இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: வீண் குழப்பம் வந்து செல்லும். பிற்பகல் முதல் அசதி, சோர்வு, முன்கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

ரிஷபம்: மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். மற்றவர்களைப் பற்றி அநாவசியமாக விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது.

மிதுனம்: முக்கிய காரியங்கள் அலைச்சலுக்குப் பிறகு முடியும். திடீர் பயணங்கள் ஏற்படக் கூடும். முக்கிய கோப்புகளை கையாளும்போது அலட்சியம் வேண்டாம். வாகனம் செலவு வைக்கும்.

கடகம்: மனசாட்சிக்கு விரோதமின்றி செயல்பட வேண்டுமென நினைப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகள் சூழ்நிலை அறிந்து பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.

சிம்மம்: சகோதரரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள் கல்யாண முயற்சிகள் பலிதமாகும். உங்கள் ஆலோசனையை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள்.

கன்னி: எதிலும் அவசரம் வேண்டாம். பிற்பகல் முதல் கணவன் - மனைவிக்குள் நிலவிய மனப்போர் நீங்கும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும்.

துலாம்: குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டியிருக்கும். மற்றவர்களுக்காக நியாயம் பேசப் போய் வம்பில் சிக்கிக் கொள்ளாதீர்கள். பணவரவு உண்டு.

விருச்சிகம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

தனுசு: பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி யோசிப்பீர்கள். உறவினர்களின் அன்பு தொல்லை விலகும். புண்ணிய தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

மகரம்: குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். சகோதரர் வகையில் நன்மை கிட்டும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள்.

கும்பம்: குடும்பத்தினரின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. பங்கு வர்த்தகம் மூலம் லாபம் கிடைக்கும்.

மீனம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்