இந்த வாரம் இப்படித்தான் - நட்சத்திரப் பலன்கள்; எந்தக் கிழமைகளில் என்னென்ன பலன்கள்? - விசாகம் முதல் உத்திராடம் வரை (நவம்பர் 25 முதல் டிசம்பர் 1ம் தேதி வரை)

By செய்திப்பிரிவு


இந்த வாரம் இப்படித்தான் - நட்சத்திரப் பலன்கள்; எந்தக் கிழமைகளில் என்னென்ன பலன்கள்? - விசாகம் முதல் உத்திராடம் வரை (நவம்பர் 25 முதல் டிசம்பர் 1ம் தேதி வரை)


ஜோதிடர் ஜெயம் சரவணன்

விசாகம் -
வாரத்தின் பெரும்பாலான நாட்களில் நன்மைகள் அதிகமாக நடக்கும். தேவைகள் பூர்த்தியாகும். பணவரவு தாராளமாக இருக்கும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் வெற்றி தரும். வியாபார பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடிவடையும். வழக்குகள் தள்ளிப்போகும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியாகும். கணவன்-மனைவி ஒற்றுமை மேலோங்கும். குடும்பத்திற்குள் இருந்த பிரச்சினைகள் தீரும். கடன்களை ஒரு பகுதியை அடைப்பீர்கள். திருமண முயற்சிகள் கைகூடும். குழந்தைகளைப் பற்றிய கவலையை அதிகரிக்கும். அவர்களின் எதிர்காலத் தேவைக்காக நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். நீண்ட நாளாக விட முடியாமல் இருந்த ஒரு கெட்ட பழக்கத்தை கைவிடுவீர்கள்.


உத்தியோகம் -
வேலையில் பெரிய மாற்றம் இருக்காது. பிரச்சினைகள் ஏதும் இருக்காது. வேலையில் இயல்பு நிலையே இருக்கும். ஒரு சிலருக்கு இடமாற்றங்கள் ஏற்படும். பதவி உயர்வு எதிர்பார்த்திருப்பவர்களுக்கு பதவி உயர்வு தாமதமாகும். சேவை சார்ந்த வேலை செய்பவர்கள் வேலைகள் அதிகம் பெறுவார்கள், ஆதாயம் அதிகமாகும். கடை, மற்றும் வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் ஊதிய உயர்வு கிடைக்கப் பெறுவார்கள். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும், கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.


தொழில் -
தொழிலில் நல்ல முன்னேற்றம் வளர்ச்சியும் உண்டாகும். புதிய ஆர்டர்கள் பெறுவீர்கள். லாபம் இருமடங்காகும். தனி நபரிடம் வாங்கிய கடன்களை அடைப்பீர்கள். தொழில் சார்ந்த ஒப்பந்தங்கள் கிடைக்கப்பெறுவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் நல்ல வளர்ச்சியும், முன்னேற்றமும் இருக்கும், அதிக ஆர்டர்கள் கிடைக்கப் பெற்று தொழிலை விரிவுபடுத்துவீர்கள். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி, முன்னேற்றம் இருக்கும். பங்கு வர்த்தகத் துறை சார்ந்தவர்களுக்கு லாபம் அதிகம் கிடைக்க பெறுவார்கள்.


பெண்களுக்கு -
குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். உங்கள் குழந்தைகளுக்கு சுபநிகழ்ச்சிகள் செய்து மகிழ்வீர்கள். இதுவரை வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். அரசு உத்தியோகம் கிடைக்கும் வாய்ப்பும் உண்டு.


மாணவர்களுக்கு -
கல்வியில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். முதல் மதிப்பெண் பெறுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. சக மாணவர்கள், ஆசிரியர்கள் ஆதரவு கிடைக்கும்.


கலைஞர்களுக்கு -
அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும். அரசின் சலுகைகள் கிடைக்கும் கௌரவப் பதவி, பட்டம் பெறுவீர்கள். ஒப்பந்தங்கள் கிடைக்கும்.


பொதுப்பலன் –
தீவிர முயற்சி எடுத்தால் மேலும் வெற்றிகள் கிடைக்கும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். கடன்கள் அடைவதற்கு வழி கிடைக்கும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். மருத்துவச் செலவுகள் குறையும். தந்தைவழி உறவுகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் இப்பொழுது சுமூகமாக தீரும்.


இந்த வாரம் -
திங்கள் - தொலைதூரப் பயணங்கள் ஏற்படும். அதில் ஆதாயமும் கிடைக்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியாகும், அதற்கான நல்ல தகவல் இன்று கிடைக்கும். ஆதாயம் தரும் வியாபாரம் ஒன்றைப் பேசி முடிப்பீர்கள்.
செவ்வாய் - குடும்ப நலன் சார்ந்த ஒரு முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு கல்வி அல்லது வேலை வாய்ப்புக்காக ஒரு சிறு தொகையைச் செலவிடுவீர்கள்.
புதன் - அலைச்சல்கள் அதிகரிக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும். ஆனால் செலவுக்கு ஏற்ற ஆதாயமும் கிடைக்கும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும். தொழில் சார்ந்த ஒரு நல்ல தகவல் கிடைக்கும்.
வியாழன் - அலைச்சல்கள் உண்டாகும். செலவுகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் சிறு பாதிப்பு உண்டாகும்.
வெள்ளி - சொந்த வீடு வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வீடு மாற்றம் செய்யும் முயற்சியும் நடக்கும். தாய்வழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். சொத்து சம்பந்தமான ஒரு பிரச்சினை முடிவுக்கு வரும்.
சனி- மற்றவர்களுக்காக இன்று வேலை செய்து தருவீர்கள். உங்களுக்கு சம்பந்தமில்லாத வேலையை செய்யச் சொல்லி அலுவலகத்தில் நிர்ப்பந்திக்கப் படுவீர்கள்.
ஞாயிறு – கடன் அடைவதற்கு உதவிகள் கிடைக்கும். ஒரு பெரிய கடனை அடைப்பீர்கள். அடகுப் பொருட்களை மீட்க பண உதவி கிடைக்கும். தொழில் சார்ந்த பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும்.
வணங்கவேண்டிய தெய்வம் –
அருகிலிருக்கும் ஐயப்பன் கோயிலுக்கு சென்று ஐயப்பனுக்கு அபிஷேக நெய் வாங்கித் தாருங்கள்.
நன்மைகள் அதிகமாகும். பிரச்சினைகள் தீரும். பணவரவு தடையில்லாமல் கிடைக்கும்.

*********************************************************
அனுஷம் -
உங்களைப் பற்றி குறைவாக மதிப்பிட்டவர்கள், இப்போது உங்களுடைய திறமைகளைக் கண்டு ஆச்சரியப்படுவார்கள். உங்களுடைய திறமைகள் வெளிப்படும் நேரம் தொடங்கிவிட்டது. எடுத்த காரியங்களில் முழுமூச்சோடு ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். பொருளாதாரத்தில் கடும் பின்னடைவைச் சந்தித்த நீங்கள், இந்த வாரம் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். பணவரவில் இருந்த தடைகள் எல்லாம் இப்பொழுது அகலும். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் ஒவ்வொன்றாக இப்போது விலக ஆரம்பிக்கும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.


உத்தியோகம் -
வேலையில் இருந்த அழுத்தங்கள் இப்பொழுது படிப்படியாக குறையும். ஒவ்வொரு வேலையையும் தாமதமாக செய்து கொண்டிருந்த நீங்கள், இப்பொழுது பரபரப்பாக இயங்கி எல்லா வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். உங்களுடைய செயல் வேகத்தை கண்டு அலுவலகத்தில் அனைவரும் ஆச்சரியப்படுவார்கள். அலுவலகத்தில் எதிரிகள் கூட உங்களைக் கண்டு அஞ்சுவார்கள். அரசு ஊழியர்களாக இருந்தால் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். அரசு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ள நியமிக்கப்படுவீர்கள்.


தொழில் -
தொழிலில் இருந்த இக்கட்டான நிலைமை மாறும். படிப்படியாக தொழில் வளரும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக மாறும். கடன் சம்பந்தப்பட்ட நெருக்கடிகளால் தொழிலில் இருந்த பிரச்சினைகள் தீர்வதற்கு, வங்கியில் இருந்து கடன் உதவி கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் வளர்ச்சி பாதையில் செல்லும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். பங்கு வர்த்தக தொழிலில் இருப்பவர்கள் நஷ்டத்திலிருந்து லாபத்தை நோக்கி செல்வார்கள். இழப்புகள் இனி இருக்காது.வியாபாரிகள் மந்த நிலையிலிருந்து மாறி சுறுசுறுப்பான வியாபாரத்திற்கு மாறுவார்கள்.


பெண்களுக்கு -
குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் தீரும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். பணவரவில் இருந்த தடைகள் விலகும். கடன் பிரச்சினையில் இருந்து மெல்ல வெளியே வருவீர்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தமான விஷயங்கள் சுமுகமான பேச்சு வார்த்தை தொடங்கும்.


மாணவர்களுக்கு -
கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தோல்வியடைந்த பாடங்களை இப்பொழுது எழுதி முடிப்பீர்கள். உயர்கல்வி வாய்ப்பு எளிதாக கிடைக்கும்.


கலைஞர்களுக்கு -
பணக் கஷ்டங்கள் தீரும். ஒரு சில ஒப்பந்தங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து ஒரு பெரிய உதவி கிடைக்கும்.


பொதுப்பலன் -

பிரச்சினைகள் மெல்ல விலக ஆரம்பித்திருக்கிறது, இனியும் பொறுப்பற்ற குணத்திலிருந்து மாறி, பொறுப்பான மனிதராக மாற வேண்டும். சேமிப்புகளை செய்ய வேண்டும். வீண் செலவுகளை குறைக்க வேண்டும். ஆடம்பர விஷயங்களில் அதிக நாட்டம் வைத்துக்கொள்ளக்கூடாது, ஆரோக்கியத்தை பாதிக்கும் பழக்கங்களைக் கைவிட வேண்டும். கடன்கள் படிப்படியாக தீரும்.


இந்த வாரம் -
திங்கள் - பயணங்கள் அதிகரிக்கும். ஒரு சில முக்கியமான வேலைகள் கடைசிநேரத்தில் முடிவடையும். பணவரவு ஓரளவுக்கு இருக்கும். சகோதர வழியில் ஒரு உதவி கிடைக்கும்.
செவ்வாய் - வியாபாரம் சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் நடத்துவீர்கள். உங்களுக்கு சாதகமான சில விஷயங்கள் நடக்கும். நண்பர்களிடமிருந்தும், உறவினர்களிடம் இருந்தும் உதவிகள் கிடைக்கும்.
புதன் - வீடு மாற்றும் சிந்தனை ஏற்படும். உத்தியோகத்தில் இடமாற்றம் வேண்டி விண்ணப்பம் செய்வீர்கள். வியாபார பேச்சுவார்த்தைகள் இன்று ஒப்பந்தமாக மாறும். எதிர்பார்த்த பணம் இன்று கிடைக்கும்.
வியாழன் - திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடி நடக்கும். பணவரவு திருப்தி தரும். முக்கியமான கடன் ஒன்றை அடைப்பீர்கள். தொழில் சம்பந்தமாக ஒப்பந்தம் ஒன்று ஏற்படும். வியாபார பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவடையும்.
வெள்ளி - வீண் அலைச்சல்கள் உருவாகும். தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். மற்றவர்கள் விஷயங்களில் உங்கள் கருத்துக்களை திணிக்க வேண்டாம்.
சனி - வீடு சம்பந்தமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். அது புதிதாக வீடு வாங்குவதோ அல்லது உங்களுடைய வீட்டை விற்பதாகவோ இருக்கலாம். எதுவாக இருந்தாலும் இன்று நல்ல முடிவு கிடைக்கும்.
ஞாயிறு - மற்றவர்கள் வேலையை உங்கள் மீது சுமத்துவார்கள். நீங்களும் அந்த வேலைகளை பொறுப்பாக செய்வீர்கள். இதில் உங்களுக்கு ஆதாயம் எதுவும் இருக்காது. கடமைக்காக செய்துமுடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கும்.
வணங்கவேண்டிய தெய்வம் -
சித்தர்கள் ஜீவ சமாதிக்கு சென்று வாருங்கள்.அங்கே அமைதியாக அமர்ந்து மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் மேற்கொள்ளுங்கள். தெளிவான சிந்தனை உண்டாகும். நல்ல முடிவுகளை எடுக்க உதவும். தடைகள் அகலும்.

************************************************************
கேட்டை -
கடுமையான மன உளைச்சலில் இருந்த நீங்கள் இப்பொழுது மன உளைச்சலில் இருந்து மெல்ல வெளியே வருவீர்கள். மனதை வருத்திக் கொண்டிருந்த பிரச்சினைகள் ஒவ்வொன்றாக விலகும். சுய தேவைகளுக்கு கூட பணம் இல்லாமல் தவித்த உங்களுக்கு, இனி பணத்தட்டுப்பாடு இருக்காது. உங்கள் தேவைக்கேற்ற பணம் கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிந்து சென்றவர்கள், இப்போது மீண்டும் ஒன்றுசேர்வார்கள்.
பணியிடத்தில் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொண்ட நீங்கள், இனி அந்த நெருக்கடிகளில் இருந்து வெளியே வருவீர்கள். கேட்டும் கிடைக்காத உதவிகள் இப்பொழுது, கேட்காமலேயே கிடைக்கும்.


உத்தியோகம் -
கடுமையான பணிச்சுமையால் மன உளைச்சல், நெருக்கடிக்கு ஆளாகி இருந்தீர்கள். இந்த பாதிப்புகள் எதுவும் இனி இருக்காது. வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். கொடுத்த வேலைகளை சரியாக செய்து முடிப்பீர்கள், சக ஊழியர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும். மீண்டும் நண்பர்களாக மாறுவீர்கள். உயரதிகாரிகளின் கோபம் தணியும். உங்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை கைவிடப்படும். சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு இழந்த வாடிக்கையாளர்களை மீண்டும் பெறுவார்கள். இனி படிப்படியாக வளர்ச்சி இருக்கும். வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் அதிக அழுத்தத்துக்கு ஆளாகி இருப்பீர்கள். பணிச்சுமை அதிகமாக இருந்திருக்கும்.இனி வேலையில் அழுத்தங்கள் ஏதும் இருக்காது. சுறுசுறுப்பாக, மகிழ்ச்சியாக பணியாற்றுவீர்கள்.


தொழில் -
தொழிலில் இருந்த மந்தநிலை மாறும். தொழில் வளர்ச்சி பாதையில் செல்லும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். உற்பத்தியான பொருட்கள் தேக்க நிலையிலிருந்து மாறி, வியாபாரமாகும். கடன் பிரச்சினைகள் அதிகமாக இருந்திருக்கும். இனி கடன் பிரச்சினைகளில் இருந்து மெல்ல வெளியே வருவீர்கள். தொழிலுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். வெளிநாடுகளில் இருந்து முதலீடுகள் கிடைக்கப் பெறுவீர்கள். பங்கு வர்த்தகத் தொழிலில் இருப்பவர்கள் நஷ்டத்தில் இருந்து மீண்டு, லாபத்தை நோக்கிச் செல்வார்கள்.
ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்கள் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். இதுவரை இருந்த தேக்க நிலைகள் மாறும்.


பெண்களுக்கு -
குடும்ப பிரச்சினைகள் தீரும். கணவன்-மனைவி ஒற்றுமை மேலோங்கும். உறவினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும். கடன் பிரச்சினைகள் தீரும். அடகு வைத்த பொருட்களை இப்பொழுது மீட்டெடுப்பீர்கள்.


மாணவர்களுக்கு -
கல்வியில் இருந்த தடைகள் அகலும். கல்வியில் உங்களுக்கு வேண்டிய உதவிகள் இப்போது கிடைக்கும். கல்வியில் நல்ல ஆர்வம் ஏற்படும்.


கலைஞர்களுக்கு -
பணத்தட்டுப்பாடு நீங்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றி ஆகும்.


பொதுப்பலன் -
கஷ்டமான சூழ்நிலையில் இருந்து மெல்ல வெளியே வந்து கொண்டிருக்கிறீர்கள். உங்கள் பிரச்சினைகள் அனைத்தும் ஒரு சில நாட்களில் தீராது. ஆனால் படிப்படியாக உங்கள் பிரச்சினைகள் அனைத்தும் தீரும். ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் மாற்று மருத்துவத்தால் சரியாகும். மருத்துவ செலவுகள் குறையும். கடன்களை அடைக்க வழி கிடைக்கும்.


இந்த வாரம் -
திங்கள் - காலை நேரத்தில் அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். மதியத்திற்கு பின் அலைச்சல்கள் குறையும். எடுத்த வேலைகளை எளிதாக முடிப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும்.
செவ்வாய் - நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியாகும். வியாபார பேச்சுவார்த்தைகள் முடிவடையும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும்.
புதன் - நீண்ட நாளாக பேசி வந்த ஒரு விஷயம் இன்று நல்லபடியாக முடியும். ஒப்பந்தங்கள் போடுவீர்கள். அது ஆதாயம் தரும் விஷயமாக இருக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.
வியாழன் -வீடு மாற்றச் சிந்தனை, வாகன மாற்று சிந்தனை போன்றவை இருக்கும். பயணங்கள் ஏற்படும். ஆதாயம் தரும் ஒரு வியாபாரம் பேசி முடிப்பீர்கள்.
வெள்ளி - திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் நடக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். முக்கியமான கடன்களை அடைப்பீர்கள். அடகு வைத்த பொருட்களை திருப்புவீர்கள்.
சனி - அலைச்சல்கள் அதிகமாகும். ஆதாயம் குறையும். உறவினர்கள் வருகை இருக்கும். செலவுகள் அதிகமாக ஏற்படும்.
ஞாயிறு -ரியல் எஸ்டேட் தொடர்பான வியாபார முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். வீடு மாற்றச் சிந்தனை இருப்பவர்களுக்கு, நல்ல வீடு அமையும், சொந்த வீடு வாங்கும் முயற்சி இன்று நல்ல முடிவுக்கு வரும். நீண்ட நாளாக எதிர்பார்த்த பணம் இன்று கிடைக்கும்.


வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ அனுமனுக்கு வெற்றிலை மாலை சூட்டி வணங்குங்கள். தடைகள் அகலும், மனதில் நம்பிக்கை பிறக்கும், உதவிகள் கிடைக்கும். பணவரவு ஏற்படும்.

*****************************************************
மூலம் -
ஒரு சில விஷயங்களில் நெருக்கடிகள் அதிகமாக இருக்கும். கடன் சம்பந்தமான பிரச்சினைகள் நெருக்கடியைத் தரும். ஆனாலும் மன தைரியம் அதிகமாக இருப்பதால் எதையும் எதிர் கொள்ளும் ஆற்றல் உங்களுக்கு இருக்கும். அனைத்து பிரச்சினைகளையும் சமாளிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களை விற்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். இருந்தாலும் ஓரளவுக்கு தேவைகள் பூர்த்தி ஆகும். கடன் வாங்கவேண்டிய சூழ்நிலைகள் உருவாகும். முடிந்தவரை கடன்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இப்போது வாங்கும் கடன்கள் எதையும் திருப்பி அடைப்பதற்கு நீண்டகாலம் ஆகும். உங்கள் சூழ்நிலைகள் சரியான பின்பும் இந்தக் கடன்களை அடைப்பதற்கு அதிக காலம் ஆகும்.


உத்தியோகம் -
பணியிடத்தில் அழுத்தங்கள் அதிகமாகவும், வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்குப் போகும் எண்ணம் ஏற்படும், அவசரப்பட்டு வேலையை விட வேண்டாம். மீண்டும் வேலை கிடைப்பதற்கு அதிக சிரமம் ஏற்படும். எனவே இருக்கின்ற வேலையில் பொறுமையாக இருந்து சரியாக செய்யுங்கள். வேலையில் கவனச்சிதறல் ஏற்படும். மன அழுத்தத்தால் வேலையில் கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை உருவாகும். ஆனாலும் இதையெல்லாம் தாண்டி நிதானமாக வேலையில் கவனம் செலுத்த வேண்டும். சேவை சார்ந்த வேலை செய்பவர்கள் வேலையில் கூடுதல் அக்கறையும், கவனமும் செலுத்த வேண்டும், இல்லை என்றால் நஷ்டத்திற்கு வழிவகுக்கும், வாடிக்கையாளர்களை இழக்க வேண்டியது வரும்.


தொழில் -

தொழிலில் ஓரளவு வளர்ச்சி உண்டு. ஆனாலும் ஒரு சில நெருக்கடிகள் இருக்கும். கடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் நெருக்கடி வந்தாலும் சமாளிக்கும் ஆற்றலும் இருக்கும். கூட்டாளிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். எதிர்பார்த்த பண உதவி தள்ளிப்போகும். தொழில் வளர்ச்சிக்காக கடன் கேட்டு யாரிடமும் சொல்ல வேண்டாம். அவர்கள் உங்கள் பலவீனத்தை பயன்படுத்தி உங்களை ஏமாற்றுவார்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்கள் பொருட்களில் கவனமாக இருக்க வேண்டும். பங்கு வர்த்தக தொழில் செய்பவர்கள் முதலீடுகளில் அதிக முதலீடுகளை செய்ய வேண்டாம்.


பெண்களுக்கு -

கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். உறவினர்களிடம் பேசும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். பணம் நகை உள்ளிட்டவற்றை பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும். காணாமல் போவதற்கோ, களவு போவதற்கோ வாய்ப்பு இருக்கிறது.


மாணவர்களுக்கு -
கல்வியில் கவனம் சிதறல் ஏற்படும். வேண்டாத விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். மறதி ஏற்படும். சரியான விடையை தேர்ந்தெடுக்க முடியாமல் திணற வேண்டியது வரும். எனவே மனதை ஒரு நிலைப்படுத்தி தியானம் செய்யுங்கள்.
கலைஞர்களுக்கு - ஒரு சில வாய்ப்புகள் கிடைக்கும். வாய்ப்புகளில் பெரிய அளவு ஆதாயம் இருக்காது. நண்பர்கள் ஓரளவுக்கு உதவி செய்வார்கள்.


பொதுப்பலன் -
நெருக்கடியான நேரங்களில் தான் கடவுள் துணை வருவார். ஆலய வழிபாடும், தியானமும் உங்கள் மனதிற்கு தைரியத்தை தரும். குடும்ப பிரச்சினைகளை பெரிதாக்க வேண்டாம். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். இல்லையென்றால் பிரிவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.


இந்த வாரம் -
திங்கள் - ஆதாயம் தரும் பேச்சுவார்த்தைகள் நடக்கும். ஆதாயம் கிடைக்கும். பணவரவு இருக்கும்.
செவ்வாய் - அலைச்சல்கள் அதிகரிக்கும். உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். யாருக்கும் ஜாமீன் போடாதீர்கள். காசோலைகள் தருவதற்கு முன் நன்றாக யோசித்து பிறகு தாருங்கள்.
புதன் - ஆதாயம் தரும் ஒப்பந்தம் ஒன்று உண்டாகும். சொத்துக்கள் விற்பனை செய்ய முயல்வீர்கள். அந்த முயற்சி வெற்றி தரும்.
வியாழன் - பலவித உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றி ஆகும்.
வெள்ளி - தொலைதூர பயணம் ஏற்படும். வேலையில் இடமாற்றங்கள் ஏற்படும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும்.
சனி- குடும்பம் சார்ந்த ஒரு முக்கிய பிரச்சினைகளில் நல்லதொரு முடிவை எடுப்பீர்கள். இடமாற்றம் ஏற்படும். வீடு மாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும்.
ஞாயிறு - எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார பேச்சுவார்த்தைகள் வெற்றியாகும். ஒப்பந்தம் ஒன்று போடுவதற்கு வாய்ப்பு உண்டு.
வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ அனுமன் வழிபாடும், ஸ்ரீ விநாயகர் வழிபாடும் நன்மைகள் தரும். விநாயகர் அகவல் படிப்பது அனுமன் சாலீசா பாராயணம் செய்வதும், நன்மைகளை அதிகப்படுத்தி தரும். தடைகளை அகற்றும், பிரச்சினைகள் அனைத்தும் தீரும் வாய்ப்புகள் கிடைக்கும்.

*************************************************

பூராடம் -
பிரச்சினைகளில் இருந்து மெல்ல மெல்ல வெளியே வருவீர்கள். பொருளாதாரத்திலும் முன்னேற்றம் ஏற்படும். முக்கிய பிரச்சினைகளில் தீர்வுகள் கிடைக்கும்.ஆனால் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாது. குடும்பத்தில் தோன்றிய பிரச்சினைகள் - பூசல்கள் ஓரளவுக்கு சரியாகும். கணவன்-மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள், மனவருத்தங்கள் மெல்ல மறையும்.


உத்தியோகம் -
பணியிடத்தில் ஓரளவுக்கு அழுத்தங்கள் குறையும். கொடுத்த வேலைகளை கொஞ்சம் தாமதமானாலும் சரியாக செய்து முடிப்பீர்கள். வேறு நிறுவனத்திற்கு மாறும் முயற்சி ஓரளவுக்கு வெற்றி தரும். இப்போது இருக்கும் வேலையை அவசரப்பட்டு விடவேண்டாம். வெளிநாடு செல்லும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். சேவை சார்ந்த வேலை செய்பவர்கள் அலைச்சல் அதிகமாக இருக்கும். அதற்கு தகுந்த ஆதாயமும் கிடைக்கும். ஆனால் வீண் செலவுகள் அதிகமாக ஏற்படும். அரசு ஊழியர்களுக்கு தேவையில்லாத இடமாற்றம் ஏற்படும்.


தொழில் -
தொழில் ஓரளவுக்கு முன்னேற்றம் உண்டு. கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். ஒரு சிலர் பெரிய கடன் வேண்டி விண்ணப்பம் செய்வார்கள். அது ஓரளவுக்கு பலன் தரும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் சிறப்பாக இருக்கும். பங்கு வர்த்தக துறையில் இருப்பவர்கள் கவனமாக முதலீடுகள் செய்ய வேண்டும், அதிக முதலீடுகளை செய்ய வேண்டாம். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் பெரிய தடைகள் ஏதும் இருக்காது, ஓரளவிற்கு லாபம் கிடைக்கும். புதிதாக தொழில் செய்ய விரும்புபவர்கள், இன்னும் சில காலம் பொறுத்து இருந்தால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.


பெண்களுக்கு -
செலவுகளை கட்டுப்படுத்த முடியாது. சிக்கனமாக இருப்பது நல்லது. ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். புத்திர பாக்கியம் இல்லாத பெண்களுக்கு இப்பொழுது புத்திர பாக்கியம் கிடைக்கும். உங்களுக்கோ அல்லது உங்கள் கணவருக்கோ வேலையில் இடமாற்றம் ஏற்படும்.


மாணவர்களுக்கு -
கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆனாலும் மறதி அதிகமாக இருக்கும். இப்பொது தேர்வுகள் எழுதினால் தேர்ச்சி அடைவீர்கள்.


கலைஞர்களுக்கு -
ஓரளவு நல்ல பலன்கள் கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு.


பொதுப்பலன் -
செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். வீண் விரயங்கள் செய்யக்கூடாது. மருத்துவச் செலவுகள் குறையும். ஆனாலும் ஆரோக்கியம் பற்றிய பயம் இருந்து கொண்டே இருக்கும், குடும்பத்தில் எல்லோரிடமும் அனுசரித்துச் செல்வது நல்லது. தேவையில்லாத சச்சரவுகளை நீங்களே உருவாக்க வேண்டாம்.


இந்த வாரம் -
திங்கள் - அலைச்சல் அதிகமானாலும் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும்.
செவ்வாய் -வியாபார பேச்சுக்கள் சாதகமாக இருக்கும். தொல்லை தந்த கடன் ஒன்றை அடைக்க முயற்சி செய்வீர்கள். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.
புதன் - அலுவலகத்திலோ, தொழில் செய்யும் இடத்திலோ உங்களுக்கு சம்பந்தமில்லாத ஒரு வேலையை செய்து தர வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். அலைச்சல்கள் அதிகமாகும். ஆதாயம் பெரிதாக ஏதும் இருக்காது.
வியாழன் - எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. வியாபார பேச்சுக்கள் வெற்றியாகும். ஒரு சில ஒப்பந்தங்கள் ஏற்படலாம்.
வெள்ளி - வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியாகும். தொலைதூரப் பயணங்கள் லாபம் தருவதாக இருக்கும். இடமாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. குடும்பச் செலவுகள் அதிகமாக இருக்கும்.
சனி-
முக்கியமான பேச்சுவார்த்தைகள் நடத்துவீர்கள். வெளிநாட்டில் இருந்து நண்பர் ஒருவரால் உதவிகள் கிடைக்கும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்.
ஞாயிறு - எதிர்பார்த்த பணம் கைக்கு கிடைக்கும். வியாபார பேச்சுக்கள் சமூகமாக முடிவடையும். ஒப்பந்தங்கள் ஏற்படும். எடுத்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
வணங்க வேண்டிய தெய்வம் - அருகில் இருக்கும் காளியம்மன் ஆலயத்திற்கு செல்லுங்கள். , அம்மனுக்கு உங்களால் முடிந்த கைங்கரியம் செய்து கொடுங்கள். அன்னை உங்கள் பிரச்சினைகளை தீர்த்து தருவாள்.
**********************************************************************
உத்திராடம் -
ஆதாயம் தரும் வேலைகளை மட்டுமே செய்வீர்கள். கடன் பிரச்சினைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். எடுத்த வேலைகள் அனைத்தையும் திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். அலைச்சல்கள் இனி ஆதாயம் தருவதாகவே இருக்கும். நீண்ட நாளாக பேசி இருந்த ஒரு பேச்சுவார்த்தை இந்த வாரம் சுமூகமாக முடியும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள், வழக்குகள் உங்களுக்கு சாதகமாக மாறும். எதிர்பார்த்த பணம் எதிர்பார்த்த மாதிரியே கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் மறையும்.


உத்தியோகம் -
பணியிடத்தில் பெரிய பாதிப்புகள் ஏதும் இருக்காது. உங்களுக்கு தொல்லை தந்த ஊழியர்கள் இடம் மாறிச் செல்வார்கள். அலுவலகத்தில் உங்கள் மதிப்பு மரியாதை கூடும். எடுத்த வேலைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். இப்பொழுது உங்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படும், அதன் காரணமாக ஊதிய உயர்வு ஏற்படும். அரசு ஊழியர்களுக்கு இடமாற்றம் ஏற்படும், ஆனால் அது நீங்கள் விரும்பிய இடமாக இருக்கும். சேவை சார்ந்த வேலை செய்பவர்கள் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். சேமிப்பு அதிகமாகும். கடைகள் வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும்.


தொழில் -
இதுவரை இருந்த பிரச்சினைகள் எல்லாம் முடிவுக்கு வரும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். தொழிலை விரிவுபடுத்த வேண்டிய உதவிகள் கிடைக்கும். முதலீடுகள் கிடைக்கப்பெறுவீர்கள். அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும். அரசின் மானியங்கள் கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஏற்றுமதி இறக்குமதி தொழில் அபார வளர்ச்சி ஏற்படும். அதிக ஒப்பந்தங்களை பெறுவீர்கள். பங்கு வர்த்தக தொழில் செய்பவர்கள் ஏற்றத்தைக் காண்பார்கள். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும். கிளை நிறுவனங்கள் ஆரம்பிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.


பெண்களுக்கு -
குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். இல்லத்தில் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நடக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். வேலை இல்லாத பெண்களுக்கு இப்பொழுது நல்ல வேலை கிடைக்கும். புத்திர பாக்கியம் இல்லாத பெண்களுக்கு இப்பொழுது புத்திர பாக்கியம் கிடைக்கும்.


மாணவர்களுக்கு -

கல்வியில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும் .தேர்வுகள் எழுதினால் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். உயர்கல்வி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.


கலைஞர்களுக்கு -
நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வருமானம் இருமடங்காக இருக்கும்.


பொதுபலன் -
நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அசையா சொத்துக்களில் முதலீடு செய்யவேண்டும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். பாதியில் நின்ற கட்டிடப் பணிகள் இப்பொழுது நிறைவு பெறும்.


இந்த வாரம் -
திங்கள் -சொந்த வீடு வாங்கும் முயற்சி வெற்றி ஆகும். வியாபார பேச்சுக்கள் முடிவடையும். தொழிலுக்கான முதலீடுகள் பெறுவதற்கு வாய்ப்பு உண்டு.
செவ்வாய் - உறவினர்களுக்கோ அல்லது நண்பர்களுக்கோ உதவி செய்வீர்கள். ஆலய வழிபாடு ஏற்படும்.
புதன் - எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். வியாபார பேச்சுக்கள் ஒப்பந்தங்களாக மாறும். வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றி ஆகும்.
வியாழன் - வீண் அலைச்சல்கள் ஏற்படும். பயணங்களைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக தொலைதூரப் பயணங்களை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். செலவுகள் அதிகமாக ஏற்படும்.
வெள்ளி - எதிர்பாராத நன்மைகள் நடக்கும். பலவித உதவிகள் கிடைக்கும். ஒப்பந்தங்கள் ஏற்பட்டு ஆதாயம் கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
சனி- நீண்ட நாள் நண்பர் ஒருவரை சந்திப்பீர்கள், அவர் மூலம் ஆதாயம் தரும் ஒரு விஷயம் நடக்கும். முதலீடுகள் செய்ய பேச்சுவார்த்தைகள் செய்வீர்கள்.
ஞாயிறு -இடம் வீடு சம்பந்தப்பட்ட வியாபாரங்கள் முடிவடையும். ஒரு பெரிய கடன் ஒன்றை அடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ லட்சுமி குபேரரை வணங்கினால் செல்வ வளம் பெருகும். உங்கள் தேவைகள் பூர்த்தியாகும்.

**********************************************

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

மேலும்