இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: கடந்தகால நினைவுகளை அசைபோடுவீர்கள். திடீர் செலவுகள், பயணங்கள் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். ஆன்மிகம், தியானம், யோகாவில் நாட்டம் ஏற்படும்.

ரிஷபம்: கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். சகோதர வகையில் ஆரோக்கியமான விவாதங்கள் வரக்கூடும். வீடு, வாகன வகையில் பராமரிப்பு செலவு அதிகரிக்கும்.

மிதுனம்: உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு ஆதரவாக இருப்பார்கள். வாகன வசதி பெருகும். பழைய கடன் பிரச்சினை கட்டுக்குள் வரும். யாரையும் எடுத்தெறிந்து பேசக்கூடாது.

கடகம்: வெளி வட்டாரத்தில் மரியாதை, அந்தஸ்து உயரும். உதவி கேட்டு வருபவர்களுக்கு உங்களால் முடிந்ததை செய்து கொடுப்பீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.

சிம்மம்: எடுத்த காரியங்களை முடிக்க முடியாமல் அவதிப்பட்ட நிலை மாறும். தந்தையின் உடல்நலம் சீராகும். சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும்.

கன்னி: முன்கோபத்தால் பகை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்யப்போய், பிரச்சினையில் சிக்கிக் கொள்ளாதீர்கள். சிறு சிறு அவமானங்கள் ஏற்படக்கூடும். பேச்சில் பொறுமை தேவை.

துலாம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்துவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் கூடும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்.

விருச்சிகம்: பிள்ளைகள் உடல்நலம் சீராக இருக்கும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லைகள் விலகும். அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள்.

தனுசு: துணிச்சலுடன் செயல்பட்டு சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அனுசரித்துப் போவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வழக்கு சாதகமாகும்.

மகரம்: பிள்ளைகளின் அடிமனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வீர்கள். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். பணவரவு, பொருள் வரவு அதிகரிக்கும்.

கும்பம்: அதிரடி திட்டங்களை தீட்டி செயல்படுத்துவீர்கள். உங்களை தேடி வந்து சிலர் உதவி கேட்பார்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம், மகிழ்ச்சி உண்டாகும்.

மீனம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வீண், ஆடம்பர செலவுகளை தவிர்ப்பீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

மேலும்