இந்தவாரம் இப்படித்தான் - நட்சத்திரப் பலன்கள் - எந்தக் கிழமைகளில் என்னென்ன பலன்கள்?   -  (நவம்பர் 25 முதல் டிசம்பர் 1 வரை) பூரம் முதல் சுவாதி வரை

By செய்திப்பிரிவு

இந்தவாரம் இப்படித்தான் - நட்சத்திரப் பலன்கள் - எந்தக் கிழமைகளில் என்னென்ன பலன்கள்? - (நவம்பர் 25 முதல் டிசம்பர் 1 வரை) பூரம் முதல் சுவாதி வரை

ஜோதிடர் ஜெயம் சரவணன்


பூரம் -
எடுக்கின்ற முயற்சிகள் அனைத்திலும் போராடித்தான் வெற்றி பெறுவீர்கள். சோம்பல் அதிகமாக இருக்கும். ஒருவித அலட்சியம் இருக்கும். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்கிற மனோபாவம் உண்டாகும். ஆதாயம் தரும் விஷயங்கள் சற்று தள்ளிப் போகலாம். ஆரோக்கியத்தில் அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகள் வரும். மருத்துவச் செலவுகள் இருக்கும். பணியிடத்தில் பணிச்சுமை அதிகமாகும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு பிரச்சினைகள் எதுவும் இருக்காது.


உத்தியோகம் -
பணியிடத்தில் வேலைகள் அதிகமாக இருக்கும். செய்து முடித்த வேலைகளை மீண்டும் மீண்டும் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியது வரும். சக ஊழியர்கள், உயரதிகாரிகள் இவர்களிடம் தேவையில்லாத வருத்தங்கள் ஏற்படும். கவனக்குறைவால் வேலையில் தடுமாற்றம் ஏற்படும். வங்கியில் பணிபுரிபவர்கள் பணத்தை கையாளும் பொழுது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அரசு ஊழியர்கள் தங்கள் பொறுப்புகளில் அலட்சியம் காட்டவேண்டாம். இல்லையென்றால் தேவையில்லாத சர்ச்சைகள் ஏற்படும். சேவை சார்ந்த வேலை செய்பவர்கள் தங்கள் வேலைகளில் பொறுப்பை உணர்ந்து செய்ய வேண்டும். இல்லையென்றால் வாடிக்கையாளர்களை இழக்க வேண்டியது வரும். எந்த ஒரு விஷயத்தையும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடாதீர்கள்.
தொழில் -
தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டு, ஆனால் தொழிலில் நல்ல கவனம் செலுத்த வேண்டும். அலட்சியமாக இருக்கக்கூடாது. உற்பத்தி செய்யப்படும் பொருட்களில் முழு கவனம் செலுத்த வேண்டும். மற்றபடி பெரிய சிக்கல்கள் ஏதும் வராது. தொழிலுக்கு வர வேண்டிய முதலீடுகள் இயல்பாக கிடைத்துக்கொண்டே இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு பெரிய பாதிப்புகள் ஏதும் இல்லை. தொழில் இயல்பாகவே இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். ஆனால் அதை முழுமையாக படித்து அதன் பிறகு ஏற்றுக்கொள்ளுங்கள். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்கள் நிறுவனங்களின் நம்பகத் தன்மையை முழுமையாக ஆராய்ந்து, அதன் பிறகு முதலீடுகள் செய்ய வேண்டும். வியாபாரிகளுக்கு பெரிய பிரச்சினைகள் ஏதுமில்லை, வியாபார வளர்ச்சி முழுமையாக இருக்கும். வங்கிக்கடன் எதிர்பார்த்தவர்களுக்கு சற்று தள்ளிப் போகும்.
பெண்களுக்கு -
குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அடகு வைத்த பொருட்களை மீட்க வழி கிடைக்கும். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.
மாணவர்களுக்கு -
கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். புதிதாக மொழிக் கல்வி கற்பதில் ஆர்வம் ஏற்படும். அதற்கான பயிற்சி வகுப்புகளில் சேருவீர்கள். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைக்கும்.
கலைஞர்களுக்கு -

நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் ஒப்பந்தங்கள் இன்னும் சில வாரங்கள் தள்ளிப் போகும். பணவரவு ஓரளவு உண்டு.
பொதுப்பலன் -
அலட்சியமாக எதையும் கையாள வேண்டாம். பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள் போடுவது எதிலும் கவனமாக இருக்க வேண்டும். பாதியில் நின்ற வீட்டு பணிகள் முழுமையாகும். வீட்டில் சுப விசேஷங்கள் நடப்பதற்கான அறிகுறிகள் தோன்றும். திருமண முயற்சிகள் கைகூடும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் தள்ளிப் போகலாம். வழக்கு ஏதேனும் இருந்தால் அதுவும் தள்ளிப்போகும்.
இந்த வாரம் -
திங்கள் - மதியம் வரை அலைச்சல்கள் அதிகரிக்கும். மறதி உண்டாகும். முக்கியமான விஷயங்கள் தாமதமாகும். சந்திக்க வேண்டிய நபரை காலதாமதத்தால் சந்திப்பு நடக்காமல் தள்ளிப்போகும்.
மதியத்திற்கு மேல் நல்ல பலன்கள் நடக்க ஆரம்பிக்கும். காலையில் ஏற்பட்ட தடங்கல்கள் அனைத்தும் மதியத்துக்கு மேல் முழுமையாக நடைபெறும். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்.
செவ்வாய் - வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். பேச்சுவார்த்தைகள் முழுமையடைந்து மனதை திருப்தி படுத்தும். ஒப்பந்தங்கள் போடுவீர்கள். எதிர்பார்த்த கடன் கிடைக்கும்.
புதன் - தேவைகள் அதிகமாக இருந்தாலும் பண வரவு குறைவாகவே இருக்கும். அலைச்சல்கள் உண்டாகும். ஒரு முக்கியமான பொருளை தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருப்பீர்கள்.
வியாழன் - தேவையான உதவிகள் கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். கடன் சம்பந்தப்பட்ட விஷயங்கள் சுமூகமாக மாறும். கடனில் ஒரு குறிப்பிட்ட பகுதியை அடைக்க வழி கிடைக்கும். அடகுபொருட்கள் மீட்பதற்கு உதவிகள் கிடைக்கும்..
வெள்ளி - பயணங்களால் ஆதாயம் ஏற்படும். பழைய நண்பர் ஒருவரை சந்திப்பீர்கள். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றி ஆகும். பண ஆதாயம் தரும் ஒரு விஷயத்தை பேசி முடிப்பீர்கள்.
சனி- அலைச்சல்கள் அதிகரிக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும். குடும்பச் செலவுகள் மட்டுமல்லாமல், வாகனச் செலவும் ஏற்படும். ஆலய வழிபாடு செய்வீர்கள்.
ஞாயிறு - இந்த வாரம் முழுவதும் விடுபட்ட வேலைகள் அனைத்தையும், இன்றைய நாள் முடிப்பீர்கள். அது அலுவலக பணியாக இருந்தாலும் சரி, வியாபார விஷயமாக இருந்தாலும் சரி, தொழில் விஷயமாக இருந்தாலும் சரி, அனைத்தும் இன்று நல்ல முடிவை தரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த உதவி சரியான நேரத்தில் கிடைக்கும்.
வணங்கவேண்டிய தெய்வம் -
வீட்டுக்கு அருகில் இருக்கும் புற்றுள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று, அம்மனின் பாலாபிஷேகத்தை கண்குளிரப் பாருங்கள். தடைகள் தாமதங்கள் விலகும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். ஆரோக்கியம் சீராகும்.

**********************************************************
உத்திரம் -
எடுக்கின்ற முயற்சிகளில் தாமதமானாலும் வெற்றி நிச்சயம். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சினைகள் அவ்வப்போது வரும். சரியான மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது. வீடு வாங்குதல் ,வீடு விற்பனை போன்ற விஷயங்கள் நடக்கும். தாயாரின் உடல்நலம் ஒரு சில பாதிப்புகள் ஏற்படும். வெளியூர் பயணங்கள் அதிகமாக இருக்கும், சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சாதகமாக இருக்கும்.
உத்தியோகம் -
வேலையில் பெரிய பாதிப்புகள் ஏதும் இருக்காது. ஆனால் பொறுப்புகள் அதிகமாகும். அதன் காரணமாக மனச்சோர்வு ஏற்படும். வேறு நிறுவனத்திற்கு மாறும் முயற்சிகள் ஓரளவு வெற்றி தரும். இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு இப்பொழுது வேலை கிடைப்பதற்கான நேர்முகத்தேர்வு நடக்கும்.
அரசு உத்தியோகம் எதிர்பார்த்தவர்களுக்கு இப்போது நல்ல தகவல்கள் கிடைக்கும். சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு வேலைகள் அதிகமாகும், பணவரவு ஓரளவுக்கு இருக்கும். விற்பனைப் பிரதிநிதிகளுக்கு அலைச்சல் அதிகரிக்கும். ஆதாயங்கள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். கடைகள், வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வேறு வேலைக்கு முயற்சி செய்வார்கள். முயற்சி வெற்றி தரும்.
தொழில் - தொழில் நல்ல வளர்ச்சி உண்டு. எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். வழக்குகள் ஏதேனும் இருந்தால் தள்ளிப்போகும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் நல்ல லாபம் ஏற்படும். ஏற்றுமதிக்கான புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். லாபம் அதிகரிக்கும். உற்பத்தி தொழில் செய்பவர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்த முனைவார்கள். அதற்குத் தேவையான பண உதவி கிடைக்கும். புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு இந்த வாரம் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு ஏற்றம் தரும் வாரமாக இருக்கிறது. வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் பெரிய அளவில் வளர்ச்சி காண்பார்கள். தங்கள் தொழிலை விரிவுபடுத்த முதலீடு செய்வீர்கள்.
பெண்களுக்கு - சொத்து சம்பந்தமான ஒரு பிரச்சினை முடிவுக்கு வரும். ஆரோக்கிய பாதிப்புகள் உண்டு. சரியான மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். சகோதர வழியில் ஆதரவு கிடைக்கும். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும்.
மாணவர்களுக்கு - கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. தோல்வியடைந்த பாடங்களை இப்பொழுது எழுதி முடிப்பீர்கள். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைக்கும்.
கலைஞர்களுக்கு - புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வெளிநாடுகளில் வசிக்கும் நண்பர்களால் ஆதாயம் அடைவீர்கள்.


பொதுப்பலன் - ஆரோக்கியம் சம்பந்தமான விஷயங்களில் மட்டும் கவனமாக இருக்கவேண்டும். வீட்டுக்கடன் எதிர்பார்த்தவர்களுக்கு இப்பொழுது கிடைக்கும். சொத்துக்கள் வாங்குவது விற்பது சம்பந்தமான விஷயங்கள் சுமூகமாக முடிவடையும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியாகும். வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு பணி நீட்டிப்பு கிடைக்கும்.
இந்த வாரம் -
திங்கள் -
இடம் வீடு சம்பந்தமான வியாபாரப் பேச்சுவார்த்தைகள் நல்லபடியாக முடியும். ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
செவ்வாய் - அலைச்சல்கள் அதிகரிக்கும். பேச்சுவார்த்தை கடைசி நேரத்தில் நிறைவேறும். ஒரு சிலர் உங்கள் உதவியை நாடி வருவார்கள். அவர்களுக்கு நீங்கள் உதவி செய்வீர்கள்.
புதன் - கடன் சம்பந்தமான பிரச்சினை ஒன்று தீரும். வங்கியில் எதிர்பார்த்த கடன் கிடைக்கும். அடகு பொருட்களை மீட்க வழி கிடைக்கும். ஆலய வழிபாடு ஏற்படும். வியாபார பேச்சுவார்த்தைகள் வெற்றியாகும்.
வியாழன் - அவசரப்பட்டு செய்யும் காரியத்தால் அவப்பெயர் ஏற்படும். எனவே அவசரம் வேண்டாம். நிதானம் தேவை. கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். மற்றவரிடம் பேசும்போது கவனமாக பேச வேண்டும்.
வெள்ளி - வேண்டிய உதவிகள் கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். வியாபாரம் பேச்சுவார்த்தைகள் வெற்றியாகும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். அலுவலகத்தில் ஒரு முக்கியமான வேலையை இன்று செய்து முடிப்பீர்கள்.
சனி - தொலைதூரப் பயணம் ஏற்படும். வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றியாகும். நீண்ட நாளாக வராத பணம் இன்று கிடைக்கும்.
ஞாயிறு - பணவரவு தாராளமாக இருக்கும். முக்கியமான பேச்சுவார்த்தைகள் முடிவடையும். வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். தந்தை வழி உறவினர் ஒருவரை சந்திப்பீர்கள்.
வணங்கவேண்டிய தெய்வம் -
ஸ்ரீ துர்கை அம்மனுக்கு செவ்வரளி மாலை அணிவித்து நெய்தீபம் ஏற்றி வழிபடுங்கள். ஸ்ரீதுர்கை அஷ்டோத்திரம் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். ஆரோக்கிய பாதிப்புகள் குறையும், பணத்தேவைகள் பூர்த்தியாகும்.
***********************************************************

ஹஸ்தம் -
எடுத்துக் கொண்ட வேலை அனைத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும். பதவி உயர்வு தாமதமாகி கொண்டிருந்தவர்களுக்கு இப்பொழுது பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகளுக்காக சில செளகர்யங்களை செய்து கொடுப்பீர்கள். வாகன மாற்றம் ஏற்படும். வீட்டை புதுப்பித்தல் போன்ற பணிகள் செய்வீர்கள். வேலைக்குச் சென்று கொண்டிருந்தவர்கள், இப்போது சொந்தமாக தொழில் செய்ய முனைவார்கள். ஆரோக்கியத் தொல்லைகள் ஏற்படும். மருத்துவச் செலவு உண்டாகும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சுமூகமாகத் தீரும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது போன்ற விஷயங்கள் இந்த வாரம் எளிதாக முடிவடையும்.
உத்தியோகம் - பணியில் பெரிய பாதிப்புகள் ஏதும் இல்லை. கொடுத்த வேலைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு வேலை அதிகமாக இருக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். கடைகள் வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். வேறு நிறுவனத்திற்கு மாறும் முயற்சி வெற்றி தரும். இதுவரை வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். அரசு பணிக்கான தேர்வு எழுதியவர்களுக்கு இப்பொழுது நேர்முகத் தேர்வு நடந்து வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
தொழில் -
தொழிலில் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்துவதற்கான பண உதவிகள் கிடைக்கும். குறிப்பாக வங்கிக்கடன் இந்த வாரம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் அபாரமான வளர்ச்சி ஏற்படும். இதுவரை வேலைக்கு சென்று கொண்டிருந்தவர்கள் புதிதாக தொழில் செய்ய முனைவார்கள். அதற்கான வாய்ப்புகளும், உதவிகளும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டு. கிளைகளை ஆரம்பிப்பீர்கள். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு அபார வளர்ச்சி ஏற்படும், லாபம் இரட்டிப்பாக இருக்கும்.
பெண்களுக்கு -

வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். சுப விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். சகோதரருக்கு திருமணம் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. சொந்த வீடு வாங்கும் முயற்சி வெற்றி ஆகும். அதற்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.
மாணவர்களுக்கு -

கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. வேறு கல்வி நிறுவனத்திற்கு மாறும் முயற்சி வெற்றி தரும். அடுத்த ஆண்டு கல்விக்காக இந்த ஆண்டே உங்களை தயார்படுத்திக் கொள்வீர்கள்.
கலைஞர்களுக்கு -

நல்ல ஒப்பந்தங்கள் ஏற்படும். வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றியாகும். வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உங்கள் தொழில் துறை சார்ந்த பயிற்சிப் பள்ளி ஆரம்பிப்பீர்கள்.
பொதுபலன் -
ஆரோக்கியத்தைத் தவிர மற்ற எதுவும் பெரிய பாதிப்புகளைத் தராது. எனவே இந்த வாரம் பெரிய அளவில் பிரச்சினைகள் ஏதும் இருக்காது. பணத்தேவைகள் சரியான நேரத்தில் பூர்த்தியாகும். ஒரு சிலர் சொத்துக்களை விற்கவோ அல்லது வாங்கவோ முயற்சி செய்வீர்கள், அந்த முயற்சி முழு வெற்றியைத் தரும். வெளிநாடுகளில் வசிப்போர், குடியுரிமை விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு குடியுரிமை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.


இந்த வாரம் -
திங்கள் - மதியம்வரை அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். மதியத்திற்குப் பின், எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும்.வியாபார விஷயங்களில் வெற்றி ஆகும்.
செவ்வாய் - பயணங்களால் ஆதாயம் ஏற்படும். ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். மருத்துவச் செலவுகள் குறையும். வீடு,இடம் சம்பந்தப்பட்ட வியாபார பேச்சுவார்த்தைகள் வெற்றியாகும்.
புதன் -நண்பர்கள், உறவினர்கள் என பலரும் உங்களை உங்களிடம் உதவி கேட்டு வருவார்கள், நீங்களும் அவர்களுக்கு முடிந்த வரை உதவி செய்வீர்கள். அது பண உதவியாகவும் இருக்கலாம். அல்லது வேறு ஏதேனும் வகையில் உதவியாக இருக்கலாம்.
வியாழன் - கடன் சம்பந்தமான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கடனில் ஒரு பகுதியை கட்டி முடிப்பீர்கள். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். அரசு வழியில் உதவி கிடைக்கும்.
வெள்ளி - அலைச்சல்கள் அதிகமாகும். செலவுகள் ஏற்படும். வாகனப் பழுது உண்டாகும். மருத்துவச் செலவுகளும் ஏற்படும்.
சனி- நண்பர்களால் ஆதாயம் பெறுவீர்கள். வியாபார பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும். வங்கியிலிருந்து கடன் சம்பந்தமான உதவிகள் கிடைக்கும்.
ஞாயிறு - வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியாகும். தொலைபேசி வழித் தகவல் உற்சாகத்தை தரும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.
வணங்கவேண்டிய தெய்வம் -
ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் பூர்த்தியாகும். ஆரோக்கியம் மேம்படும்.

************************************************************
சித்திரை -
எடுத்த முயற்சிகளில் மட்டுமல்லாமல், எடுக்காத முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். தேவைக்கு அதிகமான பணவரவு கிடைக்கும். லாபம் அதிகமாகும். சேமிப்பு உயரும் . பாகப்பிரிவினைகள் சுமுகமாக நடக்கும். புதிய சொத்து வாங்குவீர்கள்.ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முற்றிலுமாக அகலும். எடுத்துக் கொண்ட அத்தனை வேலைகளிலும் லாபம் உண்டாகும்.
குடும்பத்தில் அமைதி நிலவும் சகோதர வழியில் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும்.
உத்தியோகம் -
வேலையில் பெரிய பாதிப்புகள் ஏதும் இல்லை. உற்சாகமாகப் பணியாற்றுவீர்கள். கொடுத்த வேலைகளை குறித்த நேரத்திற்குள் செய்து முடிப்பீர்கள். பணி இடமாற்றம் எதிர்பார்த்தவர்களுக்கு இடமாற்றம் கிடைக்கும். வெளிநாட்டில் வேலை செய்ய விரும்புபவர்களுக்கு இந்த வாரம் அதற்கான வழிவகை கிடைக்கும். சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகமாவார்கள். பணவரவும் திருப்திகரமாக இருக்கும்.
சிறு நிறுவனங்கள், வியாபாரக் கடைகளில் வேலை செய்பவர்களுக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும்.
தொழில் -
தொழிலில் அபரிமிதமான வளர்ச்சி உண்டு. தொழிலை விரிவுபடுத்தும் அத்தனை முயற்சிகளும் வெற்றியாகும். வெளிநாடுகளில் இருந்து முதலீடுகள் கிடைக்கும். உங்கள் நண்பர்கள் உங்களோடு கூட்டாகத் தொழில் செய்ய முன்வருவார்கள். புதிதாக தொழில் தொடங்கும் தொழில் முனைவோர்களுக்கு தேவையான உதவிகள், முதலீடுகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல வளர்ச்சி உண்டாகும் பங்கு வர்த்தகத் துறையில் நல்ல ஏற்றம் உண்டாகும். தரகு தொழில் செய்பவர்கள் பெரிய அளவிலான வியாபாரம் செய்து லாபம் பெறுவார்கள்.
பெண்களுக்கு -
குடும்ப ஒற்றுமை மேலோங்கும். குடும்பத்தில் ஒருவருக்கு திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புகள் உண்டு. உங்கள் பெயரில் சொத்துக்கள் வாங்குவார்கள். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். புத்திரபாக்கியம் இல்லாமல் இருந்த பெண்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும்.
மாணவர்களுக்கு -
கல்வியில் அபரிதமான முன்னேற்றம் உண்டு. தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவீர்கள். ஒரு சிலர் முதல் இடத்திற்கு வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
கலைஞர்களுக்கு -
ஒப்பந்தங்கள் தேடி அலைந்த காலம் முடிந்துவிட்டது. இப்பொழுது ஒப்பந்தங்கள் உங்களைத் தேடிவரும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டு.
பொதுப்பலன் -
வாழ்வின் அடுத்த கட்டத்திற்கான முன்னேறும் சூழல் உருவாகும். வாய்ப்புகள் பலவாறாக கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
சொந்த வீடு வாங்கும் கனவு நினைவாகும். புதிதாகத் தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியாகும். சொத்து விஷயங்கள் சுமூகமாக தீர்வு கிடைக்கும்.


இந்த வாரம் -
திங்கள் - பயணங்களால் ஆதாயம் ஏற்படும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் முழு வெற்றியை தரும். திருமண முயற்சிகள் இன்று முடிவாகும்.
செவ்வாய் - தேவையற்ற குழப்பங்கள் உருவாகும். மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம் உங்கள் கருத்துக்களை முதலில் வெளியிடாதீர்கள். முடிந்தால் உங்கள் கருத்துக்களை தெரிவிக்காமல் இருப்பதே நல்லது.
புதன் - வீடு சம்பந்தமான விஷயங்கள் நல்ல முடிவுக்கு வரும். வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். ஆதாயம் தரும் ஒப்பந்தங்கள் உண்டாகும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.
வியாழன் - தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். செலவுகள் அதிகமாக இருக்கும். குறிப்பாக வாகனச் செலவு, வீட்டு பராமரிப்புச் செலவுகள் அதிகமாக இருக்கும்.
வெள்ளி -வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். சொத்து சம்பந்தமான விஷயங்கள் சுமுகமாகப் பேசித் தீர்ப்பீர்கள். எதிர் பார்த்த பணம் கிடைக்கும்.
சனி- ஒப்பந்தங்கள் எதுவும் போட வேண்டாம், பேச்சுவார்த்தைகளை தள்ளிவைப்பது நல்லது, தொலைதூரப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும். ஆலயங்களுக்குச் சென்று வருவது மன அமைதி தரும்.
ஞாயிறு - வெளிநாடு செல்லும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். தூரத்து உறவினர் ஒருவர் உங்களை சந்திக்க வருவார், வியாபார பேச்சுவார்த்தைகள் வெற்றியாகும். எதிர்பார்த்த பணவரவு கைக்கு வந்து சேரும். நீண்ட நாளாக வராமலிருந்த தொகை இன்று கிடைக்கும்.
வணங்கவேண்டிய தெய்வம் -
ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயாருக்கு வெண்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து, நெய் தீபமேற்றி வழிபடுங்கள், நன்மைகள் அதிகமாகும், நினைத்தது நிறைவேறும்.

******************************************************************
சுவாதி -

நல்ல பலன்கள் நடைபெறும் வாரம். எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி ஆகும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் முழு வெற்றியைத் தரும். வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக காத்திருந்தவர்களுக்கு இப்போது வெளிநாட்டில் நல்ல வேலை கிடைக்கும். வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். எதிர்ப்புகள், எதிரிகள் இல்லாமல் போவார்கள். தொழிலில் இருந்த தடைகள் எல்லாம் நீங்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். எதிர்பார்த்த வங்கிக் கடன் இந்த வாரம் கிடைப்பதற்கான சூழல் இருக்கிறது.
உத்தியோகம் -
வேலையில் பெரிய பாதிப்புகள் ஏதும் இல்லை. எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். குறைந்தபட்சம் அலுவலகத்திற்குள்ளேயே இடமாற்றம் ஏற்படலாம். கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். ஊதிய உயர்வு உண்டாகும். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகமாக கிடைப்பார்கள். விற்பனைப் பிரதிநிதிகளுக்கு ஆதாயம் அதிகம் கிடைக்கும் அளவில் தங்கள் இலக்குகளை அடைவார்கள். கடைகள், வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்டு ஊதிய உயர்வும் கிடைக்கும்.
தொழில் -
தொழிலில் பெரிய அளவில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் நிறைவேறும். ஊழியர்களுக்கு சலுகைகள் செய்து கொடுத்து அவர்களை உற்சாகமாக வைத்திருப்பீர்கள்.


வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை கையாண்டு வியாபாரத்தை அதிகமாக்குவீர்கள். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்கள் அதிக லாபம் பெறுவார்கள். கமிஷன் ஏஜெண்டுகள் அதிகளவில் வியாபாரங்களை செய்து லாபம் பெறுவார்கள். புதிதாக தொழில் செய்யும் எண்ணம் உடையவர்களுக்கு அனைத்து வாய்ப்புகளும் இந்த வாரம் கிடைக்கும்.
பெண்களுக்கு - குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடக்கும். சொந்த வீடு வாங்கும் முயற்சி வெற்றி ஆகும். ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். சேமிப்பு அதிகமாகும். நிலம் சம்பந்தப்பட்ட அசையா சொத்துக்களில் முதலீடு செய்வீர்கள். திருமண முயற்சிகள் கைகூடும்.
மாணவர்களுக்கு -
கல்வியில் ஏற்பட்ட தடைகள் அகலும். கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. ஆசிரியர் ஒருவரின் உதவி கிடைக்கும். புதிய மொழி கற்கும் ஆர்வம் ஏற்படும்.
கலைஞர்களுக்கு -
நல்ல வாய்ப்புகள் தேடிவரும். ஒப்பந்தங்கள் போடுவீர்கள். நண்பர்களால் உதவி கிடைக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு இருக்கிறது.
பொதுப்பலன் -
நல்ல பலன்கள் நடைபெற உள்ளதால் உங்கள் சேமிப்புகளை அதிகப்படுத்த வேண்டும். சொத்துக்களை வாங்க வேண்டும். கடன்களை முற்றிலுமாகத் தீர்க்க வேண்டும். வழக்குகள் ஏதும் நடந்து கொண்டிருந்தால் முடிந்தவரை வழக்கு மன்றத்துக்கு வெளியே பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். பூர்வீக சொத்து விவரங்கள் விஷயங்களில் சற்று விட்டுக்கொடுத்து செல்வது உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும்.


இந்த வாரம் -
திங்கள் - எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். இடமாற்றம் உண்டு. சிறு தூர பயணம் ஏற்படும்.
செவ்வாய் - சொந்த வீடு வாங்கும் முயற்சி வெற்றி ஆகும். நீண்டநாளாக வராத பணத்தை இன்று போராடி வாங்குவீர்கள். வியாபார பேச்சுவார்த்தைகள் இன்று முடிவுக்கு வரும்.
புதன் - ஒப்பந்தங்கள் ஏற்படும். எதிர் பார்த்த பணம் கிடைக்கும். முக்கியமான கடன் ஒன்றை தீர்ப்பீர்கள். வியாபார பேச்சுவார்த்தை வெற்றியாகும்.
வியாழன் - வங்கியில் எதிர்பார்த்த வீட்டுக் கடன் கிடைக்கும். சொத்துக்களில் முதலீடு செய்வீர்கள். வியாபார பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டு ஒப்பந்தம் ஏற்படும்.
வெள்ளி - அலைச்சல்கள் அதிகரிக்கும், செலவுகள் உண்டு, உங்கள் வாகனங்களை மாற்றும் எண்ணம் உண்டாகும். ஒரு சில எதிர்பார்ப்புகள் தள்ளிப் போகலாம்.
சனி - நீண்ட நாளாக பேசியிருந்த ஒரு விஷயம் இன்று நல்ல முடிவிற்கு வரும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். உறவினர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். சகோதரர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.
ஞாயிறு - வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியாகும். வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களால் பண ஆதாயம் உண்டாகும். வீடு சம்பந்தமான விஷயங்கள் இன்று நல்ல முடிவிற்கு வரும்.
வணங்கவேண்டிய தெய்வம் - குலதெய்வ வழிபாடு அவசியம். மேலும் பெருமாள் ஆலயத்தில் இருக்கும் சக்கரத்தாழ்வாருக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும். ஒரு சில தடைகளும் காணாமல் போகும். பணவரவு மனநிறைவைத் தரும்.

********************************************************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

மேலும்