இந்த வாரம் இப்படித்தான் - நட்சத்திரப் பலன்கள் : எந்தக் கிழமைகளில் என்னென்ன பலன்கள்?  (டிசம்பர்- 2 முதல் 9 வரை) திருவாதிரை முதல் மகம் வரை

By செய்திப்பிரிவு

- ஜோதிடர் ஜெயம் சரவணன்


திருவாதிரை -
எடுத்த முயற்சிகள் அனைத்தையும் சரியாகத் திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். வாரத் துவக்கத்தில் சில தடுமாற்றங்கள் இருந்தாலும், உங்கள் இலக்கை சரியாக எட்டி விடுவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் தீரும். கணவன்-மனைவிக்குள் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடுகள் அகலும். மன ஒற்றுமை மேலோங்கும். இதுவரை புத்திர பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும்.

உத்தியோகம் -
பணியிடத்தில் பெரிய பாதிப்புகள் ஏதும் இல்லை. எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். முக்கிய தேவைகளுக்காக அலுவலகத்தில் கேட்டிருந்த கடன் இந்த வாரம் கிடைக்கும். சக ஊழியர்களுடன் ஏற்பட்ட மனவருத்தங்கள் அகலும். அரசு ஊழியராக இருந்தால் இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. பதவி உயர்வும் கிடைக்கும்.
சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமும் ஏற்படும். வாடிக்கையாளர்கள் அதிகமாவார்கள். உற்சாகமாகக் வேலை செய்வீர்கள்.
கடைகள், வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு வேறு ஒரு நல்ல நிறுவனங்களுக்கு மாறுவதற்கும், கல்வித்தகுதிக்கு ஏற்ப நல்ல உத்தியோகம் கிடைப்பதற்கும் வாய்ப்புகள் உண்டு.


தொழில் -
தொழிலில் எதிர்பார்த்த அத்தனை உதவிகளும் கிடைக்கும். கூட்டாளிகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். ஒற்றுமை பலப்படும். புதிய நிறுவனங்களை ஆரம்பிப்பதற்கான முயற்சிகளை தொடங்குவீர்கள். வெளிநாட்டு முதலீடுகள் கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. வெளிநாட்டு நிறுவனங்களோடு இணைந்து தொழிலை விரிவுபடுத்தவும் வாய்ப்புகள் உருவாகும். தொழில் போட்டியாளர்கள் போட்டியிலிருந்து விலகுவார்கள்.
பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு இதுவரை ஏற்பட்ட நஷ்டங்களில் இருந்து மீண்டு, லாபத்தை நோக்கி பயணிப்பார்கள்.
ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல வளர்ச்சி ஏற்படும். வியாபாரிகளுக்கு தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்துவது மட்டுமல்லாமல், கிளை தொடங்கும் வாய்ப்பும் உண்டு. தங்கள் வியாபாரக் கடைகளில் அதிக ஆட்களை வேலைக்கு அமர்த்துவது ஏற்படும்.

பெண்களுக்கு -
எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். வெளிநாடு செல்லும் கனவு நனவாகும். குடும்பத்தில் இருந்த குழப்ப நிலைகள் மாறும். அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள்.
மாணவர்களுக்கு -
கல்வியில் இருந்த தடுமாற்றங்கள் நீங்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். பட்டயப் படிப்பு மாணவர்கள் தேவையான உதவிகளை கிடைக்கப் பெறுவீர்கள்.

கலைஞர்களுக்கு -
நீண்ட நாளாக பேசி வந்த பேச்சுவார்த்தைகள் இப்போது ஒப்பந்தமாக மாறும். வெளிநாடு செல்லும் யோகமும் உண்டு. பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பலவிதமான உதவிகள் கிடைக்கும்.

பொதுப் பலன் -
கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். பணவரவு திருப்திகரமாக இருக்கிறது. சேமிப்புகளை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும். இப்பொழுது நீங்கள் சேமிக்கும் சேமிப்பு பிற்காலத்தில் உங்களுக்கு ஒரு முக்கிய காலகட்டத்தில் உதவும். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் எல்லாம் தீரும். அடகு வைத்த பொருட்களை இப்பொழுது மீட்டு எடுப்பீர்கள். வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். புதிதாக தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியாகும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான விஷயங்கள் சுமூகமாக முடியும். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும்.

இந்த வாரம் -
திங்கள் - இன்று சந்திராஷ்டமம். அமைதியாக இந்த நாளை கடத்துங்கள். ஆலயங்களுக்குச் சென்று வாருங்கள். கை பொருட்களை கவனமாக வைத்துக் கொள்ளுங்கள். மறதியால் தொலைந்து போகலாம்.
செவ்வாய் - மதியத்திற்கு பிறகு எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். காலை நேரத்தில் ஏற்பட்ட அலைச்சல்களுக்கு, பிற்பகலில் ஆதாயம் உண்டாகும். பேச்சுவார்த்தைகள் ஒரு முடிவுக்கு வரும்.
புதன் - பயணங்கள் ஏற்படும். இடமாற்றம் ஏற்படும் வாய்ப்பு உண்டு. குடும்பச் செலவுகள் அதிகமாக இருக்கும். மனம் ஒருவித பரபரப்பாக இருக்கும்.
வியாழன் - வியாபாரப் பேச்சுகள் நல்லபடியாக முடியும். தொழிலுக்கு எதிர்பார்த்த ஒரு உதவி இன்று கிடைக்கும். வீடு சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் முடிவடையும். ஒரு முக்கிய நபரை சந்திப்பதால், திருப்புமுனை ஏற்படும்.
வெள்ளி - ஒன்றுமில்லாத விஷயங்களுக்குக் கூட கோபம் ஏற்படும். எனவே கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். உணர்ச்சிவயப்பட்டு பேசுவது தவறு. எதைச் செய்தாலும் ஒருமுறைக்கு இருமுறை நன்றாக யோசித்து செயல்படுங்கள். ஒப்பந்தங்கள் எதுவும் போட வேண்டாம். முக்கிய சந்திப்புகள் ஏதும் இருந்தால் தள்ளி வையுங்கள்.
சனி - வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் பெறுவீர்கள். குடும்பத்தினரோடு வெளியே சென்று வருவீர்கள். எதிர்பார்த்த ஒரு முக்கிய வேலை சுமுகமாக முடியும்.
ஞாயிறு - நண்பர்களுக்காக நேரத்தை செலவிடுவீர்கள். அலைச்சல் அதிகமாக இருக்கும். வாகனச் செலவு, மற்றும் வீடு பராமரிப்புச் செலவுகள் போன்றவை உண்டாகும். சுப விசேஷங்கள் நடைபெறுவதற்கான சூழல் உண்டாகும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
சக்தி வடிவான அம்மன் ஆலயங்களுக்கு சென்று வாருங்கள். ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள். அல்லது கேளுங்கள். நன்மைகள் அதிகமாகும். தெளிவாக சிந்திக்க முடியும். நல்ல முடிவுகள் எடுப்பீர்கள்.

***********************************************************************


புனர்பூசம் -
எண்ணிய காரியங்கள் அனைத்தும் இனிதாக நிறைவேறும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் சுலபமாகமுடியும். வாரத்தின் துவக்க நாளான திங்கள் மற்றும் செவ்வாய் இந்த இரண்டு நாட்களைத் தவிர, மற்ற அனைத்து நாட்களும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வெளிநாடு செல்லும் முயற்சி முழு வெற்றி ஆகும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். சொந்த வீடு வாங்கும் முயற்சி நல்ல விதமாக அமையும். திருமண முயற்சிகள் கைகூடும். மருத்துவச் செலவுகள் குறையும்.

உத்தியோகம் -
பணியிடத்தில் பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லை. எதிர்பார்த்த சலுகைகள் இந்த வாரம் கிடைக்கும். சக ஊழியர்களின் உதவிகள் கிடைக்கும். இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு சிறப்பான வாரமாக இருக்கிறது. கடைகள் வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். இதுவரை வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். அரசு வேலை கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அரசு வேலைக்கான தேர்வுகள் எழுதியிருந்தால் நல்ல மதிப்பெண்கள் கிடைத்து நேர்முகத் தேர்வு நடக்கும். அதில் வெற்றியும் பெறுவீர்கள்.

தொழில் -
தொழிலில் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் இப்பொழுது நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளிநாடு தொடர்புடைய தொழில் வளர்ச்சி பெறும். வெளிநாட்டு ஒப்பந்தங்கள் கிடைத்த ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் அபார வளர்ச்சி ஏற்படும். பங்கு வர்த்தகத் துறையில் எதிர்பாராத அளவுக்கு லாபம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி காண்பார்கள், புதிதாக ஏஜென்சி எடுப்பீர்கள்.
புதிதாக தொழில் தொடங்கும் தொழில் முனைவோர்களுக்கு அந்த வாரம் உதவிகள் கிடைத்து தொழிலை ஆரம்பிக்க வாய்ப்பு உண்டாகும்.

பெண்களுக்கு -
திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். இதுவரை புத்திர பாக்கியம் இல்லாத பெண்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி வீடு அமைதி பெறும். சகோதர வழியில் இருந்த சச்சரவுகள் நீங்கி சமாதானம் ஆகும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சுமூகமாக முடியும். கடன்கள் அடைபடும். உதவிகள் கிடைக்கும்.

மாணவர்களுக்கு -
வெளிநாடு சென்று கல்வி பயிலும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு இப்பொழுது அந்த வாய்ப்பு கிடைக்கும். உயர்கல்வி படிப்பவர்களுக்கு தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். பகுதி நேர வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

கலைஞர்களுக்கு -

அற்புதமான வாய்ப்புகள் கிடைக்கும். ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். சொத்து வாங்கும் யோகம் உண்டு. வெளிநாடு செல்லும் யோகமும் உண்டு.

பொதுப்பலன் -
அயராது உழைத்தால் அற்புதப் பலன்களை காணமுடியும். கிரகங்கள் சாதகமாக இருப்பதால் எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். சொத்துக்கள் வாங்கும் நேரம் இது. கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.

இந்த வாரம் -
திங்கள் - சந்திராஷ்டமம் கவனமாக இருக்க வேண்டும். புதிய பேச்சு வார்த்தைகள் எதுவும் செய்ய வேண்டாம். ஒப்பந்தங்கள் போட வேண்டாம். பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.
செவ்வாய் - இன்றும் சந்திராஷ்டமத்தின் நீட்சி இருக்கிறது, நிதானமாக இருங்கள். பணத்தைக் கையாளும் போது கவனமாக இருக்க வேண்டும். ஞாபகமறதி ஏற்படும்.
புதன் - பயணங்கள் ஏற்படும். பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும். வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும்.
வியாழன் - திட்டமிட்டு வைத்திருந்த விஷயங்கள் அனைத்தும் இன்று திட்டமிட்டபடியே நடக்கும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். லாபம் தரும் ஒப்பந்தங்கள் ஏற்படும். எடுத்துக் கொண்ட அனைத்து காரியங்களிலும் முழு வெற்றியை பெறுவீர்கள்.
வெள்ளி - அலைச்சல் அதிகமாகும். தேவையற்ற சச்சரவுகள் ஏற்படும், பேச்சில் நிதானம் தேவை, முடிவுகள் எடுப்பதை சற்று தள்ளி வையுங்கள்.
சனி - எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றி ஆகும். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் கிடைக்கும்.
ஞாயிறு - நண்பர்களுடன் அல்லது குடும்பத்தினருடன் பயணம் ஒன்று ஏற்படும். பிரசித்திபெற்ற ஆலயங்களுக்குச் சென்று வருவீர்கள். செலவுகள் அதிகமாக இருந்தாலும் மன மகிழ்ச்சி உண்டாகும்.

வணங்கவேண்டிய தெய்வம் -
ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுங்கள், நன்மைகள் அதிகமாகும், எதிர்பார்த்த விஷயங்கள் சுலபமாக முடியும்.

*************************************************************


பூசம் -
உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்ப்புகள் என்பது இருக்காது. எதிரிகள் காணாமல் போவார்கள். அதிக முயற்சி எடுக்காத வேலைகளில் கூட எளிதாக வெற்றி கிடைக்கும். உங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் முடிவடையும். தொழில் அல்லது வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். சேமிப்புகள் உயரும். சொந்த வீடு வாங்குவீர்கள்.

உத்தியோகம் -
வேலையில் பெரிய மாறுதல்கள் ஏதும் இருக்காது. சகஜமான நிலையே இருக்கும். பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. அலுவலகத்தில் உங்களுக்கு தலைமைப் பொறுப்பு, அல்லது குழுவிற்கு தலைமை தாங்குதல் போன்ற கௌரவம் கிடைக்கும். அலுவலக கருத்தரங்கில் உங்கள் கருத்துக்கள் முழுமையாக ஏற்கப்படும், தொல்லை தந்த சக ஊழியர்கள் இடம் மாறிச் செல்வார்கள். சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு நிறைவாக வேலை கிடைத்து வாடிக்கையாளர்களின் அன்பையும், ஆதரவையும் பெறுவார்கள். இதுவரை வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியாகும். வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு பணி நீட்டிப்பு, குடியுரிமை போன்ற நல்ல விஷயங்கள் நடக்கும்.

தொழில் -
தொழிலில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உற்சாகம் தரும் ஒப்பந்தங்களை மேற்கொள்வீர்கள். அரசு வழியில் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் விலகும். போட்டி நிறுவனங்கள் போட்டியிலிருந்து விலகிச்செல்லும். உங்கள் தொழிலோடு இணைந்து புதிய தொழில் செய்ய முற்படுவீர்கள். அந்த முயற்சி வெற்றி ஆகும். வெளிநாட்டு ஒப்பந்தங்கள் ஏற்படும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு லாபம் தரும் ஒப்பந்தங்கள் மேலும் ஏற்படும். பங்கு வர்த்தகத் துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத அளவுக்கு உங்களின் பங்குகள் உயர்வடையும். ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு லாபகரமான வியாபாரங்கள் அமையும். வியாபாரிகளுக்கு நல்ல வளர்ச்சி, முன்னேற்றம் உண்டு. புதிய கிளைகள் தொடங்குவீர்கள்.

பெண்களுக்கு -
திருமண முயற்சிகள் கைகூடும். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். ஆண் வாரிசு எதிர்பார்த்தவர்களுக்கு இப்போது ஆண் குழந்தை பாக்கியம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும், செல்வம் சேரும். சொத்துக்கள் வாங்குவீர்கள்.

மாணவர்களுக்கு -

கல்வியில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். அடுத்த வருட கல்விக்காக இப்பொழுதே உங்களை தயார்படுத்திக் கொள்வீர்கள். வெளிநாட்டில் சென்று கல்வி பயிலும் யோகமும் உண்டு. அரசு உதவிகள், கல்விக் கடன் போன்றவை கிடைக்கும்.

கலைஞர்களுக்கு -
நல்ல ஒப்பந்தங்கள் கிடைக்கும். இசை மற்றும் நாட்டியத் துறை சார்ந்தவர்களுக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. கலைநிகழ்ச்சிகள் நடத்தி பெருமளவில் வருமானம் பெறுவீர்கள். கௌரவப் பட்டங்கள் கிடைக்கும்.

பொதுப்பலன் -
நல்ல பலன்கள் நடக்கின்ற வாரம். சந்திராஷ்டம பாதிப்புகளைத் தவிர மற்ற நாட்கள் அனைத்தும் உங்களுக்கு நன்மை தருவதாக இருக்கும். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். வெளிநாடு செல்லும் முயற்சி முழு வெற்றி தரும். எதிரிகள் காணாமல் போவார்கள். செல்வ வளம் சேரும். சேமிப்புகள் உயரும். ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் அனைத்தும் முற்றிலுமாக விலகும்.
தாய், தந்தையரின் உடல் நலம் திருப்திகரமாக இருக்கும். உறவினர்களால் ஆதாயம் ஏற்படும்.

இந்த வாரம் -
திங்கள் - வாரத்தின் ஆரம்ப நாளே அமர்க்களமாக இருக்கிறது. எதிர்பாராத அளவுக்கு ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர் பார்த்த பணம் கிடைக்கும், ஒரு பெரிய கடனை அடைத்து மனநிம்மதி அடைவீர்கள்.
செவ்வாய் - மதியம்வரை ஓரளவுக்கு நன்மைகள் நடக்கும். மதியத்திற்குப் பிறகு அலைச்சல் அதிகரிக்கும். பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும். ஆனால், ஒப்பந்தங்கள் போடுவது தள்ளிப்போகும்.
புதன் - இன்று முழுமையான சந்திராஷ்டமம். பேச்சில் நிதானம் தேவை. ஒப்பந்தங்கள் போடக்கூடாது. பயணங்களைத் தவிர்க்க வேண்டும். தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபடக் கூடாது.
வியாழன் - எதிர்பார்த்த நன்மைகள் நடக்கத் தொடங்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும். கடந்த இரண்டு நாட்களாக இருந்த மன இறுக்கம் குறையும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.
வெள்ளி - பயணங்கள் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாடு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். அலுவலகத்தில் வேலை அதிகமாக இருக்கும். ஆனாலும்.சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள், பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக இருக்கும். ஒப்பந்தங்கள் ஏற்படும்.
சனி - எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். கடினமான வேலை என்று நினைத்த ஒன்றை, மிக எளிதாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் பற்றிய பேச்சு வார்த்தைகள் நடக்கும். பணவரவு பல வழிகளிலும் வரும்.
ஞாயிறு - நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும். செல்ல வேண்டிய அவசியம் இருந்தால் பொது போக்குவரத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள். யாரிடமும் எதற்காகவும் கோபப்பட வேண்டாம், மற்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துமளவு பேசவேண்டாம்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தில் பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி, நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள், நன்மைகள் அதிகமாகும், தடைகள் அகலும், பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

********************************************************************************


ஆயில்யம் -
போராடுவதும், எதிர்நீச்சல் போடுவதும் உங்களுக்கு பழக்கமான ஒன்றுதான் ஆனால், இந்த வாரம் உங்களுக்கு போராட்டத்துக்கும் எதிர்நீச்சலுக்குமான தேவை இருக்காது. எடுத்த வேலைகள் அனைத்தும் மிக எளிதாக செய்து முடிப்பீர்கள். ஏற்படுகின்ற அனைத்து ஒப்பந்தங்களும் மனநிறைவை ஏற்படுத்தும். வேலை இல்லாதவர்களுக்கு இப்பொழுது வேலை கிடைக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். இயல்பாக சொத்து சேர்க்கை, பணம் வரவு என அனைத்தும் சுமூகமாகவே இருக்கும்.

உத்தியோகம் -
பணியிடத்தில் பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லை. சுமூகமான நிலையை இருக்கிறது. பெரிய மாறுதல்கள் ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை. வேறு நிறுவனத்திற்கு மாறும் முயற்சி வெற்றியாகும். வெளிநாடு சென்று வேலை பார்க்கும் யோகமும் உண்டு. அலுவலகத்தில் நீண்ட நாளாக வராத நிலுவைத்தொகை இந்த வாரம் கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. சக ஊழியர் ஒருவருக்கு உதவி செய்வீர்கள். பதவி உயர்வு உள்ளிட்ட நன்மைகள் நடக்கும். சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு மன நிறைவான வருமானம் கிடைக்கும். விற்பனைப் பிரதிநிதிகளுக்கு அலைச்சல் குறையும், ஆதாயம் அதிகமாகும்.

தொழில் -
தொழிலில் எதிர்பார்த்த நன்மைகள் நடக்கும். தொழிலை விரிவுபடுத்த எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். அரசு பணியில் இருந்த அனைத்து நெருக்கடிகளும் தீரும். வழக்குகள் ஏதேனும் நடந்து கொண்டிருந்தால் வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். தொழில் தொடர்பாக வெளிநாடு செல்ல வேண்டியது வரும். வெளிநாட்டிலிருந்து முதலீடுகள் கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது. உங்கள் தொழிலை அயல்நாட்டு நிறுவனத்தோடு இணைந்து செயல்படவும் வாய்ப்பிருக்கிறது. புதிதாக தொழில் தொடங்கும் தொழில் முனைவோர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்து, தொழில் தொடங்குவதற்கான அத்தனை உதவிகளும் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு அபாரமான வளர்ச்சி ஏற்படும். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு சரிவுகள் இனி இருக்காது. வியாபாரிகள் நல்ல வளர்ச்சி காண்பார்கள். புதிதாக வேறு ஒரு வியாபார நிறுவனத்தை ஆரம்பிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

பெண்களுக்கு -
குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். உங்கள் பிள்ளைகளுக்கு சுப விசேஷங்கள் நடக்கும் நேரம் வந்து விட்டது. அது உங்கள் பிள்ளைகளின் திருமணமாகவும் இருக்கலாம், அல்லது சிறு குழந்தைகளாக இருந்தால் அவர்களுக்கு மொட்டையடித்தல், காதுகுத்துதல் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கவும் வாய்ப்புகள் உண்டு. .

மாணவர்களுக்கு -
கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. தேர்வுகள் ஏதும் எழுதி இருந்தால் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். உயர்கல்வி வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது.

கலைஞர்களுக்கு -
நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஒப்பந்தங்கள் ஏற்படும். வெளிநாடு சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தும் வாய்ப்பிருக்கிறது. பணவரவு தாராளமாக இருக்கும்.

பொதுப்பலன் -
நன்மைகள் அதிகமாக நடக்கவிருக்கும் வாரம். சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். சேமிப்பை அதிகமாக்கிக் கொள்ளுங்கள். திருமண முயற்சிகள் கைகூடும், சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும், வெளிநாடு செல்லும் முயற்சியில் முழு வெற்றி கிடைக்கும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான பிரச்சினைகளுக்கு சுமூகமாக தீர்வு ஏற்படும். தந்தையின் உடல் நலத்தில் இருந்த பாதிப்புகள் இப்பொழுது அகலும்.

இந்த வாரம் -
திங்கள் - மதியம்வரை அலைச்சல்கள் இருக்கும். ஒருவித மந்த நிலை இருக்கும். மதியத்திற்குப் பிறகு சுறுசுறுப்பாக பணியாற்றுவீர்கள். நினைத்த காரியத்தை நினைத்த மாதிரியே செய்து முடிப்பீர்கள்.
செவ்வாய் - ஆதாயம் தரும் வியாபார பேச்சுவார்த்தைகள் முடிவடையும். ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும்.
புதன் - அடுத்தவர் வேலைகளை நீங்கள் செய்யவேண்டியது வரும். அதனால் பெரிய அழுத்தங்கள் ஏதும் இருக்காது. உதவி கேட்டு நண்பர்கள், உறவினர்கள் வருவார்கள். நீங்களும் அவர்களுக்காக ஏதாவது ஒரு வகையில் உதவி செய்வீர்கள்.
வியாழன் - இன்று சந்திராஷ்டமம். கவனமாக இருக்க வேண்டும். அக்கம்பக்கத்தினருடன் தேவையற்ற சச்சரவுகள் வேண்டாம். பயணங்களில் கவனமாக இருக்க வேண்டும். வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது, ஆலய தரிசனம் மனதிற்கு நிம்மதி தரும்.
வெள்ளி - உதவிகள் கேட்காமலேயே கிடைக்கும். பயணங்கள் ஏற்படும். ஆதாயம் தரும் வியாபார பேச்சுவார்த்தைகள் வெற்றி ஆகும். ஒப்பந்தங்கள் போட்டு மகிழ்வீர்கள். எதிர் பார்த்த பணம் கிடைக்கும். வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றியாகும்.
சனி- ஒரு சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அது குடும்ப நலம் சார்ந்ததாகவே இருக்கும். குடும்ப உறுப்பினர்களுக்காக செலவு செய்யவேண்டியவரும். வீடு சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் ஏற்படும்.
ஞாயிறு - மனம் மகிழ்ச்சியாக இருக்கும். பணம் பல வழிகளிலும் வரும். ஆதாயம் தரும் வியாபாரம் ஒன்று இன்று நடைபெறும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சுபமாக முடிவாகும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
விநாயகர் ஆலயத்தில் விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுங்கள், நன்மைகள் அதிகமாகும், நினைத்தது நடக்கும்.

********************************************************************

மகம் -
நீங்கள் மனதில் என்ன நினைக்கிறீர்களோ அது இப்போது செயல் வடிவமாக மாறும். அதாவது எண்ணங்கள் ஈடேறும். நினைத்தது நடக்கும். தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் முற்றிலுமாக அகலும். ஆலய தரிசனங்கள் ஏற்படும். வழிகாட்டக்கூடிய குருவை அடையாளம் காண்பீர்கள்.
சொந்த வீடு வாங்கும் கனவு இப்போது நனவாகும். அதற்கான வங்கிக்கடன் எளிதாகக் கிடைக்கும். தாமதப்பட்டு வந்த புத்திரபாக்கியம் இப்பொழுது உருவாகும். தாயாரின் உடல் நலனில் இருந்த பாதிப்புகள் முற்றிலுமாக அகலும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படும், அதாவது பூர்வீக சொத்து சம்பந்தமான விஷயங்கள் சுமுகமாக முடிவடையும். வெளிநாடு செல்லும் முயற்சியில் வெற்றி ஆகும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.

உத்தியோகம் -
பணியிடத்தில் பெரிய பாதிப்புகள் ஏதும் இருக்காது. எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அரசு ஊழியர்களாக இருந்தால் இடமாற்றம் ஏற்படும். அது பதவி உயர்வோடு கூடியதாக இருக்கும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு குழுவுக்கு தலைமை ஏற்கும் வாய்ப்பு உருவாகும். கடைகள், வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு இப்போது இருக்கும் வேலையை விட நல்ல வேலை ஒன்று கிடைக்கும். சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் வேலையில் கிடைக்கும், ஆதாயம் அதிகமாக இருக்கும்.

தொழில் -
நல்ல வருமானம் ஏற்படக்கூடிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். லாபம் இரட்டிப்பாக இருக்கும். அரசு வழியில் இருந்த நெருக்கடிகள் தீரும். அரசின் சலுகைகள் கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. எதிர்பார்த்த வங்கிக் கடன் இப்போது எளிதாக கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்துவதற்கான உதவிகள் தாமாகவே கிடைக்கும். வெளிநாட்டு ஒப்பந்தங்கள் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. புதிதாக தொழில் தொடங்கும் தொழில் முனைவோர்களுக்கு இது மிக அருமையான நேரம். தொழில் தொடங்கும் வாய்ப்பு சிறப்பாக இருக்கிறது. பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு அபரிமிதமான லாபம் கிடைக்கும். கட்டுமானத் தொழில், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் அதிக லாபம் பெறுவார்கள். வியாபாரிகள் இருமடங்கு வளர்ச்சியைக் காண்பார்கள்.

பெண்களுக்கு -
திருமணம் ஆகாத பெண்களுக்கு இப்போது திருமணம் நிச்சயமாகும், குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு குழந்தை பாக்கியம் உருவாகும், சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும், தாயார் வழியில் சொத்துக்கள் சேர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். கடன் பிரச்சினைகள் முற்றிலுமாக தீரக் கூடிய அளவுக்கு பெரிய உதவி கிடைக்கும். சொந்தமாகத் தொழில் தொடங்க ஆசைப்படுபவர்கள் இப்போது அதற்கான நேரம் வந்துவிட்டது, சுய ஜாதகத்தின் அடிப்படையில் சொந்தத் தொழில் தொடங்கலாம்.

மாணவர்களுக்கு -
கல்வியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பயிற்சி நிறுவனங்களில் சேருவீர்கள். ஆசிரியரின் உதவி கிடைக்கும், நீண்ட நாளாக எதிர்பார்த்த ஒரு புத்தகம் இப்பொழுது கிடைக்கும்.


கலைஞர்களுக்கு -
எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நண்பர் ஒருவரால் ஒப்பந்தம் ஒன்று ஏற்படும். பணவரவு எதிர்பார்த்த மாதிரியே இருக்கும். சொத்து சேர்க்கை ஏற்படும்.

பொதுபலன் -
கிரக அமைப்புகள் சாதகமாக இருப்பதால் செயல்களை தாமதம் இல்லாமல் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் தீரும். தொழில் வளர்ச்சிக்காக வங்கிக் கடன் கிடைக்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியாகும். லாபங்கள் அதிகமாக ஏற்படக்கூடிய கிரக அமைப்பு இருப்பதால் சேமிப்புகளை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும். அசையாச் சொத்துக்கள் வாங்குவது நிகழும். அல்லது சொத்து பிரச்சினைகள் சுமுகமாக தீர்க்கப்படும். சகோதரர்கள் ஆதரவு ஏற்படும்.

இந்த வாரம் -
திங்கள் - வியாபாரப் பேச்சுகள் வெற்றியாகும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். சொத்து சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும். சொந்த வீடு வாங்குவதற்கு வங்கிக் கடன் கிடைக்கும்.
செவ்வாய் - நண்பர்களுக்காக ஒரு சில உதவிகளை செய்து கொடுப்பீர்கள். பயணங்கள் ஏற்படும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக இருக்கும்.
புதன் - எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபார பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். ஒரு பெரிய கடனை அடைப்பதற்கான வழி உண்டாகும்.
வியாழன் -பணிச் சுமை அதிகமாகும். உங்களுக்கு சம்பந்தமில்லாத வேலையை உங்கள் மீது திணிப்பார்கள். தேவையற்ற பயணம் ஏற்படும்.
வெள்ளி - இன்று சந்திராஷ்டமம். பயணங்களில் கவனம் வேண்டும். தொலைதூரப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும். பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள் போடுவது செய்யக்கூடாது, கடன் வாங்குவது, அல்லது கடன் கொடுப்பதோ செய்யக்கூடாது.
சனி - இன்று மன உளைச்சல் அதிகமாக இருக்கும். பணிச்சுமை அதிகமாக ஏற்படும். குடும்பத்தில் தேவையில்லாத வாக்குவாதங்கள் ஏற்படும். பொறுமை காப்பது நல்லது.
ஞாயிறு - கடந்த இரண்டு நாட்களாக நடந்த விஷயங்களை நினைத்து ஒரு சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். ஒரு வாரத்திற்கான திட்டங்களை தீட்டிக் கொள்வீர்கள். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். ஆலய வழிபாடு ஏற்படும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ சக்தி வடிவமான அம்மன் ஆலயங்களுக்குச் சென்று வாருங்கள். அம்மனின் அபிஷேகத்திற்கு உங்களால் முடிந்த அபிஷேகப் பொருட்கள் வாங்கித் தாருங்கள். பண வரவு அதிகமாகும். தடைகள் விலகும். தாமதமான செயல்கள் கூட வேகமாக முடியும்.

***************************************************************************************************************

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

மேலும்