- ஜோதிடர் ஜெயம் சரவணன்
விசாகம் -
எடுக்கின்ற முயற்சிகளில் பெருமளவு வெற்றி ஏற்படும். ஒருசில விஷயங்களில் பின்னடைவு ஏற்படலாம். ஆனாலும் ஆதாயத்திற்கு குறைவிருக்காது. பணச்சிக்கல் வராது, குடும்பத்தில் ஒரு சில பிரச்சினைகள் வரலாம். வந்தாலும் வந்த வேகத்திலேயே அந்த பிரச்சினைகள் களையப்படும். எனவே பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதும் இருக்காது. வழக்கு ஏதேனும் இருந்தால் தள்ளிப்போகும்.
உத்தியோகம் -
வேலையில் பணிச்சுமை அதிகமாக இருந்தாலும், அதையெல்லாம் சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்குள் இருக்கும். உங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்து வேலைகளைத் தருவார்கள். நீங்களும் சிறப்பாக செய்து முடித்துத் தருவீர்கள். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு வேலைகள் அதிகமாக இருக்கும்.
ஆதாயமும் அதிகமாக இருக்கும். கடைகள் வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு பெரிய மாற்றங்கள் ஏதும் இருக்காது. திருப்திகரமான நிலையே நீடிக்கும்.
தொழில் -
தொழிலில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சார்ந்த வழக்குகள் ஏதேனும் இருந்தால் தள்ளிப்போகும். அரசு வழியில் இருந்த நெருக்கடிகள் முற்றிலுமாக நீங்கும். அரசின் உதவிகள், மானியங்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு.
ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு நல்ல பல ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்கள் ஓரளவு கணிசமான லாபம் பார்ப்பார்கள். வியாபாரிகள் நல்ல வளர்ச்சி காண்பார்கள்.
பெண்களுக்கு -
குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும், உறவினர்களிடம் ஏற்பட்ட மனவருத்தங்கள் மாறும், திருமண முயற்சிகள் கைகூடும், வேலை இல்லாத பெண்களுக்கு இப்போது வேலை கிடைக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சனைகளை சுமூகமாக பேசித் தீர்ப்பீர்கள்.
மாணவர்களுக்கு -
கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. தேர்வுகள் ஏதும் எழுதியிருந்தால் முதல் மதிப்பெண் கிடைக்கும் வாய்ப்பு உண்டு, உயர்கல்விக்கான முயற்சிகள் வெற்றியாகும்.
கலைஞர்களுக்கு -
நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஒரு பெரிய நிறுவனத்திடம் இருந்து உங்களுக்கு அழைப்பு வரும். நண்பர்கள் உதவி செய்வார்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
பொதுப்பலன் -
பெருமளவு நன்மைகளும், ஒரு சில பாதிப்புகளும் மட்டுமே இருக்கிறது, அதை எல்லாம் சமாளிக்கும் ஆற்றல் இருப்பதால், எளிதில் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பீர்கள். சிறு தூரப் பயணங்கள் ஏற்படும். அந்தப் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். யாருக்கும் ஜாமீன் கொடுக்கக்கூடாது. பின்னாளில் அது உங்களுக்கு பிரச்சினையாக மாறும்.
இந்த வாரம் -
திங்கள் - மதியம்வரை தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும். ஒரு சில மனம் வருந்தும் சம்பவங்கள் நடக்கும். மதியத்திற்குப் பின் நல்ல பலன்கள் நடக்கும். எடுத்த வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
செவ்வாய் - ஆதாயம் தரும் விஷயங்கள் நடக்கும். பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக இருக்கும். ஒரு சில ஒப்பந்தங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
புதன் - தொழில் அல்லது வியாபார விஷயமாக பயணங்கள் ஏற்படும். அதில் ஒரு சில ஒப்பந்தங்கள் கிடைக்கும். எதிர்காலம் பற்றிய கவலை தோன்றும். ஆனாலும் மனதில் ஒரு தெளிவு பிறக்கும்.
வியாழன் - வெற்றிகரமான நாளாக இருக்கும். பணவரவு எதிர்பார்த்தபடியே கிடைக்கும். முயற்சிகள் வெற்றியாகும். புதிய ஒப்பந்தங்கள் போடுவீர்கள். குடும்பத்தில் சுப விசேஷ பேச்சுவார்த்தைகள் நடக்கும்.
வெள்ளி - எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். கடன் ஒன்றை அடைப்பீர்கள். வீடு சம்பந்தமான வியாபாரம் லாபகரமாக முடியும்.
சனி - அலைச்சல்கள் அதிகரித்தாலும் ஒருசில ஆதாயங்கள் ஏற்படும். வாகனச் செலவு ஏற்படும். குடும்பத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள்.
ஞாயிறு - எதிர்பார்த்த பணம் கிடைக்கும். பயணங்களால் லாபம் ஏற்படும். கமிஷன் வியாபாரம் சிறப்பாக இருக்கும். புதிய தொழில் முயற்சி ஒன்றைத் தொடங்கும் எண்ணம் ஏற்படும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ கால பைரவருக்கு செவ்வரளி மாலை சூட்டி, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும். தாமதங்கள் அகலும். எதிர்ப்புகள் குறையும்.
***************************************************************
அனுஷம் -
பேசியே பல காரியங்களைச் சாதிப்பீர்கள். வாக்கு வன்மை உண்டாகும். எடுத்த முயற்சிகள் தாமதமாகும். ஆனாலும் வெற்றி கண்டிப்பாக கிடைக்கும். வழக்கு ஏதேனும் இருந்தால் தள்ளிப்போகும். மறைமுக எதிரிகளால் இருந்த பிரச்சினைகள் இப்பொழுது முற்றிலுமாக இல்லாமல் போகும், பணவரவு எதிர்பார்த்த படியே இருக்கும். முக்கியமான விஷயங்கள் அனைத்தும் நீங்கள் எதிர்பார்த்தபடியே நிறைவேறும். குடும்பத்தில் ஒரு சில பிரச்சினைகள் இருந்தாலும், அதை சமாளித்து அனைவரையும் சமாதானப்படுத்துவீர்கள்.
உத்தியோகம் -
வேலையில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். சக ஊழியரின் வேலையை நீங்கள் பார்க்க வேண்டிய நிலை வரும். பதவி உயர்வு எதையும் இப்பொழுது எதிர்பார்க்க வேண்டாம். அலுவலகத்தில் இருந்து வரவேண்டிய நிலுவைத் தொகை தாமதமாகத்தான் கிடைக்கும். சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு வேலையில் திருப்திகரமாக இருக்கும்.
சிறு நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு இப்போதைக்கு எந்த மாற்றமும் இல்லை.
தொழில் -
தொழிலில் அகலக்கால் எதுவும் வைக்கவேண்டாம். அதிக முதலீடுகளையும் செய்ய வேண்டாம். இருக்கின்ற தொழிலை சிறப்பாகச் செய்தாலே போதும். கடன் பிரச்சினைகள் ஓரளவு கட்டுக்குள் இருக்கும். புதிதாக இப்போது கடன் எதையும் பெற வேண்டாம். பங்கு வர்த்தகத் தொழில் செய்பவர்கள் அதிக முதலீடுகளை செய்ய வேண்டாம். ஆனாலும் ஓரளவு லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு பெரிய பிரச்சினைகள் ஏதும் இருக்காது, ஓரளவு லாபம் கிடைக்க கூடிய அளவிலேயே இருக்கும்.
பெண்களுக்கு -
குடும்ப பிரச்சினை ஓரளவு தீரும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். சொத்து சம்பந்தமான விஷயங்களில் நீங்கள் விட்டுக் கொடுத்தால், உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். சகோதரர்களுடன் ஏற்பட்ட மனவருத்தங்கள் நீங்குவதற்கு வாய்ப்பு உண்டு.
மாணவர்களுக்கு -
கல்வியில் அதிக கவனம் தேவை, கவனச்சிதறல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள், ஆனாலும் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைக்கும்.
கலைஞர்களுக்கு -
பேச்சுவார்த்தைகள் நீண்டுகொண்டே போகும். ஒருசில ஒப்பந்தங்கள் ஏற்படும். தனவரவு கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். நண்பர் ஒருவரால் ஏமாற்றம் அடைவீர்கள்.
பொதுப்பலன் -
தேவைகளை சுருக்கிக் கொள்ளுங்கள். அதிகமாக ஆசைப்படவேண்டாம். வரவுக்கு ஏற்ற மாதிரியான செலவுகளை வைத்துக்கொள்ளவேண்டும். பணத்தேவைகள் எப்படியும் பூர்த்தியாகிவிடும். எனவே பொருளாதாரக் கஷ்டம் வருவதற்கு வாய்ப்பில்லை. ஒரு சில விஷயங்களில் விட்டுக் கொடுத்து சென்றால் நன்மைகள் கிடைக்கும்.
இந்த வாரம் -
திங்கள் - நன்மைகள் ஏற்படும் வியாபார பேச்சுக்கள் சாதகமாக இருக்கும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். மனதை வருத்திய ஒரு கடனை அடைப்பதற்கு முயற்சி எடுப்பீர்கள்.
செவ்வாய் -அலைச்சல்கள் அதிகரிக்கும். பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பேச்சு வார்த்தைகளை தள்ளி வையுங்கள்.
புதன் - எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரப் பேச்சுக்கள் வெற்றியாகும். வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றியாகும். வேலைவாய்ப்பு கிடைக்கும்.
வியாழன் - பயணங்களால் ஆதாயம் ஏற்படும், வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும், லாபகரமான விஷயங்கள் நடைபெறும், பணத்தேவைகள் பூர்த்தியாகும்.
வெள்ளி - குடும்பத்தினருக்காக ஒரு சில நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். திருமணப் பேச்சு வார்த்தைகள் நல்லபடியாக முடியும். நீண்ட நாளாக வராமலிருந்த ஒருதொகை இன்று கிடைக்கும்.
சனி - எடுத்த முயற்சிகள் அனைத்தும் முழு வெற்றியைத் தரும். நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு நல்ல தகவல் இன்று கிடைக்கும். இளைய சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும்.
ஞாயிறு - அமைதியாக இருப்பது நல்லது, வீண் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். அடுத்தவர் விஷயங்களில் கருத்து கூற வேண்டாம். அக்கம்பக்கத்தினருடன் அனுசரித்துச் செல்வது நல்லது.
வணங்க வேண்டிய தெய்வம் -
எல்லை தெய்வங்களான அய்யனார், முனீஸ்வரன் போன்ற காவல் தெய்வங்களை வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும். தடைகள் அகலும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
*****************************************************************
கேட்டை -
எடுக்கின்ற முயற்சிகளில் ஓரளவு வெற்றி கிடைக்கும். ஒரு சில விஷயங்கள் தள்ளிப்போகும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். வீண் பிரச்சினைகள் வரும். ஆனாலும் அதில் இருந்து எளிதாக தப்பித்து விடுவீர்கள். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் அதிகமாகும். கணவன்-மனைவிக்குள் தேவையில்லாத சண்டை சச்சரவுகள் ஏற்படும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. சகோதரர்களிடம் சமாதானமாகச் செல்ல வேண்டும். உயரதிகாரிகளிடம் தேவையில்லாத விஷயங்களில் பிரச்சினைகள் செய்ய வேண்டாம்.
உத்தியோகம் -
பணியிடத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். வேறு வேலைக்கு வரலாமா என்கிற சிந்தனை உருவாகும். பொறுமையாக இருப்பது நல்லது. சக ஊழியர்களிடமும், உயர் அதிகாரிகளிடமும் பொறுமையைக் கடைபிடிப்பது அவசியம். கடைகள் வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் பணத்தைக் கையாளும் போதும், அல்லது பொருட்களைக் கையாளும்போதும் கவனமாக இருக்க வேண்டும். சேவை சார்ந்த வேலை செய்பவர்கள் வேலையில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும்.
தொழில் -
தொழில் ஓரளவுக்கு நல்ல நிலைமையில் இருக்கும். புதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம். அதிக முதலீடுகளைச் செய்ய வேண்டாம். புதிதாக கடன் எதுவும் பெற வேண்டாம்.
பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்கள் அதிக முதலீடுகளைச் செய்ய வேண்டாம். ஓரளவுக்கு லாபம் வரும் முதலீடுகள் மட்டும் செய்யுங்கள். ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு பேச்சுவார்த்தைகள் நீண்டுகொண்டே போகும். வியாபாரிகள் ஓரளவு வளர்ச்சி காண்பார்கள்.
பெண்களுக்கு -
தேவையில்லாத பிரச்சினைகளை பெரிதுபடுத்திக் கொண்டு இருக்க வேண்டாம். உறவினர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும் வேண்டும். கவனமாகவும் பேச வேண்டும். கடன் பிரச்சினைகள் ஓரளவு தீரும். சகோதரர்களிடம் சமாதானமாகச் செல்லுங்கள்.
மாணவர்களுக்கு -
ஞாபக மறதி அதிகமாகும். கல்வியில் ஈடுபாடு குறையும். சக மாணவர்களோடு வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
கலைஞர்களுக்கு -
இன்னும் ஒரு சில வாரங்களில் நிலைமை மாறும். அதுவரை பொறுமையாக இருக்க வேண்டும். பேச்சுவார்த்தைகள் நீண்டுகொண்டே போகும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். பெரிய எதிர்பார்ப்பை வைத்திருந்த ஒரு நபர் ஏமாற்றம் தருவார்.
பொதுப்பலன் -
பொறுமையாக இருந்து காரியங்களை சாதித்துக் கொள்ள வேண்டும். அவசரப்பட்டால் எதுவும் நடக்காது. ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தொடர் சிகிச்சைகள் எடுத்துக் கொள்பவர்கள் நேரத்திற்கு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். வீண் செலவுகளை தவிர்க்க வேண்டும். ஆடம்பர விஷயங்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
இந்த வாரம் -
திங்கள் - அலைச்சல் அதிகமாக இருக்கும். பயணங்கள் ஏற்படும். ஒரு சில தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்.
செவ்வாய் - லாபகரமான பேச்சுவார்த்தைகள் நடக்கும். ஒப்பந்தங்கள் ஏற்படும். வங்கிக் கடன் கிடைக்க வாய்ப்பு உண்டு.
புதன் - தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். அலுவலகத்திலோ - பொது இடத்திலோ உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டாம். சமூக வலைதளங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
வியாழன் - எதிர்பார்த்த பெரிய உதவி ஒன்று கிடைக்கும். வியாபாரப் பேச்சுக்கள் சுமூகமாக முடியும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும்.
வெள்ளி - பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வாகனப் பழுது ஏற்படும். வீட்டுச் செலவுகள் அதிகமாகும்.
சனி - உங்கள் உடல் நலம் சார்ந்து ஒரு சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு முயற்சி எடுப்பீர்கள். மனதில் இனம் புரியாத பயம் வரும்.
ஞாயிறு - எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். வியாபார முயற்சிகள் சுமூகமாக முடியும். எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
சித்தர்கள் ஜீவ சமாதிக்கு சென்று வாருங்கள். அங்கு அமைதியாக தியானம் செய்யுங்கள். பிரச்சினைகள் குறையும். நன்மைகள் அதிகமாகும். மனதில் தெளிவு பிறக்கும்.
*******************************************************
மூலம் -
முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதையும் போராடித்தான் வெல்வீர்கள். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும். அதை எல்லாம் சமாளிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வரும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. செலவுகள் அதிகமாக ஏற்படும். பணம் எப்படி செலவாகிறது என்று தெரியாது. நிதானமாகவும், பொறுமையாகவும் சிந்தித்து செயல்பட்டால் செலவுகளைக் குறைக்க முடியும். வேலைக்காக வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றி ஆகும். தேவைகள் அதிகமாக இருப்பதால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
உத்தியோகம் -
வேலையில் அழுத்தங்கள் அதிகமாக இருக்கும். வேலையை விட்டு விலக வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். வேறு நிறுவனங்களுக்கு மாறுவது அல்லது அதற்கான முயற்சிகளை எடுக்கலாம். அலுவலகத்தில் சக ஊழியர்கள் கூட உங்களுக்கு உதவ மாட்டார்கள். இந்த நிலை இன்னும் சில வாரங்கள் நீடிக்கும். கடைகள் வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வேலையின் அழுத்தம் தாங்காமல் வேலையை விட்டு விலக வேண்டிய சூழ்நிலை உருவாகும். சேவை சார்ந்த வேலை செய்பவர்கள் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காது. உங்கள் வேலைகளை சரியாக திட்டமிட்டால் ஓரளவுக்கு வருமானம் வரும்.
தொழில் -
தொழில் வளர்ச்சி ஓரளவுக்கு சுமாராகவே இருக்கும். செலவுகளை கட்டுப்படுத்த முடியாமல் கடன் வாங்க வேண்டிய நிலை உருவாகும். ஊழியர்களின் ஒத்துழைப்பு குறையும். கூட்டாளிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பொறுமையாகக் கையாள்வது நல்லது.
எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். அரசு நெருக்கடி சற்று குறையும். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்கள் நிதானமாக முதலீடுகளைச் செய்ய வேண்டும். வியாபாரிகளுக்கு ஓரளவுக்கு வளர்ச்சி இருக்கும். கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
பெண்களுக்கு -
திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு ஒருவித குழப்ப நிலை இருக்கும். பதவி உயர்வு உள்ளிட்டவை தாமதமாகும். குடும்ப பிரச்சினைகளை நினைத்து கவலை அதிகமாகும்.
மாணவர்களுக்கு -
கல்வியில் ஆர்வம் குறையும். ஒருவித சலிப்பு தோன்றும். பாடங்களில் கவனம் செலுத்த முடியாத நிலை இருக்கும். மனதை ஒருநிலைப்படுத்த கற்றுக்கொள்ளுங்கள்.
கலைஞர்களுக்கு -
எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். பேச்சுவார்த்தைகள் நீண்டுகொண்டே போகும். எதிர்பார்த்த பணவரவு தள்ளிப்போகலாம். அரசு நலத்திட்ட உதவிகள் கிடைக்கும்.
பொதுப்பலன் -
பொறுமையும் நிதானமும் அவசியம். ஆரோக்கியத்தில் பாதிப்புகள் வரும். சரியான மருத்துவ சிகிச்சை மேற்கொண்டால் பெரிய அளவிற்கு பாதிப்பு ஏற்படாது. வீண் விரயங்களை கட்டுப்படுத்த கற்றுக்கொள்ளுங்கள். அனாவசிய செலவுகளைக் குறையுங்கள். சேமிப்பின் முக்கியத்துவத்தை இப்போது நீங்கள் உணர்வீர்கள். உணர்ச்சிவசப்படாமல் இருப்பதும், கோபப்படாமல் இருப்பது நல்ல பலன்களைத் தரும்.
இந்த வாரம் -
திங்கள் - எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வீடு மனை போன்ற வியாபார பேச்சுக்கள் வெற்றிகரமாக நடக்கும்.
செவ்வாய் - அலைச்சல்கள் அதிகரிக்கும். மற்றவர்கள் வேலையை நீங்கள் செய்ய வேண்டியது வரும். வரவும் செலவும் சமமாக இருக்கும்.
புதன் - வியாபாரப் பேச்சுக்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். அலுவலக வேலைகள் எளிதாக முடிப்பீர்கள். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். ஆரோக்கியப் பிரச்சினை தீரும்.
வியாழன் - பயணங்கள் அதிகரிக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும். பேச்சுவார்த்தைகள் தள்ளிப்போகும். ஒப்பந்தங்களில் திருப்தியற்ற நிலை உருவாகும்.
வெள்ளி - எதிர்பார்த்த பணம் கிடைக்கும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் வெற்றி ஆகும். சகோதரரால் ஆதாயம் கிடைக்கும்.
சனி - வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் இன்று பேசித் தீர்க்கப்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
ஞாயிறு - எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சூட்டி வணங்குங்கள். பிரச்சினைகள் குறையும். மனதில்நம்பிக்கை பிறக்கும். எதிர்ப்புகள் காணாமல் போகும்.
****************************************************************
பூராடம் -
குழப்ப நிலையில் இருந்து இப்போது மெல்ல வெளியே வருவீர்கள். உங்கள் மனதில் இப்பொழுது தெளிவு பிறக்கும். செய்ய வேண்டிய விஷயங்கள் அனைத்தையும் சரியாக திட்டமிட்டுக் கொள்வீர்கள். செலவுகள் அதிகமாக இருந்தாலும் வரவு திருப்தியாக இருப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கும். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் படிப்படியாக தீரும். கணவன்-மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை மேலோங்கும். விவாகரத்து வரை சென்று தம்பதிகள் வழக்குகளை வாபஸ் பெற்று மீண்டும் இணைவார்கள்.
உத்தியோகம் -
வேலையில் இதுவரை இருந்த அழுத்தங்கள் இனி இருக்காது. முடிக்காமல் வைத்திருந்த வேலைகளை எல்லாம் இப்போது செய்து முடிப்பீர்கள். வெளிநாட்டில் வேலை தேடும் முயற்சி வெற்றியாகும். சக ஊழியர்களுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் அகலும். சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு அலைச்சல் அதிகமாக இருக்கும். ஆனாலும் ஆதாயம் நன்றாகவே இருக்கும். சிறு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வேறு நல்ல நிறுவனத்திற்கு மாறுவார்கள்.
தொழில் -
தொழிலில் இதுவரை இருந்த பிரச்சினைகள் தீரும். உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பெரிய கடன் ஒன்று இந்த வாரம் கிடைக்கும். தொழில் சார்ந்து எடுக்கின்ற முயற்சிகள் வெற்றியாகும். புதிதாக தொழில் முனைவோருக்கு அதற்கான வாய்ப்புகள் இந்த வாரம் கிடைக்கும். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு நஷ்டத்திலிருந்து லாபத்திற்கு செல்வார்கள். வியாபாரிகளுக்கு கடன் பிரச்சினைகள் தீர்ந்து வியாபாரம் செழிக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும், தேங்கி நின்ற பொருட்கள் விற்பனையாகும்.
பெண்களுக்கு -
குடும்ப பிரச்சினைகள் தீரும். கடன்களிலிருந்து விடுபட உதவிகள் கிடைக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். வேலை இல்லாத பெண்களுக்கு இப்பொழுது நல்ல வேலை கிடைக்கும்.
மாணவர்களுக்கு -
கல்வியில் இருந்த மந்தநிலை மாறும். கல்வியில் ஆர்வம் ஏற்படும். உயர் கல்விக்கான முயற்சிகளில் இறங்குவீர்கள்.
கலைஞர்களுக்கு -
ஏமாற்றம் தந்து கொண்டிருந்த பேச்சுவார்த்தைகள் இப்போது உங்களுக்கு சாதகமாக மாறும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.
பொதுபலன் -
கடந்த காலங்களில் நடந்த படிப்பினைகள் நல்ல பாடம் கற்றுக் கொண்டிருப்பீர்கள். இனி, சேமிப்புகள் செய்ய முற்படுவீர்கள். உங்கள் பணிகளைச் சரியாக திட்டமிட்டுக் கொள்வீர்கள். ஏமாற்றுக்காரர்கள் அடையாளம் கண்டு விலகி வைப்பீர்கள். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். வீண் விரயங்கள் குறையும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும். எதிர்பார்த்த வங்கிக் கடன் இப்போது கிடைக்கும்.
இந்த வாரம் -
திங்கள் - மதியத்திற்குப் பிறகு நல்ல பலன்கள் நடக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும்.
செவ்வாய் - நிலம், வீடு சம்பந்தப்பட்ட வியாபாரம் வெற்றியாக முடியும். முக்கிய நபரை சந்தித்து ஆதாயமடைவீர்கள். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினை தீரும். தாய்வழி உறவுகளால் நன்மைகள் நடக்கும்.
புதன் - பயணங்கள் ஏற்படும். உங்களுக்கு உதவி செய்த ஒருவருக்கு நீங்கள் உதவி செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
வியாழன் - பெரிய கடன் ஒன்றை அடைக்க உதவிகள் கிடைக்கும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் வெற்றியாகும். தொழில் விஷயமாக ஒப்பந்தம் ஏற்படும்.
வெள்ளி - தேவையற்ற பயணங்கள் ஏற்படும். செலவுகள் அதிகமாக இருக்கும். வீட்டு பராமரிப்புச் செலவுகள் கூடும். வாகனச் செலவும் ஏற்படும்.
சனி - வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியாகும். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். லாபம் தரும் வியாபாரம் ஒன்று ஏற்படும்.
ஞாயிறு - குடும்பப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வீட்டிற்குத் தேவையானப் பொருட்களை வாங்குவீர்கள். எதிர்பாராத லாபம் கிடைக்கும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ வாராஹி அம்மனை வழிபடுங்கள். ஸ்ரீ வாராஹி மூல மந்திரத்தை பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். செலவுகள் குறையும். முயற்சிகள் வெற்றியாகும்.
***********************************************************************
உத்திராடம் -
நல்ல பலன்கள் நடக்கும் வாரம். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆதாயம் தரும் விஷயங்களாகவே நடக்கும். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் தீரும். மருத்துவச் செலவுகள் குறையும். நீண்ட நாள் நோயிலிருந்து விடுபடுவீர்கள். கடன்கள் முழுவதுமாக அடைய வழி கிடைக்கும். சொத்துச் சேர்க்கை ஏற்படும். புதிதாக தொழில் தொடங்கும் சிந்தனை உருவாகும். அதற்கான முதலீடுகளைப் பெறுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் உறுதியாகும்.
உத்தியோகம் -
வேலையில் இருந்த அழுத்தங்கள் முற்றிலுமாக விலகும். தாமதப்பட்டுக் கொண்டிருந்த பதவி உயர்வு கிடைக்கும், கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். அரசு ஊழியராக இருந்தால் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை கிடைக்கும். அலுவலகத்தில் இருந்து வரவேண்டிய நிலுவைத் தொகை கிடைக்கும். அலுவலகத்தில் வாங்கியிருந்த கடனை அடைப்பீர்கள். கல்வி நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் ஏற்படும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சியும் வெற்றியாகும். வெளிநாட்டில் எதிர்பார்த்த வேலை கிடைக்கும். சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு ஆதாயம் அதிகமாக இருக்கும். விற்பனைப் பிரதிநிதிகளுக்கு அலைச்சல் குறைந்து ஆதாயங்கள் அதிகமாகும்.
தொழில் -
நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த தொழிலுக்கான ஒரு உதவி இந்த வாரம் கிடைக்கும். கூட்டாளிகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி ஆகும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் அபரிமிதமான லாபம் ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் உண்டாகும். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்கள் ஆதாயம் அதிகமாகப் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு வரவேண்டிய பாக்கிகள் அனைத்தும் வசூலாகும். தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். புதிய ஏஜென்சி வாய்ப்பு கிடைக்கும்.
பெண்களுக்கு -
குடும்ப பிரச்சினைகள் தீரும். சொத்துச் சேர்க்கை ஏற்படும். கடன் பிரச்சினைகள் தீரும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். இதுவரை குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். தந்தை வழியில் இருந்து சொத்துக்கள் சேரும்.
மாணவர்களுக்கு -
வெளிநாடு சென்று கல்வி கற்கும் ஆர்வம் ஏற்படும். அதற்கான முயற்சிகளில் இறங்குவீர்கள். அதற்குத் தேவையான உதவிகள் கிடைக்கும்.
கலைஞர்களுக்கு -
மனதை வாட்டிக் கொண்டிருந்த பிரச்சினை விலகும். உங்கள் திறமைக்கு இப்பொழுது ஒரு அங்கீகாரம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும்.
பொதுப்பலன் -
பிரச்சினைகளிலிருந்து இப்பொழுது பாடம் கற்றுக் கொண்டிருப்பீர்கள். இனி சேமிப்புகளை அதிகப்படுத்துவது நடக்கும். ஏற்கனவே வாங்கியிருந்த கடனை முழுவதுமாக அடைப்பீர்கள். இது அடுத்த அடுத்த சில வாரங்களில் நடக்கும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முற்றிலுமாக நீங்கும். தாயாரின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தந்தைவழி உறவுகளிடம் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சுமூகமாக முடியும். வழக்கு ஏதேனும் இருந்தால் வாபஸ் பெறப்படும்.
இந்த வாரம் -
திங்கள் - திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் முழுமையாக நிறைவேறும். எதிர்பார்த்த பணவரவுகள் தாராளமாக இருக்கும். நாலாவிதமான ஒப்பந்தங்கள் ஏற்படும். ஆதாயம் இருமடங்காக இருக்கும்.
செவ்வாய் - பயணங்களால் லாபம் ஏற்படும். நீண்ட நாளாக வாங்க நினைத்த ஒரு பொருளை இன்று வாங்குவீர்கள். வங்கியில் இருந்த ஒரு சில பிரச்சினைகள் தீரும்.
புதன் - வியாபாரப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். ஒப்பந்தங்களும் ஏற்படும். மிகப்பெரிய லாபம் கிடைக்கும். தாயாரின் உடல் நலம் சீராகும்.
வியாழன் - உறவினர்கள் அல்லது நண்பர்கள் உங்களிடம் உதவி கேட்டு வருவார்கள். நீங்களும் உங்களால் முடிந்த உதவிகளை செய்து கொடுப்பீர்கள்.
வெள்ளி - முக்கியக் கடனை அடைக்க வழி கிடைக்கும். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். அதற்கான வங்கிக்கடன் இன்று கிடைக்கும்.
சனி - வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். முக்கிய சந்திப்புகள் நடைபெறும். பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாகவே இருக்கும். ஆதாயம் தரும் ஒப்பந்தம் ஏற்படும்.
ஞாயிறு - முடியாமல் இருந்த ஒரு சில வேலைகளை இன்று வெற்றிகரமாக முடிப்பீர்கள். ஆதாயம் இருமடங்காக இருக்கும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் முழு வெற்றியைத் தரும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும்.
வணங்கவேண்டிய தெய்வம் -
ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயாருக்கு வெண்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும். உங்கள் எண்ணங்கள் நிறைவேறும்.
*************************************************************************************************************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago