ஜோதிடர் ஜெயம் சரவணன்
அஸ்வினி -
அதிக நன்மைகள் நடைபெறும் வாரம் . தேவைகள் பூர்த்தியாகும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். சொத்து சேர்க்கை ஏற்படும். சேமிப்புகள் உயரும் . ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். திருமண முயற்சிகள் கைகூடும். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும்.
உத்தியோகம் -
விரும்பிய இடமாற்றம் ஏற்படும், அல்லது உங்களுக்கு தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த சக ஊழியர் அலுவலகத்தை விட்டு வெளியேறுவார். இதுவரை வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். அதற்கான வாய்ப்புகள் இந்த வாரம் பலமாக இருக்கிறது. கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு பெரிய பாதிப்புகள் ஏதும் இல்லை. ஊதிய உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. எதிர்பார்த்த ஒரு சில சலுகைகள் கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு உத்தியோகத்தில் இருந்த ஒரு சில பிரச்சினைகள் இந்த வாரம் முடிவுக்கு வரும்.
தொழில் -
தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். அரசு வழியில் இந்த ஒரு சில பிரச்சினைகளும் இந்த வாரம் முடிவுக்கு வரும். வங்கி தொடர்பான பிரச்சினைகள் சுமுகமாக முடிவடையும். வங்கிக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை இந்தவாரம் செலுத்துவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். பங்கு வர்த்தகத் துறையில் நல்ல வளர்ச்சி, முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகள் வியாபாரத்தில் திருப்தியான மனநிலை பெறுவார்கள்.
பெண்களுக்கு -
சொந்த வீடு வாங்கும் எண்ணம் இப்பொழுது செயல்வடிவம் பெறும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். இந்த வாரம் நிச்சயதார்த்தம் நடக்கும் அளவுக்கு சூழ்நிலை இருக்கிறது. புத்திர பாக்கியம் இல்லாத பெண்களுக்கு இப்பொழுது புத்திரபாக்கியம் கிடைக்கும். தந்தைவழியில் உதவிகள் எதிர்பார்த்து இருந்தால், இந்த வாரம் உதவிகள் கிடைக்கும்.
மாணவர்களுக்கு -
கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்த்த கல்வி உதவி கிடைக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைக்கும்.
கலைஞர்களுக்கு -
புதிய ஒப்பந்தம் ஒன்று ஏற்படும். நண்பர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். பணவரவு திருப்தி தரும்.
பொதுப்பலன் -
தந்தையின் உடல்நலத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும். நீண்டநாள் நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், தங்களுடைய உடல் நலத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும், மருத்துவரின் ஆலோசனையை சரியாக பின்பற்ற வேண்டும்.
இந்த வாரம் -
திங்கள் - வேண்டிய உதவிகள் கிடைக்கும்.எதிர்பார்த்த பணம் கிடைக்கும். வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும்.
செவ்வாய் - முக்கியமான நபரை சந்திப்பீர்கள். அவரால் ஆதாயம் கிடைக்கும். பரபரப்பாக இயங்கி எல்லா வேலைகளையும் செய்து முடிப்பீர்கள்.
புதன் - மனநிறைவு ஏற்படும் நாள். எதிர்பார்த்த வேலைகள் அனைத்தும் சுமூகமாக முடியும். அதில் ஆதாயம் தரக்கூடியதான விஷயங்களும் இருக்கும். எதிர்பார்த்த பணவரவு தாராளமாக இருக்கும்.
வியாழன் - தேவையற்ற அலைச்சல் ஒன்று ஏற்படும். வாகனப் பழுது ஏற்படும். பயணங்களில் அதிக கவனம், எச்சரிக்கை தேவை.
வெள்ளி - தொழில் சம்பந்தமான ஒப்பந்தம் ஒன்று ஏற்படும். புதிய வியாபாரம் அல்லது தொழில் செய்யும் முயற்சி வெற்றி ஆகும். சொத்து விற்பனை சம்பந்தமான விஷயங்கள் சாதகமாகும்.
சனி - ஆலய தரிசனம் ஏற்படும். மகான்களின் ஜீவ சமாதிக்கு சென்று வருவீர்கள். தர்ம காரிய சிந்தனைகள் அதிகமாக இருக்கும்.
ஞாயிறு - கடன் சம்பந்தமான ஒரு பிரச்சினை இன்று பேசி தீர்ப்பீர்கள். வியாபாரப் பேச்சுவார்த்தை இன்று முடிவுக்கு வரும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.
வணங்கவேண்டிய தெய்வம் -
ஸ்ரீமுருகப்பெருமானுக்கு செவ்வரளி மாலை சூட்டி, நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள். கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் பூர்த்தியாகும்.
*****************************************************
பரணி -
எண்ணிய செயல்கள் அனைத்தும் நிறைவாக முடியும் வாரம் இது. வேண்டிய உதவிகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் சுப விசேஷ நிகழ்வுகள் நடக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். வியாபார பேச்சுவார்த்தைகள் வெற்றியாக முடியும்.
உத்தியோகம் -
பணியில் பெரிய பாதிப்புகள் ஏதும் இருக்காது. பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்காது. சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் கருத்துக்கு நல்ல மதிப்பு கிடைக்கும். வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றியாகும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. முயற்சி செய்தால் வெளிநாட்டில் வேலை கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு சிறப்பான வாரம். எதிர்பார்த்த சலுகைகள் மற்றும் பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் போன்றவை கிடைக்கும். உயரதிகாரிகளின் ஆதரவும் கரிசனமும் கிடைக்கும். கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு இதைவிட சிறந்த வேறு நிறுவனத்திற்கு மாறும் முயற்சி எளிதாக கிடைக்கும்.
தொழில் -
தொழிலில் எதிர்பார்த்த அத்தனை உதவிகளும் கிடைக்கும். தொழில் சார்ந்த எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். வெளிநாட்டு தொடர்புடைய தொழில் செய்பவர்களுக்கு வேண்டிய உதவிகள் கிடைக்கும். வங்கி தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். புதிய கடன் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். சேவை சார்ந்த தொழில் செய்து வருபவர்களுக்கு நன்மைகள் அதிகமாக இருக்கும். வாடிக்கையாளர்கள் அதிகமாவார்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.
பங்கு வர்த்தக துறையில் இருப்பவர்களுக்கு நல்ல வளர்ச்சியும், முன்னேற்றமும் ஏற்படக்கூடிய வாரம். ஏற்றுமதி இறக்குமதி தொழில் சிறப்பாக இருக்கும். வியாபாரிகள் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். புதிய கிளைகளைத் துவங்கும் முயற்சி வெற்றியாகும்.
பெண்களுக்கு -
எதிர்பார்த்த சகோதர வழி உதவிகள் கிடைக்கும். தந்தை வழியில் சொத்துக்கள் சேரும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். நல்ல வேலையில்லாமல் இருந்த பெண்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும். அசையாச் சொத்து வாங்கும் யோகம் உண்டு.
மாணவர்களுக்கு -
கல்வியில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். சக மாணவர்களிடம் இருந்து உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். ஆசிரியர் ஒருவரின் வழிகாட்டுதல் கிடைக்கும்.
கலைஞர்களுக்கு -
நீண்டநாளாக பேசி வந்த ஒரு பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்து ஒப்பந்தமாக மாறும். நண்பர் ஒருவரோடு இணைந்து ஒரு புதிய முயற்சியில் இறங்குவீர்கள்.
பொதுப்பலன் -
ஆரோக்கியம் சம்பந்தமாக மட்டும் அதிக அக்கறை காட்ட வேண்டும். தொடர்ச்சியாக மருந்து உட்கொள்பவர்கள் மீண்டும் ஒருமுறை மருத்துவ ஆலோசனை பெற்று மருந்துகளைத் தொடர வேண்டும். ஒருசிலருக்கு தோல் சம்பந்தமான பிரச்சினைகள் வரும். அலர்ஜி மற்றும் மூச்சிரைப்பு போன்ற பிரச்சினை இருப்பவர்கள் தகுந்த மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த வாரம்-
திங்கள் - தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றியாகும்.
செவ்வாய் - வியாபார சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் முடிவுக்கு வரும். ஒப்பந்தங்கள் போடுமளவுக்கு முன்னேற்றம் ஏற்படும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும்.
புதன் - சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். அது உங்கள் குடும்ப நலம் சார்ந்ததாக இருக்கும். தேங்கி நின்ற வேலைகள் அனைத்தும் இன்று முழுமையாக முடிப்பீர்கள்.
வியாழன் - பல்வேறு விதமான நன்மைகள் நடக்கும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் கச்சிதமாக செய்து முடிப்பீர்கள். வியாபார பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். பணம் பல வழிகளிலும் வரும்.
வெள்ளி - பயணங்களை தவிர்ப்பது நல்லது. முக்கியமான பேச்சுவார்த்தைகள் ஏதும் இருந்தால் தள்ளிப் போடுங்கள். ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டாம். கடன் வாங்குவது, கடன் கொடுப்பது போன்றவை செய்ய வேண்டாம்.
சனி - வியாபார பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். வீடு சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் நல்லபடியாக முடியும். ஒப்பந்தம் போடும் அளவுக்கு அனைத்து விஷயங்களும் சாதகமாக இருக்கும்.
ஞாயிறு - குடும்பத்தோடு வெளியே சென்று வருவீர்கள். எனவே குடும்பச் செலவு அதிகமாக இருக்கும். வீட்டு பராமரிப்புச் செலவுகளும் இருக்கும். வாகனங்களை பழுது நீக்கி சரி செய்வீர்கள்.
வணங்கவேண்டிய தெய்வம்-
ஸ்ரீமகா சக்தி துர்கை அம்மனை வழிபட்டு வாருங்கள். நன்மைகள் அதிகமாகும். நினைத்தது நடக்கும்.
**********************************************************************
கார்த்திகை -
வாரத்தின் ஒரு சில நாட்கள் நன்மை தருவதாக இருக்கும். ஒரு சில தேவைகள் பூர்த்தியாகும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் கிடைக்கும். மன அழுத்தம் அதிகரிக்கும்.உடல் நலம் சார்ந்த பிரச்சினைகள் கவலை தருவதாக இருக்கும்.
உத்தியோகம் -
பணியிடத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். ஆனாலும் பொறுமையாக அனைத்தையும் கையாண்டு உங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தேவையற்ற இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. சக ஊழியர் ஒருவரால் பாதிப்பு ஏற்படும். அரசு ஊழியர்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டியது வரும். அலுவல் சார்ந்த அலைச்சல்கள் அழுத்தங்கள் அதிகமாக இருக்கும். கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு பெரிய மாறுதல் ஏதும் இருக்காது, உங்கள் வேலையை சரிவரச் செய்தால் எந்த பிரச்சினையும் இருக்காது.
தொழில் -
தொழிலில் ஒரு சில உதவிகள் கிடைக்கும். வரவேண்டிய பாக்கிகள் இன்னும் தள்ளிப் போகும். எதிர்பார்த்த வங்கிக் கடன் மேலும் சில வாரங்கள் தள்ளிப் போகும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்கள் பொருட்களை கவனமாக கையாள வேண்டும். பங்கு வர்த்தகத் துறையினர் அதிக முதலீடுகளை செய்ய வேண்டாம். வியாபாரிகள் கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். பாக்கிகள் வசூலாவதில் கடுமை காட்டி வசூலிக்க வேண்டும்.
பெண்களுக்கு -
கடன் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினை தீர்வதற்கு தந்தை வழியில் இருந்து உதவிகள் கிடைக்கும். சகோதரர்கள் ஓரளவுக்கு உதவுவார்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். வேலை சார்ந்த ஒரு சில விசாரணைகளில் ஆஜராக வேண்டியது வரும்.
மாணவர்களுக்கு -
கல்வியில் முன்னேற்றம் உண்டு. ஆனாலும் கல்வியில் ஆர்வம் குறையும்.தேர்வுகளில் கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை உருவாகும்.
கலைஞர்களுக்கு -
பணத்தட்டுப்பாடு நீடிக்கும். எதிர்பார்த்த உதவிகள் தள்ளிப்போகும். பேச்சுவார்த்தைகள் நீண்டு கொண்டே போகும்.
பொதுப்பலன் -
ஒரு சிலருக்கு மூட்டு வலி மற்றும் கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வரலாம். கவனமாக இருக்க வேண்டும். பெண்களுக்கு அடி வயிறு மற்றும் இடுப்பு சம்பந்தப்பட்ட இடங்களில் ஒரு சில பிரச்சினைகள் வரலாம், தகுந்த மருத்துவ ஆலோசனை எடுத்துக் கொள்வது நல்லது.
இந்த வாரம்-
திங்கள் - குடும்பத்தினர், அக்கம்பக்கத்தினர், நண்பர்கள் என அனைவரிடமும் அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற விவாதங்களில் ஈடுபடவேண்டாம். பிடிவாதம் பிடிக்க வேண்டாம்.
செவ்வாய்- எதிர்பார்த்த சில உதவிகளும், பணமும் கிடைக்கும். கடன் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினை இன்று பேசி முடிப்பீர்கள். அல்லது மேலும் தவணை கேட்டு வாங்குவீர்கள்.
புதன் - வெளிநாடு செல்லும் முயற்சிகள் ஏதும் இருந்தால் இன்று அதற்கு நல்ல பலன் கிடைக்கும். வங்கியில் ஏற்பட்ட சில குழப்பங்கள் இன்று தீர்வுக்கு வரும். வங்கிக்கடன் கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு. வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்து இறுதி ஆகும்.
வியாழன் - உத்யோக மாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும். அல்லது புதிதாக தொழில் தொடங்கும் எண்ணம் உருவாகும். இவை அனைத்தும் சிந்தனை அளவிலேயே இருக்கும், செயல்பாட்டுக்கு வருவதற்கு இன்னும் காலமாகும்.
வெள்ளி -தேங்கி நின்ற வேலைகள் அனைத்தும் விரைவாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரரீதியாக லாபங்கள் ஏற்படும். தொழிலுக்கு வேண்டிய உதவிகள் இன்று கிடைக்கும்.
சனி - திட்டமிடாமல் எந்த வேலையும் செய்ய வேண்டாம். பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பேச்சுவார்த்தைகள் ஏதும் இருந்தால், முடிந்த வரை தள்ளிப் போடுங்கள். அல்லது முடிவெடுக்காமல் ஆலோசனையை தள்ளி வையுங்கள்.
ஞாயிறு - வியாபாரங்கள் முடிவுக்கு வந்து ஒப்பந்தம் ஆக மாறும். லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். சொத்து விற்பனை சம்பந்தமான விஷயங்கள் இன்று நல்ல முடிவுக்கு வரும். தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மற்றும் எருக்கம் மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுங்கள், பிரச்சினைகள் தீரும். வேண்டிய உதவிகள் தடையில்லாமல் கிடைக்கும்.
*************************************************
ரோகிணி -
விதிவசம் பயணிப்பதே நல்லது என்ற முடிவு எடுப்பீர்கள். எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வீர்கள். முக்கியமான பிரச்சினைகளில் நண்பர்களின் உதவி கிடைக்கும். பணத்தேவைகள் சமாளிக்கக்கூடிய அளவிலேயே இருக்கும். சொத்து விற்பனை சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும். இந்த வாரம் கடன் வாங்காமல் இருப்பது நல்லது.
உத்தியோகம் -
வேலையில் பெரிய பிரச்சினைகள் ஏதும் இருக்காது. சுமுகமான நிலையே தொடரும். சக ஊழியர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். அலுவலகம் சார்ந்த பயணம் ஒன்று ஏற்படும். அலுவலகத்தில் கடன் கேட்டு விண்ணப்பம் செய்வீர்கள். அந்த விண்ணப்பம் ஏற்கப்படும். அரசு ஊழியர்கள் தங்கள் வேலையில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். தேவையற்ற சர்ச்சைகளில் சிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். கடைகள் மற்றும் சிறு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் தங்கள் கையாளுகின்ற பொருட்களில் கவனமாக இருக்கவேண்டும். வாடிக்கையாளர்களிடம் பேசும் போது பணிவோடு பேச வேண்டும்.
தொழில் -
சேவை சார்ந்த தொழில் செய்து கொண்டு வருபவர்களுக்கு பெரிய பாதிப்புகள் ஏதும் இருக்காது, அதே சமயம் வேலையின் அழுத்தம் அதிகமாக இருக்கும் , ஒருசில நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்படுவீர்கள், சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் அதிக முதலீடுகளை செய்ய வேண்டாம், அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிக கவனமாக இருக்க வேண்டும், கணக்கு வழக்குகளை சரியாக பராமரிக்க வேண்டும். அரசிடமும் அல்லது வங்கிகளிடமும் எதிர்நிலை எடுக்க வேண்டாம். பங்கு வர்த்தக துறையில் இருப்பவர்கள் அதிக முதலீடுகளை செய்ய வேண்டாம். ஏற்றுமதி-இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு பெரிய மாறுதல் இருக்காது. வியாபாரிகள் ஓரளவுக்கு லாபம் கிடைக்கப்பெறுவார்கள்.
பெண்களுக்கு -
பேச்சில் நிதானம் தேவை. உங்கள் பேச்சில் நியாயம் இருந்தாலும் அதற்கு வீணான அர்த்தம் கண்டுபிடிப்பார்கள், பொறுமையை கையாள வேண்டும். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் அனுசரித்துச் செல்ல வேண்டும்.
மாணவர்களுக்கு -
கல்வியை தவிர மற்ற அனைத்து விஷயங்களிலும் ஆர்வம் ஏற்படும். படிப்பை விட்டுவிட்டு வேலைக்குச் செல்லலாமா என்கிற எண்ணம் ஏற்படும். இது போன்ற வீண் கற்பனைகளை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
கலைஞர்களுக்கு -
பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பொறுமையாக இருப்பது நல்லது.
பொதுப்பலன் -
மனதில் வேண்டாத கற்பனைகள் தோன்றும். ஒருவித அச்ச உணர்வு ஏற்படும். மனக்குழப்பம் உண்டாகும். வயிற்றில் வலி மற்றும் அஜீரண கோளாறுகள் ஏற்படும். கடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை கவனமாக கையாள வேண்டும். தவணை வாங்கி கொள்வது நல்லது. யாருக்கும் வாக்குறுதி தருவது, உத்தரவாதம் தருவது கூடாது.
இந்த வாரம் -
திங்கள் - கடன் சம்பந்தப்பட்ட பிரச்சினையில் உங்களுக்கு சாதகமாக அனுசரணை கிடைக்கும். வியாபார ஒப்பந்தம் ஒன்று ஏற்படும். தொழில் ரீதியாக ஒரு நபரை சந்திப்பீர்கள்.
செவ்வாய் - வியாபார ரீதியாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய லாபம் குறையும். அல்லது பங்கு தர வேண்டியது வரும். நண்பர்களால் ஒருசில ஆதாயம் உண்டாகும்.
புதன் - எடுத்துக்கொண்ட செயல்கள் அனைத்தையும் இன்று வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். ஆதாயம் தரும் வியாபாரம் ஒன்று முடிவடையும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பீர்கள்.
வியாழன் - வெளிநாடு செல்லும் முயற்சிகள் ஏதும் இருந்தால் இன்று நல்ல தகவல் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு இன்று வேலைக்கான அழைப்பாணை கிடைக்கும்.
வெள்ளி - அலுவலகம் சார்ந்த வேலைகளில் அதிக கவனம் செலுத்துவீர்கள். தொழில்ரீதியாக பயணம் ஒன்று ஏற்படும். சொத்து சம்பந்தமான ஒரு பிரச்சினை இன்று முடிவுக்கு வரும்.
சனி-எடுத்துக் கொண்ட அனைத்து வேலைகளையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வரவேண்டிய பணம் வந்துசேரும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
ஞாயிறு - வீண் அலைச்சல் ஏற்படும். வாகன பழுது மற்றும் வீட்டு பழுது போன்ற செலவுகள் ஏற்படும். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு உதவி தள்ளிப்போகும்.
வணங்க வேண்டிய தெய்வம் - குழந்தை கண்ணனின் படத்தை வீட்டில் வைத்து வழிபட்டு வாருங்கள், பிரச்சினைகளின் வீரியம் குறையும். வேண்டிய உதவிகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.
***********************************************************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago