இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: வீடு மாற நினைத்தவர்களுக்கு சகல வசதிகளுடன் புது வீடு கிடைக்கும். வாகனம் வாங்குவீர்கள். கடன் பிரச்சினையை தீர்ப்பதற்கான வழி பிறக்கும். பால்ய நண்பர் உதவுவார்.

ரிஷபம்: தொட்டதெல்லாம் துலங்கும். சகோதரர்கள் உங்களின் நல்ல மனதை புரிந்து கொள்வார்கள். சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.

மிதுனம்: நீண்டநாட்களாக எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். அரசாங்கத்தால் நன்மை உண்டு. நல்ல நிறுவனத்தில் சேருவதற்கான வாய்ப்பு கனிந்து வரும். விருந்தினர் வருகை உண்டு.

கடகம்: யாரையும் எளிதில் நம்பி ஏமாந்து விடாதீர்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியோ, உத்தரவாதமோ தரவேண்டாம். அக்கம்பக்கத்தினரின் அன்புத் தொல்லை உண்டு.

சிம்மம்: பணம் வந்தாலும் செலவுகளும் அடுத்தடுத்து உண்டாகக் கூடும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட்டு பிரச்சினையில் சிக்கிக் கொள்ளாதீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

கன்னி: எதிர்காலத்துக்காக பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.. வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர் வருகை உண்டு.

துலாம்: பதவிகள் தேடிவரும். வெளிநாடு செல்வதற்கான விசா கிடைக்கும். விலகியிருந்த உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். கணவன் - மனைவி இடையே அன்யான்யம் அதிகரிக்கும்.

விருச்சிகம்: மாறுபட்ட அணுகுமுறையால் பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். தக்க நேரத்தில் விஐபி.களின் உதவி கிடைக்கும். வீடு, வாகனப் பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

தனுசு: வாகனத்தில் செல்லும்போது, சாலையைக் கடக்கும் போதும் கவனம் தேவை.. பல வேலைகளை ஒரே நேரத்தில் மேற்கொள்வதை தவிருங்கள். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்..

மகரம்: போராடி வெற்றி பெறும் சக்தி கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேர்க்கை உண்டு. சுபகாரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். பெரிய மனிதர்களுடன் அறிமுகம் உண்டாகும்.

கும்பம்: பிரச்சினைகள், சிக்கல்கள், உடல்நலக் குறைவுகள் என்று வந்தாலும் அனைத்தையும் சாமர்த்தியமாக சமாளிக்கும் சக்தி கிடைக்கும். புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

மீனம்: பிள்ளைகளால் உற்சாகமடைவீர்கள். பழைய வாகனத்தை மாற்றி புதியது வாங்குவீர்கள். கணவன் - மனைவி இடையே நிலவிய கருத்து வேறுபாடு நீங்கி அமைதி திரும்பும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்