழில் -
தொழிலில் எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். பெரிய அளவிலான முதலீடுகள் கிடைத்த வாய்ப்பு உள்ளது. தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் இப்பொழுது செயல்வடிவம் பெறும். புதிதாக தொழில் தொடங்கும் ஆர்வமுள்ளவர்களுக்கு இப்போது நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தேவையான உதவிகள் தேடிவரும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு லாபம் பல மடங்கு உயரும் . பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு பங்குகள் ஏற்றம் ஏற்பட்டு மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கிளைகளை தொடங்குவீர்கள். சேவை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகமாவார்கள். நிறைய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு.

பெண்களுக்கு -
மனம் மகிழும் சம்பவங்கள் குடும்பத்தில் நடக்கும். சுப விசேஷங்கள் நடக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். வெளிநாட்டில் வேலை செய்யும் கணவருடன் சேர்ந்து வாழ வழி உண்டாகும். அசையாச் சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு.

மாணவர்களுக்கு -
கல்வியில் எதிர்பாராத அளவுக்கு முன்னேற்றம் ஏற்படும். தேர்வுகளில் எதிர்பார்த்ததைவிட அதிக மதிப்பெண்கள் கிடைக்கும். கல்வி சம்பந்தமான உதவிகள் கிடைக்கும்.

கலைஞர்களுக்கு -
வாய்ப்புகள் தேடி அலைந்து கொண்டிருந்தவர்களுக்கு இனி, வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பெரிய அளவிலான ஒரு ஒப்பந்தம் ஏற்படும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.

பொதுப்பலன் -
வருமானம் திருப்திகரமாக இருக்கும். புத்திசாலித்தனமாக முதலீடுகள் செய்ய வேண்டும். சேமிப்புகளை உயர்த்திக்கொள்ள வேண்டும். அசையாச் சொத்துக்களை வாங்க வேண்டும். ஆரோக்கியத்தில் பெரிய பிரச்சினைகள் ஏதும் இருக்காது. ஒரு சிலருக்கு தலைவலி பிரச்சினை இருக்கும். கண் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். கண்ணாடி அணிய வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

இந்த வாரம் -

திங்கள் - பரபரப்பாக இயங்கி பல வேலைகளை செய்து முடிப்பீர்கள். அசையாச் சொத்து வாங்கும் எண்ணம் ஏற்படும். வியாபார பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து ஒப்பந்தம் ஆக மாறும்.
செவ்வாய் - எடுத்துக் கொண்ட அனைத்து வேலைகளும் எளிதாக முடியும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த வியாபார பேச்சுவார்த்தை இன்று சுலபமாக முடிவடையும்.
புதன் - சுப விசேஷ பேச்சுவார்த்தைகள் நடைபெறும். அது தொடர்பான முடிவுகள் இன்று எடுப்பீர்கள். எனவே அலைச்சல்கள் அதிகமாக இருக்கும்.
வியாழன் - சொத்து வாங்குவது அல்லது விற்பது போன்ற பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும். தொழில் சம்பந்தமாக ஒரு மிகப்பெரிய உதவி இன்று கிடைக்கும்.
வெள்ளி - உங்களுக்கு தொடர்பில்லாத ஒரு வேலையை செய்ய வேண்டியது வரும். அது தொடர்பாக பயணம் ஒன்று ஏற்படும்.
சனி - கடன் சம்பந்தமான ஒரு பிரச்சினை இன்று முடிவுக்கு வரும். யாருக்கேனும் கடன் கொடுத்து இருந்தால் அந்த பணம் இன்று திரும்பி வரும்.
ஞாயிறு - செலவுகள் அதிகமாக ஏற்படும். அதிகமான ஆடம்பரச் செலவுகள் உண்டாகும். உடல் அசதி, சோர்வு போன்றவை இருக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
குலதெய்வ வழிபாடு அவசியம் செய்யுங்கள். நாகர் சிலைகள் உள்ள ஆலயங்கள், புற்று உள்ள அம்மன் கோயில்கள் முதலானவற்றுக்குச் சென்று வழிபடுங்கள். முக்கியமான பிரச்சினைகளில் நல்ல முடிவுகளை எடுக்க அது உதவும்.

**************************************************


மகம் -
வாரத்தில் முற்பகுதி பரபரப்பாக இருக்கும். பிற்பகுதி நிதானமான செயல்பாடுகள் இருக்கும். செலவுகளும் இருக்கும். செலவுக்கு ஏற்ற வருமானமும் இருக்கும். ஆரோக்கியப் பிரச்சினைகள் முற்றிலும் நிவர்த்தியாகும். வியாபாரங்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சொத்து சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும். குழந்தைகளின் உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும். குலதெய்வ வழிபாடு மிக மிக அவசியம். .

உத்தியோகம் -
பணியிடத்தில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏதும் இருக்காது. கடுமை காட்டி வந்த உயரதிகாரிகள் கூட இப்போது உங்களுக்கு அனுசரணையாக இருப்பார்கள். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தேங்கி நின்ற வேலைகள் அனைத்தையும் விரைந்து முடிப்பீர்கள். அரசு ஊழியர்களுக்கு பெரிய அளவில் மாறுதல் ஏதும் இல்லை. பணிச்சுமை கூடினாலும் அந்த சுமை தெரியாத அளவுக்கு இயல்பாக இருப்பீர்கள்.

தொழில் -
தொழிலில் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். தேங்கி நின்ற உற்பத்திப் பொருட்கள் வேகவேகமாக விற்பனையாகும். வங்கி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீர்ந்து, புதிய கடன் ஒன்றை பெறுவீர்கள். லாபம் பல மடங்காக இருக்கும். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணமும் ஏற்படும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு இது அமோகமான நேரம். உங்கள் தொழிலை மேலும் விரிவுபடுத்திக் கொள்ளுங்கள். பங்கு வர்த்தகத்தில் இருப்பவர்களுக்கு பங்குகளின் மதிப்பு உயர்ந்து லாபம் இருமடங்காக இருக்கும். வியாபாரிகள் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள், வரவேண்டிய பாக்கிகள் அனைத்தும் வசூலாகும். புதிய வியாபாரம் ஒன்று ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. அது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவீர்கள்.

பெண்களுக்கு -
ஆரோக்கியத்தில் இருந்த அச்சுறுத்தல்கள் அனைத்தும் விலகும். ஆரோக்கியம் மேம்படும். திருமணமான பெண்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். வெளிநாடு செல்லும் முயற்சிகளில் இருக்கும் பெண்களுக்கு இந்த வாரம் நல்ல தகவல் ஒன்று கிடைக்கும்.

மாணவர்களுக்கு -
கல்வியில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். கல்வி சம்பந்தமான உதவிகள் கிடைக்கும். உயர் கல்விக்கான வங்கிக் கடன் கிடைக்கும்.

கலைஞர்களுக்கு -
நண்பர் ஒருவரால் ஒப்பந்தம் ஒன்று கிடைக்கும். இசை மற்றும் நாட்டியக் கலைஞர்களுக்கு வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்த வாய்ப்பு கிடைக்கும்.

பொதுப்பலன் -
சில மாதங்களாக இருந்த நெருக்கடிகள் அனைத்தும் ஒவ்வொன்றாக விலகும்.சொந்த வீடு வாங்கும் எண்ணம் ஏற்படும். அதற்கான உதவிகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இருந்தாலும் ஒரு சிலருக்கு அஜீரணப் பிரச்சினை ஏற்படும். எனவே உணவு விஷயத்தில் கவனமாக இருங்கள்.

இந்த வாரம் -

திங்கள் - எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தொழில் ரீதியான விஷயங்கள் அனைத்தும் சாதகமாக இருக்கும்.

செவ்வாய் - அலுவலக விஷயமாக வெளியூர் செல்ல வேண்டியது வரும். வீடு வாங்குவது சம்பந்தமான நல்ல தகவல் கிடைக்கும்.

புதன் - வீட்டு வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். வியாபாரத்தில் லாபம் ஏற்படும். தொழில் வளர்ச்சி முதல் அனைத்து விஷயங்களும் இன்று வெற்றிகரமாக முடியும்.

வியாழன் - வீட்டுச் செலவுகள் அதிகமாக இருக்கும். வீட்டுக்குத் தேவையானப் பொருட்களை வாங்குவீர்கள். வாகன மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

வெள்ளி - கடன் தொடர்பான பிரச்சினை முடிவுக்கு வரும். அடகு வைத்த பொருட்களை மீட்க உதவி கிடைக்கும். எதிர்பார்த்த வியாபாரம் சுமூகமாக முடியும்.

சனி- ஆலயங்களுக்குச் சென்று வருவீர்கள். சில முக்கிய உதவிகளை மற்றவர்களுக்கு செய்து கொடுப்பீர்கள். அலுவலக வேலை அதிகமாக இருக்கும்.

ஞாயிறு - ஒரு முக்கியமான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடியும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். குடும்பத்தில் சுப விசேஷம் பற்றிய நிகழ்வுகள் நடக்கும்.

வணங்கவேண்டிய தெய்வம் -
தினமும் காலையில் அனுமன் சாலிசா கேளுங்கள், பாராயணம் செய்யுங்கள். மனோபலம் பெருகும். நன்மைகள் அதிகம் நடக்கும்.

*****************************************************************************


பூரம் -
வாரத் துவக்கத்தில் செலவுகள் அதிகமாக இருக்கும். வாரத்தின் பிற்பகுதியில் வருமானம் இருமடங்காக இருக்கும். தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். இதுவரை வேலை இல்லாதவர்களுக்கு இப்பொழுது நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தில் சுப விசேஷங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும்.

உத்தியோகம் -
பணியிடத்தில் சுமுகமான நிலையே தொடரும். சக ஊழியர்களின் உதவிகள் கிடைக்கும். நீண்ட நாளாக முடிக்க முடியாமல் இருந்த வேலை இந்த வாரம் செய்து முடிப்பீர்கள். அரசு ஊழியர்களுக்கு பணியில் பெரிய மாறுதல் ஏதும் இல்லை. சுமுகமான நிலையே தொடரும்.
கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு வேறு நிறுவனத்திற்கு மாறும் முயற்சி வெற்றி ஆகும். உங்கள் கல்வித் தகுதிக்கு தகுந்த வேலை இப்பொழுது கிடைக்கும்.

தொழில் -
தொழிலில் இருந்த மந்தநிலை மாறும். தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். வங்கியில் ஏற்பட்ட பிரச்சினைகள் சுமூகமாக நடந்தேறும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிதாக தொழில் தொடங்கும் ஆர்வமுள்ளவர்களுக்கு இப்பொழுது வேண்டிய உதவிகள் கிடைக்கும்.ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு மேலும் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும் பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு லாபகரமான வாரமாக இருக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி காண்பார்கள். நீண்ட நாளாக வராமலிருந்த பாக்கி அனைத்தும் இப்பொழுது வசூலாகும்

பெண்களுக்கு -
குடும்பத்தில் ஏற்பட்டிருந்த நெருக்கடிகள் அனைத்தும் தீரும். கடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும். நல்ல வேலை இல்லாமல் ஏங்கியவர்களுக்கு, இப்பொழுது உங்கள் தகுதி, திறமைக்கு ஏற்ற நல்ல வேலை கிடைக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். தாமதப்பட்டுக் கொண்டிருந்த புத்திர பாக்கியம் இப்பொழுது உண்டாகும்.

மாணவர்களுக்கு -
நன்மைகள் அதிகமாக நடக்கும். கல்வியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்வி மாணவர்களுக்கு எதிர்பாராத அளவுக்கு தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும்.

கலைஞர்களுக்கு -
ஒரு சில ஒப்பந்தங்கள் இந்த வாரம் ஏற்பட வாய்ப்பு உண்டு. சில பேச்சுவார்த்தைகள் தள்ளிப்போகும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.

பொதுப்பலன் -
தீவிர முயற்சி எடுத்தால் சொந்த வீடு வாங்கும் யோகம் ஏற்படும். பாதியில் நின்ற கட்டிடப் பணிகள் இந்த வாரம் தொடங்குவதற்கு வாய்ப்பு உண்டு. வெளிநாடு செல்லும் முயற்சி முழு அளவில் வெற்றிபெறும். செலவுகள் அதிகமாக இருந்தாலும், அதை ஈடுகட்டும் வகையில் பணவரவு உண்டாகும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான விஷயங்கள் சுமூகமாக முடிவடையும்.

இந்த வாரம் -

திங்கள் - எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் ஒரு முக்கியமான கடனை அடைப்பீர்கள். வேலைவாய்ப்பு எதிர்பார்த்தவர்களுக்கு, இன்று வேலை வாய்ப்புக்கான நேர்முகத்தேர்வில் கலந்து கொள்வீர்கள்.

செவ்வாய் - வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சகோதரர்களால் நன்மை ஏற்படும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.

புதன் - வியாபாரப் பேச்சுவார்த்தைகள் இன்று சுமூகமாக முடிவடையும், லாபம் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. தொழில் தொடர்பான சந்திப்புகள் ஏற்படும்.

வியாழன் - எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். தொழில் தொடர்பான அனைத்து உதவிகளும் கிடைக்கும்.

வெள்ளி - செலவுகள் அதிகமாக ஏற்படும். வாகன மாற்றும் சிந்தனை உண்டாகும். வீடு சம்பந்தமான செலவுகள் சற்று அதிகமாக இருக்கும்.

சனி- கடன் தொடர்பான ஒரு முக்கியமான பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். வியாபார ரீதியான பயணம் ஏற்படும். அதிக ஆதாயம் உண்டு.

ஞாயிறு - வியாபாரப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடையும். வியாபாரத்தின் மூலமாக லாபம் கிடைக்கும். சொத்து சம்பந்தமான விஷயங்கள் சுமுகமாக இருக்கும். சொந்த வீடு வாங்கும் முயற்சியில், இன்று நல்ல முன்னேற்றமான தகவல் கிடைக்கும்.

வணங்கவேண்டிய தெய்வம் -
சக்தி வடிவான அம்பாள் ஆலயங்களுக்குச் சென்று வாருங்கள். நன்மைகள் அதிகமாக நடக்கும். செலவுகள் குறையும். சுப விசேஷங்கள் நடக்கும்.
**************************************************************

உத்திரம் -


வரவும் செலவும் சமமாக இருக்கும். பணப் பிரச்சினைகள் ஏதும் இருக்காது. ஆரோக்கியம் சம்பந்தமாக சில பிரச்சினைகள் ஏற்படும். ஆனால் பெரிய பாதிப்புகள் ஏதும் இருக்காது.சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் இப்போது நல்ல முடிவுக்கு வரும். அதேபோல சொத்து விற்பனை சம்பந்தமான விஷயங்கள் இந்த வாரம் சாதகமாக இருக்கும்.

உத்தியோகம் -
பணியிடத்தில் பெரிய அளவில் மாறுதல்கள் ஏதும் இருக்காது. வழக்கமான பணிகளை மேற்கொள்வீர்கள். இடமாற்றம் போன்ற எதிர்பார்ப்புகள் இந்த வாரம் நடந்தேறும். இதுவரை வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு இப்பொழுது நல்ல வேலை கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். ஒருசிலருக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு வேலையில் எந்த மாற்றமும் இருக்காது, இயல்பான நிலையில் இருக்கும்.

தொழில் -
தொழிலில் எதிர்பார்த்த உயர்வு உண்டாகும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். ஒருசிலர் புதிய இயந்திரங்களை வாங்குவார்கள். வங்கி சம்பந்தப்பட்ட விஷயங்கள் சாதகமாக இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல லாபகரமான வாரமாக இருக்கும். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு, முதலீடுகள் செய்த பங்குகளில் நல்ல ஏற்றம் இருக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி காண்பார்கள். புதிய கிளை ஒன்றை துவங்குவார்கள். சேவை சார்ந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு வேலை ஒப்பந்தங்கள் கிடைக்கும், பணவரவு தாராளமாக இருக்கும்.

பெண்களுக்கு -
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். சகோதரர்களிடம் இருந்த மனவருத்தங்கள் தீரும். ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். தாயாரின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். கணவன்-மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் அகன்று மன ஒற்றுமை ஏற்படும்.

மாணவர்களுக்கு -
கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. புதிய பாடங்கள் அல்லது புதிய மொழி கற்கும் ஆர்வம் ஏற்படும். அதற்கான பயிற்சி வகுப்புகளில் சேர்வீர்கள்.

கலைஞர்களுக்கு -

ஒருசில ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகள் தள்ளிப் போகும். அடுத்த கட்ட முயற்சி இன்னும் சில வாரங்கள் ஆகும். பணத் தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும்.

பொதுப்பலன் -
சொத்துக்கள் வாங்க விற்க உகந்த வாரம் இது. உத்தியோகத்தில் இடமாற்றம் விரும்பினால் அதுவும் இப்பொழுது கிடைக்கும். ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகும். குறிப்பாக இடுப்புப் பகுதி மற்றும், முதுகெலும்பு போன்ற இடங்களில் சிறிய அளவிலான பிரச்சினைகள் தோன்றும். சரியான மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

இந்த வாரம் -
திங்கள் - அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். தேவையற்ற பிரச்சினைகளில் தலையிட வேண்டியதிருக்கும். எனவே எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக இருங்கள்.

செவ்வாய் - எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகளுக்கு முடிவு ஏற்படும். வீடு விற்பனை சம்பந்தமான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும்.

புதன் - வெளியூர் பயணம் ஒன்று ஏற்படும். வெளிநாடு செல்லும் முயற்சியில் வெற்றியுண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆதாயம் தரும் வியாபாரங்கள் என்று முடிவடையும்.

வியாழன் - குடும்ப நலன் சார்ந்து ஒரு சில நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். சொத்து தொடர்பான பிரச்சினைகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் தொடர்பான விஷயங்களில் அதிக நன்மை ஏற்படும்.

வெள்ளி - எதிர்பார்த்த அத்தனை விஷயங்களும் இன்று சுமூகமாக முடிவடையும். வியாபாரத்தில் வெற்றி உண்டாகும். தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும். சொத்து சம்பந்தமான விஷயம் சாதகமாகும். பணவரவு தாராளமாக இருக்கும்.

சனி - ஆலய தரிசனம் ஏற்படும். செலவுகள் அதிகமாக இருக்கும்.பயணங்கள் ஏதும் இருந்தால் தள்ளி வையுங்கள்.முக்கிய சந்திப்புகள் ஏதும் இருந்தால் அதையும் தள்ளி வையுங்கள்.

ஞாயிறு - பணவரவு எதிர்பார்த்த படியே கிடைக்கும். வியாபாரப் பேச்சுக்கள் வெற்றியாகும். நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். தொழிலுக்காக எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

வணங்கவேண்டிய தெய்வம் - மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மன் படத்தை வீட்டில் வைத்து வழிபட்டு வாருங்கள். நன்மைகள் அதிகமாகும். தெளிவான சிந்தனை ஏற்படும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் சுமூகமாக முடிவடையும்.
************************************************************

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்