மேஷம்: ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய காரியங்களைக்கூட பலமுறை அலைந்து முடிப்பீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். திடீர் பயணம் உண்டு.
ரிஷபம்: யாருக்காகவும் சாட்சி கையெழுத்திடவோ, உத்தரவாதம் தரவோ வேண்டாம். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். அடுத்தடுத்த செலவுகளால் சேமிப்பு கரையும்.
மிதுனம்: நீண்டநாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். கொடுக்கல் - வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். கலைப்பொருட்கள் சேரும்.
கடகம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். வாகனம் செலவு வைக்கும்.
சிம்மம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். குடும்பத்தாரின் ஆதரவு அதிகரிக்கும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும்.
கன்னி: உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுப்பது நல்லது. முன்கோபத்தை குறையுங்கள். உங்களுடைய பலம், பலவீனத்தை உணர்ந்து செயல்படுங்கள். பணவரவு உண்டு.
துலாம்: குடும்பத்தினருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். பால்ய நண்பரை சந்தித்து மகிழ்வீர்கள்.
விருச்சிகம்: மனதில் நிலவிய குழப்பங்கள் நீங்கும். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்து செல்வீர்கள். விருந்தினர்களின் வருகை உண்டு. பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
தனுசு: குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் ஏற்படும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். சோம்பல், உடல் அசதி, நீங்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பீர்கள்.
மகரம்: பரபரப்புடன் காணப்படுவீர்கள். வீண் ஆடம்பரங்களைத் தவிர்த்து எளிமையாக வாழ விரும்புவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணவரவு திருப்தி தரும்.
கும்பம்: கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். கடன் பிரச்சினை தீரும்.
மீனம்: பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு எதிர்பாராது நிகழும்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago