- ஜோதிடர் ஜெயம் சரவணன்
திருவோணம் -
இறங்கி ஆட வேண்டிய நேரம். முயற்சிகள் ஏதும் இல்லாமலேயே வெற்றிகள் வந்து குவியும். செலவுகள் அதிகமாகத்தான் இருக்கும். ஆனால் அது தேவையான செலவுகளாக இருக்கும். எப்படி ஒரு தொழில் தொடங்குவதற்கு முதல் என்னும் செலவு ஏற்படுகிறதோ, அதுபோல உங்கள் வளர்ச்சிக்காக சில முதல் போட வேண்டியது இருக்கும். அதுபோன்ற முதல் செலவுகளாகத்தான் இருக்குமே தவிர, வீண் செலவுகள் எதுவும் இருக்காது. எனவே செலவுகளைப் பற்றி கவலைப்படாமல் அந்த செலவுகளை கொண்டு வளர்ச்சிக்கான வழிகள் என்ன என்பதை பாருங்கள், உதாரணமாக ஒரு நிலத்தில் நீங்கள் செய்யும் முதலீடு என்பது குறுகிய காலத்திலேயே அதிக லாபம் கிடைக்க கூடியதாக மாறுவதைப் போல, உங்கள் முதலீடுகள் அனைத்தும் சிறப்பான லாபத்தை தரக்கூடியதாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுப விசேஷ நிகழ்வுகள் நடக்கும். திருமண வயதில் பிள்ளைகள் இருந்தால் உங்கள் பிள்ளைகளுக்கு திருமணங்கள் நடக்கும். குழந்தைகளாக இருந்தால் அவர்களுக்காக சுப விசேஷங்கள் மொட்டை அடித்தல், காது குத்துதல் போன்ற சுப விசேஷங்கள் செய்வீர்கள்.
உத்தியோகம் -
நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு இப்போது எதிர்பாராத நேரத்தில் கிடைக்கும். ஒருசிலருக்கு பதவி உயர்வு மட்டுமல்லாமல் கூடுதலான பொறுப்புக்களும் வழங்கப்படும். முக்கியமான வேலைகளை உங்களை நம்பி கொடுப்பார்கள். சிறப்பாக செயல்பட்டு நீங்களும் வெற்றி காண்பீர்கள். உங்கள் திறமைகள் பளிச்சிடும் நேரமிது. சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு அபரிமிதமான முன்னேற்றங்கள் ஏற்படும். தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் அதிகமாவார்கள். சொத்துக்கள் வாங்கும் அளவிற்கு வருமானம் இருக்கும். கடைகள் வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் உங்கள் கல்வித் தகுதிக்குத் தகுந்த ஒரு சிறப்பான வேலை கிடைக்கும். இதுவரை வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு தானாக தேடி வரும்.
தொழில் -
தொழிலில் அபரிமிதமான வளர்ச்சி உண்டு. முதலீடுகளை அதிகப்படுத்துவதன் மூலம் உங்கள் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். உங்கள் தொழிலோடு சேர்ந்து ஒரு புதிய தொழிலைத் தொடங்குவீர்கள். பலவிதமான ஒப்பந்தங்கள் ஏற்பட்டு மன மகிழ்ச்சி கொடுக்கும். உங்கள் தொழில் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சலுகைகள் செய்து தருவீர்கள். ஊழியர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். புதிதாக தொழில் தொடங்குபவர்கள் எந்தநேரத்திலும் எப்போது வேண்டுமானாலும் உங்கள் தொழிலை ஆரம்பிக்கலாம். தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு அபரிமிதமான லாபம் ஏற்படும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் வெகு சிறப்பாக இருக்கும். வியாபாரிகள் புதிய கிளைகளை துவங்குவது மட்டுமல்லாமல், கூடுதலாக சில வியாபார ஏஜென்சிகள் எடுப்பார்கள். கேட்டரிங் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு நிறைய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வாடகை கட்டிடத்தில் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு அந்த இடத்தை இப்போது சொந்தமாக்கிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. கட்டுமானத் தொழிலில் எதிர்பாராத அளவுக்கு வேகம் பிறக்கும்.
பெண்களுக்கு -
மனக் கவலைகள் அனைத்தும் தீரும். எண்ணிய செயல்கள் அனைத்தும் முழு வடிவம் பெறும். திருமண முயற்சிகள் கைகூடும். சொந்த தொழில் செய்யும் ஆர்வமுள்ளவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைத்து சொந்தத் தொழிலை இப்பொழுது ஆரம்பிப்பார்கள். திருமண முயற்சிகள் கைகூடும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். குழந்தை பாக்கியத்திற்காக மருத்துவ செலவு செய்து கொண்டிருந்தவர்களுக்கு இனி மருத்துவ செலவுகள் தேவைப்படாது. இயல்பான சொத்து சேர்க்கை ஏற்படும். பாகப்பிரிவினைகள் ஆதாயம் கிடைக்கும். தந்தைவழி சொத்து கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.
மாணவர்களுக்கு -
கல்வியில் அபரிமிதமான வளர்ச்சி உண்டு. வெளிநாடு சென்று கல்வி கற்கும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு இப்பொழுது அந்த வாய்ப்பு கிடைக்கும். உயர்கல்வி மாணவர்களுக்கு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைப்பார்கள். வேண்டிய உதவிகள் அனைத்தும் இப்பொழுது கிடைக்கும்.
கலைஞர்களுக்கு -
கடந்த சில மாதங்களாக ஓய்வில் இருந்தீர்கள். இனி ஓய்வு என்பதே இருக்காது. பரபரப்பாக இயங்கி உங்களுடைய திறமைகளை வெளிக்காட்ட வேண்டிய நேரம் ஆரம்பித்துவிட்டது. கிடைக்கின்ற வாய்ப்புகள் அனைத்தும் பொன்னான வாய்ப்புகள் என்பதை உணருங்கள்.
பொதுபலன் -
கிரகங்கள் சாதகமான நிலையில் இருக்கும்பொழுது உங்களுடைய அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். கடன்கள் எதுவும் இருந்தால் அனைத்தையும் முழுக்க அடைக்க வேண்டும். அதற்கான அத்தனை வருமான வழிகளும் கிடைக்கும். சேமிப்பு அதிகப்படுத்த வேண்டும். அசையா சொத்துக்களில் முதலீடு செய்ய வேண்டும். கிடைக்கின்ற வாய்ப்புகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு செவ்வனே செய்து உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த வேண்டும். மருத்துவச் செலவுகள் எதுவும் இருந்தால் இனி மருத்துவ செலவுகளே இல்லாத நிலை ஏற்படும் .ஆரோக்கிய முழுமையாக குணமாகும்.
இந்த வாரம்
திங்கள் - எதிர்பாராத பணவரவு ஏற்படும். வேண்டிய உதவிகள் கிடைக்கும். இன்று பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். ஒப்பந்தங்கள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. அசையாச் சொத்து வாங்குவது பற்றிய முயற்சிகள் தொடங்குவீர்கள்.
செவ்வாய் -வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியாகும். அதுதொடர்பான சில விஷயங்கள் இன்று சாதகமாக இருக்கும். தொழில் நிமித்தமாக ஒரு நபரை சந்திப்பதன் மூலம் ஆதாயம் ஏற்படும். வியாபார பேச்சுவார்த்தைகள் முடிவடையும் அளவுக்கு சூழ்நிலைகள் இருக்கும்.
புதன் - குடும்பத்தில் சுப விசேஷம் பற்றிய பேச்சு வார்த்தைகள் நடக்கும். பேச்சுவார்த்தையின் முடிவில் சுபமான ஒரு முடிவு ஏற்படும். தேவையான உதவிகள் கிடைக்கும். ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். ஆதாயம் தரும் தகவல் ஒன்று கிடைக்கும்.
வியாழன் - திட்டமிட்ட விஷயங்கள் அனைத்தும் திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் நிறைவாக செய்து முடிப்பீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் தானாக கிடைக்கும். வலிய வந்து ஒரு சிலர் உங்களுக்கு உதவி செய்வார்கள்.
வெள்ளி - சிறு தூர பயணம் ஏற்படும். ஒருசில அலைச்சல் ஏற்படும். ஒப்பந்தங்கள் போடுவதில் ஒரு சில திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியது வரும். அலுவலகத்தில் ஒரு வேலையை திரும்ப செய்ய வேண்டியதாக அல்லது திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியதாக இருக்கும்.
சனி - கடன்களில் ஒரு பகுதியையோ அல்லது முழுமையாகவோ அடைக்க வழி கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். வியாபார விஷயமாக பயணம் ஒன்று ஏற்படும். ஆதாயம் இருமடங்காக இருக்கக்கூடிய நாள்.
ஞாயிறு - தவறான தகவலால் அலைச்சல் ஏற்படும். விலாசம் தெரியாமல் சுற்றி சுற்றி வர வேண்டிய நிலை உண்டாகும். ஒருவித சோர்வு மனப்பான்மை ஏற்பட்டு பாதியிலேயே ஒரு சில வேலைகளை நிறுத்தி விடுவீர்கள்.
வணங்க வேண்டிய தெய்வம் -
திருமலை -திருப்பதி ஸ்ரீனிவாச பெருமானை சென்று வணங்கி வாருங்கள். அவ்வளவு தூரம் செல்ல இயலாதவர்கள் அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்குச் சென்று வாருங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் பூர்த்தியாகும். சொத்துக்கள் வாங்கும் யோகம் ஏற்படும்.
*********************************************************
அவிட்டம் -
சொல்லி வைத்த மாதிரி வேலைகளை செய்து முடிப்பீர்கள். உதவிகள் தானாகக் கிடைக்கும். முயற்சிகள் வெற்றி உண்டாகும். கிரகங்கள் சாதகமான நட்சத்திரங்களில் இருப்பதால் அதிக நன்மைகள் ஏற்படும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். அசையாச் சொத்து வாங்கும் யோகம் உண்டு. கடன்கள் முழுமையாக அடைபடும்.
உத்தியோகம் -
பணியிடத்தில் பெரிய பாதிப்புகள் ஏதும் இருக்காது. எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். விரும்பிய இடமாற்றம் ஏற்படும். வேறு நிறுவனத்திற்கு செல்லும் முயற்சி வெற்றி ஆகும். இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு இப்பொழுது நல்ல வேலை கிடைக்கும். சேவை சார்ந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு செய்கின்ற வேலையில் நல்ல முன்னேற்றம், வளர்ச்சி ஏற்படும், புதிய வாடிக்கையாளர்களை கிடைக்கப் பெறுவார்கள். கடைகள் வணிக நிறுவனங்களில் பணிபுரிவர்களுக்கு வேண்டிய உதவிகளும் சலுகைகளும் கிடைக்கும்.
தொழில் -
தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டு தேங்கிக்கிடந்த பொருட்கள் அனைத்தும் விற்பனையாகும். தொழில் தொடர்பான உதவிகள் வெளிநாடுகளிலிருந்தும் கிடைக்கலாம். முதலீடுகள் கிடைக்கப்பெறுவீர்கள். வங்கிக்கடன் ஒன்றை தீர்த்து, புதிய கடன் ஒன்று வாங்குவீர்கள். தொழில் சம்பந்தமான வெளிநாட்டுப் பயணமும் ஏற்படும். வெளிநாடு தொடர்புடைய நிறுவனங்கள் உங்கள் நிறுவனத்தோடு இணைந்து செயலாற்றவும் வழி உண்டு. புதிதாக தொழில் முனைவோர்களுக்கு வாய்ப்புகள் எளிதாக கிடைக்கும். வியாபாரிகள் வியாபாரத்தில் அதிக வளர்ச்சி காண்பார்கள்,. தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அதிக ஆட்களை பணிக்கு அமர்த்த வேண்டிய அளவுக்கு வளர்ச்சி இருக்கும். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு அமோகமான நேரம். நல்ல லாபம் ஏற்படும். பங்குகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கட்டுமானத் தொழில், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு வியாபாரம் பெருமளவில் நடந்து நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
பெண்களுக்கு -
முக்கியமான கவலைகள் அனைத்தும் தீரும். தேவைகள் பூர்த்தியாகும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும் .புத்திர பாக்கியத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு இப்பொழுது புத்திரபாக்கியம் உருவாகும் அத்தனை வாய்ப்புகளும் உண்டு. சொத்து சேர்க்கை இயல்பாக ஏற்படும். சகோதர வழியில் இருந்த வருத்தங்கள் மாறும். சகோதரர்களின் உதவி கிடைக்கும்.
மாணவர்களுக்கு -
கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். புதிய கல்வி கற்கும் ஆர்வம் ஏற்படும். அடுத்த ஆண்டு கல்விக்காக இந்த ஆண்டு உங்களை தயார்படுத்திக் கொள்வீர்கள். கல்வி கடன் கிடைப்பதற்கான சூழ்நிலை உண்டு. உயர்கல்வி மாணவர்கள் அசாத்தியமான தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி மதிப்பெண்கள் அதிகமாக பெறுவார்கள்.
கலைஞர்களுக்கு -
நல்ல வாய்ப்பு ஒன்று கிடைக்கும். அதுவும் நல்ல ஒரு மதிப்புமிக்க நிறுவனம் அல்லது நபரிடம் இருந்து கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. பணத்தேவைகள் பூர்த்தியாகும். நண்பர்களால் ஆதாயமடைவீர்கள்.
பொதுப்பலன் -
சிறப்பான பலன்கள் நடைபெறும் வாரம். தடைகளும் தாமதங்களும் இருக்காது. சொத்து சேர்க்கை இயல்பாக ஏற்படும். ஒரு சிலர் தங்கள் பூர்வீகச் சொத்துக்களை விற்றுவிட்டு புதிய சொத்து வாங்கும் முயற்சியில் இறங்குவார்கள். அந்த முயற்சி வெற்றி ஆகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
இந்த வாரம்-
திங்கள் - அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். ஆனாலும் கடைசி நேரத்தில் ஆதாயம் கிடைக்கும். பணத்தேவைகள் ஓரளவுக்கு பூர்த்தியாகும்.
செவ்வாய் - எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வருமானம் தொடர்பான வியாபார விஷயங்கள் வெற்றி ஆகும். வீடு சம்பந்தமான வியாபார பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இருக்கும்.
புதன் - வெளியூர் பயணம் ஒன்று ஏற்படும். வெளிநாடு செல்லும் யோகமும் ஏற்படும். வங்கி தொடர்பான ஒரு சில பிரச்சினைகள் இன்று முடிவுக்கு வரும். கடன் சம்பந்தமான விஷயங்களுக்கு இன்று தீர்வு கிடைக்கும்.
வியாழன் - குடும்ப விஷயமாக ஒரு சில சேமிப்புகளை தொடங்குவீர்கள். அடகு வைத்த பொருட்களை மீட்க வழி கிடைக்கும். தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபாரங்களை பேசி முடிப்பீர்கள்.
வெள்ளி - திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடி நடக்கும். எதிர்பார்த்த பணவரவு தாராளமாக இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பான விஷயங்கள் இன்று முழுமையான பலன் தருமளவுக்கு சாதகமாகும்.
சனி - அலைச்சல் அதிகமாக இருக்கும். தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டியிருக்கும். உங்களுக்கு சம்பந்தமில்லாத ஒரு பிரச்சினை உங்களைத் தேடி வரும். அதை அனைத்தையும் உங்களுடைய சாமர்த்தியத்தால் சமாளிக்க வேண்டியது இருக்கும்.
ஞாயிறு - நில வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். ஒரு சில விஷயங்களில் முடிவுகள் ஏற்பட்டு ஒப்பந்தமாகும். பண உதவி கிடைக்கும். சொந்த வீடு வாங்குவதற்கான முயற்சிகளில் இன்று நல்ல தகவல் கிடைக்கும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
சொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு அதிக நன்மைகளை ஏற்படுத்தித் தரும், நற்பலன்கள் அதிகமாகும். வேண்டிய உதவிகள் கிடைக்கும்.
**************************************************************
சதயம் -
கிரகங்கள் உங்களுக்கு சாதகமான நட்சத்திரத்தில் இருப்பதாலும், ராகு உங்கள் நட்சத்திரத்திற்கு அனு ஜென்ம நட்சத்திரத்தில் பயணிப்பதாலும் உங்களுடைய தேவைகள் அனைத்தும் உடனுக்குடன் பூர்த்தியாகும். பணவரவு எதிர்பார்த்த மாதிரியே இருக்கும்.
திருமண முயற்சிகள் கைகூடும்.திருமண முயற்சிகள் கைகூடும். குழந்தை பாக்கியம் இல்லாமல் ஏங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். அதிலும் ஆண் வாரிசு வேண்டும் என எதிர்பார்த்தவர்களுக்கு நிச்சயமாக ஆண் வாரிசு கிடைக்கும்.
உத்யோகம் -
பணியில் பெரிய மாறுதல் ஏதும் இல்லை. தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். பதவி உயர்வு எதிர்பார்த்தவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் சாதகமாக இருக்கும். சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு மிக உன்னதமான வேலைகள் கிடைக்கும். லாபம் அதிகமாக பெறுவீர்கள். கடைகள் வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு இடமாற்றம் உட்பட ,வேறு நல்ல நிறுவனத்திற்கு மாறும் வாய்ப்புகளும் உண்டாகும். அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பொறுப்பு மற்றும் பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். வரவேண்டிய நிலுவைத் தொகைகள் வசூலாகும். உங்கள் மீது ஏதேனும் அரசு ரீதியான நடவடிக்கைகள் ஏதும் இருந்தால் அது இப்பொழுது கைவிடப்படும்.
தொழில் -
தொழிலில் எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். முன்னேற்றமான தகவல்கள் கிடைக்கும். முதலீடுகளால் லாபம் அதிகம் கிடைக்கப்பெறுவீர்கள். தேங்கி நின்ற பொருட்கள் அனைத்தும் இப்பொழுது விறுவிறுப்பாக விற்பனையாகும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் அபார வளர்ச்சி ஏற்படும். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் தரக்கூடிய பங்குகளில் முதலீடு செய்வீர்கள்.வியாபாரிகள் நல்ல வளர்ச்சி காண்பார்கள். தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும். வங்கி கடன் எதிர்பார்த்திருந்தால் இப்பொழுது அதற்கான சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாகும்.
பெண்களுக்கு -
திருமண முயற்சிகள் கைகூடும். குடும்பத்தில் அமைதி நிலவும். சொத்து சேர்க்கை இயல்பாக ஏற்படும். வருமானம் பல மடங்காக இருக்கும். உத்தியோகத்தில் இருக்கும் பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். லாப ஸ்தானம் வலுவாக இருப்பதால் சேமிப்பிலிருந்து சொத்துக்கள் வாங்குவீர்கள். ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். நிறைமாத கர்ப்பிணியாக இருந்தால் ஆண் வாரிசு பிறக்கும்.
மாணவர்களுக்கு -
கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. உங்களுடைய கல்விக்கு உதவிகள் பலவாறாக கிடைக்கும். நண்பர்கள் ஆசிரியர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். வெளிநாடு சென்று கல்வி கற்கும் முயற்சி வெற்றி ஆகும்.
கலைஞர்களுக்கு -
நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கிடைக்கின்ற வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ளுங்கள். பணவரவு தாராளமாக இருக்கும். நண்பர் ஒருவரால் புதிய ஒப்பந்தம் ஏற்படும்.
பொதுப்பலன் -
சாதகமான அம்சங்களாக இருப்பதால் இந்த வாரம் முழுவதும் உங்களுக்கு நற்பலன்களே நடக்கும். முயற்சிகள் வெற்றியாகும். தேவைகள் பூர்த்தியாகும். பணவரவு மனநிறைவைத் தரும். இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு இப்பொழுது வேலை கிடைக்கும். திருமண முயற்சிகள் முழுமையாக வெற்றி அடையும்.
இந்த வாரம் -
திங்கள் - எதிர்பார்த்த காரியம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பணவரவு திருப்தி தரும். எடுத்த முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். கடனை அடைப்பதற்கு வழி ஏற்படும். ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.
செவ்வாய் - அலைச்சல் அதிகமாக இருக்கும். தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். தொலைதூர பயணங்கள் மேற்கொள்ள வேண்டாம்.
புதன் - எதிர்பார்த்த பதவி தானாக தேடிவரும். எப்போதோ ஒரு சில விஷயங்கள் பாதியில் நின்று போயிருக்கும். அந்த விஷயங்கள் எல்லாம் இப்பொழுது முழுமையடையும். வியாபார பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடியும்.
வியாழன் - வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றி ஆகும். வெளிநாட்டு நண்பர்கள் மூலமாக ஒரு நல்ல தகவல் கிடைக்கப் பெறுவீர்கள். அது உங்களுடைய வேலை சம்பந்தமாக இருக்கும். சொத்து வாங்கும் யோகம் இன்று முழுமையாக இருக்கிறது. இன்று ஏதேனும் சிறிய அளவிலான நகைகள் வாங்கக் கூடிய வாய்ப்பு உண்டு.
வெள்ளி - உங்களுடைய தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். சுபச் செலவுகள் செய்து மகிழ்வீர்கள். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள்.
சனி - எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் முழுமையாக செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். வாகன மாற்றம் சிந்தனை உண்டு.
ஞாயிறு - பேச்சுவார்த்தைகள் முழுமையடைந்து கையெழுத்தாகும். தொழில் சம்பந்தமான உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். குழந்தைகளின் எதிர்காலம் கருதி ஒரு சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
வணங்க வேண்டிய தெய்வம் -
மகா விஷ்ணுவிற்கு துளசி மாலை அணிவித்து, ஒன்பது நெய் தீபங்கள் ஏற்றி வழிபடுங்கள், நன்மைகள் அதிகமாகும். தனவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
***********************************************************
பூரட்டாதி -
எடுக்கின்ற முயற்சிகள் எதுவும் தொய்வில்லாமல் நடக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.சொத்துக்கள் வாங்குவது விற்பது போன்ற விஷயங்கள் எளிதாக முடியும். அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இந்த வாரம் முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.குடும்ப உறுப்பினர்களில் யாருக்காவது திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. மனதை வாட்டிக் கொண்டிருந்த கடன் பிரச்சினையில் ஒரு பகுதியை அடைக்க வழி கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து உங்களுக்கு நல்ல தகவல் ஒன்று வந்து சேரும்.
உத்தியோகம் -
வேலையில் பெரிய மாறுதல்கள் எதுவும் இல்லை. பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. விரும்பிய இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சக ஊழியர்களுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் அகலும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அரசு ஊழியராக இருந்தால் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். வணிக நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வேறு நல்ல நிறுவனத்திற்கு மாறுவார்கள். சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு பண வரவு அதிகமாக இருக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவார்கள். விற்பனைப் பிரதிநிதிகளுக்கு அலைச்சல் குறைந்து, ஆதாயம் அதிகமாக கிடைக்கும்.
தொழில் -
தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இதுவரை இருந்த தடைகள் தாமதங்கள் அகலும். தொழிலை விரிவுபடுத்துவதற்கு எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.
ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். பங்கு வர்த்தக துறையில் இருப்பவர்களுக்கு லாபம் இரு மடங்காக இருக்கும். வியாபாரிகள் நல்ல வளர்ச்சி காண்பார்கள், உணவகத் தொழில் செய்பவர்கள் கிளைகள் ஆரம்பிக்கவும் வழி உண்டாகும். ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழிலில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்த தேக்க நிலைகள் மாறி வியாபாரம் விருத்தியாகும்.
பெண்களுக்கு -
சகோதரர்களிடம் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் தீரும். சொத்து சேர்க்கை ஏற்படும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு இப்போது தொழில் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு.
மாணவர்களுக்கு -
கல்வியில் ஏற்பட்டிருந்த ஒரு சில பின்னடைவுகள் இப்பொழுது சரியாகும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். சக மாணவர்கள் உதவியுடன் சாதனைகளைப்படைப்பீர்கள்.
கலைஞர்களுக்கு -
இசைத் துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டு. திரைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். லாபகரமான ஒப்பந்தம் ஒன்று ஏற்படும். சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு இருக்கிறது.
பொதுப்பலன் -
ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் அனைத்தும் விலகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சொந்த வீடு வாங்கும் கனவு இப்போது நனவாகும். சேமிப்புகள் உயரும். அசையா சொத்து உள்ளிட்டவை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். சொந்தத் தொழில் ஆரம்பிக்கும் முயற்சி வெற்றி ஆகும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.
இந்த வாரம் -
திங்கள் - திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடியே நடக்கும். சிறிய அளவிலான முயற்சியிலேயே பெரிய அளவிலான வேலைகள் முடியும். பலவிதமான வருமானங்கள் வரும்.
செவ்வாய் - அலைச்சல் அதிகரிக்கும். தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். அலுவலகத்தில் சக ஊழியர்களோடு அனுசரித்துச் செல்லவேண்டும். அக்கம்பக்கத்தினருடன் வீண் பிரச்சினைகள் எதுவும் செய்ய வேண்டாம்.
புதன் - ஆதாயம் தரும் ஒப்பந்தங்கள் ஏற்படும். வியாபார முயற்சிகள் வெற்றியாகும். தொழிலுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த கடன் கிடைக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.
வியாழன் - தேவையற்ற பயணங்கள் ஏற்படும். சந்திக்க வேண்டிய நபர்களை சந்திக்க முடியாமல் தள்ளிப்போகும். ஒருசில பேச்சுவார்த்தைகள் முடிவடையாமல் மேலும் காலம் தள்ளிப் போகும்.
வெள்ளி - எதிர்பாராத அளவுக்கு நன்மைகள் நடக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் மிகப்பெரிய வருமானம் கிடைக்கும். தொழில் ரீதியாக ஒரு சில ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்.
சனி - குடும்பத்தினருக்காக செலவுகள் அதிகமாக செய்ய வேண்டியது இருக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். நண்பர்களால் செலவு ஏற்படும். மற்றவர் விஷயங்களில் தலையிட்டு தேவையில்லாத பிரச்சினைகள் வந்து சேரும்.
ஞாயிறு - வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் வரும். வியாபார விஷயமாக வெளியூர் செல்ல வேண்டியது வரும். முக்கியமான பேச்சுவார்த்தைகளில் இன்று திருப்புமுனையாக, ஒப்பந்தங்கள் ஏற்படும். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
லட்சுமி குபேரர் வழிபாடு சிறப்பான பலன்களைத் தரும். நன்மைகளை அதிகரித்து தரும். தேவைகள் பூர்த்தியாகும்.
***********************************************************
உத்திரட்டாதி -
எடுத்த முயற்சிகள் அனைத்தையும் சரியாக திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். வார துவக்கத்தில் சில தடுமாற்றங்கள் இருந்தாலும், உங்கள் இலக்கை சரியாக எட்டி விடுவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் தீரும். கணவன்-மனைவிக்குள் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடுகள் அகலும். மன ஒற்றுமை மேலோங்கும். இதுவரை புத்திர பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும்.
உத்தியோகம் -
பணியிடத்தில் பெரிய பாதிப்புகள் ஏதும் இல்லை. எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். முக்கிய தேவைகளுக்காக அலுவலகத்தில் கேட்டிருந்த கடன் இந்த வாரம் கிடைக்கும். சக ஊழியர்களுடன் ஏற்பட்ட மனவருத்தங்கள் அகலும். அரசு ஊழியராக இருந்தால் இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. பதவி உயர்வும் கிடைக்கும்.
சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமும் ஏற்படும். வாடிக்கையாளர்கள் அதிகமாவார்கள். உற்சாகமாகக் வேலை செய்வீர்கள்.
கடைகள், வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு வேறு ஒரு நல்ல நிறுவனங்களுக்கு மாறுவதற்கும், கல்வித்தகுதிக்கு ஏற்ப நல்ல உத்தியோகம் கிடைப்பதற்கும் வாய்ப்புகள் உண்டு.
தொழில் -
தொழிலில் எதிர்பார்த்த அத்தனை உதவிகளும் கிடைக்கும். கூட்டாளிகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். ஒற்றுமை பலப்படும். புதிய நிறுவனங்களை ஆரம்பிப்பதற்கான முயற்சிகளை தொடங்குவீர்கள். வெளிநாட்டு முதலீடுகள் கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. வெளிநாட்டு நிறுவனங்களோடு இணைந்து தொழிலை விரிவுபடுத்தவும் வாய்ப்புகள் உருவாகும். தொழில் போட்டியாளர்கள் போட்டியிலிருந்து விலகுவார்கள்.
பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு இதுவரை ஏற்பட்ட நஷ்டங்களில் இருந்து மீண்டு, லாபத்தை நோக்கி பயணிப்பார்கள்.
ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல வளர்ச்சி ஏற்படும். வியாபாரிகளுக்கு தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்துவது மட்டுமல்லாமல், கிளை தொடங்கும் வாய்ப்பு உண்டு. தங்கள் வியாபாரக் கடைகளில் அதிக ஆட்களை வேலைக்கு அமர்த்துவது உண்டாகும்.
பெண்களுக்கு -
எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். வெளிநாடு செல்லும் கனவு நனவாகும். குடும்பத்தில் இருந்த குழப்ப நிலைகள் மாறும். அத்தியாவசியப்பொருட்களை வாங்குவீர்கள்.
மாணவர்களுக்கு -
கல்வியில் இருந்த தடுமாற்றங்கள் நீங்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். பட்டயப் படிப்பு மாணவர்கள் தேவையான உதவிகளை கிடைக்கப் பெறுவீர்கள்.
கலைஞர்களுக்கு -
நீண்ட நாளாக பேசி வந்த பேச்சுவார்த்தைகள் இப்போது ஒப்பந்தமாக மாறும். வெளிநாடு செல்லும் யோகமும் உண்டு. பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பலவிதமான உதவிகள் கிடைக்கும்.
பொதுப் பலன் -
கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். பணவரவு திருப்திகரமாக இருக்கிறது. சேமிப்புகளை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும். இப்பொழுது நீங்கள் சேமிக்கும் சேமிப்பு பிற்காலத்தில் உங்களுக்கு ஒரு முக்கிய காலகட்டத்தில் உதவும். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் எல்லாம் தீரும். அடகு வைத்த பொருட்களை இப்பொழுது மீட்டு எடுப்பீர்கள். வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். புதிதாக தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியாகும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான விஷயங்கள் சுமூகமாக முடியும். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும்.
இந்த வாரம் -
திங்கள் - திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நடக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். வீடு மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
செவ்வாய் - அலைச்சல் அதிகமானாலும் ஆதாயம் கிடைக்கும். ஒருசில வேலைகள் தள்ளிப் போனால் அது நன்மையில் முடியும் என்பதை நம்புங்கள். பணத் தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும்.
புதன் - ஆதாயம் தரும் வியாபாரம் வெற்றியாகும். ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனை, வீடு சம்பந்தப்பட்ட வியாபாரம் வெற்றிகரமாக முடியும்.
வியாழன் - வீண் அலைச்சல்கள் உருவாகும். வாகனச் செலவுகள் ஏற்படும். வியாபார பேச்சுக்கள் தள்ளிப்போகும்.
வெள்ளி - மனதிற்கினிய சம்பவங்கள் நடக்கும். மனநிறைவு ஏற்படும் வகையில் பணவரவு இருக்கும். நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.
சனி - உங்களுக்கு சம்பந்தமில்லாத வேலைகள் உங்கள் மீது திணிக்கப்படும். எரிச்சலும், கோபமும் உண்டாகும். அலைச்சலால் உடல் பலவீனமாகும். சரியாக வேலைகளை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
ஞாயிறு - வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியாகும். நண்பர்களின் உதவி கிடைக்கும். வியாபார பேச்சுவார்த்தைகள் வெற்றியாகும். தொழில் நிமித்தமாக ஒரு உதவி கிடைக்கும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
சிவபெருமானுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து, நெய் தீபமேற்றி வழிபடுங்கள். பிரச்சினைகள் குறையும். மன நிம்மதி ஏற்படும். தேவைகள் பூர்த்தியாகும். ஆரோக்கியம் மேம்படும்.
******************************************************
ரேவதி -
எடுக்கின்ற முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அலைச்சல்கள் அதிகமாக இருந்தாலும், அதற்கு உண்டான ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடக்கும். திருமண முயற்சிகள் முடிவுக்கு வரும். வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு இப்பொழுது வேலை கிடைக்கும். மனதை வாட்டிக் கொண்டிருந்த ஒரு கடன் தீரும். வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றி ஆகும். ஆன்மிகப் பயணங்கள் ஏற்படும்.
உத்தியோகம் -
பணியிடத்தில் சகஜமான நிலையே இருக்கிறது. பெரிய பாதிப்புகள் ஏதும் இல்லை. எதிர்பார்த்த பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஒருசிலர் வருங்கால வைப்பு நிதியில் இருந்து கடன் வாங்குவார்கள். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். உதவிகள் கிடைக்கும்.
வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு இப்பொழுது கூடுதல் பொறுப்புகளும், ஊதிய உயர்வும் ஏற்படும். சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் அதிகமாவார்கள்.
தொழில் -
தொழிலிருந்த நெருக்கடிகள் அனைத்தும் விலகும். ஒரு சிலருக்கு அரசு வழியில் இருந்த வழக்குகள் சுமுகமான தீர்வு கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்த முயற்சி எடுப்பீர்கள். அதற்க்கான உதவிகள், பணத்தேவைகள் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும். புதிய நிறுவனங்களோடு ஒப்பந்தம் போடுவீர்கள். பங்கு வர்த்தகத் துறையில் நல்ல வளர்ச்சி இருக்கும். இழப்புகள் என்பது இனி இருக்காது. நல்ல வளர்ச்சி காண்பார்கள். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். புதிய வியாபார கிளை ஒன்றை ஆரம்பிப்பீர்கள்.
பெண்களுக்கு -
மனதில் மகிழ்ச்சி நிலவும். எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி தரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். சொத்து சேர்க்கை உண்டு. கடன்கள் தீரும்.
மாணவர்களுக்கு -
கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. வெளிநாடு சென்று கல்வி பயிலும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு இப்பொழுது அந்த வாய்ப்பு கிடைக்கும்.
கலைஞர்களுக்கு -
நண்பர்களால் நிறைய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவீர்கள். வெளிநாடு செல்லும் யோகமும் உண்டு. உங்கள் துறை சார்ந்த பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்க வழி கிடைக்கும்.
பொதுப்பலன் -
நல்ல பலன்கள் நடக்கும் வாரம் . அலைச்சல் அதிகமாக இருந்தாலும் ஆதாயம் இருக்கும். சொந்த வீடு வாங்கும் முயற்சி வெற்றி பெறும். வீடு வாங்குவதற்கான வங்கிக் கடன் எளிதாக கிடைக்கும். பெரிய கடன் ஒன்றை அடைப்பீர்கள். அடகு வைத்த நகைகளை மீட்பீர்கள்.
இந்த வாரம் -
திங்கள் - பணிபுரியும் இடத்தில் மற்றவர் வேலையை நீங்கள் செய்ய வேண்டியது வரும். கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.
செவ்வாய் - ஆதாயம் தரும் ஒரு விஷயத்தை பேசி முடிப்பீர்கள். கடனை அடைப்பதற்கான முயற்சியில் இறங்குவீர்கள்.
புதன் - அலைச்சல்கள் ஏற்படும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். மற்றவர்கள் உங்களை எரிச்சல்படுத்தப் பார்ப்பார்கள். மனக்கட்டுப்பாடு அவசியம்.
வியாழன் - நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். மூத்த சகோதரர் , உங்களுக்கு உதவிக்கு வருவார்.
வெள்ளி - தொலைதூர பயணம் ஒன்று ஏற்படும். வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றியாகும். ஆதாயம் தரும். ஒரு வியாபாரத்தை பேசி முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் கிடைக்கும்
சனி - அலைச்சல்கள் அதிகரிக்கும். வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். ஆடம்பரச் செலவுகள் ஏற்படும்.
ஞாயிறு - குடும்பத்தில் சுப விசேஷ பேச்சுவார்த்தைகள் நடக்கும். விசேஷங்கள் பேசி முடிக்கப்படும். பணவரவு தாராளமாக இருக்கும். எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி தரும். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடக்கும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள். அல்லது ஒலிக்கச் செய்து கேளுங்கள். நன்மைகள் அதிகமாகும். மனதில் இருந்த கவலை குறையும். செயல்களில் வெற்றி கிடைக்கும்.
**************************************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
13 hours ago
ஜோதிடம்
13 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago