ஜோதிடர் ஜெயம் சரவணன்
திருவோணம் -
நல்ல நேரம் இருக்கும் போதே வாழ்க்கைக்குத் தேவையானவற்றை சேர்த்துக்கொள்ளவேண்டும். அதை வைத்து முன்னேறுவதற்கான மேலும் பல வழிகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அந்த நேரம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது, எனவே வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். இந்த வாரம் உங்களுக்கு சிறப்பான வாரமாக இருக்கிறது. சாதனைகளைப் புரிவீர்கள். வெற்றிகளைக் குவிப்பீர்கள்.
உத்தியோகம் - பதவி உயர்வு இப்போது கிடைக்கும். ஊதிய உயர்வும் உண்டாகும். தலைமைப்பதவி கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது, அல்லது குழுவுக்கு தலைமை ஏற்கவும் வாய்ப்பு வரும். அலுவலக விஷயமாக அயல்நாடு சென்று பணிபுரியும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் எந்த வேலையில் இருந்தாலும் இப்பொழுது உங்களுக்கு நல்ல விஷயங்கள் நடக்கும்.உங்கள் கல்வித் தகுதிக்கு தகுந்த வேலை இப்பொழுது கிடைக்கும். ஊழியர்கள் முதல் உயரதிகாரிகள் வரை உங்கள் கருத்துக்கு மதிப்பு கொடுப்பார்கள். உங்கள் கருத்துக்கள் ஏற்கப்பட்டு செயல்படுத்தப்படும்.
தொழில் - தொழில் நல்ல வளர்ச்சியை எட்டும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அயல் நாட்டு நிறுவனத்தோடு இணைந்து தொழில் தொடங்கும் வாய்ப்பு இருக்கிறது. தொழில் நிர்வாகத்தை சிறந்த முறையில் மாற்றி அமைப்பீர்கள். நல்ல ஆலோசகர்கள் உங்கள் நிறுவனத்திற்கு வந்து சேருவார்கள். அரசின் ஆதரவு கிடைக்கும். அரசு மானியங்கள் கிடைக்கும். அரசிடமிருந்து ஒரு கவுரவம் கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு. தொழில் சார்ந்த பயணங்கள் லாபத்தைக் கொடுக்கும். ஏற்றுமதி தொழில் நல்ல வளர்ச்சி அடையும். கட்டுமானத் தொழில் இனி லாபத்தை நோக்கிச் செல்லும். ரியல் எஸ்டேட் துறையில் மெள்ள மெள்ள வளர்ச்சி அடையும். வியாபாரிகள் வளர்ச்சி காண்பார்கள். பங்கு வர்த்தகத் துறையினர் நல்ல லாபம் பார்ப்பார்கள்.
பெண்களுக்கு - குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். இது இதுவரை திருமணம் ஆகாத பெண்களுக்குத் திருமணம் நடக்கும். புத்திர பாக்கியம் இல்லாத பெண்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். புத்திர பாக்கியத்திற்காக மருத்துவச் செலவுகள் செய்து கொண்டிருப்பவர்களுக்கு இனி மருத்துவச் செலவுகள் தேவைப்படாது, இயற்கையான முறையிலேயே குழந்தை கிடைக்கும் வாய்ப்பு இப்போது இருக்கிறது.
மாணவர்களுக்கு - கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியாகும். அரசு உதவி கிடைக்கும். அரசு மானியம் கிடைக்கும். உயர்கல்விக்கான வங்கிக் கடன் கிடைக்கும்.
கலைஞர்களுக்கு - ஆதாயம் தரும் ஒப்பந்தங்கள் ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவீர்கள். உங்கள் துறை சார்ந்த பயிற்சிப் பள்ளிகள் ஆரம்பிப்பீர்கள்.
பொதுப்பலன் - காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்பது பழமொழி. அது உங்களுக்கு தான் பொருந்தும். நல்ல நேரம் நடக்கும்போதே எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளுங்கள். திருமண முயற்சிகள் கைகூடும். சொந்தவீடு கனவுகள் நனவாகும். ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். ஆரோக்கியத்தில் இருந்த குறைபாடுகள் அனைத்தும் நீங்கும். எதிர்ப்புகள், எதிரிகள் என்பதே இனி இல்லை. இந்த வாரம் பணவரவு திருப்திகரமாக இருக்கிறது.
