இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்

எக்காரியத்திலும் வெற்றி கிடைக்கும். புதிய முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் ஏற்பாடாகும். ஆன்மிக, சுப காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். பணவரவு உண்டு.

ரிஷபம்

வெளி வட்டாரத்தில் மகிழ்ச்சி பெருகும். பிரபலங்களின் உதவி கிடைக்கும். அவர்களது துணையுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். பேச்சில் பொறுமை தேவை.

மிதுனம்

வீட்டை விரிவுபடுத்துவது, அழகுபடுத்துவது நல்லபடியாக முடியும். சிலருக்கு அரசுப் பதவிகள் தேடி வரும். இழந்த சொத்துகளை திரும்ப பெறுவீர்கள். சமூக அந்தஸ்து, மரியாதை உயரும்.

கடகம்

ஆன்மிக பயணங்கள் சென்று வருவீர்கள். தியானம், யோகா, ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும். உங்கள் அலட்சியப்போக்கால் வீண் சிக்கல்கள், இடையூறுகள் வரக்கூடும். எதிலும் நிதானம் தேவை.

சிம்மம்

தடைபட்ட வேலைகள் முழுமையடையும். அரசு அதிகாரிகளின் உதவி கிடைக்கும். நல்ல இடவசதியுடன் கூடிய வீட்டுக்கு குடிபுகுவீர்கள். பிரபலங்களின் அறிமுகத்தால் ஆதாயம் உண்டு.

கன்னி

மறைமுக எதிரிகளைக் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். புதிய நபர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த வெளிநாட்டுப் பயணம் கைகூடிவரும்.

துலாம்

நம்பிக்கை, தைரியம் பிறக்கும். மறைமுக எதிர்ப்புகளை வெல்வீர்கள். விஐபிகளின் நட்பு கிடைக்கும். சொந்த ஊரில் மதிப்பு, மரியாதை கூடும். புதிய பொருட்கள் சேரும்.

விருச்சிகம்

மனதில் உற்சாகம், நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். நிம்மதியாக தூங்குவீர்கள். பெற்றோர் உடல்நலத்தில் கவனம் தேவை. எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பயணங்களால் ஆதாயம் கிடைக்கும்.

தனுசு

இளைய சகோதர வகையில் ஆதாயம் பெறுவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய நபர்களால் நன்மை பிறக்கும். வாகனம் வாங்குவீர்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசக்கூடாது.

மகரம்

புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். வராது என்று நினைத்து கைவிட்ட பணம் வந்து சேரும். பழைய கடனை தீர்ப்பீர்கள். ஆன்மிகம், யோகாவில் ஈடுபாடு ஏற்படும்.

கும்பம்

உடல்நலக் குறைவு, மனச்சோர்வு, பதற்றம் வந்து நீங்கும். உடன்பிறந்தவர்கள் இடையே மனக்கசப்புகள் தோன்றி மறையும். யாரிடமும் வீண் விமர்சனம், வாக்குவாதங்கள் வேண்டாம்.

மீனம்

சிலர் கூறும் அவதூறுகள், வீண்பழி ஆகியவற்றை பொருட்படுத்தாமல் கடமையை செய்யுங்கள். கோயில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். பிரபலங்களின் அறிமுகத்தால் ஆதாயம் உண்டு.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

மேலும்