இந்த வாரம் இப்படித்தான் - நட்சத்திரப் பலன்கள் : எந்தக் கிழமைகளில் என்னென்ன பலன்கள்? (டிசம்பர்  9 முதல் 15-ம் தேதி வரை)  - அசுவினி முதல் மிருகசீரிடம் வரை

By செய்திப்பிரிவு

ஜோதிடர் ஜெயம் சரவணன்


அசுவினி -
சிறப்பான பலன்கள் நடைபெறும் வாரம். திட்டமிட்ட காரியங்கள் மட்டுமல்லாமல் திட்டமிடாத காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் நடைபெறும். திருமண முயற்சிகள் கைகூடும். இந்த வாரம் திருமணம் சம்பந்தமான முடிவுகள் எடுக்கப்படும். வீடு வாங்கும் கனவு நனவாகும், நின்றுபோன வீட்டு வேலைகள் இப்போது நிறைவடையும்.

உத்தியோகம் -
வேலை செய்யும் இடத்தில் சிறப்பான அதிகாரங்கள் உங்களுக்கு கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைப்பதற்கான அத்தனை வாய்ப்புகளும் உள்ளன. ஊதிய உயர்வு கிடைக்கும். வெளிநாடு சென்று வேலை பார்க்கும் முயற்சி வெற்றியாகும். கடைகள், வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு இப்பொழுது இதை விட ஒரு சிறந்த வேலை வாய்ப்பு கிடைக்கும். சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகமாவார்கள். வேலை வாய்ப்புகளும் அதிகமாக கிடைக்கும். தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட பல சலுகைகள் கிடைக்கும்.

தொழில் -
தொழிலில் எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். எதிர்பாராத அளவுக்கு முதலீடுகள் கிடைக்கும். பழைய கடன்களை அடைத்து தொழில் வளர்ச்சிக்காக புதிய கடன்களைப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த தொழில் ஒப்பந்தம் இந்த வாரம் முடிவுக்கு வரும். முதலீட்டாளர்கள் கிடைப்பார்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு அமோகமாக இருக்கும். நிறைய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவார்கள். பங்கு வர்த்தகத் துறையினருக்கு நல்ல வளர்ச்சி, வருமானம் ஏற்படும். வியாபாரிகள் அசத்தலான வெற்றி காண்பார்கள்.

பெண்களுக்கு -
திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு இப்பொழுது குழந்தை பாக்கியம் உண்டாகும். இதுவரை நல்ல வேலை இல்லாத பெண்களுக்கு இப்பொழுது தகுதிக்கு தகுந்த நல்ல வேலை கிடைக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சுமூகமாக முடிவடையும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு.

மாணவர்களுக்கு -
கல்வியில் அபரிதமான முன்னேற்றம் ஏற்படும். புதிய கல்வி கற்கும் ஆர்வம் ஏற்படும். அதற்கான முயற்சிகளில் இறங்கி வெற்றி காண்பீர்கள். வெளிநாடு சென்று கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கு இப்பொழுது அந்த வாய்ப்பு கிடைக்கும்.

கலைஞர்களுக்கு -
இனி ஓய்வு என்பதே இருக்காது. பலவிதமான வருமானத்திற்கு வழி கிடைக்கும். உங்களுக்கான மதிப்பு மரியாதை உயரும், கௌரவப் பதவிகள் கிடைக்கும்.

பொதுப்பலன் -
நன்மைகள் அதிகமாக நடைபெறும் வாரம். எனவே கிடைக்கின்ற வாய்ப்புகள் அனைத்தையும் சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். சேமிப்பை அதிகமாக்கிக் கொள்ளுங்கள். இதுவரை வேலை பார்த்துக்கொண்டிருந்தவர் கூட சொந்த தொழில் செய்யும் முயற்சி எடுப்பார்கள். உங்கள் சுய ஜாதகத்தில் கிரகபலம், தசாபுத்தி போன்றவை உங்களுக்கு சாதகமாக இருந்தால் துணிச்சலாக தொழில் செய்யலாம்.

இந்த வாரம்-
திங்கள் - நூற்றுக்கு நூறு முழு வெற்றி கிடைக்கும் நாள். எந்த வேலையும் தடையோ தாமதமோ இல்லாமல் முடிவடையும். பணம் பல வழிகளிலும் கிடைக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் கூட இன்று வசூலாகும்.

செவ்வாய் - சிறு தூர பயணம் ஏற்படும். பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து ஒப்பந்தங்கள் ஏற்படும் வகையில் இருக்கும். செலவுகள் சற்று அதிகமாக இருக்கும்.

புதன் - இதுவரை பேசி வந்த பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து இன்று ஒப்பந்தமாக மாறும். வீடு வாங்கும் முயற்சி வெற்றி ஆகும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு,

வியாழன் - ஒரு சில தர்ம காரியங்களை செய்வீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்து மகிழ்ச்சி அடைவீர்கள். வசதியற்ற ஒருவருக்கு உதவி செய்வீர்கள்.

வெள்ளி- கடன்கள் முழுவதுமாக அடைபட வழி கிடைக்கும். ஒரு சில கடன்களை இன்று அடைக்க முயற்சிப்பீர்கள். வீடு சம்பந்தமான விஷயங்கள் சுமூகமாக முடியும். வாகன மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.

சனி - திடீர் பயணங்கள் எதுவும் மேற்கொள்ள வேண்டாம். ஒருசில பேச்சுவார்த்தைகள் இழுபறியாகவே இருக்கும். வேலையில் ஒருவித சோர்வு ஏற்படும்.

ஞாயிறு - ஆலய வழிபாடு, ஆன்மிகப் பயணம் போன்றவை ஏற்படும். பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடையும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
குரு ஸ்ரீ தட்சிணாமூர்த்தி பகவானை வழிபடுங்கள். குருபகவானுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி நெய் தீபம் ஏற்றி வணங்குங்கள். நன்மைகள் கூடுதலாகும். வெற்றிகள் சுலபமாகும்.

***********************************************

பரணி-
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். இல்லத்தில் சுபகாரிய விசேஷங்கள் நடைபெறுவதற்கான சூழ்நிலை இருக்கிறது. திருமண முயற்சிகள் கைகூடும். சொந்த வீடு வாங்கும் கனவு இப்பொழுது நனவாகும். அதற்கான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

உத்தியோகம் -
பணியிடத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். விரும்பிய இடமாற்றம் ஏற்படும். அலுவலகத்தின் சார்பில் வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. சக ஊழியர்களின் நட்பு உறவு பலப்படும். அவர்களால் பலவித உதவிகள் கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு நீண்டநாள் எதிர்பார்த்த பதவி உயர்வு இப்போது கிடைக்கும். சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு சிறப்பான பணி ஒப்பந்தங்கள் ஏற்படும், வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைவார்கள், சம்பாத்தியம் அதிகமாகும். கடைகள் வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வேறு நல்ல நிறுவனங்களுக்கு மாறும் வாய்ப்பு கிடைக்கும். இதைவிட சிறந்த ஒரு வேலை கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

தொழில் -
தொழிலில் எதிர்பார்த்த அனைத்து விதமான உதவிகளும் கிடைக்கும். தொழில் விருத்திக்காக எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். ஒருசிலர் உங்களோடு கூட்டு சேர்ந்து தொழில் செய்ய முன்வருவார்கள். இதனால் முதலீடுகள் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலோடு இணைந்த புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டு. தொழிலாளர்கள் உங்கள் எதிர்பார்ப்புக்கு தகுந்தாற்போல் சிறப்பாக பணி செய்வார்கள். பங்கு வர்த்தக துறையில் இருப்பவர்களுக்கு அமோகமான முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத அளவில் உங்கள் பங்குகள் விலை உயரும், வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அதற்கான அத்தனை உதவிகளும் கிடைக்கும்.

பெண்களுக்கு -
சகோதரர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். மீண்டும் குடும்ப ஒற்றுமை ஏற்படும். தந்தையிடமிருந்து உதவிகள் கிடைக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். குடும்பத்தில் சுப விசேஷங்கள் நடக்கும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும்.

மாணவர்களுக்கு -
கல்வியில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். புதிய மொழி அல்லது புதிய கல்வி கற்கும் ஆர்வம் ஏற்படும். அதற்கான பயிற்சி வகுப்புகளில் சேர்வீர்கள். உங்கள் கல்வி நிலையத்தில் உங்களுக்கு ஒரு மரியாதை அல்லது கௌரவம் கிடைக்கும்.

கலைஞர்களுக்கு -
பொன்னான வாய்ப்பு ஒன்று கிடைக்கும். அது யாருக்கும் கிடைக்காத வாய்ப்பாக இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சொத்து சேர்க்கை உண்டு. வெளிநாடு செல்லும் யோகமும் உண்டு.

பொதுப்பலன் -
நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கிடைக்கின்ற வாய்ப்புகள் அனைத்தையும் சரியாக பயன்படுத்தி வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு முன்னேற வேண்டும். சேமிப்புகளை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். சேமிப்பிலிருந்து அசையாச் சொத்துக்கள் வாங்க வேண்டும். சிறப்பான பலன்கள் நடைபெறுவதால் இந்த வாரம் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

இந்த வாரம்-
திங்கள் - வியாபார விஷயமாக வெளியூர் செல்ல வேண்டியது வரும். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். பேச்சுவார்த்தைகள் இன்று முழு வடிவம் பெற்று ஒப்பந்தமாக மாறும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

செவ்வாய் - எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் முழுமையாக முடியும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். வியாபார பேச்சுவார்த்தைகள் வெற்றியாகும், தொழில் நிமித்தமான ஒரு பெரிய உதவி கிடைக்கும்.

புதன் - அலைச்சல்கள் அதிகரிக்கும். தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். செலவுகள் சற்று அதிகமாக இருக்கும், பயணங்கள் வேண்டாம்.

வியாழன் - வெற்றி உங்களை தேடி வரப்போகிறது. அனைத்து விதமான முயற்சிகளும் வெற்றி ஆகும். சொந்த வீடு வாங்கும் கனவு இன்று நனவாவதற்கான அத்தனை வாய்ப்புகளும் உண்டு.

வெள்ளி - உற்றார் உறவினர், நண்பர்கள் என பலரும் உங்களிடம் உதவி கேட்டு வருவார்கள். நீங்களும் உங்களால் ஆன உதவிகளை செய்து கொடுப்பீர்கள்.

சனி - நீண்ட நாளாக வருத்திக் கொண்டிருந்த ஒரு கடனை இன்று அடைப்பீர்கள். அடகு வைத்த பொருட்களை மீட்பீர்கள். எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும்.

ஞாயிறு- உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். அடுத்தவர்கள் பிரச்சினைகளில் உங்கள் கருத்துக்களை சொல்ல வேண்டாம்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ ஆஞ்சநேய பெருமானுக்கு வெற்றிலை மாலை அல்லது வடை மாலை சாற்றி வழிபடுங்கள். அனைத்து நன்மைகளும் கிடைக்கும். எதையும் சாதிக்கும் வல்லமை கிடைக்கும்.

*********************************************

கார்த்திகை -
பொறுமையும் நிதானமும் கடைபிடித்தால் இந்த வாரம் எளிதாக இருக்கும். எதிர்பார்த்த பணம் ஓரளவுக்கு கிடைக்கும். வீடு சம்பந்தமான பிரச்சினைகள் இந்த வாரம் தீரும். செலவுகள் அதிகமாக இருக்கும். செலவுக்கு தகுந்த வருமானமும் இருக்கும். தேவையில்லாத மன உளைச்சல் ஒன்று ஏற்பட்டு அதற்காக மனம் வருந்தி கொண்டிருப்பீர்கள்.

உத்தியோகம் -
பணியிடத்தில் அழுத்தங்கள் அதிகமாக இருக்கும். ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் உங்கள் வேலையை நீங்கள் செய்து கொண்டிருப்பீர்கள். அலுவலகத்தில் சக ஊழியரின் வேலையை பார்க்க வேண்டியது வரும். கடைகள் வணிக நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் கவனமாக பேச வேண்டும். சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு அலைச்சல் அதிகமாக இருக்கும், ஆதாயம் ஓரளவு உண்டு.

தொழில் -
தொழிலில் ஒரு சில நெருக்கடிகள் ஏற்படும். அதை சமாளிக்கும் வண்ணம் ஒரு சில உதவிகளும் கிடைக்கும், சொத்துக்களை அடமானம் வைத்து கடன் வாங்கும் முயற்சி எடுப்பீர்கள்,
ஆனால் தொழிலுக்கு அதிக முதலீடுகளை இப்போது செய்ய வேண்டாம். பங்கு வர்த்தகத் துறையினருக்கு ஓரளவு வளர்ச்சி, லாபம் ஏற்படும். கேட்டரிங் தொழில் செய்பவர்களுக்கு ஓரளவு வருமானமும், ஒருசில ஒப்பந்தங்களும் ஏற்படும். வியாபாரிகளுக்கு சராசரியான வளர்ச்சி உண்டு.

பெண்களுக்கு -
சகோதர வழியில் ஒரு சில பிரச்சினைகள் ஏற்படும். ஒரு சில மன வருத்தங்கள், மன வேதனை ஏற்படும். தாயாரின் உதவி கிடைக்கும்.

மாணவர்களுக்கு -
கல்வியில் வளர்ச்சி, முன்னேற்றம் ஏற்படும். தோல்வியடைந்த பாடங்களை மீண்டும் எழுதி வெற்றிபெற வாய்ப்பு இருக்கிறது.

கலைஞர்களுக்கு -
பொறுமையாக இருந்தால் ஒரு சில நன்மைகள் ஏற்படும். அவசர முடிவுகளை எதுவும் எடுக்கவேண்டாம். யாரையும் எதற்காகவும் அலட்சியப்படுத்த வேண்டாம்.

பொதுப்பலன் -
ஒருசில நன்மைகள் நடக்கும். ஒரு சில வேளைகளில் இழுபறியாக இருக்கும். பணத்தேவைகள் ஓரளவுக்கு பூர்த்தியாகும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகளை பேசி தீர்த்துக்கொள்வது நல்லது, பொதுவாகவே எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

இந்த வாரம்-
திங்கள்- வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். தொலைபேசி வழித் தகவல் ஆறுதலை தரும்.

செவ்வாய் - செலவுகள் கட்டுக்கடங்காமல் இருக்கும். மருத்துவச் செலவும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. வீடு மாற்றம், வேலை மாற்றம் பற்றிய சிந்தனை அதிகமாக ஏற்படும்.

புதன் - வேலை சம்பந்தமாக ஒரு சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தினர்கள் தேவையில்லாத பிரச்சினைகளை உருவாக்குவார்கள்.

வியாழன் - எதிர்பார்த்த ஒரு சில காரியங்கள் வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும், முக்கியமான தேவை ஒன்று பூர்த்தியாகும்.

வெள்ளி- ஒரு சில பிரச்சினைகளில் முடிவெடுக்க முடியாமல் திண்டாடுவீர்கள். அனாவசிய செலவுகள் ஏற்படும்.

சனி- தாய்வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படும். தாயாரின் உடல் நலம் சீராகும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும்.

ஞாயிறு - வீட்டில் பழுதடைந்த ஒருசில பொருட்களை மாற்றுவீர்கள். அல்லது செலவு செய்து சரி செய்வீர்கள். குடும்பத்தினரோடு ஆலய தரிசனம் ஏற்படும்.

வணங்கவேண்டிய தெய்வம் -
அதிகாலையில் ஆதித்ய ஹிருதயம் பாராயணம் செய்யுங்கள். அல்லது கேளுங்கள். நன்மைகள் அதிகமாகும். தடைகள் அகலும்.

***********************************************

ரோகிணி -
சரியாக திட்டமிட்டு இந்தவார வேலைகளை வகுத்துக் கொண்டால் எளிதாக இந்த வாரத்தை கடந்து செல்லலாம். செலவுகள் அதிகமாக இருக்கும். குறிப்பாக மருத்துவச் செலவுகள் அதிகமாக இருக்கும். ஒருசில பண உதவிகளும் கிடைக்கும். கடன்கள் நெருக்கடி தரும். தேவையற்ற விவாதங்கள் ஏற்படும். பொறுமையாக இருப்பது மிகவும் நல்லது.

உத்தியோகம் -
வேலை மாற்றம் பற்றி தீவிர சிந்தனை ஏற்படும். அதற்காக தீவிரமான முயற்சிகளில் இறங்குவீர்கள். உங்கள் முயற்சி தாமதமான வெற்றியைத் தரும். உடனடியாக பலன் எதுவும் கிடைக்காது. எனவே இருக்கின்ற வேலையை சரியாக செய்ய முயற்சி செய்யுங்கள். உயர் அதிகாரிகளால் கேள்விக்குள்ளாக்கப்படுவீர்கள். கடைகள் வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் பொருட்களை கையாளும் போதும் வாடிக்கையாளர்களிடம் பேசும்போதும் மிக கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற சர்ச்சைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. சேவை சார்ந்த வேலை செய்பவர்கள் உங்கள் வேலையில் கண்ணும் கருத்துமாக இருங்கள். கவனச்சிதறல் ஏற்படும். தவறுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

தொழில் -
தொழிலில் அகலக்கால் எதுவும் வைக்கவேண்டாம். புதிய முயற்சிகள் செய்கிறேன் என்று முதலீடுகள் செய்ய வேண்டாம். வழக்குகளில் வாய்தா வாங்கிக் கொள்வது நல்லது. நெருக்கடிகள் அதிகமாக இருப்பதால் புதிதாக கடன் வாங்கும் எண்ணம் ஏற்படும். முடிந்த வரை கடன் வாங்குவதை தவிர்த்து விடுங்கள். பங்கு வர்த்தகத் துறையினரும், ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்களும் கவனமாக இருக்க வேண்டும். அலட்சியமாக இருந்தால் பிரச்சினைகள் வந்து சேரும். வியாபாரிகள் கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். புதிய வியாபார முயற்சிகளில் இறங்க வேண்டாம்.

பெண்களுக்கு -
அமைதியாக இருப்பதும், பொறுமையைக் கடைபிடிப்பதும் மிகவும் நல்லது. தேவையற்ற சர்ச்சைகள் உங்களாலேயே உருவாகும். எனவே கவனமாக எந்த ஒரு விஷயத்தையும் கையாள வேண்டும்.

மாணவர்களுக்கு -
கல்வியில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் குறைவதற்கு வாய்ப்பு உண்டு.

கலைஞர்களுக்கு -
பேச்சுவார்த்தைகளும், முக்கிய சந்திப்புகளும் தள்ளிப்போகும். பொறுமையை இழக்காமல் இருப்பது நல்லது, காலம் கனியும் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும்.

பொதுப்பலன் -
மருத்துவச் செலவுகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். எந்த ஒரு விஷயத்திலும் நிதானப் போக்கைக் கடைப் பிடியுங்கள். தேவையற்ற சிந்தனைகள் ஏற்படும். மனதை ஒருநிலைப்படுத்த கற்றுக்கொள்ளுங்கள்.

இந்த வாரம் -
திங்கள் - எதிர்பார்த்த ஒரு சில உதவிகள் கிடைக்கும். வியாபார விஷயமான சந்திப்புகள் சுமூகமாக இருக்கும். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் கிடைக்கும்.
செவ்வாய் - வரவும் செலவும் சமமாக இருக்கும். முக்கியமான தேவைகள் பூர்த்தியாகும். தொழில் அல்லது வியாபார விஷயமாக பயணம் ஒன்று ஏற்படும்.
புதன் - அலைச்சல்கள் அதிகரிக்கும். மனம் ஒரு நிலையில் இருக்காது. பரபரப்பாக இருப்பீர்கள். தடுமாற்றம் அதிகமாக இருக்கும்.
வியாழன் - எதிர்பார்த்த ஒரு முக்கிய தொகை இன்று கிடைக்கும். எடுத்துக்கொண்ட வேலைகளில் முழு வெற்றி கிடைக்கும். வியாபார பேச்சுவார்த்தை முடிவடையும், ஒப்பந்தமும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
வெள்ளி - வீண் செலவுகள் ஏற்படும். அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். பேச்சுவார்த்தைகள் தள்ளிப் போகலாம். முக்கியமான சந்திப்புகள் தாமதமாகும்.
சனி - ஆரோக்கியம் சம்பந்தமான மருத்துவ செலவுகள் குறையும். ஆரோக்கியம் மேம்படும், எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும்.
ஞாயிறு - உங்களுக்கு சம்பந்தமில்லாத ஒரு வேலையை செய்ய வேண்டியது வரும். அதனால் ஆதாயம் இருக்காது. அலைச்சல் ஏற்படும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
அபிராமி அந்தாதி படிப்பது மன நிம்மதி தரும். எதிர்ப்புகள் இல்லாமல் போகும். நினைத்தது நிறைவேறும்.

*********************************************

மிருகசீரிடம் -
நிதானமும் பொறுமையும் மிக மிக அவசியம். வேண்டாத சிந்தனைகள் உருவாகும். தனிமையில் புலம்பல் அதிகமாக இருக்கும். ஏமாற்றங்களால் மன வேதனை ஏற்படும். உற்ற நண்பர்கள் கூட கைவிடுவார்கள். குடும்பத்தில் தேவையற்ற விவாதங்கள் ஏற்படும். உங்களை கேள்வி மேல் கேள்வி கேட்டு வேதனை பட வைப்பார்கள். இதற்கெல்லாம் ஒரே மருந்து ஆலய தரிசனமும், இறை நம்பிக்கையும், மனதில் தைரியமும் தேவை.

உத்தியோகம் -
எதைப்பற்றியும் கவலைப்படாமல் உங்கள் வேலையை மட்டும் செய்து வாருங்கள். சக ஊழியர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை எவரிடமும் வீண் விவாதங்கள் செய்ய வேண்டாம். ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். இன்னும் சிலருக்கு வேலை இழப்புகள் கூட ஏற்படலாம். மனம் கலங்க வேண்டாம். விரைவில் இந்த நிலைமை மாறும்.
அனைத்து விதமான வேலை செய்பவர்களுக்கும் இந்த நிலைமை பொருந்தும். இவர்களுக்கு ஒரே பதில் பொறுமை மற்றும் நிதானம் வேண்டும். தேவையற்ற சிந்தனைகள், அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம்.

தொழில் -
தொழிலில் எதிர்பாராத ஒரு சில நெருக்கடிகள் தோன்றும். கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக் கொள்ளுங்கள். தொழிலாளர்களிடம் அனுசரித்துச் செல்லுங்கள். வீண் பிடிவாதங்கள் வேண்டாம். தொழிலதிபர் என்கின்ற இறுமாப்பு வேண்டாம். சில சூழ்நிலையின் போது வளைந்து கொடுத்துச் செல்வது உங்களுக்கு மட்டுமல்ல, தொழிலுக்கும் நல்லது. பங்கு வர்த்தகத் துறையினர் நிதானமாக முதலீடுகளை செய்யுங்கள். குறைந்த அளவிலேயே இருக்கட்டும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

பெண்களுக்கு -
குடும்ப உறுப்பினர்கள் முதல் உற்றார் உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் என அனைவரிடமும் பேசும்போது வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் பேசும் வார்த்தை உங்களுக்கு எதிராக மாறும். கடன் சுமைகள் ஏதும் இருந்தால் அவகாசம் கேட்டுக் கொள்வது நல்லது.

மாணவர்களுக்கு -
கல்வியில் ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்படும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தோல்வியடைந்த பாடங்களை இப்போது எழுதுவதற்கு சரியான நேரம் அல்ல.

கலைஞர்களுக்கு -
ஒரு சில வாய்ப்புகள் கடைசி நேரத்தில் தள்ளிப் போகும். அல்லது கைவிட்டுப் போகும். பொறுமையாக சிலகாலம் இருந்தால் நன்மைகள் நடக்கும்.

பொதுப்பலன் -
ஆரோக்கியத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும். தொடர்ச்சியாக மருந்து உட்கொள்பவர்கள் மீண்டும் ஒருமுறை மருத்துவ ஆலோசனை பெற்று மருந்துகளை தொடரவேண்டும்.பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையிலும் கவனமாக இருக்க வேண்டும். சர்ச்சைகள் உருவாவதற்கு நீங்களே காரணமாக இருக்க வேண்டாம்.

இந்த வாரம்-
திங்கள் - அலைச்சல்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் தள்ளிப்போகும். வியாபார விஷயங்கள் முடிவுக்கு வருவது தாமதமாகும்.
செவ்வாய் - ஒரு சில உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். வியாபார விஷயமாக பயணம் ஏற்படும்.
புதன் - வெளிநாடு செல்லும் முயற்சி ஏதும் இருந்தால் சாதகமான பதில் இன்று கிடைக்கும். தூரத்து உறவினர் ஒருவரால் ஆதாயம் கிடைக்கும்.
வியாழன் - பல்வேறு விதமான சிந்தனைகள் தோன்றும். எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுக்க முடியாமல் தடுமாறுவீர்கள். ஒருவிதமான பதட்டம் இருக்கும்.
வெள்ளி - இந்த ஒருநாள் உங்களுடைய பலவித தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். முக்கிய தேவைகளுக்கான பணம் கிடைக்கும்.

சனி - ஒரு சில முக்கிய பிரச்சினைகளில் தீர்வு கிடைக்கும். சிறிய அளவிலான கடன்களை அடைப்பீர்கள். செலவுகள் அதிகமாக இருக்கும்.
ஞாயிறு - வியாபாரம் சம்பந்தமான ஒருசில விஷயங்கள் சாதகமாக இருக்கும். இடம்,வீடு போன்ற வியாபார விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
காலபைரவர் வழிபாடு பிரச்சினைகளின் தீவிரத்தை குறைக்கும். எதிர்ப்புகள் மறையும்.
**************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்