- ஜோதிடர் ஜெயம் சரவணன்
திருவோணம் -
அற்புதமான பலன்கள் நடைபெறும் வாரம். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் எளிதாக முடியும். இதுவரை நல்ல வேலை அமையாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தினரின் பொருளாதாரத் தேவைகள் பூர்த்தியாகும். சொத்து வாங்கும் யோகம் உண்டு. ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். கடன் இல்லாத ஒரு நிலை உருவாகும். தாமதப்பட்டுக்கொண்டிருந்த திருமண முயற்சிகள் முடியும்.
சகோதர ஒற்றுமை மேலோங்கும்,தேவையான உதவிகள் கிடைக்கும்.
உத்தியோகம் -
வேலையில் எதிர்பார்த்த பதவி உயர்வு இப்போது கிடைக்கும். வேறு நல்ல நிறுவனங்களுக்கு மாறும் முயற்சிகள் வெற்றியாகும். வெளிநாடு சென்று வேலை பார்க்கும் யோகமும் உண்டு. அது நிறுவனத்தின் சார்பாகவும் இருக்கலாம். இதுவரை வேலை இல்லாதவர்களுக்கு இப்பொழுது நல்ல வேலை கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பொறுப்போடு பதவி உயர்வு கிடைக்கும். கடைகள் வணிக நிறுவனங்கள் பணிபுரிபவர்களுக்கு சிறப்பான வாரமாக இருக்கும். சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் அதிகமாவார்கள், அவர்களால் ஆதாயமும் கிடைக்கும்.
தொழில் -
அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். நல்ல வாய்ப்புகள் தானாக கிடைக்கும். பல்வேறு ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்த தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கவும் வாய்ப்பு உண்டு. புதிதாக தொழில் செய்யும் தொழில் முனைவோர்களுக்கு நல்ல வாய்ப்புகளும் உதவிகளும் கிடைக்கும். தொழிலை ஆரம்பிப்பதற்கான அத்தனை சூழ்நிலைகளும் சாதகமாக இருக்கிறது. பங்கு வர்த்தகத் துறையினருக்கு அபரிமிதமான லாபம் ஏற்படும். ஏற்றுமதி-இறக்குமதி தொழிலில் நல்ல புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபாரிகள் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள், தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கிளைகள் ஆரம்பிக்கும் எண்ணம் ஈடேறும்.
பெண்களுக்கு -
கவலைகள் அனைத்தும் தீரும். குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பத்தினர் மகிழ்ச்சிகரமாக இருப்பார்கள். உங்களுடைய தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண முயற்சிகள் கைகூடும். இதுவரை புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். சுயதொழில் தொடங்க ஆர்வம் உள்ள பெண்களுக்கு இப்பொழுது தேவையான உதவிகள் கிடைக்கும். சொத்து வாங்கும் யோகம் உண்டு.
மாணவர்களுக்கு -
கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உயர்கல்வி மாணவர்களுக்கு இப்பொழுது சிறப்பான கிரக அமைப்பு இருப்பதால் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும். புதிய மொழி கற்கும் ஆர்வம் ஏற்படும்.
கலைஞர்களுக்கு -
வாய்ப்புகளைத் தேடி ஓடிக் கொண்டிருந்த நீங்கள், இனி வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நல்ல ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பணவரவு எதிர்பாராத அளவுக்கு இருக்கும்.
பொதுப்பலன் -
கிரகங்கள் சாதகமாக இருப்பதால் உங்களுடைய தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சொந்த வீடு வாங்கும் முயற்சி வெற்றி ஆகும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வியாபாரப் பேச்சுக்கள் வெற்றிகரமாக முடிந்து லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு, திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சுமுகமாகத் தீரும். பூர்வீகச் சொத்து பாகப்பிரிவினை உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
இந்த வாரம் -
திங்கள் - எதிர்பாராத அளவுக்கு நன்மைகள் ஏற்படும். வியாபாரப் பேச்சுக்கள் சாதகமாக முடியும். தொழில் சம்பந்தமான உதவிகள் இன்று கிடைக்கும்.
செவ்வாய் - நீண்ட நாளாக பேசிவந்த ஒரு பேச்சு வார்த்தை இன்று சாதகமாக முடியும். ஆதாயம் தரக்கூடியதாக இருக்கும். மனை அல்லது வீடு வாங்கும் யோகமும் உண்டு. எடுத்துக் கொண்ட அனைத்து வேலைகளும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
புதன் - பயணங்கள் ஏற்படும். பயணங்களால் உடல் அசதி தோன்றினாலும் லாபத்திற்கு குறைவிருக்காது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.
வியாழன் - புதிய வாகனம் வாங்கும் எண்ணம் ஈடேறும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சுமூகமாகத் தீரும். தாய்வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும்.
வெள்ளி - ஆலயவழிபாடு ஏற்படும். குலதெய்வக் கோவிலுக்குச் சென்று வருவீர்கள். உங்கள் நண்பர்களுக்கு அல்லது உறவினர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுப்பீர்கள்.
சனி - எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியாகும். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் இன்று கிடைக்கும். பெரிய கடன் ஒன்றை அடைப்பீர்கள்.
ஞாயிறு - வீட்டுப் பராமரிப்பு செலவுகள் இருக்கும். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள்.
வணங்க வேண்டிய தெய்வம் -
மகாவிஷ்ணுவின் ஆலயத்தில் பெருமாளுக்கும், தாயாருக்கும் துளசி மாலை அணிவித்து அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். நன்மைகள் அதிகமாகும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் உடனுக்குடன் முடியும்.
******************************************************
அவிட்டம் -
முக்கியமான நபர்களை சந்திப்பதால் நன்மைகள் அதிகமாக நடக்கும். உங்கள் எண்ணங்கள் நிறைவேறும், எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும், குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் தீரும். சகோதர வகையில் இருந்த சங்கடங்கள் தீரும். திருமண முயற்சிகள் கைகூடும். இதுவரை புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். நீண்டநாளாக வாட்டிக்கொண்டிருந்த உடல்நலக் கோளாறுகள் தீரும். மருத்துவச் செலவுகள் குறையும்.
தாயாரின் உடல் நலம் சீராகும். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். கடன்கள் அடைபட உதவிகள் கிடைக்கும்.
உத்தியோகம் -
கடையில் பெரிய மாறுதல்கள் ஏதும் இருக்காது, எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைப்பதற்காக சூழல் இருக்கிறது. சக ஊழியர்கள் உங்களுக்கு உதவுவார்கள். ஒரு குழுவாக சேர்ந்து ஒரு முக்கிய வேலையை முடிப்பீர்கள். அந்தக் குழுவுக்கு நீங்கள் தலைமை தாங்குவீர்கள்.
வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி வெற்றியாகும். வெளிநாடு சென்று வேலை செய்ய விரும்புபவர்களுக்கு இப்பொழுது அந்த வாய்ப்பு கிடைக்கும். இதுவரை வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு இப்பொழுது வேலை கிடைக்கும். சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும். கடைகள், சிறு நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு இதைவிட சிறந்த ஒரு நல்ல வேலை கிடைக்கும்.
தொழில் -
தொழிலில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்த உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் பெரிதாக பாதிப்பு எதுவும் தராது. வங்கியில் எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். அரசு வழியில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். கணக்கு வழக்குகளில் இருந்த குளறுபடிகள் இப்போது தீரும். புதிய தொழில் முனைவோருக்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. பல்வேறு விதமான உதவிகள் கிடைக்கும். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல வளர்ச்சி உண்டாகும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு லாபம் இரு மடங்காகும். வியாபாரிகளுக்கு நல்ல வளர்ச்சி உண்டு. வரவேண்டிய பாக்கிகள் எல்லாம் வசூலாகும்.
பெண்களுக்கு -
திருமண முயற்சிகள் கைகூடும். திருமணமாகி குழந்தை இல்லாமல் ஏங்கியவர்களுக்கு இப்பொழுது குழந்தை பாக்கியம் உண்டாகும். சொத்துக்கள் வாங்குவது அல்லது விற்பது போன்ற விஷயங்கள் உங்களுக்கு லாபகரமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் தீரும்.
மாணவர்களுக்கு -
கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அடுத்த ஆண்டு கல்வி தொடர்பாக உங்களை இப்போதே தயார் செய்து கொள்வீர்கள். ஆராய்ச்சிப் படிப்பு தொடர்பான மாணவர்களுக்கு வேண்டிய உதவிகள் கிடைக்கும்.
கலைஞர்களுக்கு -
நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நெருங்கிய நண்பர் ஒருவரால் ஒப்பந்தம் ஒன்று கிடைக்கும். வெளிநாடுகளில் சென்று கலை நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பு உண்டு. அரசு கவுரவம் அல்லது அரசு உதவிகள் கிடைக்கும்.
பொதுப்பலன் -
எடுக்கின்ற முயற்சிகள் அனைத்திலும் நல்ல பலன் கிடைக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கும். திருமண முயற்சிகள் சாதகமாக இருக்கும். குழந்தை பாக்கியத்திற்காக மருத்துவச் செலவுகள் செய்து கொண்டிருந்தவர்களுக்கு, இப்போது மருத்துவ உதவி இல்லாமலேயே குழந்தை பிறக்கும் வாய்ப்பு உண்டு. சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சுமூகமாகத் தீரும்.
இந்த வாரம் -
திங்கள் - வெளிநாடு செல்லும் முயற்சிகள் முழு வெற்றியாகும். வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாகும். வியாபார விஷயமாக பயணங்கள் ஏற்படும். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். உதவிகள் தேடி வரும்.
செவ்வாய் -தொழில் சம்பந்தமான பயணம் ஏற்படும். நண்பர்கள் உதவி செய்வார்கள். முக்கிய நபரை சந்திப்பதால் ஒரு திருப்புமுனை ஏற்படும் வாய்ப்பு உண்டு.
புதன் - திட்டமிட்ட காரியங்கள் அனைத்தையும் கச்சிதமாக செய்து முடிப்பீர்கள். தன வரவு தாராளமாக இருக்கும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் உங்களுக்கு வெற்றிகரமாக முடியும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து கையெழுத்தாகும். தொழில் சம்பந்தமாக ஒரு சில உதவிகள் இன்று கிடைக்கும்.
வியாழன் - அலைச்சல்கள் அதிகரிக்கும். பயணங்களால் ஆதாயம் குறையலாம். எதிர்பார்த்த ஒரு விஷயம் தள்ளிப்போகும்.
வெள்ளி - வீடு வாங்குவது விற்பது போன்ற விஷயங்களில் இன்று நல்ல முடிவு ஏற்படும். தாய்வழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். வங்கியில் எதிர்பார்த்த கடன் கிடைக்கும்.
சனி - ஆலயங்களுக்குச் சென்று வருவீர்கள். யோகா, தியானம் போன்ற பயிற்சி வகுப்புகளில் சேர முடிவெடுப்பீர்கள். மற்றவருக்கு ஒரு சில உதவிகள் செய்து கொடுப்பீர்கள்.
ஞாயிறு - எதிர்பார்த்த உதவிகள் இன்று கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இன்று திருப்திகரமாக முடியும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். மகிழ்ச்சி தரும் தகவல் ஒன்று கிடைக்கும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
அருகிலிருக்கும் ஐயப்பன் கோயிலுக்குச் சென்று வாருங்கள். ஐயப்பன் அபிஷேகத்தை காணுங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் பூர்த்தியாகும்.
*************************************************************
சதயம் -
அதிக நன்மைகள் ஏற்படும் வாரம். உங்கள் எண்ணங்கள் அனைத்தும் செயல் வடிவம் ஆகும். முயற்சிகளில் முழு வெற்றி கிடைக்கும்.வரவு இருமடங்காக இருக்கும். சேமிப்புகள் உயரும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. திருமணம், வீடு வாங்குதல் போன்ற சுப காரியங்கள் நடக்கும். பாதியில் நின்ற வீட்டு வேலைகள் இப்போது முழுமையாக முடியும். கடன் என்பதே இல்லாமல் போகும் அளவுக்கு அனைத்து கடனையும் அடைப்பீர்கள்.
உத்தியோகம் -
உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். ஊதிய உயர்வு ஏற்படும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். சக ஊழியர்களுடன் கலகலப்பாக பணியாற்றுவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அவர்களால் பெரும் நன்மைகள் ஏற்படும். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். வரவேண்டிய நிலுவைத் தொகைகள் அனைத்தும் வருவதற்கான வாய்ப்பு உண்டு. சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு இருமடங்கு லாபம் ஏற்படும். சேமிப்புகள் உயரும். சொத்துக்கள் வாங்குவீர்கள். கடைகள், வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் இப்பொழுது வேறு நிறுவனத்துக்கு மாறுவார்கள். அங்கு நல்ல ஊதியமும் கிடைக்கும். வெளிநாடு செல்லும் முயற்சி முழு வெற்றியைத் தரும், வெளிநாட்டில் வேலை செய்துகொண்டிருப்பவர்களுக்கு நிரந்தரப் பணி கிடைக்கும். குடியுரிமை சம்பந்தப்பட்ட விஷயங்கள் இந்த வாரம் சுலபமாக முடியும்.
தொழில் -
தொழிலில் எதிர்பாராத அளவுக்கு முன்னேற்றம் கிடைக்கும். தேங்கி நின்று பொருட்கள் அனைத்தும் வேகமாக விற்பனையாகும். உங்கள் தொழிலோடு சேர்ந்து புதிய தொழில் தொடங்க வாய்ப்பு உண்டாகும். அரசு வழியில் இருந்து அதிக ஆதாயம் கிடைக்கும். அரசு வழியில் இருந்த நெருக்கடிகள் அனைத்தும் சுமூகமாகத் தீரும். வழக்கு ஏதேனும் இருந்தால் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் அபார வளர்ச்சி ஏற்படும். லாபம் இரு மடங்காக இருக்கும். தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சி எடுப்பீர்கள். அந்த முயற்சி வெற்றியாகும்.
பங்கு வர்த்தகத் துறையினர் அதிக லாபம் கிடைக்கப் பெறுவார்கள். கட்டுமானத் தொழில், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் பெரிய அளவிலான வியாபாரங்களை செய்து மகிழ்ச்சி அடைவார்கள்.
பெண்களுக்கு -
திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இந்த வாரம் குழந்தை பாக்கியம் உருவாகும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அது அரசு உத்தியோகமாகவும் இருக்கலாம். சுயதொழில் செய்ய விரும்பும் பெண்களுக்கு, வேண்டிய உதவிகள் கிடைக்கும், இந்த வாரம் சுயதொழில் தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக உள்ளது. சொத்துக்கள் வாங்குவீர்கள். ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
மாணவர்களுக்கு -
கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும், தேர்வுகளில் மிகச்சிறந்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள். உயர்கல்வி படிப்பவர்களுக்கு வேண்டிய உதவிகள் கிடைப்பது மட்டுமல்லாமல், வியக்கத்தக்க வகையில் மதிப்பெண்கள் கிடைத்து தேர்ச்சி அடைவார்கள்.
கலைஞர்களுக்கு -
வீடு தேடிவாய்ப்புகள் வரும். வெளிநாடு சென்று உங்கள் துறை சார்ந்த நிகழ்ச்சிகளை செய்ய வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் துறை சார்ந்த பயிற்சி வகுப்புகளை ஆரம்பிக்கவும் முயற்சி செய்வீர்கள். அந்த முயற்சி வெற்றி ஆகும்.
பொதுப்பலன் -
கிரகங்கள் சாதகமான இடங்களில் இருக்கிறது, அந்த கிரகங்கள் நிற்கின்ற நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமான நட்சத்திரங்களில் இருக்கிறது. எனவே, சிறிய அளவிலான முயற்சி எடுத்தாலே பெரிய அளவிலான வெற்றிகள் கிடைக்கும். சொத்து சேர்க்கை இயல்பாக ஏற்படும். கடன்கள் முழுமையாக அடையும், அடிப்படைத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆரோக்கிய பிரச்சினைகள் அறவே இல்லாமல் போகும்.
இந்த வாரம் -
திங்கள் - எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தங்களாக மாறும். மிகப் பெரிய வியாபாரம் ஒன்று நடந்து லாபம் கிடைக்கும்.
செவ்வாய் - வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றி ஆகும். அயல்நாட்டில் வசிப்பவர்களுக்கு குடியுரிமை சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். சொத்து சம்பந்தமான பிரச்சினை சுமூகமாக முடியும்.
புதன் - திடீர் பயணம் ஒன்று ஏற்படும். அந்தப் பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். எதிர்பாராத ஒரு சந்திப்பு ஏற்படும். அந்த சந்திப்பால் நன்மைகள் கிடைக்கும்.
வியாழன் - திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். விசேஷ பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும். சொத்து சம்பந்தமாக பேசி முடிப்பீர்கள்.
வெள்ளி - அலைச்சல் அதிகரிக்கும். உடல் சோர்வடைந்தது போல் தோன்றும். ஒரு சில வேலைகளைத் தள்ளி வைக்கத் தோன்றும்.
சனி - ஆதாயம் தரும் வியாபாரம் பேச்சு ஒன்று முடிவடையும். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமாக சில உபகரணங்களை வாங்குவீர்கள்.
ஞாயிறு - நண்பர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ ஒரு சில உதவிகளைச் செய்து கொடுப்பீர்கள். செலவுகள் அதிகமாக இருக்கும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள்.
வணங்க வேண்டிய தெய்வம் -
சிவபெருமானுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து, விளக்கேற்றி வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும். பண வரவு அதிகமாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும்.
****************************************************
பூரட்டாதி -
இந்த வாரம் முழுவதும் மகிழ்ச்சிகரமாக இருக்கும். அலைச்சல் அதிகமாக இருந்தாலும், அலைச்சலுக்கு ஏற்ற வருமானமும் கிடைக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும். செலவுக்கு தகுந்தாற்போல் வருமானமும் இருக்கும். சுப விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். உங்கள் வீட்டிலேயே விசேஷ பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து அதற்கான வேலைகளில் இறங்குவீர்கள். வெளிநாடு செல்லும் யோகமும் உண்டு. வெளிநாட்டில் வேலை கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் அனைத்தும் சுமுகமாக தீரும். தாயாரின் உடல் நலத்தில் இருந்த பாதிப்புகள் அகலும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும், கடன்களில் ஒரு சிலவற்றை அடைக்கவும் செய்வீர்கள்.
உத்தியோகம் -
வேலையில் பெரிய பாதிப்புகள் ஏதும் இருக்காது. விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. அலுவலக விஷயமாக வெளியூர் செல்ல வேண்டியது வரும். இதுவரை வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு இப்பொழுது வேலை கிடைக்கும். அரசு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும். சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு லாபம் அதிகமாக இருக்கும். கடைகள், வணிக நிறுவனங்கள் பணிபுரிபவர்கள் வேறு நல்ல நிறுவனத்திற்கு மாறுவார்கள். சமீபத்தில் வேலை இழந்தவர்களுக்கும் இப்பொழுது வேலைக்கான நேர்முகத் தேர்வு நடக்கும். அந்த நேர்முகத் தேர்வில் வெற்றியும் பெறுவீர்கள்.
தொழில் -
தொழிலில் எதிர்பாராத அளவுக்கு ஒரு வளர்ச்சி ஏற்படும். உங்கள் தொழிலில் கூட்டு சேர்வதற்காக ஒரு சிலர் முன் வருவார்கள். முதலீடுகள் கிடைக்கும். வெளிநாட்டு நண்பர்கள் மூலமாக முதலீடுகள் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலை விரிவுபடுத்த தேவையான உதவிகள் கிடைக்கும். புதிதாக தொழில் செய்யும் எண்ணம் உடையவர்களுக்கு இந்த வாரம் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு ஆரோக்கியமான வளர்ச்சி இருக்கும். ரியல் எஸ்டேட் துறையினருக்கும், கட்டுமானத் தொழில் செய்பவர்களுக்கும் இந்த வாரம் சிறப்பான வாரமாக இருக்கும், நீங்கள் எதிர்பார்த்தது போலவே நன்மைகள் நடக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் ஏற்படும். புதிதாக ஒரு சில ஏஜென்சி உரிமங்களைப் பெறுவீர்கள்.
பெண்களுக்கு -
திருமண முயற்சிகள் கைகூடும். இதுவரை புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். சகோதர வகையில் இருந்த பிரச்சினைகள் சுமுகமாகத் தீரும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் முடிந்து உங்களுக்கான பங்கு கிடைக்கும். சொந்த வீடு வாங்கும் கனவு இப்பொழுது நிறைவேறும். சுயதொழில் செய்யும் எண்ணம் உள்ளவர்களுக்கு, இந்த வாரம் அதை செயல்படுத்த வாய்ப்பு கிடைக்கும்.
மாணவர்களுக்கு -
வெளிநாடு சென்று கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்கும். அதற்கான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைவீர்கள்.
கலைஞர்களுக்கு -
அற்புதமான வாய்ப்புகள் கிடைக்கும். பெரிய அளவிலான ஒரு ஒப்பந்தம் ஏற்படும். சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டு. இதுவரை ஏற்பட்ட கடன் அனைத்தையும் கிடைப்பதற்கு வழி கிடைக்கும்.
பொதுப்பலன் -
அயராமல் உழைத்தால், மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும். வருமானம் இருமடங்காக இருக்கும். சேமிப்பு உயரும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. வேலைக்குச் சென்று கொண்டிருப்பவர்கள் இப்போது சொந்தத் தொழில் செய்ய ஆர்வம் ஏற்படும். சுய ஜாதகத்தின் அடிப்படையில் தொழில் தொடங்க எந்தத் தடையும் இருக்காது, ஆரோக்கியப் பிரச்சினைகள் அனைத்தும் தீரும். சுப விசேஷங்கள் இல்லத்தில் நடக்கும்.
இந்த வாரம் -
திங்கள் - மதியம்வரை அலைச்சல் இருக்கும். மதியத்திற்கு பிறகு, எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் செய்து முடிப்பீர்கள். வியாபார பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும்.
செவ்வாய் - சொந்த வீடு வாங்கும் விஷயமாக சில முடிவுகள் எடுப்பீர்கள்.ஒருசில பேச்சுவார்த்தைகள் முழுமையடைந்து ஒப்பந்தம் போடும் அளவிற்கு முன்னேற்றம் ஏற்படும்.
புதன் - எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். ஒப்பந்தங்கள் ஏற்படும். லாபம் தரும் வியாபார பேச்சுவார்த்தைகள் முடிவடையும்.
வியாழன் - மனதில் எண்ணிய செயல்கள் அனைத்தும் முழுமை பெறும். பண வரவு தாராளமாக இருக்கும். வியாபார பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும். லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.
வெள்ளி - சிறு தூரப் பயணங்கள் ஏற்படும். பயணங்களால் ஓரளவு ஆதாயம் கிடைக்கும். ஒரு சில முயற்சிகளில் கடைசி நேரத்தில் வெற்றி கிடைக்கும்.
சனி - வீண் அலைச்சல்கள் ஏற்படும். சில விஷயங்கள் உங்களுக்கு எரிச்சல் தருவதாக இருக்கும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
ஞாயிறு - லாபகரமான பேச்சுவார்த்தைகள் நடக்கும். வியாபாரத்தில் வெற்றி உண்டாகும். எதிர்பார்த்த பணமும் கிடைக்கும். உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் வகையில் பணவரவு இருக்கும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ விஷ்ணு துர்கை வழிபாடு நன்மை தரும். செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும். ஒரு சில தடைகள் கூட இல்லாமல் போகும். எண்ணங்கள் முழுமையாக செயல் வடிவம் பெறும்.
*******************************************
உத்திரட்டாதி -
அதிக முயற்சி இல்லாமலேயே அனைத்து வேலைகளும் எளிதாக முடியும். சுபச் செலவுகள் உண்டாகும். புதிய வாகனம் வாங்கும் எண்ணம் ஈடேறும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சுமூகமாகத் தீரும். பாகப்பிரிவினைகள் ஒழுங்காகும். வேலைக்குச் சென்று கொண்டிருந்தவர்கள் கூட இப்பொழுது சொந்தத் தொழில் செய்ய முற்படுவார்கள். ஒரு சிலர் கடன் வாங்கி வியாபாரம் செய்து, அதனால் லாபம் அடைவார்கள். ஆரோக்கியத்தில் இருந்த குறைபாடுகள் அனைத்தும் தீரும். ஆதாயம் தரும் வியாபாரங்கள் ஏற்படும்.
உத்தியோகம் -
வேலையில் இருந்த ஒரு சில பிரச்சினைகள் இப்பொழுது முடிவுக்கு வரும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். அலுவலகம் சார்ந்த பிரச்சினைகள் இனி இருக்காது. எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். வேறு நிறுவனங்களிலிருந்து உங்களுக்கு அழைப்பு வரும். உங்கள் மனதிற்கு திருப்திகரமாக இருந்தால், அந்த நிறுவனங்களில் சேர்ந்து கொள்ளலாம். சேவை சார்ந்த வேலை செய்பவர்கள் நல்ல வளர்ச்சி காண்பார்கள். ஆதாயம் தரக்கூடிய வாடிக்கையாளர்களை பெறுவார்கள். தொழிற்சாலைகளில் பணி புரிபவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். ஊதிய உயர்வு உண்டாகும்.
தொழில் -
தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு. பழைய இயந்திரங்களை மாற்றி புதிய இயந்திரங்களை வாங்குவீர்கள். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த வங்கிக் கடன் இப்பொழுது கிடைக்கும். வேலைக்குச் சென்று கொண்டிருந்தவர்கள், சொந்தத் தொழில் செய்ய முன்வருவார்கள், ஒரு சிலர் வாடகை வாகனங்களை வாங்கி இயக்க விரும்புவார்கள். அந்த எண்ணம் இப்பொழுது ஈடேறும். டிராவல்ஸ் மற்றும் டிரன்ஸ்போர்ட் நிறுவனங்கள் நடத்தி வருபவர்கள் லாபகரமாக தங்கள் தொழிலை மாற்றி அமைப்பார்கள். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரிகள் வளர்ச்சி காண்பார்கள். புதிய கிளைகளை தொடங்குவார்கள்.
பெண்களுக்கு -
எதிர்பார்த்த சொத்து விஷயங்கள் சாதகமாக இருக்கும். அசையாச் சொத்துக்கள் வாங்குவீர்கள். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு. திருமண முயற்சிகள் கைகூடும். எதிர்பார்த்த தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும். வேலையில்லாத பெண்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும்.
மாணவர்களுக்கு -
கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளிநாடு சென்று கல்வி கற்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு, இப்போது அந்த வாய்ப்பு இயல்பாகக் கிடைக்கும். உயர்கல்வி மாணவர்களுக்கு தேர்வுகள் ஏதும் எழுதி இருந்தால் இப்பொழுது நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.
கலைஞர்களுக்கு -
வாய்ப்புகள் இனி உங்களைத் தேடி வரும். அதில் சிறந்த வாய்ப்புகளை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்வீர்கள். லாபம் தரும் ஒப்பந்தங்கள் ஏற்படும். அசையாச் சொத்து வாங்கும் யோகம் உண்டு. உங்கள் துறை சார்ந்த பயிற்சிப் பள்ளிகள் ஆரம்பிக்க உதவிகள் கிடைக்கும்.
பொதுப்பலன் -
இந்த வாரம் நீங்கள் எடுத்துக்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் வெற்றியாகும். தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். கூட்டுத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு இப்பொழுது கூட்டாளிகளுடன் நல்ல ஒற்றுமை ஏற்பட்டு தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உருவாகும். ஆரோக்கியத்தில் பெரும் பின்னடைவு இருந்தவர்களுக்கு இப்பொழுது ஆரோக்கியம் முழுமையாக சீராகும்.
இந்த வாரம் -
திங்கள் - மதியம் வரை பல நல்ல பலன்கள் நடக்கும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மதியத்திற்கு மேல் வீண் அலைச்சல்கள் ஏற்படும். முடிந்தவரை மதியத்திற்கு மேல் முக்கிய வேலைகளைத் தவிர்த்து விடுங்கள்.
செவ்வாய் - சிறு தூர பயணம் ஏற்படும். முக்கிய நபரை சந்திப்பீர்கள். பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த பணம் கடைசி நேரத்தில் கிடைக்கும்.
புதன் - தேவையான உதவிகள் இன்று கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தங்களாக மாறும். பத்திரப்பதிவு போன்றவை செய்வீர்கள். வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றி ஆகும். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் கிடைக்கும்.
வியாழன் - அலுவலக விஷயமாக அல்லது தொழில் விஷயமாக பயணம் உண்டாகும். பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் வெற்றியாகி கையெழுத்தாகும்.
வெள்ளி - இடமாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும். வீடு மாற்றம் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது, பயணங்கள் ஏற்படும். ஒருசில விஷயங்களில் முடிவு எடுக்கமுடியாமல் தடுமாற்றம் ஏற்படும்.
சனி - முயற்சிகள் அனைத்தும் முழு வெற்றியைத் தரும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் ஏற்படும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் சார்ந்து ஒரு சில உதவிகள் கிடைக்கும்.
ஞாயிறு - தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். வாகன பராமரிப்பு செலவுகள் செய்வீர்கள். வீட்டுக்குத் தேவையானப் பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தினருக்காக செலவு செய்து மகிழ்வீர்கள்.
வணங்க வேண்டிய தெய்வம் -
செல்வ வளம் பெருக மகாலட்சுமி தாயாரை வணங்கி வாருங்கள். மகாலட்சுமி தாயாருக்கு வெண் தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் எண்ணங்கள் நிறைவேறும்.
*******************************************************
ரேவதி -
கடந்த சில வாரங்களாக இருந்த அழுத்தங்கள் தீரும். கடன் பிரச்சினை மிகுந்த நெருக்கடி தந்திருக்கும். இப்பொழுது கடன் பிரச்சினைகளை ஒவ்வொன்றாக தீர்க்க வழி கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பத்தில் சுப விசேஷங்கள் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த பண உதவி இந்த வாரம் கிடைக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். பொருளாதாரத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சொத்து சம்பந்தமான விஷயங்கள் சுமூகமாகும். தந்தைவழி உறவுகளிடம் இருந்த சச்சரவுகள் நீங்கி சமாதானமாகும்.
உத்தியோகம் -
வேலை இடத்தில் இருந்த நெருக்கடிகள் அனைத்தும் இப்பொழுது தீரும். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பதவி உயர்வு இப்போது கிடைக்கும். விரும்பிய இடமாற்றம் ஏற்படும். வெளிநாடு சென்று வேலை செய்யும் ஆர்வமுள்ளவர்களுக்கு இப்பொழுது அந்த வாய்ப்பு எளிதாக கிடைக்கும். ஒரு சிலருக்கு அலுவலகத்தின் சார்பிலேயே வெளிநாடு செல்லக் கூடிய யோகம் ஏற்படும். வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு பணிநீட்டிப்பு கிடைக்கும். குடியுரிமை சார்ந்த பிரச்சினைகள் இந்த வாரம் தீரும். சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு வேலைகள் அதிகம் கிடைக்கும். லாபம் அதிகமாக இருக்கும். உங்கள் பொருளாதாரத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
தொழில் -
தொழிலில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். முதலீடுகள் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில்சார்ந்த வெளிநாட்டுத் தொடர்புகள் மீண்டும் ஏற்படும். மொத்த வியாபாரிகளுக்கு மிகப் பெரிய லாபம் ஏற்படும் வகையில் வியாபாரம் பெருகும். வியாபாரக் கிளைகளை தொடங்க வழி கிடைக்கும். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு அமோகமான முன்னேற்றம் ஏற்படும். ரியல் எஸ்டேட், மற்றும் கட்டுமானத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு வருமானம் இருமடங்காக இருக்கும். புதிதாக தொழில் தொடங்கும் எண்ணம் உடையவர்களுக்கு இப்பொழுது நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். போக்குவரத்து தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு, இதுவரை இருந்த பிரச்சினைகள் தீர்ந்து, லாபகரமாக மாறும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு ஒப்பந்தங்கள் கிடைக்கும். வருமானம் இருமடங்காக இருக்கும்.
பெண்களுக்கு -
சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சுமூகமாகத் தீரும். சகோதர வழியில் இருந்த பிரச்சினைகள் இப்பொழுது தீர்ந்து சமாதானமாகும். சகோதரர்கள் உங்களுக்காக விட்டுக் கொடுப்பார்கள். உங்களின் இளைய சகோதரருக்கு இப்பொழுது திருமணம் நடக்கும்.
மாணவர்களுக்கு -
உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வியில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும், மேற்கல்வி கற்பதற்கு உதவிகள் கிடைக்கும்.
கலைஞர்களுக்கு -
நல்ல வாய்ப்புகள் கிடைத்து, ஒப்பந்தங்கள் ஏற்படும். வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்த வாய்ப்பு கிடைக்கும். உங்கள் துறை சார்ந்த பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்க வழி கிடைக்கும்.
பொதுப்பலன் -
கடந்த சில வாரங்களாக இருந்த நெருக்கடிகள் அனைத்தும் தீரும். கடன் பிரச்சினைகள் ஒவ்வொன்றாக தீர்ப்பீர்கள். ஒரு சிலர் உத்தியோகத்தை விட்டுவிட்டு சொந்தத் தொழில் தொடங்குவார்கள். சொந்த வீடு வாங்கும் கனவு இப்பொழுது நனவாகும். ஆரோக்கிய பிரச்சினைகள் விலகும். மருத்துவச் செலவுகள் குறையும். தாயாரின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். தந்தைவழி உறவுகளிடம் இருந்த பகை மாறும். எதிர்பார்த்த பண உதவிகள் கிடைத்து உங்கள் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.
இந்த வாரம் -
திங்கள் - மதியம்வரை அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். மதியத்திற்குப் பிறகு உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும்.
செவ்வாய் - வீடு நிலம் போன்ற பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும். ரியல் எஸ்டேட் சார்ந்த வியாபாரப் பேச்சு வார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். தேவையான பண உதவி கிடைக்கும்.
புதன் - வியாபார விஷயமாகவோ அல்லது தொழில் விஷயமாக பயணம் ஏற்படும். அந்தப் பயணத்தால் லாபம் ஏற்படும். ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றி ஆகும்.
வியாழன் - ஒரு முக்கியமான கடனை அடைக்க வழி கிடைக்கும். வங்கியில் எதிர்பார்த்திருந்த வீட்டுக்கடன் இன்று கிடைக்கும். அல்லது அது சார்ந்த சாதகமான பதில் கிடைக்கும்.
வெள்ளி - வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். தொலைபேசி வழியாக ஒரு முக்கியமான வியாபாரம் உறுதியாகும். வீடு சம்பந்தமான பத்திரப் பதிவுகள் நடக்கும். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும்.
சனி- வீடு மாற்றம் பற்றிய சிந்தனை அதிகமாகும். வாகன மாற்றமும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது, குழந்தைகளின் எதிர்காலம் கருதி ஒரு சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
ஞாயிறு - நீண்டநாளாக பேசி வந்த ஒரு பேச்சுவார்த்தை இன்று நல்ல முடிவுக்கு வரும். வியாபார பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். தொழில் சார்ந்த ஒரு முக்கிய சந்திப்பு ஏற்படும். அதில் உங்களுக்கு சாதகமான பல விஷயங்கள் நடந்தேறும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.
வணங்கவேண்டிய தெய்வம் -
விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுங்கள், இருக்கின்ற ஒரு சில தடைகளும் இல்லாமல் போகும். பணவரவில் திருப்தி இருக்கும். நினைத்தது நிறைவேறும்.
******************************************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago