இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புதிய வாகனம், ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். பங்கு வர்த்தகம் மூலம் லாபம் வரும். திடீர் பயணம் உண்டு.

ரிஷபம்: கனவுத் தொல்லை வரும். பழைய கசப்பான சம்பவங்களை நினைத்து அவ்வப்போது மனம் சஞ்சலப்படும். முன்கோபத்தால் சிலரின் நட்பை இழக்காதீர்கள். வாகனம் செலவு வைக்கும்.

மிதுனம்: எதிர்மறை எண்ணங்கள் வரும். அக்கம்பக்கத்தினரின் சுயரூபத்தை அறிந்து கொள்வீர்கள். குடும்பத்துக்குள் சின்ன சின்ன சச்சரவுகள், கோபதாபங்கள் வந்து நீங்கும்.

கடகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். செல்லும் இடமெல்லாம் மரியாதை, கவுரவம் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் இனிதாக இருக்கும்.

சிம்மம்: அழகு, இளமை கூடும். எதிர்மறை எண்ணங்கள் விலகும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தீர்க்க முடியாத பிரச்சினைகளையும் தீர்க்கும் சாமர்த்தியம் உண்டாகும்.

கன்னி: ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மூத்த சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். பால்ய நண்பரை சந்தித்து மகிழ்வீர்கள். எதிர்பாராத தொகை ஒன்று கைக்கு வரக்கூடும்.

துலாம்: வாகனம் திடீரென செலவு வைக்கும். பிள்ளைகளுடன் வாக்குவாதம் ஏற்படக் கூடும். அவர்களின் நட்பு வட்டத்தை கண்காணிப்பது அவசியம். அக்கம்பக்கத்தினரின் அன்பு தொல்லை உண்டு.

விருச்சிகம் : கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். உறவினர்கள் உங்களின் உதவும் தன்மையைப் பாராட்டுவார்கள். பால்ய நண்பர்களின் சந்திப்பால் உற்சாகமடைவீர்கள்.

தனுசு: அக்கம்பக்கத்து வீட்டாருடன் இருந்துவந்த மோதல் போக்கு நீங்கும். முக்கியப் பிரச்சினை குறித்து சகோதரர்களுக்கிடையே மனம்விட்டு பேசி நல்ல முடிவுகள் எடுப்பீர்கள்.

மகரம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். வாகனம் சரியாகும். தைரியமாக, தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புண்ணிய தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.

கும்பம்: மனக்குழப்பங்கள், வீண் விவாதங்கள் வந்து நீங்கும். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவது போன்ற முயற்சிகள் சாதகமாக முடியும்

மீனம்: ஆடை, அணிகலன்கள் சேரும். மகளின் திருமண பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

16 hours ago

ஜோதிடம்

16 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

மேலும்