ஜோதிடர் ஜெயம் சரவணன்
அஸ்வினி -
நல்ல பலன்களைத் தரும் வாரம் . எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அதிக முயற்சி இல்லாமலேயே அனைத்தும் சுலபமாக முடியும். உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். புத்திசாலித்தனமாக செயல்பட்டு காரியங்களைச் சாதிப்பீர்கள்.
உத்தியோகம் -
பணியில் பெரிய மாறுதல் ஏதும் இல்லை. சகஜமான நிலைமையே இருக்கிறது. தள்ளிப்போன பதவி உயர்வு இந்த வாரம் கிடைப்பதற்கான சூழ்நிலை நிலவுகிறது. வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி வெற்றியாகும். அரசு ஊழியர்களாக இருந்தால் இடமாற்றம் ஏற்படும். ஒரு சில சர்ச்சைகள் உருவாகும் வாய்ப்பு இருக்கிறது. சேவை சார்ந்த வேலை செய்பவர்கள் நல்ல பலன்களை கிடைக்கப் பெறுவார்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு இப்பொழுது நல்ல வேலை கிடைக்கும்.
தொழில் -
தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு. தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் இப்பொழுது நிறைவேறும். தொழில் முதலீட்டுக்காக எதிர்பார்த்த பணம் இந்த வாரம் கிடைப்பதற்கான சூழ்நிலை இருக்கிறது. ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு அபரிமிதமான முன்னேற்றம் உண்டு. பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லை, லாபகரமாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல வளர்ச்சி உண்டு, வியாபாரம் பெருகும்.
பெண்களுக்கு -
திருமண முயற்சிகள் கைகூடும். நிச்சயதார்த்தம் நடக்கும் வாய்ப்பு இருக்கிறது. வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். சொத்து சம்பந்தமான ஒரு பிரச்சினை சுமூகமான முடிவுக்கு வரும். சகோதரர்கள் விட்டுத் தருவார்கள்.
மாணவர்களுக்கு -
கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பட்ட மேற்படிப்பு படிப்பவர்களுக்கு தங்கள் துறை சார்ந்த கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆராய்ச்சி மாணவர்களுக்கு வேண்டிய உதவிகள் கிடைக்கும்.
கலைஞர்களுக்கு -
நல்ல ஒப்பந்தங்கள் உண்டாகும். சிறந்தது எது என தேர்ந்தெடுப்பதில் ஒரு குழப்பம் ஏற்படும், ஆனாலும் நல்ல வாய்ப்புகளையே ஏற்றுக் கொள்வீர்கள்.
பொதுப்பலன் -
வருமானம் சார்ந்த விஷயங்கள் அனைத்தும் சாதகமாக இருக்கும். ஒப்பந்தங்கள் உருவாகும், சகோதர வழியில் இருந்த சங்கடங்கள் தீரும், சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். விவாகரத்து ஆனவர்களுக்கு இப்போது மறுமணம் நடக்கும் வாய்ப்பு உள்ளது.
இந்த வாரம் -
திங்கள் -நல்ல பலன்கள் நடக்கும். ஆதாயம் தரும் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். எதிர்பார்த்த வீட்டுக் கடன் கிடைக்கும். வீடு வாங்குவது சம்பந்தமான விஷயங்கள் சுமூகமாக இருக்கும். மதியத்திற்கு மேல் மற்றவர் வேலையை நீங்கள் செய்ய வேண்டியது வரும்.
செவ்வாய் - மதியம்வரை அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். உங்களுக்கு சம்பந்தமில்லாத வேலைகளைச் செய்வீர்கள். மதியத்திற்குப் பிறகு உங்கள் வேலைகள் அனைத்தையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். முக்கிய நபரை சந்திப்பீர்கள், வியாபார பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக இருக்கும், எதிர்பார்த்த பணம் கிடைக்கும்.
புதன் - வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியாகும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். சொத்து சம்பந்தமான ஒரு விஷயம் சாதகமாக முடியும். புதிதாக தொழில் அல்லது வியாபாரம் ஆரம்பிக்கும் எண்ணம் ஏற்படும்.
வியாழன் - மனம் வருந்தும்படியாக ஒரு சில செயல்கள் நடக்கும். நம்பிக்கையான ஒருவர் ஏமாற்றம் தருவார். செலவுகள் அதிகரிக்கும். ஆலய வழிபாடு ஏற்படும்.
வெள்ளி - பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து ஒப்பந்தம் உண்டாகும். வீடு வாங்கும் முயற்சியில் அடுத்த கட்டத்திற்கு நகர்வீர்கள். வங்கியிலிருந்து நல்ல தகவல் கிடைக்கும்.
சனி- நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளால் லாபம் உண்டாகும். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். வேலைக்காக எடுத்த முயற்சி வெற்றி ஆகும்.
ஞாயிறு - வியாபார விஷயமாக வெளியூர் செல்ல வேண்டியது வரும். முக்கிய பிரச்சினைகளில் இன்று நல்ல முடிவு கிடைக்கும். ஆதாயமும் உண்டு, செலவும் உண்டு.
வணங்கவேண்டிய தெய்வம் -
ஸ்ரீ முருகப்பெருமானுக்கு செவ்வரளி மாலை சூட்டி வணங்குங்கள் , அவருடைய அபிஷேகத்திற்கு தேன் வாங்கித் தாருங்கள். நன்மைகள் அதிகமாகும். தாமதங்கள் விலகும்.
***************************************************
பரணி -
திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடக்கும். பெரிய அளவிலான பிரச்சினைகள் ஏதும் இல்லை. எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகப் போகிறது, அதற்கான உதவிகள் இந்த வாரம் கிடைக்கும். சொந்தமாகத் தொழில் தொடங்கும் சிந்தனை உருவாகும். அதற்கான முயற்சிகளில் இறங்குவீர்கள். அது தொடர்பான ஆலோசனைகள் இந்த வாரம் நடக்கும்.
உத்தியோகம் -
அலுவலகத்தில் சுமுகமான நிலையை இருக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். அலுவலகத்தில் நடக்கும் கூட்டங்களில் காரசாரமாக உங்கள் கருத்துக்களை முன் வைப்பீர்கள். உங்கள் கருத்துக்கள் ஒரு மனதாக ஏற்கப்படும். வேலை மாறும் சிந்தனை உடையவர்கள் இந்த வாரம் அந்த முயற்சியை எடுக்கலாம். இதுவரை வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு இந்த வாரம் ஏதாவது ஒரு நிறுவனத்தில் கண்டிப்பாக வேலை கிடைக்கும். சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். கடைகள், வணிக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பெரிய பாதிப்பு ஏதும் இல்லை, இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.
தொழில் -
தொழில் செய்யும் இடத்தை மாற்றும் எண்ணம் ஏற்படும். அல்லது புதிதாக மாற்றுத் தொழில் தொடங்கும் எண்ணம் உருவாகும். அரசிடம் இருந்து எதிர்பார்த்த உதவிகள் தள்ளிப்போகலாம். அரசு சம்பந்தமான வழக்குகளும் தள்ளிப்போகும். எதிர்பார்த்த கடன் கிடைக்கும். தொழில் நல்ல வளர்ச்சியில் இருக்கும். கட்டுமானத் தொழில் செய்பவர்கள் தங்கள் லாபத்தை குறைத்துக்கொண்டு மனைகளை விற்க முற்படுவார்கள். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டு. வியாபாரிகள் நல்ல வளர்ச்சி காண்பார்கள். உழைப்பு அதிகமாகும். லாபம் இருமடங்காக இருக்கும்.
பெண்களுக்கு -
வேலையில்லாதவர்களுக்கு இப்பொழுது வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். ஒருசிலருக்கு குழுவுக்கு தலைமை ஏற்கும் அளவுக்கு பதவிகள் கிடைக்கலாம். சொத்துக்கள் வாங்க முயற்சி எடுப்பீர்கள். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். சகோதர வழியில் இருந்த சங்கடங்கள் தீரும்.
மாணவர்களுக்கு -
கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. வெளிநாடு சென்று கல்வி கற்கும் விருப்பம் உள்ளவர்களுக்கு, அதற்கான முயற்சிகள் இந்த வாரம் தொடங்கலாம்.
கலைஞர்களுக்கு -
நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பல்வேறு விதமான உதவிகள் கிடைக்கும். திடீரென அதிர்ஷ்ட வாய்ப்பாக ஒப்பந்தம் ஒன்று ஏற்படும்.
பொதுப்பலன் -
திருமண முயற்சிகள் கைகூடும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டு. குழந்தைகளின் உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும். மருத்துவச் செலவு ஏற்படும்.
வங்கி உள்ளிட்ட அரசுத் துறை சார்ந்த எல்லா விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். , செய்யும் தவறினால் ஒரு சில பிரச்சினைகள் வரும்.
இந்த வாரம் -
திங்கள் - மதியம் வரை அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். வீண் செலவுகள் ஏற்படும். மதியத்திற்குப் பிறகு நல்ல விஷயங்கள் நடைபெறும். பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறும். ஒப்பந்தங்கள் உண்டாகும். தனவரவு எதிர்பார்க்கலாம்.
செவ்வாய் -வீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும். ஒப்பந்தங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஒரு முக்கிய நபரை சந்திப்பதால் லாபகரமான ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறும்.
புதன் - அலுவலகத்தில் சக ஊழியரின் வேலையை நீங்கள் பார்க்க வேண்டியது வரும். வியாபாரிகளுக்கு அலைச்சல் கூடும். சொந்தத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த உதவி தள்ளிப்போகும்.
வியாழன் - எடுத்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். கடன்களை அடைக்க வழி கிடைக்கும். வீடு சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும்.
வெள்ளி - பயணங்கள் அதிகரிக்கும். நீண்ட நாள் நண்பர் ஒருவரை சந்திப்பீர்கள். உறவினர் வருகை ஏற்படும். சுப விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள்.
சனி- வியாபார விஷயமாக வெளியூர் செல்ல வேண்டியது வரும். தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரிகளுக்கு புதிய கிளை தொடங்க வியாபார ஸ்தலம் கிடைக்கும்.
ஞாயிறு - எடுத்துக்கொண்ட காரியம் அனைத்தும் வெற்றியாக முடியும். பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து ஒப்பந்தங்கள் ஏற்படும். வெளிநாடு செல்லும் முயற்சிகளுக்கு உதவிகள் கிடைக்கும், நண்பர்களால் ஆதாயம் பெறுவீர்கள்.
வணங்கவேண்டிய தெய்வம் -
விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள். அல்லது கேளுங்கள். நன்மைகள் அதிகமாகும், உதவிகள் கிடைக்கும், முயற்சிகள் வெற்றியாகும்.
***************************************************************
கார்த்திகை -
உங்கள் கடமைகளை மட்டும் செய்து வந்தால் இந்த வாரம் பெரிய அளவில் எந்தப் பிரச்சினைகளும் இருக்காது. தொழில்வளர்ச்சி முதல் அனைத்தும் சிறப்பாகவே இருக்கிறது. குடும்பத்தில் அமைதி, ஒற்றுமை சிறப்பாக இருக்கிறது. அடுத்தவர் விஷயங்களில் தலையிட வேண்டாம். மற்றவர் பிரச்சினைகளில் நீங்கள் எதுவும் கருத்து சொல்லாமல் இருந்தாலே போதும், இந்த வாரத்தை எளிதாக பிரச்சினை இல்லாமல், கடந்து செல்ல முடியும்.
உத்தியோகம் –
வேலையில் உங்கள் கவனம் முழுமையாக இருக்கட்டும். மற்றவர்களுக்கு உதவுகிறேன் என்று பிரச்சினைகளை இழுத்துப் போட்டுக் கொள்ள வேண்டாம். அலுவலகத்தில் உங்கள் கருத்துக்களை வெளியிட வேண்டாம், அடுத்தவர்களைப் பற்றி குறை சொல்லி பேச வேண்டாம். உயர் அதிகாரிகளிடம் பணிவாக நடந்து கொள்ளுங்கள். பதவி மாற்றமோ அல்லது இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
சேவை சார்ந்த வேலை செய்பவர்கள் வேலையில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். கவனச் சிதறலுக்கு இடம் கொடுக்க வேண்டாம். கடைகள், வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், பொருட்களைக் கையாளும் போது கவனமாக இருக்க வேண்டும். வாடிக்கையாளர்களிடம் நல்ல அணுகுமுறை இருக்க வேண்டும்.
தொழில் -
தொழிலில் பெரிய அளவில் பின்னடைவும் இருக்காது, ஆனால் அதேசமயம் கடுமையாக உழைக்க வேண்டியது வரும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். இல்லையென்றால் பிரிவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. வங்கிக்கடன் தள்ளிப்போகலாம். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் கவனம் அதிகமாக இருக்கவேண்டும். வாடிக்கையாளர்களின் தேவைகளைக் கவனித்து பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்கள் அதிக முதலீடுகள் செய்ய வேண்டாம். வியாபாரிகள் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும்.
பெண்களுக்கு -
குடும்பத்தில் தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படும். எனவே உங்கள் கருத்துக்களையும், உங்கள் எண்ணங்களை மற்றவர்களிடம் திணிக்க வேண்டாம். உறவினர்களிடம் பேசும்பொழுது வார்த்தைகளை கவனமாக கையாள வேண்டும். கடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வந்தாலும் பாதிப்பை உண்டாக்காது.
மாணவர்கள் -
கல்வியில் நல்ல வளர்ச்சி இருக்கும். ஆராய்ச்சிக் கல்வியில் இருப்பவர்களுக்கு பலவிதமான உதவிகள் கிடைக்கும். அரசு வழியில் ஆதாயம் மற்றும் உதவிகள் கிடைக்கும். பகுதி நேர வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.
கலைஞர்களுக்கு -
பொறுமையாக இருக்க வேண்டும். அவசரப்பட்டு ஒப்பந்தங்கள் எதுவும் போட வேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டும். நண்பர்களால் ஒரு சில ஆதாயங்கள் ஏற்படும்.
பொதுப்பலன் -
மற்ற விஷயங்களில் தலையிடாமல் இருந்தாலே போதும். ஆரோக்கியம் சம்பந்தமாக அச்சுறுத்தல்கள் ஏற்படும். ஆனாலும் கவலைப்படும் அளவுக்கு இருக்காது. கடன் பிரச்சினைகள் நெருக்கடி தரும். புதிய கடன்கள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். மதிப்பு வாய்ந்த பொருட்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த வாரம் -
திங்கள் -திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நடக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். வீடு மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
செவ்வாய் - அலைச்சல் அதிகமானாலும் ஆதாயம் கிடைக்கும். ஒரு சில வேலைகள் தள்ளிப் போனால் அது நன்மையில் முடியும் என்பதை நம்புங்கள். பணத் தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும்.
புதன் - ஆதாயம் தரும் வியாபாரம் வெற்றியாகும். ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனை, வீடு சம்பந்தப்பட்ட வியாபாரம் வெற்றிகரமாக முடியும்.
வியாழன் - வீண் அலைச்சல்கள் உருவாகும். வாகனச் செலவுகள் ஏற்படும். வியாபார பேச்சுக்கள் தள்ளிப்போகும்.
வெள்ளி - மனதிற்கினிய சம்பவங்கள் நடக்கும். மனநிறைவு ஏற்படும் வகையில் பணவரவு இருக்கும். நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.
சனி- உங்களுக்கு சம்பந்தமில்லாத வேலைகள் உங்கள் மீது திணிக்கப்படும். எரிச்சலும், கோபமும் உண்டாகும். அலைச்சலால் உடல் பலவீனமாகும். சரியாக வேலைகளை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
ஞாயிறு - வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியாகும். நண்பர்களின் உதவி கிடைக்கும். வியாபார பேச்சுவார்த்தைகள் வெற்றியாகும். தொழில் நிமித்தமாக ஒரு உதவி கிடைக்கும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
சிவபெருமானுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து, நெய் தீபமேற்றி வழிபடுங்கள். பிரச்சனைகள் குறையும், மன நிம்மதி ஏற்படும், தேவைகள் பூர்த்தியாகும். ஆரோக்கியம் மேம்படும்.
*************************************************************
ரோகிணி -
பிரச்சினைகள் அதிகமாக இருந்தாலும், அதற்குத் தகுந்த தீர்வு உடனுக்குடன் கிடைக்கும். பணத் தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும். சொத்து சம்பந்தமான விஷயங்கள் சுமுகமாக இருக்கும். பூர்வீகச் சொத்து விற்பது தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடு அதிகமாக இருக்கும். பொறுமையாக இருப்பது நல்லது.
உத்தியோகம் -
வேலையில் பெரிய அளவு பிரச்சினைகள் ஏதும் இருக்காது. ஆனாலும் பணிச்சுமை சற்று அதிகமாக இருந்தாலும் சக ஊழியர் ஒருவரின் உதவியால் முக்கியமான வேலைகளைச் செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகள் உங்களுக்காக சில சலுகைகளை செய்து தருவார். சேவை சார்ந்த வேலை செய்பவர்கள் தங்கள் கடமையை உணர்ந்து வேலை செய்தால் பெரிய பாதிப்புகள் ஏதும் இருக்காது. கடைகள் வணிக நிறுவனங்கள் பணிபுரிபவர்கள் வேறு நல்ல நிறுவனத்திற்கு மாறும் முயற்சி வெற்றியாகும்.
தொழில் -
தொழில் மந்த நிலையாக இருக்கும். எதிர்பார்த்த விஷயங்கள் தள்ளிப்போகும். கடும் முயற்சி எடுத்து ஒரு சில வேலைகளை முடிப்பீர்கள். அரசு வழியில் இருந்த தொந்தரவுகள் நீங்கும். வழக்குகள் ஏதேனும் இருந்தால் தள்ளிப் போகும். எதிர்பார்த்த கடன் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் பெரிய பாதிப்புகள் ஏதும் இருக்காது. ஓரளவு வளர்ச்சியாக இருக்கும்.
பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்கள் குறைந்த அளவு முதலீடு செய்தால் போதும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த மேற்கொண்ட முயற்சிக்கு உதவிகள் கிடைக்கும்.
பெண்களுக்கு -
பொறுமை மிக அவசியம். குடும்பத்தில் பிரச்சினைகள் வருவதற்கு உங்களுடைய நடைமுறையும், பேச்சுக்களும் காரணமாக இருக்கும். எனவே நிதானமாக பேச வேண்டும்,
சகோதரர்கள் மிகவும் உதவுவார்கள். வேலையில்லாதவர்களுக்கு இப்போது வேலை கிடைக்கும். வேலையில் இருக்கும் பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
மாணவர்களுக்கு -
கல்வியில் ஓரளவு முன்னேற்றம் உண்டு. தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் குறையலாம். அதிக கவனத்துடனும் சிரத்தையாகவும் படிப்பது நல்லது.
கலைஞர்களுக்கு -
முயற்சிகள் இன்னும் தள்ளிப்போகலாம். நண்பர்களால் உதவி கிடைக்கும். வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றியாகும்.
பொதுப்பலன் -
யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். பணத்தை சிக்கனமாக செலவு செய்ய வேண்டும். செலவுகள் அதிகமாக இருந்தாலும் அதற்குத் தக்கவாறு வருமானம் இருக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சமூகமாக மாறும். ஒரு சிலருக்கு குடும்பத்தை விட்டு பிரிந்து வெளியூர் அல்லது வெளிநாடு செல்ல வேண்டியது வரும்.
ஆரோக்கியத்தில் அவ்வப்போது சில பாதிப்புகள் ஏற்படும், மருத்துவச் செலவுகளும் அதிகமாகும். எதிர்காலத்தை நினைத்து அதிகம் கவலை கொள்வீர்கள்.
இந்த வாரம் -
திங்கள் -வேலையில் இடமாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. பயணங்கள் அதிகரிக்கும். வியாபார விஷயங்களுக்காக அலைச்சல் அதிகமாக இருக்கும். மனதில் தேவையற்ற சிந்தனைகள் வரும்.
செவ்வாய் - எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். வியாபார பேச்சுவார்த்தைகள் வெற்றியாகும். தொழில் நிமித்தமாக ஒரு முக்கிய நபரை சந்திக்க வேண்டியது வரும்.
புதன் - தேவையற்ற அலைச்சல்கள் உருவாகும். எனவே பயணங்களைத் தவிர்த்துக்கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் சிறிய பிரச்சினைகள் வரும், அதற்கான மருத்துவச் செலவுகளும் ஏற்படும்.
வியாழன் - வியாபார பேச்சுவார்த்தைகள் வெற்றி ஆகும். ஒப்பந்தங்கள் ஏற்படும். சொத்துக்கள் வாங்குவது விற்பது போன்ற விஷயங்கள் இன்று நல்லபடியாக முடியும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும்.
வெள்ளி - குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பீர்கள். செலவுகள் அதிகமாக இருக்கும். குலதெய்வ வழிபாடு செய்ய எண்ணம் ஏற்படும். பரிகார ஆலயங்கள் சென்று வருவீர்கள்.
சனி- எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் அடைவீர்கள். தொலைபேசி வழித் தகவல் நன்மையாக இருக்கும். எதிர்பார்த்த வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும்.
ஞாயிறு - மற்றவர்கள் உங்களை கோபத்துக்கு உள்ளாக்குவார்கள். தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். மற்றவர்கள் பிரச்சினைகளில் தலையிட்டு வீணாக நஷ்டம் அடையாதீர்கள்.
வணங்கவேண்டிய தெய்வம் -
கால பைரவர் வழிபாடு மிகவும் அவசியம். பைரவருக்கு செவ்வரளி மாலை சூட்டி, தீபம் ஏற்றி வழிபடுங்கள், பிரச்சினைகள் குறையும், எதிர்ப்புகள் அகலும். நன்மைகள் அதிகமாகும்.
***************************************************
மிருகசீரிடம் -
தெளிவாகத் திட்டமிட்டு காரியங்களை செய்யும்போது வெற்றியை நெருங்க முடியும். எனவே எந்த வேலையையும் சரியாகத் திட்டமிட்டுச் செய்வீர்கள். உங்களுக்கு தொடர்பு இல்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். ஒரு சில விஷயங்களில் பின்னடைவு ஏற்பட்டாலும், பல விஷயங்கள் சாதகமாகவே இருக்கும். செலவுகளைக் கட்டுப்படுத்தத் தெரிந்து கொள்ளுங்கள். எடுக்கின்ற முயற்சிகள் கடுமையாகப் போராடி வெற்றியைப் பெறுவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் ஒவ்வொன்றாக தீரும். கணவன்-மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பிரிந்த தம்பதியினர் மீண்டும் ஒன்று சேர்வார்கள்.
உத்தியோகம் -
வேலையில் அழுத்தங்கள் இருந்தாலும் அதையெல்லாம் சமாளிப்பீர்கள். சக ஊழியர்களிடம் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு தள்ளிப் போகலாம். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி வெற்றியாகும்.
கடைகள் வணிக நிறுவனங்கள் பணிபுரிபவர்களுக்கு பெரிய மாறுதல்கள் ஏதும் இருக்காது, வேலையில் கூடுதல் சுமை இருக்கும், அதை சமாளிக்கும் ஆற்றலும் இருக்கும்.
சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு பெரிய பாதிப்புகள் ஏதும் இல்லை.
தொழில் -
தொழிலில் அகலக்கால் வைக்க வேண்டாம். புதிய முயற்சிகளை செய்கிறேன் என்று முதலீடுகள் செய்ய வேண்டாம். வழக்குகளில் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். உங்கள் தொழில் சார்ந்த நண்பர்களுடன் கவனமாகப் பழக வேண்டும். கூட்டாளிகளிடம் ஒற்றுமை குறையும். தொழில் சார்ந்த எந்தவிதமான உத்தரவாதத்தையும் தரக்கூடாது.
பங்கு வர்த்தகத் துறையினர் அளவாக முதலீடு செய்யுங்கள். வியாபாரிகள் ஓரளவு வளர்ச்சி காண்பார்கள். பெரிய எதிர்பார்ப்புகளை வைத்துக்கொள்ள வேண்டாம்.
பெண்களுக்கு -
கவலை தந்து கொண்டிருந்த ஒரு கடனை வங்கியில் கடன் பெற்று அடைப்பீர்கள். சுயதொழில் செய்யும் ஆர்வம் ஏற்படும். அதற்கான முயற்சிகளில் இறங்குவீர்கள். ஆனாலும் தாமதமாகத்தான் உதவிகள் கிடைக்கும்.
மாணவர்களுக்கு -
கல்வியில் சுமாரான நிலையே இருக்கும். தேர்வுகளில் மதிப்பெண்கள் குறையும். பாடங்களில் கவனம் செலுத்த முடியாமல் போகும். ஆடம்பர விஷயங்களில் அதிக நாட்டம் ஏற்படும். எனவே கல்வியில் கவனமாக இருக்க வேண்டும்.
கலைஞர்களுக்கு -
ஒருசில பேச்சுவார்த்தைகள் முடிவடையும். ஒப்பந்தங்கள் போடும் நிலை உண்டாகும். அரசின் உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் பணத்தேவைகள் பூர்த்தியாகும்.
பொதுப்பலன் -
யாருக்கும் வாக்கு கொடுப்பதோ, அல்லது ஜாமீன் கொடுப்பதோ கூடாது. உடல்நலனில் அக்கறை காட்டவேண்டும், அர்த்தமற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகளை பேசித் தீர்க்க வேண்டும். வீடு வாங்கஅல்லது விற்க எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும்.
இந்த வாரம் :
திங்கள் - எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றி ஆகும், வியாபார பேச்சுக்கள் முடிவுக்கு வரும்.
செவ்வாய் -அலைச்சல் அதிகரிக்கும் பயணங்களால் பெரிய லாபம் ஒன்றும் இருக்காது. எதிர்பார்த்த பண உதவி தள்ளிப்போகலாம். பேச்சுவார்த்தைகள் நீண்டுகொண்டே போகும்.
புதன் - எதிர்பார்த்த விஷயங்கள் சுமூகமாக முடியும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஒப்பந்தங்கள் உண்டாகும். ஆதாயம் தரும் ஒரு வியாபாரம் நல்ல முடிவுக்கு வரும்.
வியாழன் - தேவையில்லாத பிரச்சினைகள் தேடி வரும். முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். அடுத்தவர்களுடைய பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். அது உங்களுக்கு பாதகமாக திரும்பும்.
வெள்ளி - வியாபார பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இருக்கும். வீடு விற்பது அல்லது வாங்குவது போன்ற விஷயங்கள் சுலபமாக முடியும். சகோதரர்கள் ஆதாயம் கிடைக்கும்.
சனி - வீண் அலைச்சல்கள் ஏற்படும். செலவுகள் அதிகமாகும். மருத்துவச் செலவும் உண்டு. பயணங்களைத் தவிர்க்க வேண்டும். பேச்சுவார்த்தைகளை தள்ளிப்போடுங்கள்.
ஞாயிறு - எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். நண்பர்களால் ஒருசில ஆதாயம் ஏற்படும். வியாபாரப் பேச்சுக்கள் நம்பிக்கையைத் தரும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
நவக்கிரகத்தில் இருக்கும் சூரிய பகவானுக்கு கோதுமையால் செய்யப்பட்ட உணவுப்பண்டங்களை நைவேத்தியம் செய்து தானமாக தர வேண்டும், வேண்டிய உதவிகள் கிடைக்கும், தடைகள் அகலும், எதிர்ப்புகள் குறையும், மனதில் நிம்மதி உண்டாகும்.
*********************************************************************************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago