இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: பொதுக்காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களால் ஆதாயம் உண்டு. கலைப்பொருட்கள் சேரும்.

ரிஷபம்: அலைச்சல், டென்ஷன் இருக்கும். ஆங்காங்கே பகை உணர்வு தலைதூக்கும். சிலரின் நட்பை முன்கோபத்தால் இழக்க நேரிடும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

மிதுனம்: குடும்பத்தில் சின்ன சின்ன விவாதங்கள் ஏற்படக் கூடும். சகோதரர்களின் செயல்பாடு டென்ஷனை ஏற்படுத்தும். மறைமுக எதிர்ப்புகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.

கடகம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்துவீர்கள். முகப்பொலிவுடன் காணப்படுவீர்கள். பாதியில் நின்றுபோன சில காரியங்கள் இன்று முடியும்.

சிம்மம்: சோம்பல், களைப்பு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். எங்கு சென்றாலும் மதிப்பு, மரியாதை கூடும். புதிய வாகனம் வாங்குவீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும்.

கன்னி: எதிலும் வெற்றி, மகிழ்ச்சி உண்டு. பணவரவு திருப்திகரமாக இருக்கும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். சேமிக்கும் எண்ணம் வரும்.

துலாம்: பிள்ளைகளுக்கு வீண் அலைச்சலும், ஆரோக்கிய குறைவும் வந்து போகும். எதிர்பாராத செலவுகள், அடுத்தடுத்த பயணங்கள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள்.

விருச்சிகம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முக்கிய காரியங்களில் நிதானமுடன் செயல்படுவது நல்லது.

தனுசு: நினைத்த காரியங்கள் சுலபமாக நிறைவேறும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். கல்யாண பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். பால்ய நண்பர் தக்க சமயத்தில் உதவுவார்.

மகரம்: வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். வீடு வாங்குவது, விற்பது எதிர்பார்த்த விலைக்கு முடியும்.

கும்பம்: விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும்.

மீனம்: நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி கிட்டும். பணவரவு திருப்தி தரும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

16 hours ago

ஜோதிடம்

16 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்