இந்த வாரம்
திங்கள் - அலைச்சல் அதிகமாகும். ஆனாலும் ஆதாயம் கிடைக்கும். ஒரு சில எதிரிகளை அடையாளம் காண்பீர்கள்.
செவ்வாய் - அதிக நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள். அயல்நாடு செல்லும் முயற்சிகள் வெற்றியாகும். சேமிப்புகள் உயரும்
புதன் - அயல்நாட்டில் இருந்து உதவிகள் கிடைக்கும். புதிய நண்பர் ஒருவர் அறிமுகமாவார், அவருடன் இணைந்து லாபம் தரும் தொழில் ஒன்றை தொடங்குவீர்கள்.
வியாழன் - வேலை விஷயமாகவோ அல்லது தொழில் விஷயமாகவோ பயணங்கள் ஏற்படும். அலைச்சல்கள் அதிகரித்தாலும் லாபம் உண்டு. ஒப்பந்தங்கள் போடுவீர்கள்.
வெள்ளி - எடுத்த காரியங்கள் அனைத்தும் முழு வெற்றியைத் தரும். நல்ல வாய்ப்புகள் தேடிவரும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். வரவேண்டிய பாக்கிகள் எல்லாம் இன்று வசூலாகும்.
சனி- பயணங்கள் செய்ய வேண்டாம். ஒப்பந்தங்களைத் தள்ளி வையுங்கள். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.
ஞாயிறு - வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். சொந்தவீடு வாங்கும் கனவு இன்று நிறைவேறும். அது சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும்.
வணங்க வேண்டிய தெய்வம் - பெருமாள் ஆலயத்தில், மகா விஷ்ணுவுக்கும் மகாலட்சுமிக்கும் வெண்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து, உங்களால் முடிந்த அபிஷேக திரவியங்கள் வாங்கி கொடுங்கள். நன்மைகள் அதிகமாகும். செல்வம் பெருகும். மனநிம்மதி உண்டாகும்.
***********************************************************************
அவிட்டம் -
நல்ல பலன்கள் உண்டாகும். இந்த வாரத்தில் ஒரு மிக முக்கியமான சம்பவம் ஒன்று உங்கள் வாழ்க்கை முறையை மாற்றியமைக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளாக இருக்கலாம் அல்லது உங்களுக்குச் சேர வேண்டிய சொத்து வகைகளாக இருக்கலாம். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தில் அமைதி நிலவும். இல்லறம் சிறக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.
உத்தியோகம் - வேலையில் எந்த பிரச்சினையும் இருக்காது. பதவி உயர்வு உள்ளிட்ட கௌரவங்கள் கிடைக்கும். அலுவலக விஷயமாக வெளியூர் அல்லது வெளிநாடு செல்ல வேண்டியது வரும். கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். அரசு ஊழியர்களாக இருந்தால் பணி இடமாற்றம் பதவி உயர்வோடு இருக்கும். உங்கள் வளர்ச்சியில் பொறாமை கொண்ட சக ஊழியர்கள் அலுவலகத்தை விட்டு வெளியேறுவார்கள். சேவை சார்ந்த வேலை செய்வோர் நல்ல வாய்ப்புகளைப் பெறுவார்கள். பெரிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். தற்காலிகப் பணியில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரம் கிடைக்கும்.
தொழில் - தொழில் முன்னேற்றப் பாதைக்குச் செல்லும். தடைகள் அகலும். அரசு வழி நெருக்கடிகள் காணாமல்போகும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். தொழிலை விரிவுபடுத்த புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தொழில் முதலீடுகளுக்கு அரசு உதவி, வங்கிக் கடன், முதலீட்டாளர்கள் என உதவிகள் தொடர்ச்சியாக கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் ஆர்வலர்கள் இப்போது தொழிலைத் துவக்குவார்கள். அதற்காக இடம் தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு இப்பொழுது நல்ல இடம் கிடைக்கும். வியாபாரிகள் வளர்ச்சி காண்பார்கள்.
பெண்களுக்கு - இதுவரை வேலை இல்லாதவர்களுக்கு இப்பொழுது வேலை கிடைக்கும். தற்காலிகப் பணி செய்து கொண்டிருந்தவர்களுக்கு பணி நிரந்தரமாகும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். உறவினர் வகையில் நல்ல வரன் ஒன்று அமையும்.
மாணவர்களுக்கு - கல்வியில் அற்புதமான முன்னேற்றங்கள் உண்டாகும். உயர்கல்விக்கான முயற்சிகள் இப்போது வெற்றி பெறும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள்.
கலைஞர்களுக்கு - புதிய ஒப்பந்தங்கள் உண்டாகும். திரைத்துறை சார்ந்தவர்களுக்கு பெரிய நிறுவனத்திடம் ஒப்பந்தம் உண்டாகும். நீண்டநாளாக பேசிக் கொண்டிருந்த பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடிந்து ஒப்பந்தங்கள் உண்டாகும்.
பொதுப் பலன் - கிடைக்கின்ற வாய்ப்புகள் அனைத்தும் சிறப்பாகவே இருக்கும். சரியாக பயன்படுத்தினால் வாழ்க்கைக்கான அஸ்திவாரம் உறுதியாக மாறும். பண வரவு தாராளமாக இருக்கும். சேமிப்பு அவசியம், வீண் செலவுகளைத் தவிர்க்க வேண்டும். பூர்வீகச் சொத்து விவகாரங்கள் சுமூகமாக முடியும். ஆரோக்கியத் தொல்லைகள் முற்றிலுமாக அகலும்.
இந்த வாரம் -
திங்கள் - ஒரு சில விஷயங்கள் சாதகமாக இருக்காது. அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.வாகனங்களைச் சரியாக பராமரித்து வைக்க வேண்டும்.
செவ்வாய் - ஆதாயங்கள் அதிகமாகும். ஆரோக்கியம் மேம்படும். வருமானம் பெருகும். பணவரவு தாராளமாக இருக்கும். அசையா சொத்துக்களால் ஆதாயம் ஏற்படும்.
புதன் - உங்கள் செயல் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். தானாக முன்வந்து மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள்.
வியாழன் - ஆரோக்கியம் மேம்படும். ஆதாயங்கள் பெருகும். சொத்து சேர்க்கை ஏற்படும். சொத்தில் இருந்த வில்லங்கம் அகலும். பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
வெள்ளி - செய்யும் செயல் எதுவாக இருந்தாலும் மற்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம்.
சனி- பல வித உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் தாமாக முன் வந்து உதவுவார்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு.
ஞாயிறு - நண்பர் ஒருவரால் புதிய நட்பு ஏற்படும். அவர்களால் ஆதாயமும் உண்டு. வெளிநாடு செல்லும் முயற்சிகள் இந்த நாளில் சாதகமாகும்.
வணங்கவேண்டிய தெய்வம் - சக்தி குடிகொண்டிருக்கும் அம்மன் ஆலயங்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்து தாருங்கள். அம்மனுக்கு மஞ்சள் நிற புடவை சாற்றி வழிபடுங்கள். நன்மைகள் பெருகும். ஆதாயங்கள் அதிகமாகும்.
*******************************************************************************
சதயம் -
எடுத்த செயல்களில் எல்லாம் வெற்றி உண்டாகும். ஒரு சில விஷயங்கள் தள்ளிப்போகும். ஆரோக்கியத்தில் சிறுசிறு அச்சுறுத்தல்கள் உருவாகும். அஜீரணக் கோளாறுகள் உண்டாகும். வயிற்று வலி வந்து நீங்கும். கால் மற்றும் பாதங்களில் சுளுக்கு ஏற்படும். இதுவரை புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உருவாகும். தடைபட்டிருந்த திருமணம் இப்போது உறுதியாகும்.
உத்தியோகம் - வேலையில் பணிச்சுமை அதிகரிக்கும். மற்றொருவர் வேலையையும் நீங்களே பார்க்க வேண்டியது வரும். அலுவலக விஷயமாக வெளியூர் போக வேண்டியது வரும். ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். அதுவும் வெளியூர் அல்லது வெளி மாநிலமாக இருக்கும். உயரதிகாரிகள் தேவையில்லாமல் உங்கள் மீது எரிச்சல் காட்டுவார்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு உதவமாட்டார்கள். உடலுழைப்பு தொழிலாளர்கள் உழைப்பு அதிகமாகும் ஆதாயம் குறையும்.
தொழில் -தொழில் சராசரி வளர்ச்சி இருக்கும் பெரிய மாறுதல்கள் ஏதும் இல்லை. ஒருசிலருக்கு நிறுவனத்தை வேறு இடத்துக்கு மாற்றும் சிந்தனைகள் வரும்.மொத்த வியாபாரிகள் ஓரளவுக்கு லாபம் பார்ப்பார்கள். சில்லரை வியாபாரிகள் சங்கடங்கள் ஏதும் இருக்காது. புதிதாகத் தொழில் தொடங்குபவர்கள் பேச்சுவார்த்தை அளவில் இருந்து செயல் வடிவம் பெறும் உங்கள் கனவுகள் நனவாகும்.
பெண்களுக்கு -குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஆபரணச் சேர்க்கை உண்டு. சகோதரர் வழியில் இருந்த பிரச்சினைகள் தீரும் .இதுவரை புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு இப்பொழுது புத்திரபாக்கியம் உண்டாகும். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அதற்குண்டான வழிவகைகளை இப்பொழுது எளிதாக கிடைக்கும்.
மாணவர்களுக்கு - மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. உயர்கல்வி படிப்பவர்களுக்கு நல்ல தேர்ச்சி விகிதம் பெறுவார்கள்.
கலைஞர்களுக்கு - திரைத்துறை சார்ந்தவர்களுக்கு ஒப்பந்தங்கள் உண்டாகும். இசை நாட்டியம் நாடகம் போன்ற துறையில் உள்ளவர்களுக்கு அயல்நாடு சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தும் வாய்ப்புகள் கிடைக்கும்.
பொதுப் பலன் - ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். சிறிய பிரச்சினை என்றாலும் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. வீட்டுப் பராமரிப்பு செலவுகள் கூடும். வாகனப் பழுது உண்டாகும். பெரிய ஆதாயம் தரும் விஷயம் இந்த வாரம் கைகூடும்.
இந்த வாரம் -
திங்கள் - சாதகமான தகவல்கள் எதுவும் இருக்காது. பயணங்களைத் தவிர்க்க வேண்டும். புதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம்.
செவ்வாய் - நிலம் சம்பந்தமான ஆதாயம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். புதியஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வரும்.
புதன் - எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றிகள் உண்டாகும். உங்களுக்கு கிடைக்கவேண்டிய பங்கு வந்து சேரும்.
வியாழன் - ஆரோக்கியம் மேம்படும். கடன்கள் தீர வழி வகை கிடைக்கும். ஒரு பெரிய கடனை அடைக்க உதவிகள் கிடைக்கும்.
வெள்ளி - இன்று அமைதியாக இருப்பது நல்லது. யாரிடமும் எதற்காகவும் வாதங்கள் செய்ய வேண்டாம்.
சனி -பயணங்கள் ஏற்படுவதற்கான முன்னேற்பாடுகள் நடக்கும். அயல்நாட்டில் இருந்து நல்ல தகவல் வரும். உதிரி வருமானம் கிடைக்கும்
ஞாயிறு - பல்வேறு இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு உறுதி ஆகும். சுபச் செலவுகள் ஏற்படும்.
வணங்க வேண்டிய தெய்வம் - விநாயகருக்கு அருகம்புல் மாலை மற்றும் எருக்கம் பூ மாலை சூட்டி வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும். பண வரவு உண்டாகும்.
********************************************************************************************
பூரட்டாதி -
முயற்சிகளில் வெற்றி பெறும் வாரம் . தடைப்பட்டிருந்த விஷயங்கள் அனைத்தும் இப்பொழுது ஒவ்வொன்றாக செயல்பட ஆரம்பிக்கும். தடைபட்டிருந்த திருமண முயற்சிகள் கைகூடும். கடன் பிரச்சினை தீர வழி கிடைக்கும். குலதெய்வ வழிபாடு உண்டாகும். பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும்.
உத்தியோகம் - பணியிடத்தில் சுமுகமான நிலையே தொடர்கிறது . கலகலப்பாக பணியாற்றுவீர்கள். நண்பர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்ட நாளாக தீர்க்கப்படாத வேலைகளை இப்போது செய்து முடிப்பீர்கள். பதவி உயர்வு ஏற்படும். ஒரு புதிய பணிக்கு தலைமை ஏற்க நேரிடும். உடலுழைப்பு தொழிலாளர்கள் வருவாயை அதிகரிக்கும் வகையில் வேலைகள் கிடைக்கும். இதுவரை வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். அயல்நாடு செல்லும் யோகம் ஒரு சிலருக்கு ஏற்படும்.
தொழில் - தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உங்களுடன் கூட்டு சேர நண்பர்கள் முன்வருவார்கள். ஏற்கனவே கூட்டுத்தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் வளர்ச்சியைக் காண்பார்கள். உங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை இடமாற்றம் செய்வீர்கள். புதிதாகத் தொழில் தொடங்குவோர் சிறப்பான வாய்ப்புகளைப் பெறுவார்கள். மொத்த வியாபாரிகள், வணிக கடைகள் நடத்துபவர்கள், ஹோட்டல் தொழில் செய்பவர்கள் என அனைவருக்கும் ஏற்றம் தரும் வாரம் இது.
பெண்களுக்கு - குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். இதுவரை புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உருவாகும். வேலை செய்யும் பெண்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். விரும்பிய இடமாற்றம் ஏற்படும். ஒரு சிலருக்கு சொத்து சேர்க்கை உண்டு.
மாணவர்களுக்கு - கல்வியில் முன்னேற்றம் உண்டு. கவனச்சிதறல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்விக்காக எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
கலைஞர்களுக்கு - அற்புதமான வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். நண்பர்களால் நீங்கள் பரிந்துரைக்கப்படுவீர்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
பொதுப்பலன் - தனிநபர் கடன்கள் தீர, வங்கிக் கடன் பெற்று அந்த கடன்களை அடைப்பீர்கள். இதுவரை விற்க முடியாமல் இருந்த சொத்து ஒன்றை இப்போது விற்பனை செய்வீர்கள். அடகு வைத்த நகைகளை, சொத்துக்களை மீட்க வழி வகை கிடைக்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியாகும். வெளிநாடுகளில் வேலை செய்பவர்களுக்கு பணி நீட்டிப்பு கிடைக்கும். குடியுரிமை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு இப்பொழுது குடியுரிமை கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
இந்த வாரம் -
திங்கள் - தொலைதூரப் பயணங்களால் லாபம் உண்டாகும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். .ஒரு சிலர் பரிந்துரையின்பேரில் உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
செவ்வாய் -இடமாற்ற சிந்தனை உருவாகும். அலைச்சல் அதிகரிக்கும். குழப்பங்கள் அதிகரிக்கும். ஒரு சில முக்கிய முடிவுகளை தாமதமாக எடுப்பீர்கள்.
புதன் - வருமானம் கூடும். முயற்சிகள் வெற்றிபெறும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியாகும். தன வரவு தாராளமாக இருக்கும். வெற்றிகரமான நாள்.
வியாழன் - பயணங்களைத் தவிர்க்க வேண்டும். வீண்விவாதங்களில் ஈடுபடக் கூடாது. முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடாது. அலைச்சல்கள் அதிகரிக்கும். வாகனப் பழுது உண்டாகும்.
வெள்ளி - சொத்துக்களால் ஆதாயம் ஏற்படும். பயணங்களால் லாபம் உண்டாகும். கமிஷன் அடிப்படையில் உங்களுக்கு நல்ல தொகை கைக்கு வந்து சேரும்.
சனி- இன்று எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும் மற்றவர்களுக்காக இருக்கும். செய்து கொடுத்தோம் என்ற திருப்தி மட்டுமே மிஞ்சும்.
ஞாயிறு - கடன்கள் தீர வழி வகை கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். மருத்துவச் செலவுகள் குறையும். திடீர் பணவரவு உண்டு அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும்.
வணங்க வேண்டிய தெய்வம் - காளியம்மனை வழிபடுங்கள். நன்மைகள் பெருகும். எதிர்ப்புகள் அகலும். கடன்கள் தீரும்.
**********************************************************************************************************************
உத்திரட்டாதி -
ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சினைகள் அச்சுறுத்தலைத் தரும்.
அடுத்தடுத்து செலவுகள் காத்துக் கொண்டிருக்கிறது. என்ன செய்யப் போகிறோம் என்ற கவலை இருக்கிறது., ஆனால் இந்த வாரம் உங்கள் செயல்கள் எல்லாம் படிப்படியாக வெற்றியை தரக்கூடியதாகவே உள்ளன. முயற்சிகளில் லாபம் கிடைக்கும். பணத்தேவைகள் சரியான நேரத்தில் கிடைத்து செலவுகளை சமாளிப்பீர்கள்.
உத்தியோகம் - உங்கள் வேலை மட்டுமல்ல அடுத்தவரின் வேலையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். அலுவலக வேலையை வீட்டிற்குச் சென்ற பின்னும் பார்ப்பீர்கள். இதற்கு ஊதியமாக சிறு தொகை பெறுவீர்கள். ஒரு சிலருக்கு இடமாற்றம் தண்டனைக்கு உரியதாக இருக்கும். ஆனால் வெளிநாடு சென்று வேலை பார்க்க விரும்புவர்களுக்கு இப்போது வேலை கிடைக்கும். அயல் நாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை விசா நீட்டிப்பு கிடைக்கும். குடியுரிமை விண்ணப்பம் ஏற்கப்படும்.
தொழில் - கடன் வாங்கியே தொழிலை நடத்த வேண்டி இருக்கும். இந்த வாரமும் கடன் வாங்கும் சூழ்நிலை இருக்கிறது. கடனும் கிடைக்கும். ஆனால்,இன்னும் சில மாதங்களில் இந்தக் கடன் தீரும்.
ஆனாலும் புதிய வாய்ப்புகளும் ஒப்பந்தங்களும் வந்துகொண்டே இருக்கும். புதியதாக தொழில் தொடங்கும் எண்ணம் இருப்பவர்கள் இன்னும் சில நாட்கள் பொறுமையாக இருந்தால் வாய்ப்புகள் தானாக வரும்.
பெண்களுக்கு -மற்றவர்களோடு உங்களை ஒப்பிடுவதை மாற்றிக் கொள்ளுங்கள்.மனம் அமைதி பெற தியானம் செய்யுங்கள். மனச்சுமையை குறைத்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் உடல் நல பாதிப்புக்கு ஆளாவீர்கள்.
மாணவர்களுக்கு -படிப்பை தவிர மற்ற எல்லாவற்றிலும் கவனம் போகும். கல்வியே மேன்மை தரும் என்பதை உணர்ந்தால் படிப்பில் கவனம் வரும்.
கலைஞர்களுக்கு - உங்களுக்கான வாய்ப்பு வரும்வரை காத்திருங்கள். அது விரைவில் வரும். பணத் தேவைகள் பூர்த்தியாகும் வருகின்ற பணம் உடனே கரைந்தும் போகும். மொத்தத்தில் தேவைகள் பூர்த்தியாகும்.
பொதுப் பலன் - மனதை தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள். எந்த விஷயத்தையும் நன்கு ஆலோசித்து முடிவு எடுங்கள். சமூக வலைதளங்களில் இருந்து விலகி இருங்கள், தேவையற்ற கருத்துக்களை பதிவிடாதீர்கள். அது உங்களுக்கு எதிராகப் போகும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும்.
இந்த வாரம் -
திங்கள் - அவசரப்பட்டு எந்த வேலைகளையும் செய்ய வேண்டாம். அது தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்தும். நிதானம் தேவை.
செவ்வாய் - வேலை சம்பந்தமாக உதவிகள் கிடைக்கும். வேலை மாற்ற முயற்சிகள் வெற்றி கிடைக்கும்.
புதன் - வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியாகும். நண்பர்கள் அதிக அளவில் உதவுவார்கள். பணவரவு உண்டு.
வியாழன் - முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். குழப்ப நிலை உருவாகும். அலைச்சல் அதிகரிக்கும். பணத்தேவைகள் கடைசி நிமிடத்தில் பூர்த்தியாகும்.
வெள்ளி - கடந்த ஐந்து நாட்களாக எடுத்த முயற்சிகள் அனைத்தும் இன்று வெற்றியைத் தரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும்.
சனி - பயணங்களைத் தவிர்க்க வேண்டும். யாரிடம் பேசும்போதும் கவனமாக பேச வேண்டும். ஒப்பந்தங்களில் கையெழுத்து போடக்கூடாது. காசோலைகள் தரக்கூடாது.
ஞாயிறு - ஆரோக்கியம் சீராகும். வியாபாரப் பேச்சுகள் நல்லபடியாக முடியும். பயணங்களால் ஆதாயம் உண்டு. பணவரவு மனதிற்கு ஆறுதலைத் தரும்.
வணங்க வேண்டிய தெய்வம் - ஸ்ரீரங்கநாதரை பலவித மலர்களால் அர்ச்சனை செய்து வணங்கி வாருங்கள். பணவரவில் இருக்கும் தடைகள் அகலும். நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
வணங்க வேண்டிய தெய்வம் - அன்னை ஸ்ரீதுர்கைக்கு செவ்வரளி மாலை சூட்டி வணங்குங்கள். மனதில் தெளிவும், தைரியமும் பிறக்கும்.
***************************************************************************************************
ரேவதி -
குடும்பச் சூழ்நிலைகளையும், கடன்களையும் நினைத்து மனதில் பெரிய பாரம் உருவாகும். வீடு மாற்றம், இடமாற்றம் ஏற்படும். வேலையில் நிம்மதி இருக்காது. எந்த நேரம் வேலை பறி போகுமோ? என்ற கவலை வாட்டும். வழக்குகள் நெருக்கடியை உண்டாக்கும். தேவையற்ற பிரச்சினைகள் தேடி வரும். ஒரே ஆறுதல் என்னவென்றால்... ஒரு பெரிய கடன் கிடைத்து சிறு கடன்களை எல்லாம் அடைக்க வாய்ப்பு உண்டாகும்.
உத்தியோகம் - வேலையில் மனத்தை செலுத்த முடியாது. செய்கின்ற வேலையில் குளறுபடிகள் ஏற்படும். தவறுகள் செய்வீர்கள். உயரதிகாரிகள் வருத்தப்படுவார்கள். ஒருசிலருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுப்பார்கள். வேறு வேலை மாறும் சிந்தனை அதிகமாகும். வெளிநாடு சென்று பணி புரிய நல்ல வாய்ப்பு உண்டு. அந்த முயற்சியை எடுத்தால் நீங்கள் வெளிநாடு செல்லலாம்.
தொழில் - தொழிலில் சராசரி வளர்ச்சி உண்டு. பெரிய எதிர்பார்ப்புகளை வைத்துக்கொள்ள வேண்டாம். வழக்குகளை கவனமாக கையாளுங்கள். முடிந்தவரை தள்ளிப்போடுங்கள். புதிய நபர்களை நம்பி தொழில் வளர்ச்சிக்காக கடன் பெறும் முயற்சியை கை விடுங்கள். நீங்கள் ஏமாற்றப்படலாம். தொழில் செய்யும் இடத்தில் சில பிரச்சினைகள் உருவாகும். அதை சாமர்த்தியமாகக் கையாளவேண்டும். தொழில் செய்யும் இடத்திற்கு அருகில் உள்ளவர்களோடு தேவையற்ற பிரச்சினைகள் உருவாகும். எனவே கவனமாக இருங்கள். சின்ன பிரச்சினையாக இருக்கும் பொழுதே சுமுகமாக தீர்த்துக் கொள்ளுங்கள். தொழிலில் புதிய முயற்சிகள் செய்ய வேண்டாம். அகலக் கால் வைக்காதீர்கள்.
பெண்களுக்கு - உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் வாழ்வதைப் போல் நம்மால் வாழ முடியவில்லையே என்ற ஏக்கம் இருக்கும். அதுபோன்ற எண்ணங்களை தவிர்த்துவிடுங்கள். செலவுகளை கட்டுப்படுத்த முடியாது. சேமிப்புகள் கரையும்.
மாணவர்களுக்கு - கல்வியில் சற்று மந்தநிலை ஏற்படும். ஞாபக மறதி உண்டாகும். படிப்பைத் தவிர மற்ற ஆடம்பர நாட்டங்கள் உண்டாகும்.
கலைஞர்களுக்கு - ஒரு சில வாய்ப்புகள் கிடைக்கும். நல்ல ஒப்பந்தங்கள் உருவாக வாய்ப்பு இருக்கிறது. பணவரவு தேவைக்குத் தகுந்தாற்போல் கிடைக்கும்.
பொதுப்பலன் - கவலைகளை எண்ணிக்கொண்டு ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்ள வேண்டாம். எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதற்கு ஒரு தீர்வு நிச்சயமாக உண்டு என்பதை நம்புங்கள். ஏதாவது ஒரு வகையில் உங்களுக்கு பணத் தேவைகள் பூர்த்தியாகிக் கொண்டே இருக்கும். எனவே கவலைகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள். உத்தியோக ரீதியாக வெளிநாடு செல்லும் முயற்சி முழு வெற்றியை தரும். அந்த முயற்சியை எடுங்கள்.
இந்த வாரம் -
திங்கள் - எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். பணவரவுகள் இருக்கும். ஆரோக்கியம் சீராகும். தொல்லை தந்து கொண்டிருந்த சிறுசிறு கடன்களை அடைக்க வழி கிடைக்கும்.
செவ்வாய் - அமைதியாக இருப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. நீங்கள் செய்யும் செயல்கள் மற்றவர்களுக்கு பிரச்சினையை உண்டு பண்ணலாம். எதையும் கவனமாகக் கையாளுங்கள்.
புதன் - உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் வழியில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். பயணங்களால் லாபம் உண்டாகும். கையிருப்பு அதிகமாகும்.
வியாழன் -அதிக நன்மைகள் நடக்கும். உங்களுக்கு உதவ பலர் முன்வருவார்கள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். முக்கியமான நபரை சந்திப்பீர்கள்.
வெள்ளி - பயணங்களும், பயணங்களால் அலைச்சல்களும் அதிகமாகும். தேவையற்ற செலவு ஒன்று ஏற்படும். மனதில் குழப்பம் இருக்கும்.
சனி- எதிர்பார்த்த பண உதவிகள் அனைத்தும் கிடைக்கும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். குடும்ப பிரச்சினை ஒன்று நல்ல முடிவுக்கு வரும்.
ஞாயிறு - பயணங்களைத் தவிர்க்க வேண்டும். நண்பர்களோடு ஊர் சுற்ற வேண்டாம். நண்பர்களே பகைவராக மாற நீங்களே காரணம் ஆவீர்கள்
வணங்கவேண்டிய தெய்வம் - ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக படத்தை வீட்டில் வைத்து வழிபடுங்கள். கவலைகள் தீரும். பிரச்சினைகள் குறையும். மனதைரியம் உருவாகும்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
23 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago