- ஜோதிடர் ஜெயம் சரவணன்
பூரம் -
எடுக்கின்ற முயற்சிகள் எதுவும் தொய்வில்லாமல் நடக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது விற்பது போன்ற விஷயங்கள் எளிதாக முடியும். அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இந்த வாரம் முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்ப உறுப்பினர்களில் யாருக்காவது திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. மனதை வாட்டிக் கொண்டிருந்த கடன் பிரச்சினையில் ஒரு பகுதியை அடைக்க வழி கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து உங்களுக்கு நல்ல தகவல் ஒன்று வந்து சேரும்.
உத்தியோகம் -
வேலையில் பெரிய மாறுதல்கள் எதுவும் இல்லை. பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. விரும்பிய இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சக ஊழியர்களுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் அகலும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அரசு ஊழியராக இருந்தால் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். வணிக நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வேறு நல்ல நிறுவனத்திற்கு மாறுவார்கள். சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு பண வரவு அதிகமாக இருக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவார்கள். விற்பனைப் பிரதிநிதிகளுக்கு அலைச்சல் குறைந்து, ஆதாயம் அதிகமாக கிடைக்கும்.
தொழில் -
தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இதுவரை இருந்த தடைகள் தாமதங்கள் அகலும். தொழிலை விரிவுபடுத்துவதற்கு எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.
ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். பங்கு வர்த்தக துறையில் இருப்பவர்களுக்கு லாபம் இரு மடங்காக இருக்கும். வியாபாரிகள் நல்ல வளர்ச்சி காண்பார்கள். உணவகத் தொழில் செய்பவர்கள் கிளைகள் ஆரம்பிக்கவும் வழி உண்டாகும். ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழிலில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்த தேக்க நிலைகள் மாறி வியாபாரம் விருத்தியாகும்.
பெண்களுக்கு -
சகோதரர்களிடம் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் தீரும். சொத்து சேர்க்கை ஏற்படும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும், திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு இப்போது தொழில் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு.
மாணவர்களுக்கு -
கல்வியில் ஏற்பட்டிருந்த ஒரு சில பின்னடைவுகள் இப்பொழுது சரியாகும், தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். சக மாணவர்கள் உதவியுடன் சாதனைகளைப் படைப்பீர்கள்.
கலைஞர்களுக்கு -
இசைத் துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டு. திரைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். லாபகரமான ஒப்பந்தம் ஒன்று ஏற்படும். சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு இருக்கிறது.
பொதுப்பலன் -
ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் அனைத்தும் விலகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சொந்த வீடு வாங்கும் கனவு இப்போது நனவாகும். சேமிப்புகள் உயரும். அசையா சொத்து உள்ளிட்டவை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். சொந்தத் தொழில் ஆரம்பிக்கும் முயற்சி வெற்றியாகும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.
இந்த வாரம் -
திங்கள் - மதியம் வரை அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். மதியத்திற்குப் பிறகு எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி ஆகும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
செவ்வாய் - நிலம், வீடு சம்பந்தப்பட்ட வியாபாரப் பேச்சுவார்த்தைகள் முடிவடையும். நீண்ட நாளாக வராத ஒரு பணம் இன்று கிடைக்கும். சொந்த வீடு வாங்கும் முயற்சி வெற்றி அடையும். தொழிலுக்கு வேண்டிய பண உதவி கிடைக்கும்.
புதன் - பயணங்கள் ஏற்படும். பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். உடலில் அசதி தோன்றும். ஒரு சில செயல்களை நீங்களே தாமதம் ஆக்கிக் கொள்வீர்கள்.
வியாழன் - ஒரு பெரிய கடனில் ஒரு பகுதியையாவது இன்று அடைக்க முற்படுவீர்கள், அலுவலகத்தில் நீண்ட நாளாக முடியாமல் இருந்த வேலையை இன்று செய்து முடிப்பீர்கள்.
வெள்ளி - வீண் அலைச்சல்கள் ஏற்படும். விரக்தியான மனநிலை தோன்றும். ஒன்றுமில்லாத விஷயத்திற்கு கூட கோபப்படுவீர்கள்.
சனி - எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் கிடைக்கும்.
ஞாயிறு - தொழில் அல்லது வியாபார விஷயமாக, அல்லது அலுவல் சார்ந்த விஷயமாக, வெளியூர் பயணம் ஏற்படும். முக்கியமான நபரை சந்திப்பீர்கள். மன மகிழ்ச்சியை உண்டாக்கும் வகையில் இந்த நாள் அமையும்.
வணங்கவேண்டிய தெய்வம் -
மகாலட்சுமி தாயாரை வணங்குங்கள். மணம் மிகுந்த மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள். நினைத்தது நடக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.
**********************************************************
உத்திரம் -
எந்தப் பிரச்சினைகளும் இல்லாமல் மிக எளிதாக இந்த வாரத்தை கடந்து விடுவீர்கள். உடல் உழைப்பு அதிகமாக இருக்கும். அலைச்சலும் அதிகமாக இருக்கும். ஆனாலும் அதற்கு தக்க ஆதாயங்களைப் பெறுவீர்கள். தேவையான உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். நிலம் வீடு சம்பந்தப்பட்ட வியாபாரங்கள் சிறப்பாக இருக்கும். கடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஓரளவுக்குத் தீரும். சொத்துக்கள் விற்பது, வீடு விற்பது போன்ற விஷயங்கள் நல்ல முடிவுக்கு வரும். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் அனைத்தும் தீரும். சொத்து சம்பந்தமாக சகோதரர்களிடம் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும்.
உத்தியோகம் -
வேலையில் பெரிய அழுத்தங்கள் இருக்காது, ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம். பதவி உயர்வு எதிர்பார்த்தவர்களுக்கு தள்ளிப் போகலாம், தற்காலிக பணி செய்து கொண்டிருந்தவர்களுக்கு இப்பொழுது பணி நிரந்தரம் ஆகும். வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு பணிநீட்டிப்பு கிடைக்கும். கடைகள் வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும். சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு வருமானம் தாராளமாக இருக்கும்.
தொழில் -
தொழிலில் இதுவரை இருந்து வந்த மந்தநிலை மாறும். தொழிலை விரிவுபடுத்தும் உங்கள் எண்ணத்திற்கு தக்க உதவிகள் கிடைக்கும். உங்களோடு கூட்டு சேர ஒருசிலர் முன்வருவார்கள். வெளிநாடு தொடர்புடைய தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல வளர்ச்சி, முன்னேற்றம், புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பது போன்றவை நடக்கும். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்த பின்னடைவு நீங்கி லாபம் அதிகமாகும். வியாபாரிகள் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். கேட்டரிங் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு நிறைய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
பெண்களுக்கு - சொத்து சம்பந்தமான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாகும். உங்கள் சகோதரர் அல்லது சகோதரிக்கு இப்பொழுது திருமணம் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. சொந்த வீடு வாங்கும் கனவு இப்பொழுது நனவாகும். கடன் பிரச்சினைகள் தீரும். ஆபரணங்கள், வாகனங்கள் வாங்கும் யோகம் ஏற்படும்.
மாணவர்களுக்கு -
கல்வியில் இருந்த ஒரு சில தடைகள் இப்பொழுது நீங்கும். கல்வியில் ஆர்வம் ஏற்படும். உயர் கல்வி பயில்பவர்கள் இப்போது தேர்வு ஏதும் எழுதி இருந்தால் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். உயர்கல்விக்கான முயற்சி வெற்றியாகும். தாமதப்பட்டுக் கொண்டிருந்த கல்விக்கான வங்கிக்கடன் இப்போது கிடைக்கும்.
கலைஞர்களுக்கு -
திரைத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல ஒப்பந்தங்கள் ஏற்படும். எதிர்பாராத அளவுக்கு பண வருவாய் இருக்கும். வெளிநாடு செல்லும் யோகமும் ஏற்படும். நண்பர்களால் பலவித உதவிகள் கிடைக்கும்.
பொதுப்பலன் -
தொழில், உத்தியோகம், வியாபாரம் அனைத்தும் சிறப்பாகவே இருக்கின்றன. ஆரோக்கியத்தில் மட்டும் அவ்வப்போது சில பிரச்சினைகள் வரும். ஆனால் பெரிய பாதிப்புகள் ஏதும் இருக்காது. தாயாரின் உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும். அதேபோல் தந்தையின் உடல்நலத்தில் ஒரு சில பாதிப்புகள் ஏற்படலாம், எனவே மருத்துவச் செலவுகள் மட்டும் அதிகமாக இருக்கும்.
இந்த வாரம் -
திங்கள் - திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடியே நடக்கும். சிறிய அளவிலான முயற்சியிலேயே பெரிய அளவிலான வேலைகள் முடியும். பலவிதமான வருமானங்கள் வரும்.
செவ்வாய் - அலைச்சல் அதிகரிக்கும். தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். அலுவலகத்தில் சக ஊழியர்களோடு அனுசரித்துச் செல்லவேண்டும். அக்கம்பக்கத்தினருடன் வீண் பிரச்சினைகளைச் செய்ய வேண்டாம்.
புதன் - ஆதாயம் தரும் ஒப்பந்தங்கள் ஏற்படும். வியாபார முயற்சிகள் வெற்றியாகும். தொழிலுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த கடன் கிடைக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.
வியாழன் - தேவையற்ற பயணங்கள் ஏற்படும். சந்திக்க வேண்டிய நபர்களை சந்திக்க முடியாமல் தள்ளிப்போகும். ஒருசில பேச்சுவார்த்தைகள் முடிவடையாமல் மேலும் காலம் தள்ளிப் போகும்.
வெள்ளி - எதிர்பாராத அளவுக்கு நன்மைகள் நடக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் மிகப்பெரிய வருமானம் கிடைக்கும். தொழில் ரீதியாக ஒரு சில ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்.
சனி - குடும்பத்தினருக்காக செலவுகள் அதிகமாக செய்ய வேண்டியது இருக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். நண்பர்களால் செலவு ஏற்படும். மற்றவர் விஷயங்களில் தலையிட்டு தேவையில்லாத பிரச்சினைகள் வந்து சேரும்.
ஞாயிறு - வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் வரும். வியாபார விஷயமாக வெளியூர் செல்ல வேண்டியது வரும். முக்கியமான பேச்சுவார்த்தைகளில் இன்று திருப்புமுனையாக, ஒப்பந்தங்கள் ஏற்படும். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
லட்சுமி குபேரர் வழிபாடு சிறப்பான பலன்களைத் தரும். நன்மைகளை அதிகரித்துத் தரும், தேவைகள் பூர்த்தியாகும்.
*******************************************************
ஹஸ்தம் -
தேவையான உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபார முயற்சிகள் வெற்றிகரமாக முடிந்து, லாபம் கிடைக்கும். வெளிநாடு செல்லும் முயற்சியில் முழு வெற்றியைத் தரும். சொத்து சம்பந்தமான விஷயங்களில் ஆதாயம் கிடைக்கும். தாய்வழி உறவுகளிடம் தேவையில்லாத மன வருத்தங்கள் ஏற்படும்.
உத்தியோகம் -
பணியிடத்தில் பெரிய மாறுதல் ஏதும் இருக்காது. சகஜமான நிலையே நீடிக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி வெற்றி ஆகும். வெளிநாடு தொடர்புடைய நிறுவனங்களில் வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. அரசு வேலை எதிர்பார்த்தவர்களுக்கு இப்பொழுது அரசு வேலை கிடைக்கும். தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். ஒருசிலருக்கு பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு வருமானம் இரட்டிப்பாக இருக்கும், உங்கள் வேலை சார்ந்த வாகனத்தை மாற்றுவீர்கள்.
தொழில் -
தொழிலில் நல்ல முன்னேற்றம், வளர்ச்சி ஏற்படும். தொழில் தொடர்பான முதலீடுகளை அதிகம் செய்வீர்கள். புதிய தொழில் தொடங்கவோ அல்லது வேறு ஒரு நிறுவனத்துடன் இணைந்து தொழில் செய்யவோ வாய்ப்பு உண்டாகும். வெளிநாட்டுத் தொடர்புடைய தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். புதிதாக தொழில் தொடங்கும் எண்ணம் உடையவர்களுக்கு இந்த வாரம், தொழில் தொடங்குவதற்கான அத்தனை உதவிகளும் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்த நினைப்பவர்களுக்கு வங்கிக் கடன் கிடைக்கும். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு வியாபாரம் அற்புதமான வளர்ச்சியை அடையும்.
வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி, லாபம் ஏற்படும்.
பெண்களுக்கு -
திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். வேலை இல்லாத பெண்களுக்கு இப்பொழுது நல்ல வேலை கிடைக்கும். அரசு உத்தியோகம் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. அடகு வைத்த பொருட்களை மீட்க வழி கிடைக்கும்.
மாணவர்களுக்கு -
கல்வியில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். அயல்நாடு சென்று கல்வி கற்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு, இப்பொழுது அந்த வாய்ப்பு கிடைக்கும். உயர்கல்வி மாணவர்களுக்கு எதிர்பாராத அளவுக்கு தேர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும்.
கலைஞர்களுக்கு -
நல்ல ஒப்பந்தங்கள் கிடைக்கும். நீண்ட நாளாக பேசிவந்த பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து ஒப்பந்தம் ஏற்படும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியாகும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
பொதுப்பலன் -
நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பண ஆதாயம் உள்ள வேலைகள் எளிதாக நடக்கும். வியாபார பேச்சுவார்த்தைகள் வெற்றி ஆகும். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். குழந்தைகளின் எதிர்காலத்திற்காக முதலீடுகள் செய்ய வாய்ப்பு உண்டாகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் குறையும். திருமண பேச்சுவார்த்தைகள் சுபமாக முடியும்.
இந்த வாரம் -
திங்கள் - அலுவலக விஷயமாக வெளியூர் செல்ல வேண்டியது வரும். தொழில் செய்துகொண்டிருப்பவராக இருந்தால் தொழில் நிமித்தமாக முக்கிய நபர்களை சந்திக்க வேண்டியது வரும்.
செவ்வாய் - எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் எளிதாக முடியும். எதிர்பார்த்த பணவரவு உடனடியாக கிடைக்கும். நீண்டநாளாக வராத பாக்கிகள் வசூலாகும். பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவடையும். ஒப்பந்தங்கள் ஏற்படும்.
புதன் - அலைச்சல்கள் அதிகரிக்கும். ஒரே வேலையை இரண்டு முறை செய்ய வேண்டியது வரும். ஒரு சில விஷயங்களில் முடிவெடுக்க முடியாமல் திணற வேண்டியது வரும்.
வியாழன் - சொத்து சம்பந்தமான பிரச்சினை சுமூகமாக முடிவடையும். சொந்த வீடு வாங்கும் முயற்சியில் இன்று ஒரு நல்ல தகவல் கிடைக்கும்.
தாயாரின் உடல் நலனில் இருந்த பிரச்சினைகள் அகலும்.
வெள்ளி - அலுவலகத்தில் சக ஊழியரின் வேலையை நீங்கள் செய்ய வேண்டியது வரும். உறவினர்களின் விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். குடும்பத்தினரோடு அதிகமான நேரத்தை செலவிடுவீர்கள்.
சனி - ஒரு முக்கியமான கடனை அடைக்க வழி கிடைக்கும். எதிர்பார்த்த தொழில் சம்பந்தமான உதவி கிடைக்கும். வெளிநாட்டில் இருக்கும் நண்பர்களால் ஒரு சில ஆதாயங்கள் கிடைக்கும்.
ஞாயிறு - வியாபாரப் பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடிவடையும். ஒப்பந்தங்கள் போடுவீர்கள். வருமானம் இரட்டிப்பாக இருக்கும். எடுத்த வேலைகள் அனைத்தையும் சுலபமாக முடித்துக் காட்டுவீர்கள்.
வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ மகா விஷ்ணுவுக்கு துளசி மாலை அணிவித்து, நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள், நன்மைகள் அதிகமாகும், ஆரோக்கிய பிரச்சினைகள் குறையும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.
*****************************************************************
சித்திரை -
வருமானமும் வருமானத்தில் கிடைக்கக்கூடிய லாபங்களும் இருமடங்காக இருக்கும். எதிர்பார்த்த விஷயங்கள் யாவும் மிக எளிதாக நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தினரிடம் ஒற்றுமை பலப்படும். சகோதரிகளிடம் ஏற்பட்ட மன வருத்தங்கள் தீரும். மூத்த சகோதரரால் ஆதாயம் ஏற்படும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். வழக்குகள் ஏதேனும் நடந்து கொண்டிருந்தால் உங்களுக்கு சாதகமாக முடியும். குலதெய்வ வழிபாடு செய்ய முற்படுவீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். ஆனால் தந்தையின் உடல்நலத்தில் ஒரு சில பாதிப்புகள் ஏற்படும். ஆனால் கவலை கொள்ளும் விதமாக இருக்காது.
உத்தியோகம் -
பணியில் பெரிய பிரச்சினைகள், மாறுதல்கள் ஏதும் இல்லை. சகஜமான நிலையே நீடிக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்களின் கருத்து அலுவலகத்தில் அனைவராலும் ஏற்கப்படும். ஒரு குழுவாக சேர்ந்து வேலைகளைச் செய்வீர்கள். அந்தக் குழுவுக்கு நீங்கள் தலைமையாக இருப்பீர்கள். வியாபார கடைகளில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஏற்படும். அல்லது வேறு பிரபலமான நிறுவனத்திற்கு மாறுவீர்கள். சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகமாவார்கள். லாபம் இரு மடங்காக இருக்கும்.
தொழில் -
தொழில் வளர்ச்சி சீராக இருக்கிறது. வேண்டிய உதவிகள் கிடைக்கும். முதலீடுகள் அதிகம் கிடைக்கப்பெறுவீர்கள். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும், ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு பல்வேறு ஒப்பந்தங்கள் ஏற்படும். புதிதாக தொழில் செய்யும் எண்ணம் உடையவர்களுக்கு, தொழில் செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு லாபம் அதிகமாக இருக்கும். வியாபாரிகள் நல்ல வளர்ச்சி காண்பார்கள். தங்கள் வியாபாரத்தில் கிளைகளை ஆரம்பிக்க முற்படுவீர்கள்.
பெண்களுக்கு -
திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு இப்பொழுது குழந்தை பாக்கியம் உண்டாகும். கல்விக்குத் தகுந்த வேலை இல்லாமல் வருத்தத்தில் இருந்தவர்களுக்கு, இப்பொழுது தகுதிக்கேற்ப நல்ல வேலை கிடைக்கும். ஒரு சிலருக்கு சொத்து வாங்கும் யோகம் உண்டு. சேமிப்பு உயரும் .
மாணவர்களுக்கு -
கல்வியில் அசாத்தியமான முன்னேற்றம் ஏற்படும். பல்வேறு உதவிகள் கிடைக்கும். உயர்கல்வி மாணவர்கள் சாதனை படைப்பார்கள். ஆராய்ச்சி கல்வியில் இருக்கும் மாணவர்கள், தங்கள் ஆய்வுக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கப் பெறுவார்கள்.
கலைஞர்களுக்கு -
உங்கள் திறமைக்குத் தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். ஒப்பந்தங்கள் உண்டாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஒரு மிகப் பெரிய நிறுவனத்திற்காக ஒப்பந்தம் செய்யப் படுவீர்கள்.
பொதுப்பலன் -
சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். வருமானம் பல வழிகளிலும் வரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆதாயம் தரும் வேலைகளாகவே உங்களுக்கு கிடைக்கும். ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கும். மருத்துவச் செலவுகள் குறையும். தாயாரின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும், தந்தைவழி உறவுகளிடம் இருந்த பிரச்சினைகள் தீரும், பாகப்பிரிவினைகள் ஒழுங்காகும். வழக்கு ஏதேனும் இருந்தால் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும்.
இந்த வாரம் -
திங்கள் - தொலைதூரப் பயணம் ஒன்று ஏற்படும். ஆதாயம் தரும் ஒப்பந்தங்கள் ஏற்படும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிந்து ஒப்பந்தங்களை போடுவீர்கள். வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றியாகும்.
செவ்வாய் - கொடுக்கல்வாங்கல் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வங்கியில் ஏற்பட்ட ஒரு சில பிரச்சினைகள் இன்று முடிவுக்கு வரும். ஆதாயம் தரும் வியாபாரப் பேச்சுவார்த்தைகள் முடிவடையும்.
புதன் - திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் கச்சிதமாக முடிவடையும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். வியாபார முயற்சிகள் வெற்றியாகும். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும்,
வியாழன் - தேவையற்ற பிரச்சினைகள் தேடிவரும். புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளுங்கள். மற்றவர்கள் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். அமைதியாக இருப்பதே நல்லது.
வெள்ளி - வீடு வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகளில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும், பயணங்களால் ஆதாயம் உண்டு.
சனி - வாகனச் செலவுகள் ஏற்படும். வீடு பராமரிப்பு தொடர்பான செலவுகளும் உண்டு. தேவையற்ற வீண் பயணம் ஒன்று ஏற்படும். வீண் அரட்டைகளால் நேரம் செலவாகும்.
ஞாயிறு - நீண்டநாளாக முடியாத ஒருவேலை இன்று எளிதாக முடியும். இழுபறியாக இருந்த ஒரு சில விஷயங்கள் இன்று சுமுகமாக முடியும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். ஆதாயம் தரும் ஒப்பந்தங்கள் ஏற்படும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
சிவபெருமானுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து, தீபம் ஏற்றி வழிபடுங்கள், "நமசிவாய' மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருங்கள். நன்மைகள் அதிகமாகும். மனதில் தெளிவு பிறக்கும். எதிரிகள் காணாமல் போவார்கள்.
**********************************************************
சுவாதி -
நீங்கள் எடுக்கின்ற முயற்சிகள் அனைத்திலும் பிரம்மாண்டமான வெற்றியைக் கிடைக்கப் பெறுவீர்கள். எந்த ஒரு வேலையாக இருந்தாலும் சிறிய அளவிலான முயற்சி இருந்தாலே போதும். பெரிய அளவில் வெற்றியை கொடுக்கும். உங்களுடைய கனவுகள் அனைத்தும் இப்பொழுது நனவாகும். சொன்ன சொல்லைக் காப்பாற்றி நல்ல பேர் வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தமான விஷயங்களைத் தவிர, மற்ற அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வேலையில் இருந்து விலகி, சொந்தத் தொழில் முயற்சியில் இறங்குவீர்கள், வீடு வாங்குதல், திருமணம் போன்ற அனைத்தும் உங்களுக்கு முழு நிறைவைத் தரக் கூடிய அளவிலேயே இருக்கும்.
உத்தியோகம் -
எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். ஒருசிலருக்கு டபுள் ப்ரமோஷன் கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு. தொல்லை தந்த சக ஊழியர்கள், உயரதிகாரிகள் அனைவரும் நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தை விட்டு விலகிச் செல்வார்கள். அல்லது இனி உங்களுடைய விஷயத்தில் தலையிட மாட்டார்கள். இப்போது பணிபுரியும் நிறுவனத்தை விட வேறு நல்ல நிறுவனங்களிலிருந்து உங்களுக்கு அழைப்பு வரும். உங்களுக்கு திருப்தியாக இருந்தால் இப்போது வேலையை மாற்றிக் கொள்ளலாம். உங்கள் தகுதியும் திறமையும் இப்பொழுது அடையாளம் காணப்படும். சேவை சார்ந்த வேலை செய்பவர்கள் அடுத்தகட்ட முன்னேற்றத்திற்கு நகர்வார்கள். வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் இதைவிட சிறந்த வேலை கிடைத்து மனநிறைவு கொள்வார்கள். தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட பல சலுகைகள் கிடைக்கும். , உங்களுடைய தனித்துவமான தனித்திறமை அங்கீகரிக்கப்படும்.
தொழில் -
இனி போட்டிகளே இல்லை என்ற நிலை ஏற்படும் தொழிலில் தனிக்காட்டு ராஜாவாக விளங்கப் போகிறீர்கள், புதிய திட்டங்களோடு தொழிலை பிரம்மாண்டமாக மாற்றுவீர்கள். உங்கள் தொழிலோடு இணைந்த புதிய தொழில்களைத் தொடங்குவீர்கள். புதிதாக தொழில் முனைவோர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கிடைக்கும். அற்புதமான வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு அபரிமிதமான லாபம் கிடைக்கும்.
வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை பெரிய அளவில் விரிவாக்கம் செய்வார்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் இருப்பவர்கள் பெருமளவான வியாபாரங்களைச் செய்வார்கள். கட்டுமானத் தொழிலில் இருப்பவர்கள் நல்ல வளர்ச்சி ஏற்படுவதை கண்கூடாக உணர்வார்கள்.
பெண்களுக்கு -
உங்களுடைய தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமணம் உள்ளிட்ட அனைத்து சுபகாரிய விசேஷங்களும் நடக்கும். புத்திரபாக்கியம் உண்டாகும். பதின்ம வயதில் இருக்கும் பெண்கள் பூப்பெய்துவார்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தமான விஷயங்களில் சமரசம் ஏற்படும்.
சொந்த வீடு அமையும். கடன்கள் அனைத்தும் தீரும். ஆரோக்கியப் பிரச்சினைகள் முற்றிலுமாக விலகும்.
மாணவர்களுக்கு -
கல்வியில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். ஞாபக சக்தி அதிகரிக்கும். உயர்கல்வி படிப்பவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று அடுத்த கட்ட கல்விக்கு முயற்சி எடுப்பார்கள். வெளிநாடு சென்று மேற்படிப்பு படிக்க விரும்புபவர்களுக்கு அனைத்து வாய்ப்புகளும் கிடைக்கும்.
கலைஞர்களுக்கு -
உங்களுக்குள் இருக்கும் திறமைகள் வெளிப்படும் நேரம் இது. உங்கள் மீது முழு நம்பிக்கை வைத்து ஒப்பந்தங்கள் போடுவார்கள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். சொத்துக்கள் சேர்ப்பீர்கள், தொடர்ச்சியாக வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டு.
பொதுப்பலன் -
ஒருசில காலகட்டத்தில் மட்டும்தான் கிரகங்களின் அமைப்பு சாதகமாக அமையும், இப்போது அந்த சாதகமான அமைப்பு உங்களுக்கு இருக்கிறது. எனவே உங்கள் தேவைகள் அனைத்தையும் சரியாக பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். எதிர்காலத்திற்குத் தேவையான விஷயங்களை இப்போதே திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். அனைத்தும் சுபமாக இருப்பதால் கவலையின்றி செயல்படுங்கள்.
இந்த வாரம் -
திங்கள் - எதிர்பாராத அளவிற்கு லாபம் தரக்கூடிய வியாபாரங்கள் ஏற்படும். உங்கள் தொழிலுக்கு முதலீடுகள் கிடைக்கும். திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் பேசி முடிக்கப்படும்.
செவ்வாய் - வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு பணி நீட்டிப்பு கிடைக்கும். குடியுரிமை சம்பந்தமான பிரச்சினைகள் தீரும். சொத்து சம்பந்தமான ஒரு சில விஷயங்கள் பேசி முடிப்பீர்கள்.
புதன் - திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடி நடக்கும். எதிர்பாராத பண வரவு உண்டாகும். வியாபாரப் பேச்சுக்கள் வெற்றியாகும். இல்லத்தில் சுப விசேஷ நிகழ்வுகள் நடைபெறும்.
வியாழன் - எடுத்த காரியங்கள் அனைத்தும் முழு வெற்றியைத் தரும். நீண்டநாளாக பேசிவந்த ஒரு வியாபாரப் முயற்சி இன்று முடிவடையும். வெளிநாடு செல்லும் முயற்சியில் வெற்றி ஆகும். தொழில் சம்பந்தமான ஒப்பந்தம் ஒன்று ஏற்படும்.
வெள்ளி - அலைச்சல்கள் அதிகரிக்கும். வீடு வாகனம் போன்றவற்றில் பராமரிப்புச் செலவுகள் ஏற்படும். செலவுகள் அதிகமாக இருக்கும்.
சனி - சிறிய முயற்சியில் கூட பெரிய வெற்றி கிடைக்கும். லாபம் இருமடங்காக இருக்கும். ரியல் எஸ்டேட் போன்ற துறையில் இருப்பவர்களுக்கு வியாபாரப் பேச்சுக்கள் வெற்றிகரமாக முடிவடையும். நீண்ட நாளாக வராமலிருந்த ஒரு பெரும் தொகை இன்று கிடைக்கும்.
ஞாயிறு - ஆலய தரிசனம் ஏற்படும். உங்களுக்கு குருவாக, வழிகாட்டியாக இருந்த ஒருவரை சந்தித்து நேரத்தை செலவிடுவீர்கள். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள்.
வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ ஆதிபராசக்தி அம்மனை வழிபடுங்கள், நன்மைகள் மேலும் அதிகமாகும். மனக்குறைகள் நீங்கும். தேவைகள் பூர்த்தியாகும்.
********************************************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago