இந்த வாரம் இப்படித்தான் - நட்சத்திரப் பலன்கள் : எந்தக் கிழமைகளில் என்னென்ன பலன்கள்? (டிசம்பர்  9 முதல் 15-ம் தேதி வரை) விசாகம் முதல் உத்திராடம் வரை

By செய்திப்பிரிவு


ஜோதிடர் ஜெயம் சரவணன்


விசாகம் -
சிறப்பான பலன்கள் நடைபெறும் வாரம். உங்கள் திறமை மீது மற்றவர்களுக்கு இப்போதுதான் நம்பிக்கை வரும். உங்கள் மீதான அவநம்பிக்கைகள் அகலும். உங்களின் மதிப்பு மரியாதை கூடும். குடும்பத்தில் ஒரு சில பிரச்சினைகள் இருந்தாலும் அதையெல்லாம் எளிதாக கையாளுவீர்கள். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். பிரிந்திருந்த தம்பதியினர் மீண்டும் ஒன்று சேர்வார்கள்.எதிர்காலம் கருதி ஒரு சில திட்டங்கள் தீட்டுவீர்கள். அதை செயல்படுத்தவும் தொடங்குவீர்கள்.

உத்தியோகம் -
பணியிடத்தில் சுமுகமான நிலையை இருக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். ஒரு குழுவுக்கு தலைமை ஏற்க வேண்டியது வரும். எடுத்த வேலைகள் அனைத்தையும் விரைவாக செய்து முடிப்பீர்கள். அரசு ஊழியர்களுக்கு திடீர் பதவி உயர்வு ஏற்படும். இட மாற்றத்துடன் கூடிய பதவி உயர்வாக இருக்கும். சேவை சார்ந்த வேலை செய்பவர்கள் மனநிறைவான வேலை ஒப்பந்தங்கள் கிடைக்கும். லாபம் அதிகமாக இருக்கும். விற்பனைப் பிரதிநிதிகள் தங்கள் இலக்குகளை எளிதாக எட்டி சாதனை செய்வார்கள். கடைகள் வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு மனம் மகிழும் படியான ஊதிய உயர்வு உண்டாகும்.

தொழில் -
தொழிலில் எதிர்பார்த்த அத்தனை உதவிகளும் கிடைக்கும். அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும். அரசு வழியில் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும். வழக்குகள் சாதகமாகும். தொழில் சார்ந்த கடன்கள் தீர்வதற்கு வழி கிடைக்கும். ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான தொழில் செய்பவர்களுக்கு அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். வியாபாரம் பெருகும். பங்கு வர்த்தக துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத அளவுக்கு முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகள் நல்ல வளர்ச்சி காண்பார்கள். புதிய ஏஜென்சி எடுப்பார்கள். தங்கள் வியாபாரங்களை விரிவுபடுத்துவீர்கள்.

பெண்களுக்கு -
குடும்பத்தில் சுப விசேஷங்கள் நடக்கும். அதற்கான முன்னேற்பாடுகள் இந்த வாரம் நடக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். இதுவரை புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு இப்பொழுது புத்திர பாக்கியம் உண்டாகும். சொத்து சேர்க்கை உண்டு. ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். அதிலும் அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

மாணவர்களுக்கு -
கல்வியில் அதிக முன்னேற்றம் ஏற்படும். சாதனை செய்யும் மதிப்பெண்களைப் பெறுவீர்கள். விரும்பிய கல்வி கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வெளிநாடு சென்று கல்வி கற்க முயற்சி வெற்றியாகும்.

கலைஞர்களுக்கு -
பொன்னான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உங்கள் திறமை பளிச்சிடும் நேரமிது. வெற்றிகரமான வாய்ப்புகள் உருவாகும் வாரம்.

பொதுபலன் -
சிறப்பான பலன்கள் நடைபெறுவதால் எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் திட்டமிட்டு சரியாக செய்து முடித்துக் கொள்ள வேண்டும். பணவரவு திருப்திகரமாக இருக்கிறது, கடன்கள் அடைபட வழி கிடைக்கும். சொந்த வீடு வாங்கும் முயற்சி வெற்றி ஆகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும், சேமிப்பு உயரும்.

இந்த வாரம்-

திங்கள் - சுப விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். அல்லது வீட்டில் சுப விசேஷ பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து அதுதொடர்பான நிகழ்ச்சிகள் நடத்துவீர்கள்.
செவ்வாய் - எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் ரீதியாகவோ அல்லது வியாபார ரீதியாகவோ சந்திப்புகள் ஏற்படும். அது நல்ல பலன்களை தரும்.
புதன் - வியாபாரத் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்துவீர்கள். அது தொடர்பான ஒப்பந்தங்கள் போடுவதற்கான முயற்சிகள் நடக்கும், பணவரவு எதிர்பார்த்த படியே இருக்கும். ஒரு சில விஷயங்கள் தள்ளிப்போகும்.
வியாழன் - எதிர்பார்த்த வங்கிக் கடன் இன்று கிடைக்கும். அல்லது வங்கி தொடர்பான உதவிகள் கிடைக்கும், தொழிலில் ஒரு சில ஒப்பந்தங்கள் போடுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. சுப நிகழ்வுகள் நடப்பதற்கான சூழ்நிலை இருக்கிறது.
வெள்ளி - வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றியாகும். அல்லது வெளிநாட்டில் இருந்து உதவிகள் கிடைக்கும். வியாபார விஷயமாக வெளியூர் செல்ல வேண்டியது வரும். தொழில் அபிவிருத்திக்காக ஒரு பெரிய கடன் வாங்குவீர்கள்.
சனி - எதிர்கால திட்டங்களுக்கு திட்டம் தீட்டுவீர்கள். முதலீடுகள் செய்ய ஆர்வம் ஏற்படும். அசையாச் சொத்து வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. வாகன மாற்றம் பற்றிய சிந்தனை அதிகமாகும்.
ஞாயிறு - வியாபார பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் இன்று சுமுகமாக பேசித் தீர்க்கப்படும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். வரவேண்டிய பழைய பாக்கிகள் எல்லாம் இன்று வசூலாகும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக படத்தை வீட்டில் வைத்து வழிபட்டு வாருங்கள். நன்மைகள் அதிகமாக நடக்கும், உங்கள் தேவைகள் பூர்த்தி ஆகும். இருக்கின்ற ஒரு சில தடைகளும் காணாமல் போகும்.

**********************************************

அனுஷம் -
தடைகள் பலவாறாக இருந்தாலும் தடைகளை தகர்த்தெறிந்து வெற்றிகளைக் குவிப்பீர்கள். எதிர்பார்த்த ஒரு சில உதவிகள் இந்த வாரம் கிடைக்கும்.யாருக்கும் எதற்காகவும் வாக்கு கொடுக்கக் கூடாது. நண்பர்களோ உறவினர்களோ யாராக இருந்தாலும் ஜாமீன் தரக்கூடாது. கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டும். பணத்தை கையாளும் பொழுது அதிக கவனத்துடனும், எச்சரிக்கை உணர்வுடனும் கையாளவேண்டும். வழக்கு ஏதேனும் இருந்தால் அதை முடிந்தவரை தள்ளி வைக்க வேண்டும். ஆனாலும் வழக்குகளால் பாதிப்பு ஏதும் இருக்காது. அதே போல பூர்வீகச் சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் அல்லது பாகப் பிரிவினையில் விட்டுக் கொடுத்து சென்றால், நன்மைகள் அதிகமாக ஏற்படும்.

உத்தியோகம் -
பணியிடத்தில் பெரிய அளவு பிரச்சினைகள் ஏதும் இருக்காது. ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைத்தாலும், அதில் சில நெருக்கடிகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். வேலையில் அதிக சிரத்தை எடுக்க வேண்டியது வரும், வருமானத்திற்கு குறைவிருக்காது.

தொழில் -
தொழிலில் ஒரு சில தொய்வுகள் ஏற்பட்டாலும், தொடர்ந்து சில முயற்சிகளை எடுத்து கொண்டே இருப்பீர்கள், அந்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும்.
வங்கி கடன் தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அரசிடம் இருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அரசு நிறுவனங்களோடு ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். புதிதாக தொழில் தொடங்கும் எண்ணம் உடையவர்களுக்கு இன்னும் சில காலம் பொறுத்திருக்க வேண்டும். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்கள் அளவான முதலீடு செய்ய வேண்டும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு பெரிய பிரச்சனைகளோ, அல்லது பாதிப்புகள் எதுவும் இருக்காது, இயல்பான நிலையே தொடர்கிறது. வியாபாரிகள் வளர்ச்சி காண்பார்கள். கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். முடிந்தவரை கொடுத்த கடன்களை திரும்ப வாங்குவதற்கான முயற்சிகளை செய்து கொண்டே இருக்க வேண்டும்.

பெண்களுக்கு -
குடும்பத்தினர், உற்றார் உறவினர், அக்கம்பக்கத்தினர் இப்படி எவரிடம் பேசினாலும், உங்களுடைய வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் சரியாக பேசினாலும் அது தவறாக புரிந்து கொள்ளக் கூடியதாகவே இருக்கும். எனவே பேச்சில் நிதானம் தேவை. அவசரமான முடிவுகள் எதுவும் எடுக்கக் கூடாது. கடன் வாங்கக்கூடாது. இப்போது கடன் வாங்கினால் அதைத் திருப்பி செலுத்த மிகுந்த சிரமம் ஏற்படும். மற்றபடி திருமணமாகாத பெண்களுக்கு இப்போது திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இப்போது குழந்தை பாக்கியம் உருவாகும்.

மாணவர்களுக்கு -
கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஞாபகமறதி ஏற்படும், கல்வியைத் தவிர மற்ற விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். எனவே மனதைக் கட்டுப்படுத்தி கல்வியில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும்.

கலைஞர்களுக்கு -
இன்னும் ஒரு சில வாரங்கள் பொறுத்திருந்தால் நல்ல வாய்ப்புகள் தானாக தேடி வரும். பொருளாதார பிரச்சினைகள் ஓரளவுக்கு சீராகும். எதிர்பார்த்த உதவிகள் தள்ளிப்போகலாம்.

பொதுப்பலன் -
வங்கிக் கணக்கு வழக்குகளை சரியாக பராமரிக்க வேண்டும். காசோலைகள் தரும்பொழுது நன்றாக சிந்தித்து அதன் பிறகு தரவேண்டும். யாருக்கும் வாக்கு கொடுப்பது, ஜாமீன் கொடுப்பது கூடாது. குடும்பத்தினரோடு முடிந்தவரை அனுசரித்துச் செல்லுங்கள். கோபத்தை வெளிக் காட்டாதீர்கள். வருமானத்திற்கு தடையிருக்காது. போராடி சில முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். வியாபார பேச்சுவார்த்தைகள் ஓரளவுக்கு உங்களுக்கு சாதகமாகவே இருக்கும்.

இந்த வாரம்-
திங்கள் - எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான பேச்சுவார்த்தை நல்லபடியாக முடியும், ஒரு சிலர் ஒப்பந்தம் போடும் அளவுக்கு இருக்கும். வாகனம் தொடர்பான தொழில், பூமி சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள் இன்று வருமானம் எதிர்பார்த்தது போலவே இருக்கும்.
செவ்வாய் - நண்பர்கள், உறவினர்களுக்காக ஒரு சில வேலைகளை செய்து கொடுக்க வேண்டியது வரும். அலைச்சல் அதிகமாக இருக்கும். முக்கியமான சந்திப்புகள் தள்ளிப் போகலாம்.
புதன் - வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். தொழில் சம்பந்தமான எதிர்பார்த்த பண உதவி இன்று கிடைக்கும். வங்கி சம்பந்தமான பிரச்சினைகள் தீரும். வீடு சம்பந்தமான விஷயங்கள் இன்று பத்திரப் பதிவு செய்வதற்கான வாய்ப்பு உண்டு. வருமானம் பல வழிகளிலும் வரும்.
வியாழன் - தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். ஒருசிலருக்கு அலுவலக ரீதியான அல்லது தொழில் ரீதியான பயணங்கள் ஏற்படும். பேச்சுவார்த்தைகள் தள்ளிப்போகலாம்.
வெள்ளி - இன்று சந்திராஷ்டமம். எனவே எதிலும் நிதானம் தேவை. அவசர முடிவுகள் எதுவும் எடுக்கவேண்டாம். பேச்சுவார்த்தையில் ஏதும் இருந்தால் தள்ளிப் போடுங்கள். புதிய முயற்சிகள் எதுவும் எடுக்க வேண்டாம்.
சனி - ஆன்மிகப் பயணம் ஒன்று ஏற்படும்.தொலைபேசி வழியாக ஒரு நல்ல தகவல் கிடைக்கும், அந்த தகவல் உங்களுக்கு மன மகிழ்ச்சி ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். எந்த வேலையாக இருந்தாலும் இன்று நல்லபடியாக முடியும்.
ஞாயிறு - குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்க வேண்டியதிருக்கும். ஆடை ஆபரணங்கள் போன்றவற்றை வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். சுப விசேஷ செலவு உண்டு.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம், காலை மாலை இரு வேளைகளிலும் பாராயணம் செய்து வாருங்கள். நன்மைகள் அதிகமாக நடக்கும். எதிர்ப்புகள் குறையும். எதிரிகள் காணாமல் போவார்கள். வருமானம் இருமடங்காக இருக்கும்.

************************************************


கேட்டை -
அமைதியாக இருந்து உங்கள் வேலைகளை செய்து முடிப்பீர்கள். அதிக எச்சரிக்கை உணர்வு ஏற்படும்.
உள்ளுக்குள் சந்தேக உணர்வு இருந்து கொண்டே இருக்கும். மனம் தேவையில்லாத விஷயங்களில்சிந்திக்க வைக்கும்.எந்த முயற்சிகளிலும் பகீரதப்பிரயத்தனம் தேவைப்படும். முடிவுகள் எடுப்பதை தள்ளி வையுங்கள். குடும்பத்தினரிடம் தேவையில்லாத சச்சரவுகளை செய்ய வேண்டாம். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்து சென்றால் பெரிய பாதிப்புகள் ஏதும் இருக்காது. குழந்தைகளிடம் கடுமை காட்ட வேண்டாம். நீங்கள் எடுக்கும் முடிவே சிறந்தது, என்று மற்றவர்களிடம் வற்புறுத்த வேண்டாம்.

உத்தியோகம் -
உங்கள் வேலையை மட்டும் நீங்கள் பார்த்துக் கொண்டே இருந்தால் பெரிய பிரச்சினைகள் ஏதும் இருக்காது. அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்ல வேண்டும். உயரதிகாரிகளின் வருத்தத்திற்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அரசு ஊழியர்கள் தங்கள் பணியில் முழு கவனம் செலுத்த வேண்டும். சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு வேலையின் பளு அதிகமாக இருக்கும். வாடிக்கையாளர்களிடம் தேவையில்லாத விவாதம் செய்ய வேண்டாம். கடைகள் வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் பொருட்களை கையாளும் போதும், வாடிக்கையாளர்களிடம் பேசும்போதும் கவனமாக இருக்க வேண்டும்.

தொழில் -
தொழிலில் அகலக்கால் வைக்க முயற்சி செய்ய வேண்டாம். இருக்கின்ற தொழிலை சரியாக செய்வதற்கான முயற்சிகளில் இறங்குங்கள். முதலீடுகளை அதிகம் செய்யவேண்டாம். சிறிய கடன்களை அடைப்பதற்காக பெரிய கடனை எதிர்பார்த்துக் கொண்டு, அதற்காக அதிக செலவுகளை செய்ய வேண்டியது வரும். அப்படிப்பட்ட முயற்சிகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். பங்கு வர்த்தகத் துறையினர் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முதலீடுகள் செய்ய வேண்டும். வியாபாரிகள் கடன் கொடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

பெண்களுக்கு -
நிதானமாக பேசவேண்டும். எந்த ஒரு விஷயத்திலும் ஆழ்ந்து யோசனை செய்து அதன் பிறகே முடிவெடுக்க வேண்டும். சகோதரர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. கடன் வாங்குவது கண்டிப்பாக கூடாது,.நகைகள் அடகு வைக்க வேண்டிய சூழ்நிலை வரலாம்.

மாணவர்களுக்கு -
ஞாபக மறதி அதிகமாகும். கல்வியில் கவனச்சிதறல் ஏற்படும். ஆனால், வெளிநாடு சென்று கல்வி கற்கும் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு அதற்கான உதவிகள் கிடைக்கும்.

கலைஞர்களுக்கு -
இன்னும் சில காலம் பொறுத்திருக்க வேண்டும். அதற்காக சில காலம் என்பது வருடக்கணக்கில் அல்ல, இன்னும் சில வாரங்கள் தான். பொறுமை உங்களுக்கு நல்ல பலனைத் தரும்.

பொதுப்பலன் -
எந்த ஒரு விஷயத்திலும் ஆழ்ந்து யோசித்து முடிவெடுக்க வேண்டும். திருமண முயற்சிகள் தள்ளிப் போகலாம். அதற்காக மனம் தளர வேண்டாம் இன்னும் ஒரு சில வாரங்களில் திருமண முயற்சிகள் நல்லவிதமாக முடியும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்ற விஷயங்களில் அதிக கவனம் வேண்டும். கடன் வாங்குவது முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.

இந்த வாரம்-
திங்கள் - உங்களுடைய பொறுமையை சோதிக்கும் வண்ணமாக இந்த நாள் அமையும். நிதானமாக இருப்பது நல்லது.கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
செவ்வாய் - எதிர்பார்த்த ஒரு சில உதவிகள் கிடைக்கும். பணத் தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும். பேச்சுவார்த்தைகள் நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக இருக்கும்.
புதன் - இன்று செய்யக்கூடிய வேலைகள் எதுவும் மற்றவர்களுக்கு நன்மையும், உங்களுக்கு மன திருப்தியையும் மட்டுமே தரும்.
வியாழன் - ஒரு சில வியாபாரங்கள் இன்று சுமூகமாக முடியும். எனவே உங்களுக்கு கிடைக்க வேண்டிய பணம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. கடன் சம்பந்தமான நெருக்கடி குறையும்.
வெள்ளி - தேவையற்ற பயணங்களை செய்ய வேண்டாம். ஒரு கடன் பிரச்சினையை தீர்ப்பதற்காக, வேறு கடன் வாங்கும் முயற்சி செய்ய வேண்டாம். முடிந்தவரை கடன் விஷயத்தில் சுமுகமாக நடந்து கொள்வது நல்லது.
சனி - இன்று சந்திராஷ்டமம். அதிக கவனம் தேவை. நிதானம் முக்கியம்.
ஞாயிறு - கடந்த சில நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த பண உதவி இன்று கிடைக்கும். வியாபார சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து மன ஆறுதலை தரும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
உக்கிர தெய்வமாக இருக்கும் காளி, பிரத்யங்கிரா போன்ற பெண் தெய்வங்களை வணங்கி வாருங்கள். பிரச்சனைகள் எதுவும் உங்களை அணுகாது. எதிர்ப்புகள் என்பது குறையும். நெருக்கடிகள் தீரும். தேவையான பண உதவி கிடைக்கும்.

*****************************************************

மூலம் -
கடந்த சில வாரங்களாக இருந்த நெருக்கடிகள் ஒவ்வொன்றாக குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரவில் இருந்த தடைகள் அகலும். ஒரு சில குழப்பங்கள் ஏற்பட்டாலும் அதற்கான தீர்வுகள் உடனுக்குடன் கிடைக்கும். நல்ல பலன்கள் நடக்கும் வாரம் இது, எனவே உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும்.

உத்தியோகம் -
பணியிடத்தில் இருந்த நெருக்கடிகள் இப்பொழுது குறையும். அலுவலகத்தின் சார்பில் உங்களுக்கு சில சலுகைகள் மற்றும் உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அரசு ஊழியர்களுக்கு அவர்கள் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு வேலையில் திருப்தியான சூழ்நிலை உருவாகும், பணவரவு திருப்திகரமாக இருக்கும். கடைகள் வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு இடமாற்றம் ஏற்படும், வேறு நிறுவனத்திற்கு மாறும் முயற்சி வெற்றியாகும்.

தொழில் -
தொழிலில் எதிர்பார்த்துக் கொண்டிருந்த முதலீடு இந்த வாரம் கிடைக்கும். கூட்டாளிகளிடமிருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். வெளிநாட்டில் இருந்தோ அல்லது வெளியூரில் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். புதிதாக தொழில் தொடங்கும் ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு சில முன்னேற்பாடுகள் இந்த வாரம் நடக்கும். பங்கு வர்த்தக துறையில் இருப்பவர்களுக்கு சுமாரான வளர்ச்சி இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு பெரிய மாறுதல் ஏதும் இருக்காது. வியாபாரிகள் ஓரளவு வளர்ச்சி காண்பார்கள்.

பெண்களுக்கு -
வேலை இல்லாத பெண்களுக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அரசு பணிக்கு தேர்வு எழுதியவர்களுக்கு இந்த வாரம் நல்ல தகவல் வந்து சேரும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும், அதற்கான பேச்சுவார்த்தைகள் இந்த வாரம் சுமூகமாக முடியும். திருமணமான பெண்களுக்கு குழந்தை பாக்கியம் உருவாகும்.

மாணவர்களுக்கு -
கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். வெளிநாடு சென்று கல்வி கற்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு, அந்த முயற்சி பலிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். தோல்வியுற்ற பாடங்களை மறு தேர்வு எழுதியவர்கள் தேர்ச்சி அடைவார்கள்.

கலைஞர்களுக்கு -
எதிர்பார்த்த ஒப்பந்தம் ஒன்று இந்த வாரம் ஏற்படும். பண உதவி கிடைக்கும். அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும். வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றியாகும்.

பொதுபலன் -
ஒரு சில பிரச்சினைகளில் தொய்வு இருந்தாலும், விடா முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். திருமண முயற்சிகள் கைகூடும். பிரிந்த தம்பதியினர் இப்பொழுது ஒன்று சேர்வார்கள். தம்பதிகளுக்குள் வழக்கு ஏதேனும் நடந்து கொண்டிருந்தால் இப்பொழுது வாபஸ் வாங்கு வீர்கள். சொந்த வீடு வாங்கும் எண்ணம் உடையவர்களுக்கு அதற்கான முயற்சிகளில் இந்த வாரம் இறங்கலாம்.

இந்த வாரம்-
திங்கள் - திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும், திட்டமிட்டபடியே நடக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். வியாபார பேச்சுவார்த்தைகள், நீங்கள் எதிர்பாராத வகையில் வெற்றிகரமாக முடியும். தொழில் விஷயமாக எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
செவ்வாய் - சிறு தூர பயணம் ஏற்படும். அந்த பயணத்தால் லாபமும் உண்டு. உடலில் சோர்வு தோன்றும். சிறிய அளவிலான மருத்துவ செலவு ஏற்படும்.
புதன் - தரகு மற்றும் கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு இன்று நல்ல விஷயங்கள் நடக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வாகனம் மாற்றும் எண்ணம் உடையவர்களுக்கு இன்று அதற்கான முயற்சிகள் சாதகமாகும்.
வியாழன் - வியாபார பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து ஒப்பந்தங்களாக மாறும். சந்திக்க வேண்டிய முக்கியமான நபரை சந்திப்பதில் தாமதம் ஏற்படலாம்.
வெள்ளி - தொழில் நிமித்தமான ஒரு உதவி இன்று கிடைக்கும். வங்கி சம்பந்தமான ஒரு பிரச்சனை தீரும். வங்கிக் கடன் கிடைப்பதற்கான சூழ்நிலை உருவாகும். திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் பேசி முடிக்கப்படும்.

சனி- இன்று சந்திராஷ்டமம், பொறுமையாக இருக்க வேண்டும். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம், பேச்சுவார்த்தைகளை தள்ளிப்போடுங்கள், பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.
ஞாயிறு - வீட்டு பராமரிப்பு செலவுகள் இருக்கும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். குடும்பத்தோடு கோயிலுக்குச் சென்று வருவீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அல்லது, வடை மாலை சாற்றி வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும். தடைகள் அகலும், கடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும்.

*********************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்