இந்த வாரம் இப்படித்தான் - நட்சத்திரப் பலன்கள் : எந்தக் கிழமைகளில் என்னென்ன பலன்கள்? (டிசம்பர்  9 முதல் 15-ம் தேதி வரை)  - திருவாதிரை முதல் மகம் வரை

By செய்திப்பிரிவு


ஜோதிடர் ஜெயம் சரவணன்

திருவாதிரை -
செயல்களில் தீவிரம் காட்டி வெற்றியைப் பெறுவீர்கள். லாபகரமான விஷயங்களாகவே இந்த வாரம் முழுவதும் நடக்கும். முதலீடுகள் செய்ய திட்டம் தீட்டுவீர்கள். குடும்பத்தில் சுப விசேஷங்கள் நடக்க அறிகுறிகள் தென்படும். அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இருக்கும். எதிர்பார்த்த பணவரவு உண்டு. கடன்கள் முழுவதுமாக அடைபடும் வாய்ப்பு உண்டு. அடகு வைத்த பொருட்களை மீட்க வழி கிடைக்கும்.

உத்தியோகம் -
அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உத்தியோகத்தில் ஒரு மன நிறைவு, திருப்தி உண்டாகும். புதிதாக வேலைக்கு மனு செய்தவர்களுக்கு இந்த வாரம் நேர்முகத்தேர்வு நடக்கும். கடைகள் வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள், ஊதிய உயர்வு போன்றவை கிடைக்கும். வேலை மாறிச் செல்லும் எண்ணம் உடையவர்களுக்கு இப்பொழுது நல்ல வேலை கிடைக்கும். சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு மகிழ்ச்சி தரும் ஒப்பந்தம் ஏற்படும்.

தொழில் -
தொழிலில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஒரு கடனை அடைத்து, வேறு ஒரு பெரிய கடனை வாங்குவீர்கள். அதற்கான முயற்சிகள் இந்த வாரம் தொடங்கலாம். உங்கள் தொழிலில் முதலீடு செய்ய பலரும் முன் வருவார்கள். வெளிநாடு தொடர்புடைய தொழில் செய்பவர்களுக்கு மனநிறைவு ஏற்படும் வகையில் தொழில் வளர்ச்சி இருக்கும். பங்கு வர்த்தக துறையில் இருப்பவர்களுக்கு லாபகரமாக இருக்கும்.
வியாபாரிகள் நல்ல வளர்ச்சி காண்பார்கள். வரவேண்டிய பாக்கிகள் அனைத்தும் வசூலாகும்.

பெண்களுக்கு -
சகோதரர்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். அவசரமான அல்லது ஆர்ப்பாட்டமான முடிவுகளை எடுக்க வேண்டாம்.

மாணவர்களுக்கு - கல்வியில் உங்களுடைய தனித்திறமை வெளிப்படும். கல்வி தொடர்பான அனைத்து உதவிகளும் கிடைக்கும். வங்கியில் இருந்து எதிர்பார்த்த கல்விக்கடன் கிடைக்கும்.

கலைஞர்களுக்கு -
பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தங்களாக மாறும். பணவரவு தாராளமாக இருக்கும். அரசு வழியில் நன்மைகள் ஏற்படும்.

பொதுப்பலன் -
நன்மைகள் அதிகமாக நடக்கும் வாரம். லாபகரமான வியாபார பேச்சுவார்த்தைகள் உறுதியாகும். தங்கள் சேமிப்பில் இருந்து சில முதலீடுகளை செய்ய பலரும் திட்டம் தீட்டுவார்கள். அந்தத் திட்டம் வெற்றி ஆகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இந்த வாரம் சுமூகமாக நடைபெறும்.

இந்த வாரம்-
திங்கள் -
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பண வரவு தாராளமாக இருக்கும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் முழு வெற்றியைத் தரும்.
செவ்வாய் - பயணங்கள் ஏற்படும். அலுவலக விஷயமாக வெளியூர் செல்ல வேண்டியது வரும். வியாபார பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். தொழில் நிமித்தமாக ஒரு முக்கிய நபரை சந்திப்பீர்கள்.
புதன் - வேண்டிய உதவிகள் கிடைக்கும். ஒரு முக்கியமான பிரச்சினையில் இன்று நல்ல முடிவு ஏற்படும். வழக்கு சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு இன்று வேலைக்கான உத்தரவு கிடைக்கும்.
வியாழன் - வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். கடனில் ஒரு பகுதியை இன்று அடைக்க முற்படுவீர்கள்.
வெள்ளி - அலுவலக வேலையாக இருக்கட்டும். தொழில்ரீதியாக இருக்கட்டும். சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதை செயல்படுத்தவும் செய்வீர்கள்.
சனி - எடுத்துக் கொண்ட அனைத்து வேலைகளும் வெற்றிகரமாக முடியும். பணவரவு தாராளமாக இருக்கும். நீண்டநாளாக வராமலிருந்த ஒருதொகை இன்று கைக்கு வந்து சேரும். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள்.
ஞாயிறு - குடும்பத்தோடு ஆலயங்களுக்குச் சென்று வருவீர்கள். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வீட்டு உபகரணப் பொருட்களை புதிதாக வாங்குவீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
அருகில் இருக்கும் மாரியம்மன் ஆலயத்திற்கு செல்லுங்கள். அம்மனுக்கு உங்களால் முடிந்த கைங்கரியம் ஏதாவது செய்து கொடுங்கள். அது புடவையாக இருக்கலாம். அல்லது அபிஷேக பொருட்களாகவும் இருக்கலாம்.

******************************************************************


புனர்பூசம் -
எடுத்துக்கொண்ட வேலையை எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் முடிக்காமல் விட மாட்டீர்கள். அதற்காக அதிக பிரச்சினை வருமோ? என நினைக்க வேண்டாம். அதாவது உங்கள் விடாமுயற்சி நல்ல வெற்றியைக் கொடுக்கும் என்பதை இந்த வாரம் உணர்வீர்கள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வியாபாரங்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழில் சம்பந்தமாக எடுக்கின்ற முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

உத்தியோகம் -
பணியில் பெரிய பிரச்சினைகளோ, அல்லது மாறுதல்கள் ஏதும் இல்லை. நீங்களாக இடமாற்றம் விரும்பினால் அந்த இடமாற்றம் ஏற்படும். ஒரு சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். அரசு ஊழியர்களாக இருந்தால் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். கடைகளில் பணிபுரிபவர்களுக்கு இதைவிடச் சிறந்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். கல்வித் தகுதிக்கு தகுந்த வேலை இல்லாமல் சிரமப்பட்டவர்களுக்கு இப்பொழுது நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு வேலையில் மனநிறைவு இருக்கும்.

தொழில் -
தொழில் சீரான வளர்ச்சி யில் இருக்கும். வேண்டிய உதவிகள் கிடைக்கும். அரசு வழியில் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் தீரும். கணக்கு வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்கள் இப்பொழுது சரியாகும். வெளிநாட்டில் இருந்து உதவிகள் கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. பங்குவர்த்தகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்றம் தரும் வாரம். ஏற்றுமதி இறக்குமதி தொழில் அமோகமாக இருக்கும். வியாபாரிகள் நல்ல வளர்ச்சி காண்பார்கள். தங்கள் வியாபார இடத்தை புதிய பொலிவோடு மாற்றி அமைக்கும் சிந்தனை ஏற்படும்.

பெண்களுக்கு -
சொந்த வீடு வாங்கும் கனவு இப்பொழுது நனவாகும். தந்தைவழி உறவுகளால் உதவிகள் கிடைக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். ஆடை ஆபரணம் வாங்கும் யோகம் உண்டு.

மாணவர்களுக்கு -
கல்வியில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். வேண்டிய உதவிகள் கிடைக்கும், ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும்.

கலைஞர்களுக்கு -
எதிர்பார்த்த வெளிநாட்டு ஒப்பந்தம் ஏற்படும். வெளிநாட்டு நண்பர்களோடு இணைந்து ஒரு புதிய முயற்சியில் இறங்கும் வாய்ப்பு உள்ளது.

பொதுப்பலன் -
திருமணமாகாதவர்களுக்கு இப்பொழுது திருமணம் நிச்சயமாகும், பிரிந்திருந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள், தம்பதிகளுக்குள் இருந்த மனவருத்தங்கள் அனைத்தும் இப்பொழுது மாறும்,
மறுமணத்திற்க்காக வரன் தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த வாரம் நல்ல வரன் அமையும்.

இந்த வாரம்-
திங்கள் -
சுப விசேஷ பேச்சுவார்த்தைகள் நடக்கும். பரிகார கோயில்களுக்கு சென்று வரும் பாக்கியம் ஏற்படும்.
செவ்வாய் - எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். தாமதப்பட்டுக் கொண்டிருந்த ஒரு சில பேச்சுவார்த்தைகள் இன்று மீண்டும் தொடரும்.
புதன் - புதிய சந்திப்புகளால் உதவிகள் கிடைக்கும், வியாபார பேச்சுவார்த்தைகள் வெற்றியாகும். எதிர்பாராத பணவரவு உண்டு.
வியாழன் - வெளிநாடு செல்வதற்கான முயற்சிகள் வெற்றி தரும். தொலைதூர பயணம் ஒன்று ஏற்படும். அல்லது அதற்கான திட்டங்களை வகுப்பீர்கள். புதிய ஒப்பந்தம் ஒன்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.
வெள்ளி - திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் நிறைவேறும். எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். கடன் சம்பந்தமான ஒரு பிரச்சினை தீரும். திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் இன்று நல்ல முடிவுக்கு வரும்,
சனி - குடும்பத்தினர் தேவைகளுக்காக சில செலவுகள் செய்ய வேண்டியது வரும். வாகன மாற்றம் சிந்தனை உருவாகும். அரசு அதிகாரி ஒருவரை சந்திக்க வேண்டியது வரும்.
ஞாயிறு - எதிர்பாராமல் நடக்கும் சந்திப்புகளில் நன்மைகள் ஏற்படும். புதுவிதமான வியாபார பேச்சுக்கள் உருவாகும். எதிர்பார்த்த அத்தனை உதவிகளும் கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும், உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். கனவுகள் நனவாகும்.

**************************************************


பூசம் -
செயல்களில் முழுமையான ஈடுபாடு இருப்பதால் வெற்றிகள் சுலபமாகும். உங்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியவர்கள் இப்போது காணாமல் போவார்கள். கடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் முழுமையாக தீர்வதற்கு வழி கிடைக்கும். வெளிநபர்களிடம் வாங்கிய கடன்களை அடைக்க வங்கியிலிருந்து கடன் உதவி பெறுவீர்கள். இனி வெளிநபர் கடன் என்பதே இருக்காது என்ற நிலை உருவாகும். வேலை இல்லாதவர்களுக்கு இப்பொழுது நல்ல வேலை கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும், வெளிநாடு செல்லும் முயற்சிகள் முழு வெற்றி கிடைக்கும்.

உத்தியோகம்-

பணியிடத்தில் அழுத்தம் எதுவுமில்லை, உங்களுக்கான உயரிய அங்கீகாரம் கிடைக்கும், பதவி உயர்வு தானாக தேடி வரும், ஒரு சிலருக்கு குழுவிற்கு தலைமை தாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
கடைகள் வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு உள்ளிட்ட பல சலுகைகள் கிடைக்கும். சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு மனநிறைவான ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசு ஊழியர்களாக இருந்தால் எதிர்பாராத அளவுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படும்.


தொழில் -
தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். வேண்டிய உதவிகள் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தும் சிந்தனை இப்பொழுது செயல்வடிவம் ஆகும். புதிய கூட்டாளிகள் கிடைக்கப் பெறுவார்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழில் அமோகமாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். பங்கு வர்த்தகத் துறையில் நல்ல வளர்ச்சி ஏற்படும். லாபம் இரு மடங்காக இருக்கும். வியாபாரிகள் அபரிமிதமான வளர்ச்சி காண்பார்கள். கிளைகள் துவங்குவது சாத்தியமாகும்.

பெண்களுக்கு -
திருமணம் ஆகாத பெண்களுக்கு இந்த வாரம் திருமணம் உறுதியாகும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். உங்கள் கல்வித் தகுதிக்கு தகுந்த உத்தியோகம் இந்த வாரம் கிடைக்கும். இயல்பாக சொத்து சேர்க்கை ஏற்படும்.

மாணவர்களுக்கு -
கல்வியில் அபரிமிதமான முன்னேற்றம் உண்டு. அடுத்த ஆண்டு கல்விக்காக இப்போதே உங்களை தயார்படுத்திக் கொள்வீர்கள். அதற்கான முயற்சிகளில் இப்போதே இறங்குவீர்கள்.

கலைஞர்களுக்கு -
சற்றும் எதிர்பாராத வகையில் பெரிய நிறுவனத்தில் நீங்கள் ஒப்பந்தம் செய்யப்படுவீர்கள். எனவே பண வரவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் துறையில் நீங்கள் சாதிக்கும் நேரம் வந்துவிட்டது.

பொதுப்பலன் -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். தாமதமாகிக் கொண்டிருந்த திருமண முயற்சிகள் இப்போது கைகூடும். புத்திரபாக்கியம் இல்லாமல் ஏங்கிக் கொண்டிருந்தவர்களுக்கும், அதற்காக மருத்துவச்செலவுகள் செய்து கொண்டிருந்தவர்களுக்கும் இப்பொழுது புத்திரபாக்கியம் இயல்பாக உருவாகும்.

இந்த வாரம்-
திங்கள் - பணவரவு சம்பந்தப்பட்ட எதிர்பார்த்த தகவல் சாதகமாக இருக்கும். தாய்வழி உறவுகளால் உதவிகள் கிடைக்கும். வியாபாரப் பேச்சுவார்த்தை முடித்து, ஒப்பந்தம் ஏற்பட்டு லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.
செவ்வாய் - திட்டமிடாத ஒரு சில காரியங்கள் இன்று செய்ய வேண்டியது வரும். அதன் காரணமாக பயணங்கள் ஏற்படும். ஒரு சில ஆதாயம் ஏற்படும்.
புதன் - கடன் சம்பந்தமான ஒரு பிரச்சினை தீரும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சினை தீரும். அல்லது மாற்று மருத்துவத்தால் நன்மைகள் நடக்கும்.
வியாழன் - திடீர் பயணம் ஒன்று ஏற்படும். சந்திக்க வேண்டிய நபர்களை சந்திக்க முடியாமல் தள்ளிப் போகலாம்.
வெள்ளி - வியாபார பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும். ஒப்பந்தங்கள் போடப்படும். சொந்த வீடு வாங்கும் சம்பந்தமான விஷயத்தில் சாதகமான பதில் கிடைக்கும்.
சனி - தொழில் அல்லது வியாபாரம் சம்பந்தமாக ஒரு முக்கிய நபரை சந்திக்க வேண்டியது வரும். அவரால் சில ஆதாயங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பார்த்த பணவரவு தாமதமாகலாம்.
ஞாயிறு - வேண்டிய உதவிகள் கிடைக்கும். ஒரு குழுவாக சேர்ந்து ஒரு முக்கிய வேலையைச் செய்து முடிப்பீர்கள். திருமணப் பேச்சுவார்த்தைகள் இன்று முடிவுக்கு வந்து நிச்சயதார்த்தமாகும் வாய்ப்பு உள்ளது.

வணங்க வேண்டிய தெய்வம்-
தட்சிணாமூர்த்தி குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி வழிபடுங்கள். நெய் தீபமேற்றி வணங்குங்கள். நன்மைகள் அதிகமாகும்.

******************************************

ஆயில்யம் -
சரியான நேரத்தில் தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். எனவே பண வரவு முதற்கொண்டு அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். புதிய தொழில் தொடங்கும் சிந்தனை உள்ளவர்களுக்கு இந்த வாரம் புதிய தொழில் தொடங்குவதற்கான அத்தனை வாய்ப்புகளும் கிடைக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும், ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள்.

உத்தியோகம் -
வேலையில் எதிர்பார்த்த பதவி உயர்வு தானாக கிடைக்கும். அது உங்களுக்கான மரியாதை மற்றும் கவுரவத்தை அதிகப் படுத்தும் விதத்தில் கூடுதல் பொறுப்பாக இருக்கும். அலுவலகம் சார்ந்த ஒரு முக்கிய வேலையை செய்து கொடுப்பதன் மூலம் அலுவலகத்தில் உங்களுக்கான மதிப்பு மரியாதை கூடும்.
சேவை சார்ந்த வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவார்கள். அவர்களால் லாபம் ஏற்படும். கடைகள் வணிக நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரிபவர்களுக்கு இப்பொழுது வேறு நல்ல நிறுவனத்திற்கு மாறும் முயற்சி வெற்றி பெறும்.

தொழில் -
தொழிலில் நல்ல முன்னேற்றம், எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். இதுவரை தொழில் செய்யாதவர்களும் கூட இப்பொழுது தொழில் தொடங்கும் ஆர்வம் ஏற்படும். வெளிநாட்டில் இருக்கும் நண்பர் ஒருவரால் தொழிலுக்கு வேண்டிய முதலீடுகள் கிடைக்கும். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். ஏற்றுமதி-இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு இப்பொழுது சாதனை புரியும் அளவுக்கு தொழில் வளர்ச்சி ஏற்படும். வியாபாரிகள் நல்ல வளர்ச்சி காண்பார்கள். புதிய கிளைகள் தொடங்க முற்படுவார்கள். உணவகத் தொழில், ஹோட்டல், கேட்டரிங் போன்ற தொழில் செய்பவர்களுக்கு நல்ல வளர்ச்சி ஏற்படும். தங்கள் வியாபாரத்தை கிளைகள் துவங்கி விரிவுபடுத்துவீர்கள்.

பெண்களுக்கு -
இயல்பான சொத்து சேர்க்கை ஏற்படும். கடன் பிரச்சினைகள் முற்றிலுமாக தீரும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். இந்த வாரம் திருமண நிச்சயதார்த்தம் போன்றவை நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. வேலை இல்லாத பெண்களுக்கு இப்பொழுது நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

மாணவர்களுக்கு -
கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளிநாடு சென்று கல்வி கற்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு இப்போது வாய்ப்பு கிடைக்கும். புதிய கல்வி பயில்வதற்கான அத்தனை உதவிகளும் கிடைக்கும்.

கலைஞர்களுக்கு -
புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். சொத்து சேர்க்கை ஏற்படும். வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப் படுவீர்கள்.

பொதுப்பலன் -
திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் உங்கள் எண்ணப்படியே நடந்தேறும். எதிர்பார்த்தபடியே பணவரவு இருக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். ஒருசில அலைச்சல்கள் இருந்தாலும் அலைச்சலால் ஆதாயமும் உண்டு.

இந்த வாரம் -
திங்கள் -
சிறு தூரப் பயணங்கள் ஏற்படும். பயணத்தால் ஆதாயம் உண்டு. அலைச்சல் அதிகரிப்பதால் உடல் சோர்வு உண்டாகும்.
செவ்வாய்- எதிர்பார்த்த பணவரவு உண்டாகும், ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் தீரும்.வேலைக்கான அழைப்பு கிடைக்கப்பெறுவீர்கள்.
புதன் - வெளிநாட்டிலிருந்து ஒரு சாதகமான தகவல் ஒன்று கிடைக்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியாகும், பேச்சுவார்த்தைகள் இழுபறியாக இருக்கும்.
வியாழன் - தொழில் சம்பந்தமான ஒப்பந்தங்கள் ஏற்படும். கடன் சம்பந்தமான பிரச்சினை ஒன்று தீரும். வங்கி சம்பந்தப்பட்ட ஒரு சில பிரச்சினைகள் இன்று தீரும்.
வெள்ளி - தேவையற்ற அலைச்சல் ஒன்று ஏற்படும். இறுக்கமான மனநிலை உண்டாகும். பதட்டமாக காணப்படுவீர்கள்.
சனி - குடும்பத்தினரோடு ஆலயங்களுக்குச் சென்று வருவீர்கள். பழைய நண்பர் ஒருவரை சந்திக்க நேரிடும். தொழில் அல்லது வியாபார விஷயமாக வெளியூர் செல்ல வேண்டியது வரும்.
ஞாயிறு - நீண்ட நாளாக இழுபறியாக இருந்துவந்த பேச்சுவார்த்தை இன்று நல்ல முடிவுக்கு வரும். குடும்பத்தில் சுப விசேஷங்கள் நடப்பதற்கான சூழ்நிலை உருவாகும். திருமணம் உள்ளிட்ட விஷயங்கள் இன்று பேசி முடிப்பீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீமகா விஷ்ணுவின் ஆலயத்தில் பெருமாளுக்கும், தாயாருக்கும் துளசி மாலை சாற்றி வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும். நற்பலன்கள் நடக்கும்.

***************************************************


மகம் -
போராடிப் போராடி வெற்றி பெற்ற உங்களுக்கு இனி போராட்டங்கள் இல்லாமல் எளிதாக எல்லா விஷயங்களும் எளிதாக முடியும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் தீரும். மீண்டும் பழைய உடல்வாகுக்கு திரும்புவீர்கள். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் எல்லாம் தீரும். தன வரவில் இருந்த தடைகள் அகலும். இழுபறியாக இருந்து வந்த பிரச்சினைகள் அனைத்தும் இப்பொழுது நல்ல முடிவுக்கு வரும்.

உத்தியோகம் -
பணி இடத்தில் இருந்து வந்த பல்வேறு அழுத்தங்கள் இனி இருக்காது. விரும்பிய இடமாற்றம் ஏற்படும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அதற்கான நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு இந்த வாரம் கிடைக்கும். சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு வேலையில் எந்த பிரச்சினையும் இருக்காது. சுமூகமாக இருக்கும். கடைகள் வணிக நிறுவனங்கள் பணிபுரிபவர்களுக்கு பெரிய பாதிப்புகள் ஏதும் இல்லை. சகஜமான நிலையே நீடிக்கும்.

தொழில் -
இருந்த ஒரு சில நெருக்கடிகளும் இந்த வாரம் முடிவுக்கு வரும்,. எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். அரசு வழியில் இருந்த ஒரு சில பிரச்சினைகள் இந்த வாரம் முழுமையாக முடிவுக்கு வரும். வழக்குகள் ஏதும் இருந்தால் அது இப்போது உங்களுக்கு சாதகமாக மாறும். புதிதாக தொழில் தொடங்கும் எண்ணம் உடையவர்களுக்கு இந்த வாரம் ஒரு சில சாதகமான விஷயங்கள் நடக்கும். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு சாதகமாக இந்த வாரம் இருக்கிறது. வியாபாரிகள் நல்ல வளர்ச்சி காண்பார்கள். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். அரசு வழியில் தேவையான உதவிகள் கிடைக்கும். வங்கிக் கடன் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

பெண்களுக்கு -
குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். இதுவரை புத்திரபாக்கியம் இல்லாமல் இருந்தவர்களுக்கு இந்த வாரம் குழந்தைபாக்கியம் உருவாக வாய்ப்பு உண்டு.

மாணவர்களுக்கு -
கல்வியில் அதிக முன்னேற்றம் ஏற்படும். தொழிற்கல்வி சார்ந்த மாணவர்களுக்கு தேர்வில் இப்பொழுது நல்ல மதிப்பெண் கிடைக்கும்.

கலைஞர்களுக்கு -
நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். ஒருசில ஒப்பந்தங்களும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

பொதுப்பலன் -
சாதகமான சூழ்நிலைகள் இருப்பதால் வருமானம் திருப்திகரமாக இருக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் தீர்ந்து உங்களுக்கு உண்டான பங்கு சரியாக கிடைக்கும். சகோதர வழியில் இருந்த மனவருத்தங்கள் தீரும். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். திருமண முயற்சிகள் முழுமையாகும்.

இந்த வாரம் -
திங்கள் -
உங்கள் எண்ணங்கள் அனைத்தும் இன்று செயல் வடிவம் ஆகும். எடுத்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். வியாபார பேச்சுவார்த்தைகள் வெற்றியாகும். தேவையான உதவிகள் அனைத்தும் தானாக தேடி வரும்.
செவ்வாய் - பயணங்களால் ஆதாயம் ஏற்படும். ஒருசில பேச்சுவார்த்தைகள் நீண்டு கொண்டே போகும். வியாபார ரீதியான பேச்சுவார்த்தைகள் தள்ளிப்போகும்.
புதன் - கடன் சம்பந்தமான பிரச்சினை ஒன்று தீரும். அரசு நிர்வாகத்துடன் இருந்த சில பிரச்சினைகள் இன்று நல்ல முடிவிற்கு வரும். தொழில் வியாபார பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தமாகும்.
வியாழன் - தேவையற்ற மன உளைச்சல் ஏற்படும். பயணங்களால் உடலில் அசதி தோன்றும், செலவுகள் அதிகமாக இருக்கும்.
வெள்ளி- வங்கி தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். வங்கிக் கடன் கிடைப்பதற்கான சூழ்நிலை உருவாகும். பத்திரப்பதிவு சம்பந்தமான விஷயங்கள் எளிதாக முடியும்.
சனி - தொழில் நிமித்தமாக ஒரு நபரை சந்திக்க வேண்டியது வரும். அவரால் ஆதாயம் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். கடனை அடைப்பதற்கான வழி கிடைக்கும்.
ஞாயிறு - வெளிநாடு செல்லும் முயற்சிகளில் சாதகமான பதில் இன்று கிடைக்கும். நண்பர்கள், உறவினர்கள் வகையில் உதவிகள் கிடைக்கும். சுபகாரிய விஷயமாக உறவினர்கள் வருகை இருக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
சிவபெருமானுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து, தீபம் ஏற்றி வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும். இருக்கின்ற ஒரு சில பிரச்சினைகளும் முடிவுக்கு வரும். மன நிம்மதி உண்டாகும்.

***********************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்