இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்

சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவீர்கள்.

ரிஷபம்

குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களின் நட்பும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள்.

மிதுனம்

மனதில் நம்பிக்கை, புதிய சிந்தனைகள் தோன்றும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து பொறுப்போடு நடப்பார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.

கடகம்

எதிர்பார்த்த சில காரியங்கள் தள்ளிப்போனாலும், எதிர்பாராத ஒரு வேலை நல்லபடியாக முடியும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடு வந்து நீங்கும்.

சிம்மம்

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். இழுபறியாக உள்ள சொத்துப் பிரச்சினைக்கு சுமுக தீர்வு கிடைக்கும். பொருள் வரவு உண்டு.

கன்னி

கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். திடீர் பணவரவு உண்டு. விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள்.

துலாம்

சிக்கலான, சவாலான காரியங்களாக கையில் எடுக்காதீர்கள். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளக் கூடாது. ஆன்மிகம், தியானம், யோகாவில் ஈடுபாடு ஏற்படும்.

விருச்சிகம்

குடும்பத்தில் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. பழைய கடனைத் தீர்க்க புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். உடல்நலம், உணவுப் பழக்கத்தில் அதிக கவனம் தேவை.

தனுசு

குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். அடுத்தவர் மனநிலையை உணர்ந்து பேசும் பக்குவம் உண்டாகும். காணாமல்போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். எதிலும் நிதானம் தேவை.

மகரம்

இடையூறுகளைப் பற்றி கவலைப்படாமல் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துகொள்வார்கள். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள்.

கும்பம்

விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதியவர்களுடன் நட்பு மலரும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல சேதி வரும்.

மீனம்

பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். பணப் பற்றாக்குறையால் உறவினர்கள், நண்பர்களிடம் பணம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும்.

*********

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

மேலும்