இந்த வாரம் இப்படித்தான் - நட்சத்திரப் பலன்கள்; எந்தக் கிழமைகளில் என்னென்ன பலன்கள்? மிருகசீரிடம்  முதல் பூசம் வரை (டிசம்பர் 16 முதல் 22-ம் தேதி வரை)

By செய்திப்பிரிவு

- ஜோதிடர் ஜெயம் சரவணன்


மிருகசீரிடம் -


மன உறுதி சற்றே குறையும். ஆனாலும் இறைவன் மீது இருக்கும் நம்பிக்கையால் அனைத்தையும் சமாளிக்கும் வலிமை உண்டாகும். பிரச்சினைகளின் தீவிரம் அதிகமாக இருந்தாலும், திறமையாக கையாண்டு சமாளிப்பீர்கள். பணத் தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும். ஒரு சில உதவிகள் தானாக கிடைக்கும். நீண்டநாளாக எதிர்பார்த்த வியாபார ஒப்பந்தம் ஒன்று ஏற்படும். சொத்து விற்பனை சம்பந்தமான விஷயங்கள் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக இருக்கும். கடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருந்தாலும் பெரிய அளவிலான அழுத்தங்கள் ஏதும் இருக்காது. மன உளைச்சல் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

உத்தியோகம் -
பணியிடத்தில் வேலை நிமித்தமாக அலைச்சல்களும், அழுத்தங்களும் ஏற்படும். அதை சமாளிக்கும் ஆற்றலும் உண்டாகும். உயரதிகாரிகள் தேவையில்லாமல் உங்கள்மீது எரிந்துவிழுவார்கள். சிரித்த முகத்தோடு அவற்றையெல்லாம் எதிர்கொண்டு கடந்து செல்ல வேண்டும். கால சூழ்நிலைகள் மாறும் பொழுது உங்களிடம் எதிர்ப்புகளை தெரிவித்த நபர் கூட உங்களுக்கு அனுசரணையாக மாறுவார்கள். அரசு ஊழியர்கள் தங்கள் கடமையில் கவனமாக இருக்க வேண்டும். துறை சார்ந்த எந்த ஒரு விஷயத்திலும் முழுமையாக படித்துப் பார்த்தபின் கையெழுத்திட வேண்டும்.

தொழில் -
தொழிலில் எதிர்பார்க்கின்ற உதவிகள் தள்ளிப்போகும். ஆனாலும் கலங்க வேண்டாம். தாமதமாக கிடைத்தாலும் அது நன்மைக்காகவே தான் இருக்கும். அதிக முதலீடுகள் எதையும் செய்ய வேண்டாம். புதிதாக கடன் எதுவும் வாங்க வேண்டாம். வங்கியில் கடன் கொடுக்க முன்வந்தாலும் தற்போதைக்கு தள்ளிப்போடுங்கள். வியாபாரிகள் கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். கடன் வாங்குவதையும் தவிர்க்க வேண்டும். வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் கிடைக்கும்.

பெண்களுக்கு -
பெரிய கற்பனைகள் எதையும் வைத்துக்கொள்ள வேண்டாம். உங்களுக்கு தேவையான உதவிகள் சரியாக கிடைக்கும். தந்தைவழி உறவினர்களிடம் கவனமாக இருக்கவேண்டும். தேவையற்ற பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. சொத்து சம்பந்தமான விஷயத்தில் பிடிவாதம் பிடிக்காமல் இருப்பது நல்லது.

மாணவர்களுக்கு -
கல்வியை தவிர மற்ற அனைத்து விஷயங்களிலும் நாட்டம் ஏற்படும். கவனச்சிதறல் உண்டாகும். கல்வியில் முழுமையாக கவனத்தை செலுத்தினால் பிரச்சினைகள் ஏதும் இருக்காது.

கலைஞர்களுக்கு -
நல்லகாலம் பிறப்பதற்கு இன்னும் ஒரு சில வாரங்கள் தான் இருக்கிறது. பணத் தேவைகள் பூர்த்தியாகி விடும். ஓரளவுக்கு உதவிகள் கிடைக்கும்.

பொதுப்பலன் -
மன உளைச்சல், மன அழுத்தம் இருக்கும். நீரிழிவு நோய் பிரச்சினை இருப்பவர்கள் மீண்டும் ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. நீண்ட நாளாக நோய் உபாதைகள் இருப்பவர்கள் மாற்று மருத்துவத்தை மேற்கொள்வது நல்லது. சகோதரர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். தந்தையின் உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்துங்கள்.

இந்த வாரம்-
திங்கள் -
தேவையற்ற அலைச்சல் ஒன்று ஏற்படும். அதனால் ஆதாயம் ஒன்றும் கிடைக்காது. எந்த வேலையை செய்வதாக இருந்தாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்கள்.
செவ்வாய் - கடன் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினை இன்று நல்ல முடிவுக்கு வரும். வங்கிக் கடன் சார்ந்த விஷயங்களில் சில சலுகைகள் கிடைக்கும். வியாபார பேச்சுவார்த்தைகள் முழுமையடையும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.
புதன் - சந்திப்புகள், பேச்சு வார்த்தைகள் ஏதும் இருந்தால் தள்ளிப்போடுங்கள். வியாபார ஒப்பந்தங்கள் ஏதும் ஏற்படுவதாக இருந்தாலும் அதையும் ஒத்தி வையுங்கள். பயணங்களை தவிர்ப்பது நல்லது.
வியாழன் - வேண்டிய உதவிகள் கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் கிடைக்கும். வியாபார பேச்சுவார்த்தைகள் முழு வெற்றியை தரும். நண்பர் ஒருவரால் மிகப்பெரிய உதவி ஒன்று கிடைக்கும்.
வெள்ளி - சொத்து சம்பந்தமான விஷயங்கள் பேசி முடிக்கப்படும். வியாபார பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். தொழில் தொடர்பான ஒரு முக்கிய உதவி ஒன்று கிடைக்கும். புதிய நபர் ஒருவர் அறிமுகமாவார் அவரால் ஆதாயம் உண்டு.
சனி - சிறு தூரப் பயணம் ஒன்று ஏற்படும். ஆலய வழிபாடு, குலதெய்வ வழிபாடு போன்றவை ஏற்படும். நீண்ட நாள் சந்திக்க முடியாமல் இருந்த ஒரு நபரை இன்று சந்திப்பீர்கள்.
ஞாயிறு - எதிர் பார்த்த பணம் கிடைக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். நீண்டநாளாக பேசிவந்த வியாபார பேச்சுவார்த்தைகள் இன்று முடிவுக்கு வரும். உங்கள் தேவைகள் அனைத்தும் இன்று பூர்த்தியாகும்.

வணங்கவேண்டிய தெய்வம் -
காலபைரவருக்கு எலுமிச்சை மாலை சூட்டி வழிபடுங்கள், பிரச்சினைகள் குறையும். எதிர்ப்புகள் அகலும். நன்மைகள் அதிகமாகும்.

**********************************************

திருவாதிரை -


பெரும்பாலும் நன்மைகள் நடக்கும். வேண்டிய உதவிகள் கிடைக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வியாபார பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றியாகும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் ஒரு சில கருத்து வேறுபாடுகள் வரும், அதை சமாளிப்பதற்கு விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். சகோதர வழியில் இருந்த ஒரு சில மன வருத்தங்கள் பேசி தீர்க்கப்படும்.

உத்தியோகம் -
வேலையில் பெரிய பிரச்சினைகள் ஏதும் இருக்காது. சுமுகமாகவே இருக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு உறுதியாகும். சக ஊழியர்களின் பொறாமைக்கு ஆளாக நேரிடும். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வேலையில் மன நிறைவு உண்டாகும். இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு இந்த வாரம் வேலைக்கான வாய்ப்புகள் பலமாக இருக்கிறது. வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த வாரம் சாதகமான தகவல் கிடைக்கும்.

தொழில் -
தொழிலில் எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். முதலீடுகள் கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு. அரசு வழியில் இருந்த பிரச்சினைகள் தீரும். வங்கி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளும் தீரும். கூட்டுத் தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் நல்ல வளர்ச்சி காண்பார்கள். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவார்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு அமோகமான வளர்ச்சி, லாபம் உண்டாகும். பங்கு வர்த்தக துறையில் இருப்பவர்களுக்கு லாபம் இரு மடங்காக இருக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் பல மடங்கு லாபம் பெறுவார்கள். புதிய வியாபாரம் ஒன்றை தொடங்கும் முயற்சியில் வெற்றி காண்பார்கள். சேவை சார்ந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகமாவார்கள். வேலைக்கான ஒப்பந்தங்கள் அதிகம் கிடைக்க பெறுவார்கள். லாபமும் உண்டு, சொத்து சேர்க்கையும் ஏற்படும்.

பெண்களுக்கு -
கனவுகள் நனவாகும். சொந்த வீடு வாங்கும் யோகம் வந்து விட்டது.திருமண முயற்சிகள் கைகூடும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அரசு உத்தியோகம் கிடைக்கும் வாய்ப்பு முழுமையாக இருக்கிறது.

மாணவர்களுக்கு -
கல்வியில் சற்று ஆர்வம் குறையும். ஆனாலும் பெரிய பாதிப்புகள் ஏதும் இருக்காது. கல்வியில் மிக அதிகமான முனைப்பு காட்ட வேண்டிய நேரம்.

கலைஞர்களுக்கு -
எதிர்பாராத அளவுக்கு ஒரு பெரிய ஒப்பந்தம் ஒன்று கிடைக்கப்பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். நண்பர்களால் அதிக ஆதாயம் ஏற்படும்.

பொதுப்பலன் -
பணவரவு திருப்திகரமாக இருக்கும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் வெற்றியாகும். கடன் பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும், குறிப்பாக கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது, ஒரு சிலருக்கு மூட்டு சம்பந்தமான பிரச்சினைகள் வரலாம்.

இந்த வாரம்-
திங்கள் - பணத்தேவைகள் பூர்த்தியாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலை சம்பந்தமான ஒரு நல்ல தகவல் கிடைக்கும். வியாபார பேச்சு ஒரு முடிவுக்கு வரும். சொந்த வீடு வாங்குவதற்கான முயற்சிகளில் இறங்கலாம்.
செவ்வாய் - அலைச்சல் அதிகமாக இருக்கும். ஒரு சில விஷயங்கள் கடைசி நேரத்தில் முடிவுக்கு வரும். எதிர்பார்ப்புகள் தள்ளிப் போகலாம்.
புதன் - கடன் சம்பந்தமான ஒரு பிரச்சினை முடிவுக்கு வரும். வெளிநாடு செல்லும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த தொழில் ஒப்பந்தம் கிடைக்கும். வியாபார பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இருக்கும். மருத்துவ செலவுகள் குறையும்.
வியாழன் - தேவையற்ற அலைச்சல் ஏற்படும். பேச்சு வார்த்தைகள் எதுவும் முடிவுக்கு வராமல் மேலும் இழுபறியாக இருக்கும். எதிர்பார்த்த ஒரு உதவி தள்ளிப் போகலாம். நண்பர்களால் செலவு ஏற்படும்.
வெள்ளி - வியாபார சம்பந்தமாகவோ அல்லது தொழில் சம்பந்தமாகவோ ஒரு பயணம் ஏற்படும். அதனால் ஆதாயம் கிடைக்கும். தொலைபேசி வழியாக ஒரு நல்ல தகவல் கிடைக்கும்.
சனி - சொத்து சம்பந்தமான ஒரு பிரச்சினை முடிவுக்கு வரும். சொத்து வாங்க அல்லது விற்க எடுத்துக்கொண்ட முயற்சிகளில் இன்று நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத இடத்திலிருந்து பண உதவி கிடைக்கும்.
ஞாயிறு - வியாபார பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடியும். ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. தொழில் சம்பந்தமாக ஒரு உதவி கிடைக்கும். உறவினர் ஒருவரால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
சிவபெருமானுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து நெய் தீபமேற்றி வழிபடுங்கள், நன்மைகள் அதிகமாகும், எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். ஆரோக்கியம் மேம்படும்.

*******************************************************************

புனர்பூசம் -


எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் நல்ல முடிவுக்கு வரும். செயல் வேகம் அதிகரிக்கும். எடுத்துக்கொண்ட அனைத்து முயற்சிகளிலும் முழு வெற்றியை காண்பீர்கள். வெளிநாடு செல்லும் முயற்சி முழு வெற்றி உண்டாகும், அது தொடர்பான விஷயங்கள் இந்த வாரம் முழுமையடையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமண முயற்சிகள் வெற்றியாகும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உருவாகும் வாய்ப்பும் முழுமையாக இருக்கிறது.

உத்தியோகம்-

பணியிடத்தில் பெரிய மாறுதல் ஏதும் இருக்காது, ஆனால் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். தொல்லை தந்து கொண்டிருந்த சக ஊழியர்கள் வெளியேறுவார்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஒரு குழுவுக்குத் தலைமை தாங்கும் வாய்ப்பு உண்டாகும். வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு இப்பொழுது பணிநீட்டிப்பு உள்ளிட்ட பல சலுகைகள் கிடைக்கும், குடியுரிமை கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு உள்ளிட்ட பல சலுகைகள் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது, வரவேண்டிய நிலுவைத் தொகைகள் முழுமையாக கிடைக்கும். நிர்வாக ரீதியான நடவடிக்கைகள் ஏதும் இருந்தால் அது இப்பொழுது கைவிடப்படும். பதவி உயர்வுக்காக வழக்குகள் ஏதும் போட்டிருந்தால் அந்த வழக்கில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும்.

தொழில்-

தொழிலில் எதிர்பாராத அளவுக்கு நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டும். அரசு வழியில் இருந்து பலவித உதவிகள் கிடைக்கும், மானியங்கள் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. வெளிநாடு தொடர்புடைய தொழில் செய்பவர்களுக்கு யோகமான நேரம் இது, லாபம் பல மடங்கு இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு நல்ல வளர்ச்சியும், அதிக லாபமும் கிடைக்கப்பெறுவார்கள். பங்கு வர்த்தகத் துறையினர் இருமடங்கு லாபம் கிடைக்கப் பெறுவார்கள். வியாபாரிகள் நல்ல வளர்ச்சி காண்பார்கள், புதிய வியாபார முயற்சியில் இறங்கி வெற்றி காண்பார்கள்.

பெண்களுக்கு-

சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு, ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். இதுவரை வேலை இல்லாத பெண்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும், அரசு உத்தியோகம் கிடைக்கும் வாய்ப்புகள் முழுமையாக இருக்கிறது. சகோதரர்கள் உதவி கிடைக்கும்.

மாணவர்களுக்கு-

கல்வியில் முன்னேற்றம் உண்டு, விரும்பிய கல்வியில் சேர்வதற்கான வாய்ப்பு முழுமையாக இருக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைக்கப் பெறுவீர்கள். வங்கியில் கல்விக் கடன் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

கலைஞர்களுக்கு-

புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். நல்ல வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள். தேவையான பணவரவு கிடைக்கும். நண்பரோடு இணைந்து ஒரு புதிய முயற்சியில் இறங்குவீர்கள், அந்த முயற்சி வெற்றியாகும்.

பொதுப்பலன் -

தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் முழு வெற்றியை தரும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். அரசு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு இப்பொழுது அரசு வேலை கிடைக்கும். ஆரோக்கியத்திற்கு பெரிய பாதிப்புகள் எதுவும் இருக்காது, ஒரு சிலருக்கு கால் பாதத்தில் வலி அல்லது அலர்ஜியால் ஏற்படும் புண்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

இந்த வாரம் -

திங்கள் -அலைச்சல்கள் ஏற்படும், எதிர்பார்த்த ஒரு விஷயம் தள்ளிப் போகலாம். கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது.

செவ்வாய் -சொந்த வீடு வாங்கும் முயற்சியில் இன்று ஒரு முன்னேற்றம் ஏற்படும். சகோதரர்கள் மூலம் ஒரு நன்மை கிடைக்கும்.

புதன்- வேலை விஷயமாகவோ அல்லது தொழில் விஷயமாக ஒரு பயணம் ஒன்று ஏற்படும், அதனுடைய ஆதாயம் இன்று கிடைக்காது, வேறொரு நாளில் இந்த ஆதாயம் கிடைக்கும்.

வியாழன்- குரு முக்கியமான கடனை அடைக்க வழி கிடைக்கும். வியாபார ரீதியான பேச்சுவார்த்தைகள் இன்று முழுமையடையும். எதிர் பார்த்த பணம் கிடைக்கும். வேலை வாய்ப்புக்கான நேர்முகத்தேர்வு அல்லது வேலைக்கான ஆணை கிடைக்கும்.

வெள்ளி- செலவுகள் அதிகமாக இருக்கும், குடும்ப செலவு முதல் வாகனச் செலவுகள் வரை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் கடைசி நேரத்தில் முடிவடையும்.

சனி- நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான உதவி ஒன்று கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிக்கான உதவி கிடைக்கும்.

ஞாயிறு- வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியாகும், அதற்குண்டான விஷயங்கள் இன்று சாதகமாக இருக்கும். வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு குடியுரிமை சம்பந்தமான விஷயங்களில் ஒரு முன்னேற்றமான தகவல் கிடைக்கும். வியாபார பேச்சுவார்த்தைகள் முழு வெற்றியை தரும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.

வணங்கவேண்டிய தெய்வம்-
ஸ்ரீநடராஜ பெருமானுக்கு மலர்மாலை சூட்டி, நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள், தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும், தடைகள் அகலும், நன்மைகள் பெருகும்.

***********************

பூசம் -


எதிரிகள், எதிர்ப்புகள் என எதுவும் இனி இருக்காது. எதிரிகள் உங்கள் கண்முன்னே தோற்றுப் போவதை காண்பீர்கள். கடன் பிரச்சனைகள் முதல், வழக்குகள் வரை அனைத்தும் தீர்வதற்கான அத்தனை வாய்ப்புகளும் உண்டு. எடுத்த முயற்சிகள் மட்டுமல்லாமல் எடுக்காத முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். திருமண முயற்சிகள் வெற்றிகரமாக முடிவடையும். பணவரவு தாராளமாக இருக்கும். ஆடம்பரச் செலவுகள் ஏற்படும், எனவே சிக்கனம் தேவை.

உத்தியோகம்-

நீங்களே எதிர்பார்க்காத பதவி உயர்வு இப்போது கிடைக்கும். உங்களைப் பற்றி அலுவலகத்தில் தவறாக பேசிக்கொண்டிருந்த நபர்கள் வேறு இடம் மாறிச் செல்வார்கள், அல்லது வேலையை விட்டே செல்வார்கள். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும், அரசிடமிருந்து சில சலுகைகள் கிடைக்கும். இதுவரை வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு இப்பொழுது நல்ல வேலை கிடைக்கும். வெளிநாடுகளில் வேலை தேடும் முயற்சிகள் இப்பொழுது முழுமையடைந்து வேலை கிடைக்கும்.
கடைகள், வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு இப்போது இருக்கும் நிறுவனத்தை விட, வேறு ஒரு சிறந்த நிறுவனத்திற்கு மாறும் வாய்ப்பு உள்ளது, அல்லது இப்போது இருக்கும் இடத்திலேயே பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது.

தொழில்-

தொழிலில் எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். முதலீடுகள் அதிகம் கிடைக்கப்பெறுவீர்கள். உங்களுடன் கூட்டு சேர்ந்து தொழில் செய்ய பலர் முன்வருவார்கள். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் உருவாகும், அதற்க்கான அனைத்து உதவிகளும் கிடைக்கும். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு அமோகமான வாரம், உங்கள் முதலீடுகள் அனைத்தும் இருமடங்காக உயரும் வாய்ப்பு உள்ளது. ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் நல்ல லாபம், மற்றும் புதிய ஆர்டர்கள் உள்ளிட்டவை கிடைக்கும். வியாபாரிகள் அபரிமிதமான வளர்ச்சி காண்பார்கள், புதிய வியாபாரத்தை ஆரம்பிக்கும் வாய்ப்பு உள்ளது

பெண்களுக்கு-

மன மகிழ்ச்சி தரும் வாரம், நீங்கள் நினைத்தது அனைத்தும் இப்பொழுது நிறைவேறும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். புத்திர பாக்கியத்திற்காக மருத்துவச் செலவு செய்து கொண்டிருந்தவர்களுக்கு, இனி மருத்துவ செலவுகள் தேவைப்படாது, குழந்தை பாக்கியம் உருவாகும் நேரம் ஆரம்பித்துவிட்டது.

மாணவர்களுக்கு-

கல்வியில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். பெற்றோர்கள் ஆச்சரியப்படும் வகையில் உங்களுடைய கல்வி முன்னேற்றம் தரக்கூடியதாக இருக்கும். வேண்டிய உதவிகள் அனைத்தும் கிடைக்கும்.

கலைஞர்களுக்கு-

நல்ல ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்கள் துறை சார்ந்த கலை நிகழ்ச்சிகள் நடத்த வெளிநாடு சென்று வருவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். அசையாச் சொத்து வாங்கும் யோகமும் உண்டு.

பொதுப்பலன் -

அதிக முயற்சி இல்லாமலேயே பல விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். எந்த ஒரு முயற்சியையும் பாதியில் விட வேண்டாம். எதிர்ப்புகள் எதிரிகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம், அவர்கள் தானாகவே காணாமல் போவார்கள். வழக்குகள் அனைத்தையும் இனி வாய்தா வாங்காமல் முடித்துக்கொள்ளுங்கள், தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாகத்தான் இருக்கும். அரசு வழியில் இருந்த நெருக்கடிகள் அனைத்தும் தீரும். அரசு நலத்திட்ட உதவிகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு தோலில் அலர்ஜி மற்றும் சிறிய கொப்புளங்கள் போன்றவை ஏற்படலாம், தகுந்த மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். மூச்சிரைப்பு நோய் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

இந்த வாரம்-

திங்கள்- ஆரம்பத்திலேயே சொன்னது போல, எடுக்கின்ற முயற்சி மட்டுமல்லாமல் எடுக்காத முயற்சிகளிலும் இன்று வெற்றி கிடைக்கும். பணத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பல்வேறு விதமான நற் செய்திகள் கிடைக்கும்.

செவ்வாய்- வியாபார விஷயமாக பேச்சுவார்த்தைகள் ஓரளவுக்கு முடிவுக்கு வரும். தொழில் தொடர்பான ஒரு முக்கியமான நபரை சந்திக்க வேண்டியது வரும். அவரிடம் சில உதவிகள் கேட்டுப் பெறுவீர்கள்.

புதன் -சொந்த வீடு வாங்கும் முயற்சியில் வெற்றி ஆகும். வங்கி சம்பந்தமான பிரச்சினைகள் முடிவுக்கு வந்து, வங்கிக் கடன் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. பத்திர பதிவு உள்ளிட்ட விஷயங்கள் நடக்கும்.

வியாழன்- அலைச்சல் ஏற்படும்,அலைச்சலுக்கு உண்டான உண்டான ஆதாயமும் ஏற்படும். ஆதாயத்தில் பங்கு கொடுக்க வேண்டியது வரும். வியாபார பேச்சு வார்த்தைகள் முழுமையாக நடந்தேறும்.

வெள்ளி - எதிர்பார்த்துக் கொண்டிருந்த பண உதவி கிடைக்கும். ஒரு முக்கியமான கடனை அடைக்க வழி கிடைக்கும். அடகு வைத்த பொருட்களை மீட்பதற்கு இன்று முயற்சி எடுப்பீர்கள். மனநிறைவை தரக்கூடிய நாளாக இருக்கும்.

சனி- மற்றவர்கள் உங்களை கோபப்படுத்தி பார்ப்பார்கள், அதற்கு இரையாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். கோபத்தை அடக்க வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவுகளையும் எடுக்க வேண்டாம். பேச்சு வார்த்தைகள் ஏதும் இருந்தால் தள்ளி வையுங்கள்.

ஞாயிறு -நண்பர்களாலும், உறவினர்களாலும் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உங்களுக்காக பலரும் பல விதத்தில் உதவுவார்கள். திருமணம் உள்ளிட்ட சுப விசேஷங்கள் இன்று முடிவாகும்.

வணங்கவேண்டிய தெய்வம்- அருகில் இருக்கும் கருமாரி அம்மன் ஆலயத்திற்குச் சென்று வாருங்கள், அம்மனின் அபிஷேகத்திற்கு உங்களால் முடிந்த அபிஷேக பொருட்களை வாங்கித் தாருங்கள், நன்மைகள் இருமடங்காக இருக்கும், நீங்கள் நினைத்தது நடக்கும்.
***********************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்