இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: வெளி வட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். பழைய வாகனத்தை மாற்றி புதிது வாங்குவீர்கள். தாய் வழி உறவினர்களால் திடீர் அலைச்சல், அசதி, வீண் செலவுகள் ஏற்படும்.

ரிஷபம்: நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். வழக்கில் சாதகமான திருப்பம் உண்டாகும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்த ஈகோ பிரச்சினைகள் நீங்கும்.

மிதுனம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும். கணவன் -மனைவிக்குள் மனஸ் தாபம் நீங்கி, அன்யோன்யம் உண்டாகும். ஆன்மிக நாட்டம் கூடும்.

கடகம்: உடல் உஷ்ணம் அதிகரிக்கும். உணவில் கவனம் தேவை. யாருக்கும், எதற்காகவும் உறுதிமொழி தரவேண்டாம். சொந்த ஊர் விஷயங்களை முன்னின்று நடத்தி, பாராட்டு பெறுவீர்கள்.

சிம்மம்: அரசு, வங்கி வகையில் ஆதாயம் உண்டு. அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். திடீர் பயணங்கள் வரும். விலகிச் சென்ற உறவினர்கள், நண்பர்கள் விரும்பி வந்து பேசுவார்கள்.

கன்னி: எதையும் தாங்கும் மனவலிமை கிடைக்கும். பணவரவு உண்டு. எதிர்ப்புகள், ஏமாற்றங்களை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். சகோதர, சகோதரிகள் பக்கபலமாக இருப்பார்கள்.

துலாம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். குடும்பத்தினர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். யாரையும் எடுத்தெறிந்து பேசக்கூடாது.

விருச்சிகம்: சவாலான விஷயங்களை செய்து முடித்து, பாராட்டு பெறுவீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. பழைய நண்பர்கள், உறவினர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பேச்சில் பொறுமை தேவை.

தனுசு: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். பழைய சொந்த பந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். புது வேலை சற்று தாமதமாகி கிடைக்கும்.

மகரம்: இங்கிதமாகவும், இதமாகவும் பேசி எல்லோரையும் கவருவீர்கள். உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன் கவுரவமும் ஒருபடி உயரும். அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள்.

கும்பம்: உங்கள் சமயோசித புத்தியால், சிக்கலான காரியங்களை யும் முடித்துக் காட்டுவீர்கள். கைமாற்று வாங்கிய தொகையை தந்து முடிப்பீர்கள். ஆன்மிகம், யோகாவில் நாட்டம் ஏற்படும்.

மீனம்: கல்வித் தகுதியை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். அறிஞர் கள், மகான்களின் அறிமுகம் கிடைக்கும். சகோதர உறவுகள் ஆதர வாக இருப்பார்கள். பெரிய பொறுப்புகள் தேடி வரும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE