ஜோதிடர் ஜெயம் சரவணன்
பூரம் -
நல்ல பலன்கள் நடக்கும் வாரம். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தாமதமில்லாமல் நடக்கும். ஒரு சில விஷயங்களில் இழுபறி நீடித்தாலும், முடிவு சாதகமாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு சுபவிசேஷங்கள் நடப்பதற்கு வாய்ப்பு உண்டு. குழந்தைகளின் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் அகலும். அவர்களுடைய மருத்துவச் செலவுகள் இப்பொழுது இல்லாமல் போகும். தீவிரமாக முயற்சி செய்தால் அனைத்தும் உங்களுக்கு சுலபமாக முடியும்.
உத்தியோகம் -
பணி இடத்தில் பெரிய மாறுதல் ஏதும் இருக்காது. சகஜமான நிலையே நீடிக்கும். சக ஊழியர்களுடன் கலகலப்பாகவே இந்த வாரம் செல்லும். அரசு ஊழியர்களுக்கு விரும்பிய இடமாற்றம் ஏற்படும். அலுவலகத்தில் வரவேண்டிய நிலுவைத் தொகை இந்த வாரம் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு இப்பொழுது நல்ல வேலை கிடைக்கும். கல்விக்குத் தகுந்த வேலை இல்லாமல் ஏங்கியவர்களுக்கு இப்பொழுது நல்ல வேலை கிடைக்கும். சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு சிறப்பாகவே இருக்கிறது பெரிய மாறுதல் ஏதும் இருக்காது.
தொழில் -
தொழிலில் எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். இதுவரை இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வழக்கு ஏதேனும் இருந்தால் இப்பொழுது உங்களுக்கு சாதகமாகும். புதிதாக தொழில் தொடங்கும் எண்ணம் உடையவர்களுக்கு இந்த வாரம் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமாக பேச்சு வார்த்தைகள் ஏதும் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் இந்த வாரம் ஒரு நல்ல முடிவு ஏற்படும். ஏற்றுமதி-இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு லாபம் அதிகமாக கிடைக்கும். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகள் நல்ல வளர்ச்சி காண்பார்கள். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.
பெண்களுக்கு -
குடும்பக் கவலைகள் தீரும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சுமூகமாக மாறும். சொந்த வீடு வாங்கும் கனவு இப்போது நிறைவேறும். அதற்கான உதவிகள் கிடைக்கும். அடகு வைத்த பொருட்களை மீட்க வழி கிடைக்கும்.
மாணவர்களுக்கு -
கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தேர்வுகளில் ஏதும் எழுதி இருந்தால் இப்போது நல்ல மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு இப்பொழுது நல்ல யோகமான நேரம், தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.
கலைஞர்களுக்கு -
நீண்ட நாளாக பேசிவந்த ஒரு பேச்சு வார்த்தை முடிவுகள் ஏற்படும். ஆனால் ஒப்பந்தங்கள் ஏற்படுவது இன்னும் தள்ளிப் போகும். பணவரவு ஓரளவுக்கு திருப்திகரமாக இருக்கும். உங்கள் தொழில் முறை குருவுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஏதாவது ஒரு உதவி செய்து தருவீர்கள்.
பொதுப்பலன் -
குழந்தைகளின் எதிர்காலம் கருதி சேமிப்புகள் செய்யத் தொடங்குவீர்கள். குலதெய்வ வழிபாடு ஏற்படும். பரிகார ஆலயங்கள் சென்று வர விரும்புவீர்கள். உத்தியோக ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் இருந்த ஒரு சில பிரச்சினைகளை உங்கள் சாமர்த்தியத்தால் தீர்த்துக் கொள்வீர்கள். வேண்டிய உதவிகள் கிடைப்பதால் மகிழ்ச்சிகரமாக இந்த வாரம் இருக்கும்.
இந்த வாரம்-
திங்கள் - முக்கியமான தேவைகள் அனைத்தும் இன்று பூர்த்தியாகும். மனதில் தேவையற்ற ஒரு குழப்பம் உருவாகும், சரியாக முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள்.
செவ்வாய் - வியாபார பேச்சுவார்த்தையில் முடிவுக்கு வரும். ஒப்பந்தங்கள் போடும் அளவுக்கு முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள்.
புதன் - எடுத்துக்கொண்ட முயற்சிகளில் ஒரு சில தடை, தாமதங்கள் ஏற்படலாம். வாக்கு கொடுத்தவர்கள் அந்த வாக்கை நிறைவேற்ற முடியாமல் போகும் சூழ்நிலை உருவாகும். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.
வியாழன் - பூமி சம்பந்தப்பட்ட வியாபாரம் இன்று நல்ல முடிவுக்கு வரும். ஒப்பந்தம் போடும் அளவுக்கு முன்னேற்றம் ஏற்படும். ஒப்பந்தம் போடவும் வாய்ப்பு இருக்கிறது. வங்கி சம்பந்தமான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
வெள்ளி - தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். ஒருசில விஷயங்கள் எதிர்பாராமல் தள்ளிப்போகும். முக்கியமான விஷயங்களில் முடிவெடுக்க முடியாது. ஒரு சில விஷயங்கள் தள்ளிப் போவதால் அதை சார்ந்த மற்ற விஷயங்களும் தாமதமாகும்.
சனி - நேற்றைய பிரச்சினைகள் அனைத்தும் இன்று நல்ல முடிவிற்கு வரும். ஒரு சில விஷயங்களில் ஒப்பந்தம் போடும் அளவிற்கு முன்னேற்றம் ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார விஷயமாக வெளியூர் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
ஞாயிறு - வெளிநாடு செல்லும் விஷயமாக இன்று சாதகமான தகவல் கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து நண்பர் ஒருவரால் உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு மனநிறைவைத் தரும், அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள்.
வணங்கவேண்டிய தெய்வம் -
மகாலட்சுமி தாயாருக்கு வெண்தாமரை மலர் கொண்டு அர்ச்சனை செய்து, நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள், நன்மைகள் அதிகமாக இருக்கும், தேவைகள் பூர்த்தியாகும்.
***************************************************************
உத்திரம் -
வாரத்தின் துவக்கத்தில் ஒரு சில தொய்வுகள் இருந்தாலும் வாரத்தின் பிற்பகுதியில் நல்ல பலன்கள் நடக்கும். முயற்சிகளில் எப்படியும் போராடி ஜெயிப்பீர்கள். உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தாயாரின் உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டிய நேரம். வீட்டு பராமரிப்புசெலவுகள் அதிகமாக இருக்கும். சகோதரர் உதவி கிடைக்கும். நல்ல வேலை இல்லாமல் வருத்தத்தில் இருந்தவர்களுக்கு இந்த வாரம் வேலைக்கான வாய்ப்பு உறுதியாகும்.
உத்தியோகம் -
பணியிடத்தில் பெரிய பிரச்சினைகள் எதுவும் இருக்காது. சுமூகமாகவே இருக்கும். இடமாற்றம் எதிர்பார்த்தவர்களுக்கு விரும்பியபடியே கிடைக்கும். அரசு ஊழியர்கள் வேலையில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். அதன் காரணமாக ஒரு சில அழுத்தங்கள் ஏற்படும். சேவை சார்ந்த வேலை செய்பவர்கள் பணிச்சுமை அதிகமாக இருக்கும், அதற்கேற்ற வருமானமும் இருக்கும். கடைகள், வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும்.
தொழில் -
தொழிலில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழிலை விரிவு படுத்துவதற்கான முதலீடுகள் கிடைக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன. புதிதாக தொழில் முனைவோர்களுக்கு ஆரம்பகட்ட வேலைகள் நடக்கும். பங்கு வர்த்தகத்தில் இருப்பவர்களுக்கு ஓரளவு லாபம் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்த வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகள் நல்ல வளர்ச்சி காண்பார்கள். தங்கள் வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி வியாபாரத்தை விரிவு செய்வார்கள்.
பெண்களுக்கு -
ஆரோக்கியத்தில் ஒரு சில பிரச்சினைகள் வரும். குறிப்பாக இடுப்பு மற்றும் மூட்டு சம்பந்தமான பிரச்சினைகள் வரும். தந்தை வழியில் ஆதாயம் தரும் சொத்து கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
மாணவர்களுக்கு -
கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய மொழி கற்கும் ஆர்வம் ஏற்படும். ஆராய்ச்சி சம்பந்தமான கல்வி கற்கும் மாணவர்களுக்கு எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
கலைஞர்களுக்கு -
ஒருசில பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும்.
பொதுப்பலன் -
முடியாத விஷயத்திற்கு அதிகமாக மெனக்கெட வேண்டாம். உங்களால் முடிந்த விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்துங்கள். அதில் வெற்றி காண்பீர்கள். ஆரோக்கியத்தில் ஒருசில பாதிப்புகள் வரலாம். எனவே ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் இருக்க வேண்டும்.
இந்த வாரம்-
திங்கள் - எடுக்கின்ற ஒரு சில முயற்சிகள் தள்ளிப்போகலாம். அதற்காக வருந்தத் தேவையில்லை, அதிக எதிர்பார்ப்புகள் எதையும் வைத்துக்கொள்ள வேண்டாம்.
செவ்வாய் - இன்று சந்திராஷ்டமம் முழுமையாக இருக்கிறது, பயணங்களைத் தவிர்த்து விடுங்கள். பேச்சுவார்த்தைகள் எதுவும் வேண்டாம். வியாபார விஷயமாக எந்த முடிவுகளையும் எடுக்காதீர்கள்.
புதன் - அனைத்து வேலைகளும் மிக எளிதாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த விஷயங்கள் யாவும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஒப்பந்தங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது, எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
வியாழன் - ஆதாயம் தரும் ஒரு வியாபார பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடையும். முக்கிய நபர் ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஒரு சில தேவையில்லாத அலைச்சல்களும் ஏற்படும்.
வெள்ளி - வீடு சம்பந்தமான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். சொந்த வீடு வாங்கும் முயற்சி ஏதும் இருந்தால் இன்று நல்ல சாதகமான விஷயங்கள் நடக்கும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். புதிய வாகனம் வாங்கும் எண்ணம் தோன்றும்.
சனி - அலைச்சல்கள் அதிகரிக்கும். நீங்கள் செய்யும் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் மற்றவர்களுக்கு லாபமாக இருக்கும். உங்களுக்கு பேர் புகழ் மட்டுமே மிஞ்சும்.
ஞாயிறு - கடன் சம்பந்தமான ஒரு விஷயம் இன்று முடிவுக்கு வரும். எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். வியாபார விஷயமாக பேச்சு வார்த்தைகள் இன்று சுமுகமாக முடிவடையும். தொழில் சம்பந்தமாக சந்திப்பு ஒன்று ஏற்படும்.
வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் சாற்றி வழிபடுங்கள். தடைகள் அகலும். ஆரோக்கியம் மேம்படும். செயல்களில் வெற்றி கிடைக்கும்.
*******************************************************************
அஸ்தம் -
ஒரு சில விஷயங்கள் இழுபறியாக இருந்தாலும் கடைசி நேரத்தில் உங்களுக்கு சாதகமாக முடியும். மனதில் தேவையில்லாத ஒரு அச்ச உணர்வு ஏற்படும். ஆரோக்கியம் சம்பந்தமான கவலை அதிகரிக்கும். வீட்டுச் செலவுகள் முதல், வாகன செலவு வரை அதிகமாக இருக்கும். வரவும். வரவுக்கேற்ற செலவும் சமமாக இருக்கும். ஒரு சில விஷயங்களில் விட்டுக் கொடுத்துச் சென்றால் பெரிய பாதிப்புகள் ஏதும் இருக்காது. ஆனால் நீங்கள் முன்னெடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும் என்பதை திடமாக நம்புங்கள். எனவே முயற்சிகளை கைவிட வேண்டாம்.
உத்தியோகம் -
பணியிடத்தில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏதும் இருக்காது. ஆனால் வேலை பரபரப்பாக இருக்கும். உடனுக்குடன் வேலையை முடித்து தரும்படியான நிர்பந்தம் ஏற்படும். அலுவலக விஷயமாக வெளியூர் சென்று வரவேண்டியது இருக்கும். இடமாற்றம் எதிர்பார்த்தபடி இப்பொழுது ஏற்படும். வேறு நிறுவனத்திற்கு மாறும் முயற்சிகள் இப்போது வேண்டாம். இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு ஒரு சில நிறுவனங்களில் இருந்து நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு வரும். சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு அலைச்சல் அதிகமாக இருக்கும். ஆதாயம் ஓரளவுக்கு இருக்கும். கடைகள் வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவுமில்லை.
தொழில் -
தொழிலில் எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்த தேவையான முதலீடுகள் கிடைக்கும். ஒரு முக்கியமான ஒப்பந்தம் எதிர் பார்த்திருப்பீர்கள். அது இந்த வாரம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. புதிய தொழில் முனைவோர் ஒரு சில வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். கட்டுமானத் தொழில் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினருக்கு நல்ல வளர்ச்சி ஏற்படும். பங்கு வர்த்தகத் துறையினருக்கு ஓரளவுக்கு லாபம் கிடைக்கப் பெறுவார்கள். வியாபாரிகள் நல்ல வளர்ச்சி காண்பார்கள். வரவேண்டிய பாக்கிகள் அனைத்தும் வசூலாகும்.
ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கும், வெளிநாடு தொடர்புடைய தொழில் செய்பவர்களுக்கும், நல்ல வளர்ச்சி உண்டு.
பெண்களுக்கு -
சொந்த வீடு வாங்கும் எண்ணம் உடையவர்களுக்கு அதற்கான ஒரு சில வாய்ப்புகள் இப்போது இந்த வாரம் கிடைக்கும். ஆரோக்கியம் பற்றிய ஒருசில அச்சுறுத்தல்கள் ஏற்படும். முதுகு மற்றும் கழுத்து வலி ஏற்படும். தாய்வழி உறவினர்கள் அதாவது சகோதர வகையில் ஆதரவு கிடைக்கும்.
மாணவர்களுக்கு -
எதிர்பார்த்த கல்வி உதவித்தொகை கிடைக்கும். உயர்கல்வி முயற்சிகள் வெற்றியாகும். சக மாணவர்கள் ஆசிரியர்கள் உதவி கிடைக்கும். .
கலைஞர்களுக்கு -
பேச்சுவார்த்தைகள் நீண்டுகொண்டே போகும். ஒப்பந்தம் ஏற்படுவது தள்ளிப்போகலாம். ஒரு சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
பொதுப்பலன் -
ஆரோக்கிய பாதிப்புகள் தவிரவும், மன அழுத்தம் மன உளைச்சல் போன்றவை ஏற்படும். தன்னம்பிக்கையும், இடைவிடாத உழைப்பும் இந்த பிரச்சினையிலிருந்து வெளிவர உதவும். தாயாரின் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதேபோல் தந்தையின் உடல் நலத்திலும் அக்கறை காட்டவேண்டும்.
இந்த வாரம்-
திங்கள் - இன்று சந்திராஷ்டமம். எனவே மிகுந்த கவனமாக இருக்கவேண்டும். தேவையற்ற வாக்குவாதங்கள் செய்யக்கூடாது. அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடாமல் இருக்க வேண்டும், ஆலய வழிபாடு மன நிம்மதி தரும்.
செவ்வாய் - தடைபட்டிருந்த வேலைகள் அனைத்தும் இன்று சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். வேண்டிய உதவிகள் கிடைக்கும். மனதில் நம்பிக்கையும், வைராக்கியமும் உண்டாகும்.
புதன் - தேவையற்ற மன குழப்பம் ஏற்படும். செய்த வேலையை திரும்பச் செய்ய வேண்டியது வரும். குழப்பமான நிலையில் இருப்பதால் தேவையற்ற சிந்தனைகள் ஏற்படும்.
வியாழன் - அனைத்து வேலைகளும் மிக எளிதாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். வியாபார பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். தொழில் நிமித்தமாக ஒரு சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மொத்தத்தில் மிக சிறப்பான நாளாக இருக்கும்.
வெள்ளி - அலைச்சல்கள் இருக்கும். அதுவும் அது வீண் அலைச்சலாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். உடல்சோர்வு ஏற்படும். செலவுகள் அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் பற்றிய கவலை ஏற்படும்.
சனி - எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். வியாபார பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இருக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். ஆரோக்கியம் மேம்படும்.
ஞாயிறு - ஆலய வழிபாடு ஏற்படும். குலதெய்வ கோயிலுக்கு சென்று வரும் எண்ணம் ஏற்படும். தாயாரின் உடல்நலம் முன்னேற்றம் ஏற்படும்.
வணங்கவேண்டிய தெய்வம்-
மகாவிஷ்ணு ஆலயத்தில் இருக்கும் சக்கரத்தாழ்வாருக்கு ஏழு தீபங்கள் ஏற்றி வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாக நடக்கும். ஆரோக்கியம் சீராகும். எதிர்பார்த்த உதவிகள் எளிதாகக் கிடைக்கும்.
*************************************************************
சித்திரை -
சாதகமான பலன்கள் அதிகமாக நடக்கும். ஆனாலும் செலவுகள் அதிகமாக இருக்கும். எடுத்துக்கொண்ட வேலை சற்று இழுபறியாக இருந்தாலும், தீவிரமாகப் பணியாற்றி செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த ஒரு சில பிரச்சினைகள் எல்லாம் பேசி தீர்க்கப்படும். எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். முக்கியமான கடன் ஒன்று அடைவதற்கு வாய்ப்புகள் ஏற்படும். வங்கிக் கடனில் ஏற்பட்டிருந்த சில பிரச்சினைகள் இந்த வாரம் தீரும். சகோதரர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தேவையற்ற பிரச்சினைகளையோ விவாதங்களையோ மேற்கொள்ள வேண்டாம்.
உத்தியோகம் -
பணியில் பெரிய பிரச்சினை ஏதும் இருக்காது. வழக்கமான பணிகளை மேற்கொள்ள வேண்டியது வரும். விடுப்பில் சென்ற சக ஊழியரின் வேலையைப் பார்க்க வேண்டியது வரும். அரசுப்பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பணிச்சுமை கூடும். சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு பெரிய மாற்றங்கள் ஏதும் இருக்காது. வழக்கமான பணிகளைச் செய்ய வேண்டியிருக்கும். கடைகளில் பணிபுரிபவர்களுக்கு வேறு நல்ல வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது, அதற்கான முயற்சிகள் எடுத்தால் வெற்றி காணலாம்.
தொழில் -
தொழிலில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தேங்கி நின்ற பொருட்கள் விற்பனையாகும். அரசு வழியில் இருந்த ஒரு சில பிரச்சினைகள் சுமூகமாக தீரும். ஒரு சிலருக்கு அரசு வழியில் ஆதாயம் ஏற்படும். ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வளர்ச்சி ஏற்படும். சலுகைகளை அறிவித்து வியாபாரத்தை அதிகமாக்கும் திட்டம் வெற்றியாகும். பங்கு வர்த்தக துறையில் இருப்பவர்களுக்கு ஒருசில சரிவுகளில் இருந்து இப்பொழுது மீண்டு வர வாய்ப்பு கிடைக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். வியாபாரம் தொடர்பான கடன்கள் தீர வழி கிடைக்கும்.
பெண்களுக்கு -
ஒரு சில விஷயங்களில் ஏமாற்றங்களை சந்திக்க வேண்டியது வரும். எதிர்பார்த்த உதவிகள் தள்ளிப்போகும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பணியிடத்தில் வேலை தொடர்பான சுமைகள் அதிகமாக இருக்கும். கடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீர்வதற்கு உதவிகள் கிடைக்கும்.
மாணவர்களுக்கு -
கல்வியில் அபாரமான உயர்வு ஏற்படும். அடுத்த ஆண்டு கல்விக்காக இப்போது உங்களை தயார் செய்து கொள்வீர்கள். ஆசிரியரின் உதவியால் கல்வியில் மேலும் முன்னேற்றம் ஏற்படும்.
கலைஞர்களுக்கு -
எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். பேச்சுவார்த்தையில் இழுபறியாகவே இருக்கும். எதிர்பார்த்த நண்பரின் உதவி கிடைக்காமல் போகலாம்.
பொதுப்பலன் -
ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் வரும். ஆனாலும் பெரிய பாதிப்புகள் ஏதும் இருக்காது. செலவுகள் அதிகமாக இருக்கும். ஆனால் அதற்கேற்ற வரவும் இருக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். வெளிநாடு செல்லும் முயற்சி சாதகமாக இருக்கும்.
இந்த வாரம்-
திங்கள் - எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பண வரவு தாமதமாகலாம். வியாபார பேச்சுவார்த்தையில் ஓரளவுக்கு முடிவுக்கு வரும். தம்பதிகளுக்குள் ஒரு சில சர்ச்சைகள் ஏற்படும்.
செவ்வாய் - சந்திராஷ்டம தினம், கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். பயணங்களைத் தவிர்க்க வேண்டும். உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம்.
புதன் - எதிர்பாராத செலவுகள் ஏற்படும். ஒரு சிலருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். தேவையற்ற பயணம் ஒன்று ஏற்படும். பெரிய ஆதாயம் ஏதும் இருக்காது.
வியாழன் - கடந்த 3 நாட்களாக ஏற்பட்ட பிரச்சினைகள் அனைத்தும் இன்று நல்ல முடிவுக்கு வரும். உங்கள் மீதான களங்கம் துடைக்கப்படும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் முழுமையடைந்து ஒப்பந்தமாக மாறும்.
வெள்ளி - கடன் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். வங்கிக் கடனில் ஒரு சில தள்ளுபடிகள் பெறுவீர்கள். ஆகவே வங்கிக் கடனை முழுமையாக அடைப்பதற்கான உதவிகள் கிடைக்கும்.
சனி - நிலம் சம்பந்தப்பட்ட வியாபாரம் பேச்சுவார்த்தைகள் இன்று நல்லபடியாக முடியும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். தொழில் தொடர்பாக ஒரு மிகப்பெரிய உதவி கிடைக்கும்.
ஞாயிறு - வியாபார பேச்சுவார்த்தைகள் நல்லபடியாக முடிந்து, இன்று ஒப்பந்தமாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகளில் இன்று சுமுகமான தீர்வு கிடைக்கும்.
வணங்கவேண்டிய தெய்வம் -
முருகப்பெருமானுக்கு செவ்வரளி மாலை சூட்டி, தீபம் ஏற்றி வணங்குங்கள். தடைகள் அகலும். நன்மைகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும்.
********************************************************************
சுவாதி -
திட்டங்களை வகுத்துக் கொண்டு செயல்களை செய்வீர்கள். நீங்கள் எப்படி திட்டமிட்டீர்களோ, அதேபோல அனைத்து வேலைகளும் செய்து முடிப்பீர்கள். இந்த வாரத்தில் புதன்கிழமை தவிர்த்து தவிர மற்ற அனைத்து நாட்களும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். சேமிப்பு உயரும். குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும். அவர்களின் கல்வி வளர்ச்சி உங்களுக்கு மன நிறைவைத் தரும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். தாயாரின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தந்தைவழி உறவினர்களிடம் ஒரு சில வருத்தங்கள் ஏற்படலாம்.
உத்தியோகம் -
பணியிடத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு தானாக கிடைக்கும். ஊதிய உயர்வும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு இப்பொழுது சாதகமான நேரம். சரியான முயற்சி மேற்கொண்டால் வெளிநாட்டில் வேலை உறுதியாகும். அரசு ஊழியர்களுக்கு எதிர்பாராத அளவுக்கு சலுகைகளும், பதவி உயர்வும் ஏற்படும். அலுவலகத்தில் இருந்து வரவேண்டிய நிலுவை தொகை கிடைக்கும். அலுவலகம் சார்ந்த விசாரணைகள் ஏதும் இருந்தால் அது கைவிடப்படும். அல்லது உங்களுக்கு சாதகமாக மாறும்.
சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும் சேமிப்பு உயரும்.
தொழில் -
அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். உற்பத்தியான பொருட்கள் இப்பொழுது வேகமாக விற்பனையாகும். வெளிநாட்டிலிருந்து நண்பர்கள் மூலமாக சில உதவிகள் கிடைக்கும். புதிதாக தொழில் தொடங்கும் தொழில் முனைவோர்கள் இந்த வாரம் தேவையான அனைத்து விதமான உதவிகளும், அதாவது தொழில் செய்யும் இடம், அதற்கான உபகரணங்கள் வாங்குவதற்கான பணத்தேவைகள் என அனைத்தும் இந்த வாரம் பூர்த்தியாகும்.
ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழிலில் அபாரமான வளர்ச்சி ஏற்படும். விற்பனை அதிகமாகும். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு பங்குகள் மூலம் நல்ல லாபம் ஏற்படும். ஏற்றுமதி-இறக்குமதி தொழிலில் எதிர்பாராத அளவுக்கு ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபாரிகள் நல்ல வளர்ச்சி காண்பார்கள். புதிய கிளைகளை துவங்குவார்கள். உணவகத் தொழில், ஹோட்டல் போன்ற தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் அதிக அளவிலான வியாபாரங்கள் ஏற்படும்.
பெண்களுக்கு -
குடும்பத்தில் இருந்து அனைத்து பிரச்சினைகளும் தீரும். வேலை இல்லாத பெண்களுக்கு இப்பொழுது நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருக்கும் பெண்களுக்கு பதவி உயர்வு உண்டாகும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கியவர்களுக்கு இப்போது குழந்தை பாக்கியம் உண்டாகும். உங்கள் பெயரில் சொத்து வாங்குவதற்கான அத்தனை வாய்ப்புகளும் உண்டு. வரவும் அதிகமாக இருக்கும். சேமிப்பும் அதிகமாக இருக்கும்.
மாணவர்களுக்கு -
கல்வியில் எதிர்பார்த்த மதிப்பெண்ணை விட மிக அதிக மதிப்பெண்கள் பெறுவீர்கள். உங்களால் உங்கள் பெற்றோருக்கு கௌரவம் கிடைக்கும். உங்கள் மீதான மதிப்பு மரியாதை உயரும்.
கலைஞர்களுக்கு -
கடந்த சில வாரங்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஒப்பந்தங்கள் இந்த வாரம் நிறைவேறும். பணவரவு மனமகிழ்ச்சி தரும் அளவுக்கு இருக்கும். சொத்துக்கள் வாங்குவீர்கள். வெளிநாடு சென்று உங்கள் துறை சார்ந்த கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் வாய்ப்பு உண்டு.
பொதுப்பலன் -
சிறப்பான வாரம். எடுத்த செயல்கள் அனைத்தும் முழு வெற்றியை தரக்கூடியதாக இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவீர்கள். கடன்களை அடைப்பீர்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தமான விஷயங்கள் சுமுகமாக முடியும். வழக்கு ஏதேனும் இருந்தால் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இந்த வாரம் குழந்தை பாக்கியம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இந்த வாரம்-
திங்கள் - எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று உங்களுக்கு கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். முக்கியமான கடனை அடைப்பீர்கள். வங்கிக்கு கட்ட வேண்டிய பாக்கிகள் அனைத்தையும் இன்று கட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது. வியாபார பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும்.
செவ்வாய் - பயணங்கள் அதிகமாக ஏற்படும். ஒருசில பேச்சுவார்த்தைகள் ஓரளவுக்கு முடிவுக்கு வரும். மனவருத்தத்தில் பிரிந்து இருந்த நண்பரிடம் சமாதானம் பேசுவீர்கள். நண்பர்களோடு விருந்து கேளிக்கை என செல்வீர்கள்.
புதன் - இன்று சந்திராஷ்டமம். எனவே புதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம். பேச்சுவார்த்தைகள் ஏதும் இருந்தால் தள்ளி வையுங்கள். வீண் பிரச்சினைகள் வரும். அமைதியாக கடந்து செல்லுங்கள்.
வியாழன் - பாதியில் நின்ற வேலைகள் அனைத்தும் இன்று முழுமையாக முடிவடையும். எடுத்த வேலைகள் அனைத்தும் முழுமையாக செய்து முடிப்பீர்கள். மனநிறைவு ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபார முயற்சிகள் வெற்றியாகும்.
வெள்ளி - குடும்பத்தினர் நலனுக்காக ஒரு சில சேமிப்புகளை செய்வீர்கள். முதலீடுகள் செய்யும் எண்ணம் ஏற்படும். பரபரப்பாக இயங்கி எல்லா வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். வியாபார ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
சனி - அலைச்சல்கள் அதிகரிக்கும். அலைச்சலுடன் ஆதாயம் கடைசி நேரத்தில் கிடைக்கும். ஒரு சில முக்கியமான சந்திப்புகள் தள்ளிப் போகலாம்.
ஞாயிறு - வீடு சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவடையும். சொத்து சம்பந்தமான விஷயங்கள் பேசி தீர்க்கப்படும். திருமணம் உள்ளிட்ட சுபகாரிய பேச்சுவார்த்தைகள் இன்று சுபமாக முடியும்.
வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ வாராஹி அம்மனை வணங்குங்கள். ஸ்ரீ வாராஹி மூல மந்திரத்தை உச்சரியுங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் பூர்த்தியாகும். கனவுகள் நனவாகும்.
*********************************************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
13 hours ago
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago