இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: அலைச்சலும், செலவுகளும் தொடர்ந்து கொண்டிருக்கும். நீங்கள் நல்லது சொல்லப் போய் சிலர் தவறாக புரிந்து கொள்வார்கள். உடல்நலத்திலும் கவனம் செலுத்துங்கள்.

ரிஷபம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். அழகு, இளமை கூடும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கு ஏற்பாடாகும். விருந்தினர் வருகை உண்டு.

மிதுனம்: வேற்றுமொழி, மதத்தினர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். நீண்டநாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். கலைப்பொருட்கள் சேரும்.

கடகம்: பொது அறிவை வளர்த்துக் கொள்வீர்கள். நீண்டநாள் பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு காண்பீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். பால்ய நண்பரை சந்தித்து மகிழ்வீர்கள்.

சிம்மம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். வீட்டை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளித்து விடுவீர்கள்.

கன்னி: விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். மனஇறுக்கம் நீங்கும். சமூகத்தில் பிரபலமானவர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். திடீர் பயணம் உண்டு.

துலாம்: தடைபட்ட வேலைகளை புதிய அணுகுமுறையால் முடித்து காட்டுவீர்கள். விலகியிருந்த உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். நவீன மின்சாதனங்கள் வாங்குவீர்கள்.

விருச்சிகம்: ஊர் பொதுக் காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். பழைய கடன் பிரச்சினையை நினைத்து அவ்வப்போது நிம்மதியிழப்பீர்கள். சில சமயங்களில் மனம் சஞ்சலப்படும்.

தனுசு: அடுத்தடுத்த பயணங்களால் ஓய்வெடுக்க முடியாத நிலை ஏற்படும். அரசு விவகாரங்களில் அலட்சியம் காட்ட வேண்டாம். உடன்பிறந்தவர்களால் சங்கடங்கள் வந்து நீங்கும்.

மகரம்: பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். பழைய வழக்கில் வெற்றி கிடைக்கும். பங்கு வர்த்தகம் மூலம் பணம் வரும். முக்கிய பதவிக்கு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

கும்பம்: உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பால்ய நண்பர்களை எதிர்பாராது சந்திப்பீர்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும்.

மீனம் : நினைத்த காரியம் தடங்கல் இன்றி நிறைவேறும். கல்வியாளர், அறிஞர்களின் நட்பால் புதிய அனுபவம் கிடைக்கும். குடும்பத்தில் அடுத்தடுத்து சுபநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாகும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

மேலும்