இந்தவாரம் இப்படித்தான் - நட்சத்திரப் பலன்கள் - எந்தக் கிழமைகளில் என்னென்ன பலன்கள்?   -  (நவம்பர் 25 முதல் டிசம்பர் 1 வரை) அஸ்வினி முதல் மிருகசீரிடம் வரை

By செய்திப்பிரிவு

ஜோதிடர் ஜெயம் சரவணன்

அஸ்வினி -
நன்மைகள் அதிகமாக நடைபெறும் வாரம் . எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். நல்ல நிறுவனங்களில் வேலை கிடைக்கும். முக்கிய கடனை அடைப்பீர்கள். திருமண முயற்சிகள் கைகூடும். சொத்துக்கள் சம்பந்தமான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாகும். பத்திரப் பதிவு செய்வீர்கள். சொந்த வீடு வாங்குதல் போன்றவை நடக்கும்.

உத்தியோகம் -
பணியில் அழுத்தங்கள் ஏதும் இருக்காது., எதிர்பார்த்த பதவி உயர்வு இப்போது கிடைக்கும். அதேபோல எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். அலுவலகத்தில் இருந்து வரவேண்டிய நிலுவைத் தொகை வரும். குடும்பத் தேவைக்காக அலுவலகத்திலேயே கடன் பெறுவீர்கள்.
சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு சிறப்பான வேலைகளும், அதன் மூலம் வருமானமும் இரட்டிப்பாக கிடைக்கும். ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள் போன்றவர்களுக்கு ஏற்றம் தரும் வாரம் இது.
தொழில் -
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வளர்ச்சியை நோக்கிப் போகும். கடன் சுமைகள் குறையும். நிறைய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிதாக தொழில் தொடங்கும் தொழில் முனைவோர்களுக்கு, இப்போது தொழில் தொடங்கும் நேரம் ஆரம்பித்துவிட்டது. பங்கு வர்த்தகத் துறையில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் மிகப் பெரிய திருப்புமுனை ஏற்படும். வியாபாரிகள், கமிஷன் ஏஜெண்டுகள் அனைவருக்கும் மிக சிறப்பான வருமானம் கிடைக்கும் வாரமாக இருக்கும்.
பெண்களுக்கு -
இதுவரை வேலை இல்லாமல் இருந்த பெண்களுக்கு இப்பொழுது நல்ல வேலை கிடைக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். இயல்பாக சொத்து சேர்க்கை ஏற்படும். ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
மாணவர்களுக்கு -
கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. ஒரு சில தடைகள் ஏற்பட்டு இருக்கும். அந்தத் தடைகளை தாண்டி இப்பொழுது கல்வியில் சாதனை படைப்பீர்கள்.
கலைஞர்களுக்கு -
எதிர்பாராத இடத்தில் இருந்து அழைப்பு வரும். அதனால் ஒப்பந்தமும் உண்டாகும். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.
பொதுப்பலன் -
எடுத்துக் கொண்ட அத்தனை காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். அதிக முயற்சி இல்லாமலேயே பல விஷயங்கள் உங்களுக்கு சாதகமாகும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும், குழந்தைகளின் மருத்துவச் செலவு உண்டு. வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். எழுத்துத் துறை சார்ந்தவர்கள், பதிப்பகம் நடத்துபவர்கள், பத்திரிக்கைத் துறையில் இருப்பவர்கள் இவர்களுக்கெல்லாம் நல்ல பலன்களும் நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும்.

இந்த வாரம் -
திங்கள் -
இன்று மதியத்திற்கு மேல் நல்ல பலன்கள் நடக்கும். ஆதாயம் கிடைக்கும் ஒரு செயலைச் செய்வீர்கள். ஒப்பந்தங்கள் உண்டாகும். பேச்சுவார்த்தைகள் நடத்தி வெற்றி காண்பீர்கள்.
செவ்வாய் - இன்று மதியம்வரை நல்ல பலன்கள் நிறைய நடக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் முழு வெற்றியோடு முடிப்பீர்கள். மதியத்திற்கு மேல் சலிப்பும், உடல் அசதியும் இருக்கும்.
புதன் - மதியம் 3 மணி வரை எதிலும் ஆர்வம் இருக்காது. ஒரு சலிப்பும் ஆயாசமும் இருக்கும். விரக்தியான மனநிலையில் இருப்பீர்கள். 3 மணிக்கு மேல் நீங்களே எதிர்பாராத அளவுக்கு உற்சாகம் உண்டாகும். அதன் பிறகான வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.
வியாழன் - காலையிலேயே சுறுசுறுப்பாக பணியாற்றுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் எளிதாக முடிப்பீர்கள்.
வெள்ளி - எதிர்பார்த்த பணவரவுகள் கிடைக்கும். வங்கிக் கடன் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு, இடம் வீடு சம்பந்தமான விஷயங்கள் நல்லபடியாக பேசி முடிப்பீர்கள்.
சனி- குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தினரோடு வெளியே சென்று வருவீர்கள். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் கிடைக்கும்.
ஞாயிறு - மதியம் வரை நல்ல பலன்கள் நடக்கும். ஒப்பந்தங்கள் போடுவீர்கள். பேச்சுவார்த்தைகளை எளிதாகப் பேசி முடிப்பீர்கள். ஆதாயம் தரும் விஷயம் ஒன்று நடைபெறும். கிடைக்கின்ற தகவல் மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.
மாலை நேரத்தில் மனதை வருத்தும் விஷயங்கள் நடக்கும். பொறுமையும் நிதானமும் தேவை. பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
நவக்கிரகத்தில் இருக்கும் செவ்வாய் பகவானுக்கு சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி, விளக்கு ஏற்றி வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும். தடைகள் அகலும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

***************************************************************************************************************

பரணி -
இதுவரை கேட்டும் கிடைக்காத பணம், இப்போது கேட்காமலேயே கிடைக்கும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் முழுமையாக முடியும். முயற்சிகளில் வெற்றியும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். பயணங்களால் லாபம் ஏற்படும்.குடும்பத்தில் சுப விசேஷங்கள் நடக்கும். மாமன் வகை உறவுகளால் ஆதாயம் ஏற்படும். ஆனால் சகோதர வழியில் சில வருத்தங்களையும் சங்கடங்களையும் சந்திக்க வேண்டியிருக்கும்.
உத்தியோகம் -
வேலையில் சுமுகமான நிலையே தொடர்கிறது . ஊழியர்களுடன் இணைந்து ஒரு பணியை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கொடுக்கப்பட்ட வேலையை இந்த வாரம் செய்து முடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். இடம் மாற்றம் வேண்டி விண்ணப்பித்திருந்தவர்களுக்கு, இப்பொழுது அந்த விண்ணப்பம் ஏற்கப்பட்டு இடம் மாற்றத்திற்கான உத்தரவு கிடைக்கும். சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும், புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். விற்பனைப் பிரதிநிதிகளுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படும், அதற்கேற்றார்போல ஊதிய உயர்வும் கிடைக்கும்.
தொழில் -
தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு. வியாபார விஷயமாக வெளிநாடு சென்று வருவீர்கள். அங்கு பல ஒப்பந்தங்கள் ஏற்படும். வெளிநாட்டில் இருந்து உதவிகள் கிடைக்கும். உங்கள் நிறுவனம் சார்ந்த ஒரு புதிய தொழிலைத் தொடங்குவீர்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் ஏற்படக்கூடிய வாரம் . தங்கள் கடையை விரிவுபடுத்தும் எண்ணம் உருவாகும். அதை செயல்படுத்த இந்த வாரம் முயற்சி எடுப்பீர்கள். பங்கு வர்த்தகத் துறையில் நல்ல வளர்ச்சி முன்னேற்றம் உண்டு. கமிஷன் ஏஜெண்டுகள் பெரிய வியாபாரம் செய்து லாபம் கிடைக்கப் பெறுவார்கள். நிதி நிறுவனம் நடத்தி வருபவர்கள் இதுவரை வசூல் ஆகாத பணத்தை வசூல் செய்வார்கள்.
பெண்களுக்கு -
சொந்த வீடு கனவு நனவாகும். வீடு மாற்றம் செய்வீர்கள். வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். வேலைக்காக பல நேர்முகத் தேர்வுகளை சந்தித்தவர்கள், இந்த வாரம் வேலைக்கான அழைப்பு கிடைக்கும்.
மாணவர்களுக்கு -
கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்வி முயற்சிகள் வெற்றியாகும்.


கலைஞர்களுக்கு -
நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பெரிய மனிதர் ஒருவரை சந்திப்பீர்கள், அவரால் ஆதாயம் கிடைக்கும். நண்பர்கள் தேடி வந்து உதவி செய்வார்கள்.
பொதுப்பலன் -
நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சரியாக பயன்படுத்தினால் அது வெற்றியாக மாற்றலாம். பணவரவு திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். சொந்த வீடு வாங்கும் முயற்சியில் வெற்றி ஆகும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும், அதற்காக மருத்துவ செலவுகள் செய்வீர்கள். சகோதர வழியில் வருத்தங்கள் ஏற்படும். விட்டுக் கொடுத்து சென்றால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது.
இந்த வாரம் -
திங்கள் - மதியம் வரை அலைச்சல் அதிகமாக இருக்கும். சம்பந்தம் இல்லாத விஷயங்களில் ஈடுபட்டு நேரத்தை வீணடிப்பீர்கள். மதியத்திற்குப் பிறகு எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். நீண்ட நாட்களாக வராத கடன் வசூல் ஆகும்.
செவ்வாய் - மதியம் 3 மணி வரை அனைத்தும் வெற்றிகரமாக இருக்கும். ஆதாயம் தரும் வேலைகளை மட்டும் செய்வீர்கள். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். மூன்று மணிக்கு மேல் நண்பர்களுக்கு உதவி செய்வீர்கள். அவர்களின் வேலைகளை நீங்கள் செய்து கொடுப்பீர்கள்.
புதன் - மதியம் 2 மணிவரை வீண் அலைச்சல் இருக்கும். சந்திக்க வேண்டியவரை காலதாமதத்தால் சந்திக்க முடியாமல் ஏமாற்றம் அடைவீர்கள். மதியம் 2 மணிக்கு மேல் எடுத்துக் கொண்ட வேலைகள் அனைத்தையும் சுலபமாகச் செய்து முடிப்பீர்கள். உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும்.
வியாழன் -எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். இடம், பூமி சம்பந்தப்பட்ட வியாபாரம் நல்லபடியாக முடியும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும்.
வெள்ளி - பயணங்களால் ஆதாயம் உண்டு. குடும்பத்தோடு ஆலயங்களுக்குச் சென்று வருவீர்கள். எதிர்பார்த்த ஒப்பந்தம் ஒன்று நிறைவேறும்.
சனி- வெளிநாடு செல்லும் முயற்சி நிறைவேறும். உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். குழந்தைகளால் செலவு ஏற்படும்.
ஞாயிறு - திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும். ஒப்பந்தங்கள் போடுவீர்கள். நீண்ட நாளாக முடியாத ஒரு விஷயம் இன்று நல்ல முடிவிற்கு வரும்.
வணங்கவேண்டிய தெய்வம் -
மகா விஷ்ணுவுக்கு துளசி மாலை சாற்றி வழிபட நன்மைகள் கூடும். தேவைகள் பூர்த்தியாகும். மன நிறைவு உண்டாகும்.

************************************************************************************************

கார்த்திகை -
வார துவக்கத்திலேயே நல்ல பலன்கள் நடக்கும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். வழக்குகள் தள்ளிப்போகும். குடும்ப செலவுகள் அதிகமாகும். சுப விசேஷங்களுக்கு சென்றுவருவீர்கள். குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு திருமணம் உள்ளிட்ட, சுபகாரியங்கள் நடப்பதற்கு வாய்ப்பு உண்டு.
வேலையில் இருந்த பிரச்சினைகள் விலகும் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
உத்தியோகம் -

பணியிடத்தில் எந்த பிரச்சினைகளும் இருக்காது. கடந்த சில நாட்களாக இருந்த பிரச்சினைகளும் நல்ல முடிவுக்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு வேலைகள் பல கிடைத்து, பணவரவு தாராளமாக இருக்கும். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும்.
கடைகள், சிறு நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு இந்த வாரம் பிரச்சினைகள் ஏதும் இருக்காது. வேலையில் அழுத்தம் என்று எதுவும் இருக்காது. மகிழ்ச்சியாகவும் , கலகலப்பாகவும் இந்த வாரம் இருக்கும்.


தொழில் -
தொழிலில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வங்கிக்கடன் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. நீண்ட நாளாக எதிர்பார்த்த ஒரு ஒப்பந்தம் இப்போது உண்டாகும். தொழிலுக்கு முதலீடுகள் கிடைக்கும். பங்கு வர்த்தகத் துறையினருக்கு நஷ்டங்களில் இருந்து வெளியே வருவார்கள். லாபங்கள் உண்டாகும். மொத்த வியாபாரிகள், சிறு வியாபாரிகள் இவர்களுக்கெல்லாம் கடந்த சில நாட்களாக இருந்த மந்தநிலை மாறி வியாபாரம் வளர்ச்சி பெறும்.
பெண்களுக்கு -
சகோதர வழியில் ஆதாயம் ஒன்று ஏற்படும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பதவி உயர்வு உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும். கடன் உள்ளிட்ட பிரச்சினைகளைத் தீர்க்க வழி கிடைக்கும்.
மாணவர்களுக்கு -
கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தோல்வியடைந்த பாடங்களை இப்பொழுது எழுதி முடிப்பீர்கள்.
கலைஞர்களுக்கு -
வார துவக்கத்தில் சில நன்மைகள் நடக்கும். பணவரவு எதிர்பார்க்கலாம். நண்பர்கள் உதவுவார்கள்.
பொதுப்பலன் -
பிரச்சினைகள் பல இருந்தாலும் அதையெல்லாம் சமாளிக்கும் சக்தி கிடைக்கும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடப்பதால், பெரிய அளவில் பாதிப்புகள் ஏதும் இருக்காது. சரியாக திட்டமிட்டு வேலைகளை செய்தால் வெற்றி பெறும் வாரமாக இந்த வாரம் இருக்கும். .சகோதரர்கள் உதவி செய்வார்கள். ஒரு பெரிய கடனை அடைத்து மன நிம்மதி பெறுவீர்கள்.

இந்த வாரம் -
திங்கள் - ஆதாயம் தரும் ஒரு விஷயத்தை எளிதாக செய்து முடிப்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும். தாய்வழி உறவுகளால் நன்மைகள் நடைபெறும்.
செவ்வாய் - தொலைதூரப் பயணம் ஏற்படும். அதிக ஆதாயம் குறைவு. ஆனால் ஒரு வேலையை செய்து முடித்தோம் என்ற மன திருப்தி கிடைக்கும்.
புதன் - ஓரளவு நன்மைகள் நடைபெறும். மனதில் குழப்பங்கள் ஏற்படும். தாமதமாக சில விஷயங்களை செய்து முடிப்பீர்கள்.
வியாழன் - அலைச்சல்கள் அதிகரிக்கும். தேவையில்லாமல் மற்றவர்களின் மேல் எரிந்து விழுவீர்கள். ஏதாவது ஒரு பொருளை தொலைப்பதற்கு வாய்ப்பு உண்டு. செலவுகள் அதிகமாக இருக்கும். திட்டமிட்ட காரியங்கள் தள்ளிப் போகும்.
வெள்ளி - தடைபட்ட விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும். மனதில் பதட்டம் குறையும். அலுவலகத்தில் நின்றுபோன வேலைகளை செய்து முடிப்பீர்கள். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் தள்ளிப்போகும்.
சனி - எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரவு திருப்தி தரும். கடன் ஒன்றை அடைப்பீர்கள். வங்கியில் எதிர்பார்த்த கடன் பற்றி நல்ல தகவல் கிடைக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு.
ஞாயிறு - எடுத்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணவரவு திருப்தி தரும். நீண்ட நாளாக நடந்து வந்த ஒரு பேச்சுவார்த்தை இன்று நல்ல முடிவிற்கு வரும்.
வணங்கவேண்டிய தெய்வம் -
நவக்கிரகத்தில் இருக்கும் சூரிய பகவானுக்கு விளக்கேற்றி வழிபடுங்கள். ஆதித்ய ஹிருதயம் கேளுங்கள், நன்மைகள் அதிகமாகும். தடைகள் அகலும். மன உறுதி உண்டாகும்.

***********************************************************************************************************


ரோகிணி -
மனதில் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் சிரித்த முகத்துடன் அதை எதிர்கொள்வீர்கள். இந்த வாரம் பலவிதமான உதவிகள் கிடைக்கும். நினைத்த காரியங்கள் வெற்றியாகும் முயற்சிகள் வெற்றியைத் தரும். பணவரவு தேவைக்கு தகுந்தாற்போல் கிடைக்கும். குடும்பத்தினருக்காக சில முக்கிய செலவுகளை செய்கிறீர்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கித் தருவீர்கள் நண்பர்களால் உதவி கிடைக்கும். எதிர்ப்புகள் வழக்குகள் எல்லாம் போகும். ஒரு பெரிய வியாபார ஆதாயம் கிடைக்கும்

உத்தியோகம் -
கடந்த சில நாட்களாக இருந்த அழுத்தங்கள் இப்போது குறையும். வேலையில் பெரிய பிரச்சினைகள் ஏதும் ஏற்படாது. ஒரு சிலருக்கு திடீரென ஊதிய உயர்வு கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களைப்பற்றிய தப்பான அபிப்ராயம் மாறும். சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு வருமானம் இருமடங்காக இருக்கும். வணிக நிறுவனங்கள், கடைகளில் வேலை செய்பவர்களுக்கு வேறு நிறுவனங்களுக்கு மாறுவதற்கும், பதவி உயர்வு கிடைப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. தொழில் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பில் சலுகைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
தொழில் -
தொழிலில் ஓரளவு வளர்ச்சி ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் தள்ளிப்போகும். வங்கிக்கடன் மேலும் சில நாட்கள் தள்ளிப் போகலாம். வியாபாரிகளுக்கு ஓரளவு வளர்ச்சி உண்டு. வியாபாரத்தில் புதிய முயற்சிகளை எடுக்க திட்டம் போடுவீர்கள். கமிஷன் ஏஜென்டுகள் ஓரளவுக்கு வருமானம் பார்ப்பார்கள். பங்கு வர்த்தகத் துறையினருக்கு நஷ்டங்களில் இருந்து வெளியே வருவார்கள். ஓரளவு லாபம் தரக்கூடிய வர்த்தகம் செய்வார்கள்.
பெண்களுக்கு -
பெரிய எதிர்பார்ப்புகள் எதையும் வைத்துக்கொள்ள வேண்டாம். தேவைகளை சுருக்கிக் கொள்ளுங்கள். சகோதரத்தால் ஓரளவு ஆதாயம் கிடைக்கும். பணத் தேவைகள் அதிகமாக இருந்தாலும் ஓரளவு பூர்த்தியாகும்.


மாணவர்களுக்கு -
கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். ஆசிரியர் ஒருவரின் வழிகாட்டுதல் கிடைக்கும்.

கலைஞர்களுக்கு -
பணத்தேவைகள் பூர்த்தியாகும். ஒரு சில ஒப்பந்தங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

பொதுப்பலன் -
தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிடாமல் இருந்தாலே போதும். பெரிய பாதிப்பு ஏதும் இருக்காது. சிக்கனமாக இருக்க வேண்டும். இந்த வாரத்திற்கான சில திட்டங்களை வகுத்து செயல்பட்டால் பெரிய பாதிப்புகள் ஏதும் இருக்காது. உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். எதிர்பார்த்த நண்பரின் உதவி தள்ளிப் போகலாம்.

இந்த வாரம் -

திங்கள் - மதியம் வரை அலைச்சல்கள் அதிகமாகும். மதியத்திற்குப் பிறகு ஓரளவுக்கு நன்மைகள் நடக்க ஆரம்பிக்கும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்.

செவ்வாய் - வருமானம் அதிகரிக்கும். வியாபார சிந்தனைகள் உருவாகும். தொழில் வளர்ச்சியில் அக்கறை காட்டுவீர்கள். எதிர்பார்த்த கடன் கிடைக்கும்.

புதன் -நண்பர்களிடமிருந்து உதவி கிடைக்கும். உறவினர்கள் வகையில் செலவு ஏற்படும். வீண் அலைச்சல் ஏற்படும்.
வியாழன் - நீண்டநாள் பேசிவந்த ஒரு வியாபாரம் இன்று முடிவுக்கு வரும். ஒப்பந்தங்கள் போடுவீர்கள். கடன் சார்ந்த ஒரு விஷயம் நல்ல முடிவுக்கு வரும்.
வெள்ளி - வரவும் செலவும் சமமாக இருக்கும். தேவையில்லாத விஷயங்களுக்காக அதிக மெனக்கெடுவீர்கள். மருத்துவச் செலவு ஏற்படும்.
சனி - சகோதர வழியில் ஒரு ஆதாயம் ஒன்று ஏற்படும். இடம் வீடு சம்பந்தமான விஷயங்கள் சுமுகமான முடிவை எட்டும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான விஷயங்கள் பேசி முடிக்கப்படும். நீண்ட நாள் பிரச்சினை ஒன்று தீர்வுக்கு வரும்.
ஞாயிறு -புதிய நட்பு ஒன்று அறிமுகமாகும், அவரால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். திருமண முயற்சிகள் நல்ல முடிவை எட்டும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வெளிநாட்டில் இருந்து ஒரு நல்ல தகவல் வரும்.


வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்திற்கு தேவையான கைங்கரியங்களைச் செய்துகொடுங்கள். நன்மைகள் அதிகமாகும். பிரச்சினைகள் தீரும். வருமானம் அதிகரிக்கும்.

******************************************************************************************************************************


மிருகசீரிடம் -
பிரச்சினைகள் வரிசையாக இருந்தாலும், அதையெல்லாம் எதிர்கொள்ளும் சாமர்த்தியம் இருக்கும் . பணத்தேவைகள் பூர்த்தியாகும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு ஓரளவு வெற்றி காண்பீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உதவிக்கு வரமாட்டார்கள். குடும்பத்தில் தேவையில்லாத சர்ச்சைகள் உருவாகும். பொறுமையாக இருந்து சரி செய்வீர்கள், ஆனால் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது. எதிர்பார்த்த பெரிய கடன் உதவி தள்ளிப் போகலாம். மருத்துவச் செலவுகள் உண்டு. ஆரோக்கியத்தை சீராக வைத்துக் கொள்ளுங்கள்.


உத்தியோகம் -
வேலையில் பெரிய மாற்றங்களோ, பிரச்சினைகளோ இல்லை. சுமுகமாகவே இருக்கும். அலுவலக நண்பர்கள் உதவிக்கு வர மாட்டார்கள். வேலைப்பளு அதிகமாக இருப்பதால் மன அழுத்தம் ஏற்படும், தியானம் யோகா போன்றவை செய்வது நல்லது. வேலையை விட்டுவிட்டு போகும் எண்ணமும் ஒரு சிலருக்கு ஏற்படும். இப்போதைக்கு எந்த அவசரமும் காட்ட வேண்டாம். சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு வேலைகள் அதிகமாகும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்காது. கடைகள் வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் கவனமாக பொருட்களை கையாள வேண்டும். வீண் விவாதங்கள் அரட்டைகள் இருக்கக்கூடாது.


தொழில் -
தொழிலில் மந்த நிலையே தொடர்கிறது . புதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம். பணவரவு ஓரளவுக்கு இருக்கிறது. ஊழியர்களின் ஒத்துழைப்பும் ஓரளவுக்கு இருக்கும். இயந்திர பழுதுகள், மற்றும் தொழில் சார்ந்த செலவுகள் அதிகமாக இருக்கும். கடன் கேட்டு பல இடங்களுக்கும் செல்ல வேண்டியது வரும். வங்கிக்கடன் தாமதமாகும். புதிதாக தொழில் தொடங்கும் எண்ணம் உடையவர்கள் இன்னும் காலம் இருக்கிறது, எனவே காத்திருங்கள். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்கள் கவனமாக தங்கள் முதலீடுகளைச் செய்ய வேண்டும், குறைந்த அளவிலேயே முதலீடுகள் இருக்கவேண்டும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் மந்த நிலை தொடர்வதை நினைத்து கவலைப்படுவார்கள், இது அனைத்தும் இன்னும் சிலகாலம் தான், எல்லாம் விரைவில் சரியாகும்.


பெண்களுக்கு -
நாம் நினைத்தது நிறைவேறவில்லையே என்ற ஆதங்கம் இருக்கும். கடன் பிரச்சினைகள் கவலைதரும். குடும்பத்தின் எதிர்காலம் எதிர்காலத்தை நினைத்து மனம் வேதனைப்படும். உறவினர்களிடம் பேசும்போது வார்த்தைகளைக் கவனமாக கையாள வேண்டும். பொறுமை மிகவும் நல்லது.


மாணவர்களுக்கு -

கல்வியில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும். ஒரு சிலருக்கு கல்வியில் வெறுப்பு நிலை உண்டாகும், பொறுமை அவசியம், நிதானம் தேவை.


கலைஞர்களுக்கு -

காத்திருங்கள். நல்ல காலம் விரைவில் வருகிறது, அதுவரை பொறுமை அவசியம். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவுகளையும் எடுக்க கூடாது. பொறுமையாக இருந்தால் பெரிய சாதனைகளை செய்யலாம் .


பொதுப்பலன் -


மருத்துவச் செலவுகள் ஏற்படும். ஆரோக்கிய பாதிப்புகள் கவலை தரும். ஆனால் பெரிய அளவில் பிரச்சினைகளோ பாதிப்புகளும் ஏற்படாது. பணத்தேவைகள் ஓரளவுக்கு பூர்த்தியாகும். எதிர்காலம் பற்றிய கவலை இருக்கும். விரைவில் இந்த கடினமான நிலையிலிருந்து வெளியே வருவீர்கள். குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்லுங்கள். யாருக்கும் வாக்குக் கொடுக்காதீர்கள். அதேபோல் யாருக்கும் ஜாமீன் தராதீர்கள்.


இந்த வாரம் -


திங்கள் - தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும். பணவரவு மனநிறைவைத் தரும். எதிர்பார்த்த கடன் கிடைக்கும். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிப்பீர்கள்.


செவ்வாய் - அலைச்சல்கள் அதிகரிக்கும், தேவையில்லாத பிரச்சினைகள் தேடி வரும், அமைதியாக இருப்பது நல்லது. வேண்டாத விஷயங்களில் தலையிட வேண்டாம்.


புதன் - சொத்து சம்பந்தமான ஒரு பிரச்சினை முடிவுக்கு வரும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வேலை மாறுதல் சம்பந்தமான ஒரு சிந்தனை தோன்றும். சரியான வாய்ப்பாக இருந்தால் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


வியாழன் -பயணங்கள் ஏற்படும், அலைச்சல்கள் அதிகரிக்கும். வாகனச் செலவு ஏற்படும். வீட்டு பொருட்கள் பராமரிப்பு செலவுகள் உண்டாகும்.


வெள்ளி - எதிர்பார்த்த ஒரு விஷயம் முடிவுக்கு வருவது போல் வந்து தள்ளிப்போகலாம். வியாபார விஷயமாகப் பேசுவது இன்று ஓரளவு சாதகத்தைத் தரும். எதிர்பார்த்த பணம் குறைவாக கிடைக்கலாம்.


சனி - அடுத்தவர் விஷயங்களில் தலையிடாதீர்கள். உங்கள் கருத்துக்களை மற்றவர்கள் மீது திணிக்காதீர்கள். அலுவலகத்தில் கூட உங்கள் கருத்துக்களை முதலில் வைக்காதீர்கள். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும்.


ஞாயிறு - வெளி வேலைகள் எதையும் எடுத்துக் கொள்ள வேண்டாம். வீட்டில் இருப்பவர்களுடன் மனம் விட்டுப் பேசுங்கள். ஒரு சில பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். குடும்பத்தினரின் தேவைகள் என்ன என்பதை தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும். பணவரவு எதையும் எதிர்பார்க்க வேண்டாம்.


வணங்கவேண்டிய தெய்வம் -
கால பைரவர் வழிபாடு நன்மையைத் தரும். எதிர்ப்புகளைக் காணாமல் போகச் செய்யும். வழக்குகளை தள்ளி வைக்கும். மனதில் நம்பிக்கை பிறக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.

**************************************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

மேலும்