இந்த வாரம் இப்படித்தான் :  நட்சத்திர பலன்கள் - எந்தக் கிழமையில் என்னென்ன பலன்கள் - திருவாதிரை முதல் மகம் வரை - நவம்பர் - 4 முதல் 10 வரை.

By செய்திப்பிரிவு


ஜோதிடர் ஜெயம் சரவணன்


வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். நட்சத்திர வாரபலன்களில் "பொதுப் பலன் என்னும் பகுதியில் நான் குறிப்பிடும் கிழமைகளின் பயன்பாடு என்பது மிக முக்கியமானது" என்பதை அறிவீர்களா?
இது "தார பலம்" என்பதாகும்.
இந்த தாரபலமானது மனித வாழ்க்கையின் நடைமுறைக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்பது நிதர்சனமான உண்மை. பலன்களை நீங்கள் அனுபவிக்கும் போது தான் அதன் மகிமை பற்றி தெரிந்து கொள்வீர்கள்.

நான் குறிப்பிடும் கிழமைகளை சரியாகப் பயன்படுத்தி வெற்றிகளை குவித்திடுங்கள். வாழ்த்துக்கள் .நன்றி.

திருவாதிரை
முயற்சிகளில் வெற்றி பெறும் வாரம் . தடைப்பட்டிருந்த விஷயங்கள் அனைத்தும் இப்பொழுது ஒவ்வொன்றாக செயல்பட ஆரம்பிக்கும். தடைபட்டிருந்த திருமண முயற்சிகள் கைகூடும். கடன் பிரச்சினை தீர வழி கிடைக்கும். குலதெய்வ வழிபாடு உண்டாகும். பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும்.
உத்தியோகம் - பணியிடத்தில் சுமூகமான நிலையே தொடர்கிறது . கலகலப்பாகப் பணியாற்றுவீர்கள். நண்பர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்ட நாளாக தீர்க்கப்படாத வேலைகளை இப்போது செய்து முடிப்பீர்கள். பதவி உயர்வு ஏற்படும். ஒரு புதிய பணிக்கு தலைமை ஏற்க நேரிடும். உடலுழைப்பு தொழிலாளர்கள் வருவாயை அதிகரிக்கும் வகையில் வேலைகள் கிடைக்கும். இதுவரை வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். அயல்நாடு செல்லும் யோகம் ஒரு சிலருக்கு ஏற்படும்.
தொழில் - தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உங்களுடன் கூட்டு சேர நண்பர்கள் முன்வருவார்கள். ஏற்கனவே கூட்டுத்தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் வளர்ச்சியைக் காண்பார்கள். உங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை இடமாற்றம் செய்வீர்கள். புதிதாகத் தொழில் தொடங்குவோர் சிறப்பான வாய்ப்புகளைப் பெறுவார்கள். மொத்த வியாபாரிகள், வணிக கடைகள் நடத்துபவர்கள், ஹோட்டல் தொழில் செய்பவர்கள் என அனைவருக்கும் ஏற்றம் தரும் வாரம் இது.
பெண்களுக்கு - குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். இதுவரை புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உருவாகும். வேலை செய்யும் பெண்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். விரும்பிய இடமாற்றம் ஏற்படும். ஒரு சிலருக்கு சொத்து சேர்க்கை உண்டு.
மாணவர்களுக்கு - கல்வியில் முன்னேற்றம் உண்டு. கவனச்சிதறல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்விக்காக எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
கலைஞர்களுக்கு - அற்புதமான வாய்ப்புகள் கிடைக்கும்.நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். நண்பர்களால் நீங்கள் பரிந்துரைக்கப் படுவீர்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

பொதுப்பலன் - தனிநபர் கடன்கள் தீர வங்கிக் கடன் பெற்று அந்தக் கடன்களை அடைப்பீர்கள். இதுவரை விற்க முடியாமல் இருந்த சொத்து ஒன்றை இப்போது விற்பனை செய்வீர்கள். அடகு வைத்த நகைகளை, சொத்துக்களை மீட்க வழி வகை கிடைக்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியாகும். வெளிநாடுகளில் வேலை செய்பவர்களுக்கு பணி நீட்டிப்பு கிடைக்கும். குடியுரிமை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு இப்பொழுது குடியுரிமை கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

இந்த வாரம் -
திங்கள் - நன்மைகள் நடக்கும். திடீர் பணவரவு உண்டு. அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். நண்பர்கள் உதவுவார்கள்.
செவ்வாய் - வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றி பெறும். அது சம்பந்தமான தூதரக செயல்பாடுகள் திருப்தி தரும்.
புதன் - நன்மைகள் செய்தாலும் எதிர்ப்புகள் கிளம்பும். தொட்டதற்கெல்லாம் குறை சொல்வார்கள். வாக்குவாதம் கூடாது. பயணங்கள் கூடாது.
வியாழன் - சொத்து சம்பந்தமான ஒரு விஷயம் சாதகமாகும். பத்திரப்பதிவுகளில் ஏற்பட்ட குளறுபடிகள் நீங்கும். பண வரவு உண்டு. ஆதாயங்கள் அதிகமாக இருக்கும்.
வெள்ளி - வெகு சாதாரணமாக கடந்து போகும் நாள். நண்பர்கள் உதவி கேட்டு தொல்லை செய்வார்கள். ஒருசிலருக்கு நிர்ப்பந்தத்தின் பேரில் உதவ வேண்டியது வரும். இன்றைய நாள் மற்றவர்களுக்கான நாள்.
சனி- எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும் வெற்றி தரும். எப்போதோ முயற்சி செய்து பாதியில் விட்ட ஒரு விஷயம் இன்று முடிவுக்கு வரும். அது உங்களுக்கு சாதகமாக இருக்கும். தனலாபம் உண்டாகும். ஆரோக்கியத்தில் இருந்த குறை தீரும். ஒரு மிகப்பெரிய கடனை அடைப்பீர்கள்.
ஞாயிறு - அமைதியாக இருந்தாலும் பிரச்சினைகள் தேடி வரும். அலைச்சல் அதிகமாகும். நிம்மதியற்ற நிலை ஏற்படும். உங்களை மற்றவர்கள் குற்றம் குறை சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.
வணங்க வேண்டிய தெய்வம் - புற்றுள்ள அம்மன் ஆலயங்களுக்குச் செல்லுங்கள். அம்மனின் அபிஷேகத்தில் பங்கு பெறுங்கள். அம்மனுக்கு அபிஷேகப் பொருட்களை சமர்ப்பியுங்கள். நன்மைகள் பெருகும், வெற்றிகள் குவியும்.

***************************************************************
புனர்பூசம் -
வெற்றிகள் வாசல் தேடி வரும். முயற்சிகள் அனைத்தும் சாதகமாகும். பெரிய தனலாபம் ஒன்றை அடைவீர்கள். திருமண முயற்சிகள் கைகூடும். கணவன் மனைவி பிரிவு சமாதானமாகி ஒன்றுசேர்வார்கள். கடன் தீர வழி கிடைக்கும். அயல்நாடு செல்லும் முயற்சிகள் வெற்றி பெறும். ஒரு சிலர் வீடு வாங்கும் முயற்சியில் வங்கி கடன் பெறுவதற்கு முயற்சியை ஆரம்பிப்பார்கள். அது நல்ல பலனைத் தரும். முயற்சிகள் வெற்றியாகும்.
உத்தியோகம் - வேலையில் சுமூகமான நிலையே தொடரும். ஊதிய உயர்வு கிடைக்கும். அலுவலகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலுவைத் தொகை இப்போது கிடைக்கும். பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு அவர்களுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகை முழுமையாக வந்து சேரும். அதில் இருந்த பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு இப்பொழுது நேர்முகத்தேர்வு நடக்கும். அதில் வெற்றிபெற்று வேலைக்கு ஒப்பந்தம் செய்யப்படுவீர்கள். சேவை சார்ந்த வேலை செய்பவர்கள் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். அதிக ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். விற்பனைப் பிரதிநிதிகள் தங்கள் இலக்கை எட்டி கூடுதல் வருவாய் பெறுவார்கள்.
தொழில் - தொழில் வளர்ச்சிப் பாதையில் செல்லும். முட்டுக்கட்டைகள் அகலும். அரசு வழியில் இருந்த தொந்தரவுகள் நீங்கும். வழக்குகள் சாதகமாகும். பாதியில் விலக்கிக்கொண்டு போன ஒப்பந்தங்கள் மீண்டும் தொடர்வதற்கு வழிவகை கிடைக்கும். மொத்த வியாபாரிகள் வியாபாரத்தை விரிவு படுத்துவார்கள். ஒரு சிலர் கிளைகளை ஆரம்பிப்பார்கள். ஒரு சிலர் ஏற்கனவே செய்கின்ற தொழிலோடு இணைந்த மாற்றுத் தொழிலை செய்வார்கள். வணிக நிறுவனங்கள் நடத்துபவர்கள் தங்கள் நிறுவனத்தை புதுப்பித்தல் பணி செய்வார்கள்.
பெண்களுக்கு - மனம் மகிழும் சம்பவம் குடும்பத்தில் நடக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். இதுவரை வேலை இல்லாத பெண்களுக்கு இப்பொழுது வேலை கிடைக்கும். ஏற்கனவே வேலையில் இருப்போருக்கு இப்போது பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஏற்படும். குடும்பத்தோடு பயணங்களை மேற்கொள்வீர்கள்.
மாணவர்களுக்கு -கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. புதிய பாடம் அல்லது புதிய மொழி கற்க ஆசைப்படுவீர்கள். அதற்கான பயிற்சி வகுப்புகளில் சேருவீர்கள்.
கலைஞர்களுக்கு - நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர் ஒருவர் மிகப்பெரிய உதவி ஒன்றை உங்களுக்கு செய்வார். தனலாபம் ஏற்படும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு முழுமையாக உள்ளது. சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
பொதுப்பலன் - கடன்கள் தீரவும் பிரச்சினைகள் தீரவும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். இனி கடன் வாங்காத ஒரு சூழல் உருவாகும். நான் குறிப்பிடுவது தனிநபர் கடன், வங்கிக் கடன் பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. சொந்த வீடு வாங்கும் பாக்கியம் ஏற்படும். அயல்நாடு செல்லும் சூழ்நிலை உருவாகும்.


இந்த வாரம் -
திங்கள் - சாதகமாக இல்லை. முடிந்தவரை எல்லோரிடமும் அனுசரித்துச் செல்லுங்கள். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். அமைதியாக இருப்பது நல்லது.
செவ்வாய் -நண்பர்களால் உதவி கிடைக்கும். அக்கம்பக்கத்தினர் உங்களோடு அனுசரித்துச் செல்வார்கள். ஒரு பொது பிரச்சினைக்கு தீர்வு காண்பீர்கள்.
புதன் -அதிக லாபங்கள் ஏற்படும். பயணங்களால் ஆதாயம் உண்டு. மருத்துவ செலவுகள் குறையும். ஆரோக்கியம் சீராகும். வீடு வாங்குதல் ஆபரணங்கள் வாங்குதல் போன்ற சுப செலவுகள் உண்டாகும்.
வியாழன் - மனம் தெளிவில்லாமல் இருக்கும். ஒரு குழப்பம் ஏற்படும். ஆனாலும் சரியான முடிவை கடைசி நேரத்தில் எடுப்பீர்கள்.
வெள்ளி - தனவரவு தாராளமாக இருக்கும். பணம் பலவழிகளிலும் வரும். எதிர்பார்த்து காத்திருந்த பணம் வீடு தேடி வரும். திருமண முயற்சிகள் கைகூடும். இன்று வரன் பார்க்கச் சென்றால் இன்றே திருமண தேதி முடிவு செய்யப்படும்.
சனி - பயணங்கள் வேண்டாம். வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள். முடிந்த வரை அமைதியாக இருங்கள். மௌனம் சிறந்த மொழி .
ஞாயிறு - சொத்துக்களால் ஆதாயம் உண்டு. வியாபார பேச்சுவார்த்தைகள் வெற்றியாகும். ஆதாயங்கள் அதிகமாக இருக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும்.
வணங்க வேண்டிய தெய்வம் - ஆஞ்சநேயருக்கு வடைமாலை அல்லது துளசி மாலை சாற்றி வழிபடுங்கள் நன்மைகள் பெருகும். தடைகள் அகலும். வெற்றிகள் குவியும் .

****************************************************
பூசம் -
செயல்களில் தீவிரமாக பணியாற்றி வெற்றிகளைக் குவிப்பீர்கள். கடன்கள் தீர வழி வகை கிடைக்கும், குடும்பத்தில் அமைதி நிலவும் குடும்ப உறுப்பினர் ஒருவர் அயல்நாடு செல்வார்கள். சொந்த வீடு கனவு நனவாகும். திருமண முயற்சிகள் கைகூடும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிய வாகனம் வாங்குவீர்கள். வீடு மாற்றம் ஏற்படும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.
உத்தியோகம் - வேலையில் பணிச்சுமை அதிகமானாலும் பெரிய பாதிப்புகள் ஏதும் இருக்காது. வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சிகள் வெற்றி பெறும். அயல்நாடு செல்லும் யோகம் உண்டு. அதுவும் வேலை உத்தரவாதத்துடன் செல்வீர்கள். உடன் பணிபுரியும் நண்பர் ஒருவரிடம் மனவருத்தம் ஏற்படும். சேவை சார்ந்த வேலை செய்பவர்கள் வளர்ச்சியைக் காண்பார்கள். தகுதிக்கு குறைவான வேலை பார்த்துக்கொண்டிருக்கும் நபர்களுக்கு இப்பொழுது நல்ல பதவியுடன் கூடிய வேலை கிடைக்கும். ஒரு சிலர் பணிபுரியும் இடத்தை விட்டுவிட்டு வேறு நல்ல நிறுவனங்களுக்கு செய்வார்கள்.
தொழில் - தொழிலில் இதுவரை இருந்த சிறுசிறு தடைகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்கு புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். புதிய திட்டங்கள் வகுத்து தொழில் வளர்ச்சியை மேம்படுத்துதல் நடக்கும்.
தொழில் கூட்டாளிகளிடம் இருந்த மனவருத்தங்கள் பேசித் தீர்க்கப்படும். அரசு வழியில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். வழக்குகள் சாதகமாகும் தீர்ப்புகள் விரைவில் வரும்.
பெண்களுக்கு - இயல்பாக ஏற்படும் மருத்துவச் செலவுகள் குறையும். நீண்டநாள் உபாதை இப்போது தீரும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு - பணியில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் ஏற்படும். கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். அதற்கு தகுந்த ஊதிய உயர்வும் கிடைக்கும்.
மாணவர்களுக்கு - கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். முடிக்காமல் இருந்த தேர்வுகளையும் எழுதி முடிப்பீர்கள்.
கலைஞர்களுக்கு - வாய்ப்புகள் நண்பர்கள் மூலமாக கிடைக்கும். பலவித வாய்ப்புகள் ஏற்படும். வெளிநாடுகளில் நடக்கும் கலைநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள்.


பொதுபலன் -
கிரகங்கள் அனைத்தும் சாதகமாக இருப்பதால் எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். எதிரிகள் காணாமல் போவார்கள். துரோகிகள் அடையாளம் காணப்படுவார்கள். சொந்த வீடு கனவு நனவாகும். திருமண முயற்சிகள் கைகூடும்.
இந்த வாரம் -
திங்கள் -மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். வருமானம் பெருகும் ஆரோக்கியத் தொல்லைகள் அகலும். ஆதாயம் தரும் வியாபாரம் வெற்றியடையும்.
செவ்வாய் - நெருக்கடிகள் உருவாகும். தேவையற்ற பிரச்சனைகள் தேடிவரும். கணவன்-மனைவிக்குள் வாக்குவாதங்கள் உண்டாகும். அமைதி காப்பது நல்லது.
புதன் - பலவித உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். முடிக்க முடியாத ஒரு வேலையை இன்று முடித்து மன நிறைவு அடைவீர்கள்.
வியாழன் - அதிக நன்மைகள் ஏற்படும். பயணங்களால் லாபமும் உண்டாகும். மருத்துவச் செலவுகள் குறையும். மருத்துவமனையில் இருந்தவர்கள் முற்றிலும் குணமாகி வீடு திரும்புவார்கள்.
வெள்ளி - மனதில் இனம்புரியாத பயம் உண்டாகும். குழப்பங்கள் ஏற்படும். புதிய சிந்தனை ஒன்று தோன்றும்.
சனி -நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். புதிதாக கடன் வாங்குவதற்கு ஏற்ற நாள். நீங்கள் கடன் கொடுத்து இருந்தால் இன்றைய நாள் உங்களுக்கு திரும்ப வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு.
ஞாயிறு - பயணங்களைத் தவிர்த்து விடலாம். இயந்திரங்களை கையாளும் போது கவனம் வேண்டும் .நடந்து செல்லும்பொழுது கூட கவனம் சிதறாமல் சாலையை கடக்க வேண்டும்.
வணங்க வேண்டிய தெய்வம் - நவக்கிரகத்தில் இருக்கும் சனி பகவானுக்கு எள் கலந்த தயிர்சாதம் நிவேதனம் செய்து தானம் தருவதால் தடைகள் அகலும் நன்மைகள் பெருகும் வருமானம் அதிகரிக்கும்.

*****************************************************
ஆயில்யம் -
முயற்சிகள் அனைத்தும் வெற்றியாக மாறும். வெற்றிகள் அனைத்தும் லாபமாக மாறும். லாபங்கள் அனைத்தும் முதலீடுகளாக மாறும். சொத்து சேர்க்கை ஏற்படும். பூர்வீக சொத்து பாகப்பிரிவினை சுமூகமாக முடியும் கடன்கள் தீரும் சொந்த வீடு வாங்குவீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியாகும்.
உத்தியோகம் -உத்தியோகம் வேலையில் மனநிறைவு ஏற்படும். தேங்கிக்கிடந்த வேலைகள் அனைத்தும் இந்த வாரம் முடித்துக் காட்டுவீர்கள். இடமாற்றம் ஏற்படும். பதவி உயர்வு கிடைக்கும். வேறு நிறுவனத்திற்கு மாறும் முயற்சி வெற்றியடையும். அயல்நாட்டில் இருந்து வேலைக்கான அழைப்பு வரும். வியாபார நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பதவி உயர்வு உண்டாகும். ஒரு சிலர் வேலையை விட்டுவிட்டு மீண்டும் படிப்பை தொடர்வீர்கள்.
தொழில் - தொழிலில் எதிர்பாராத அளவுக்கு வளர்ச்சிகள் உண்டாகும். உதவிகள் கிடைக்கும். புதிய இயந்திரங்கள் வாங்குவது இருக்கும். போட்டி நிறுவனங்கள் போட்டியில் இருந்து விலகும். எதிரிகளால் ஆதாயம் கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். அரசு வழியில் இருந்த நிர்ப்பந்தங்கள் விலகும். வரி தொடர்பான பிரச்சினைகள் சுமுகமாக தீர்வு பெறும். புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு வெற்றிகரமான வாரம் . மொத்த வியாபாரிகள் லாபம் அதிகம் அடைவார்கள்.
பெண்களுக்கு - படிப்புக்கேற்ற வேலை கிடைக்கும். அரசு வேலை கிடைப்பதற்கு அத்தனை சாத்தியக் கூறுகளும் உண்டு. திருமண முயற்சிகள் கைகூடும். குடும்பத்தில் சுப நிகழ்வு ஒன்று நடக்கும் .. ஒரு அசையாச் சொத்து உங்கள் பெயரில் வாங்கப்படும்.
மாணவர்களுக்கு - கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த ஒரு புத்தகம் உங்களுக்கு கிடைக்கும். அது நண்பர்கள் மூலமாக கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். உயர்கல்விக்கான திட்டங்கள் வகுப்பீர்கள்.
கலைஞர்களுக்கு -பலவித வாய்ப்புகளும் கிடைக்கும். உங்கள் துறை சார்ந்த பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்க அரசு வழியில் இருந்து உதவிகள் கிடைக்கும். அயல்நாடு செல்லும் வாய்ப்பும் உண்டு.
பொதுப்பலன் -நன்மைகள் அதிகமாக நடக்கும். அதே சமயம் யாருக்கும் கடன் கொடுக்க கூடாது. கடன் கொடுத்தால் திரும்பி வராது. உறவினர்கள் தொல்லை அதிகமாக இருக்கும். உறவினர்கள் உங்களிடம் பணம் கேட்டு தொல்லை செய்வார்கள். தெய்வ வழிபாடு அதிகமாகும். ஆன்மிக பயணங்கள் ஏற்படும்.


இந்த வாரம் -
திங்கள் - இன்று நீங்கள் செய்யும் காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு ஒரு லாபமும் ஏற்படாது. உங்கள் பெயரைச் சொல்லி மற்றொருவர் அந்த லாபத்தைப் பெற்றுக் கொள்வார். உங்கள் முயற்சி விழலுக்கு இறைத்த நீராகும்.
செவ்வாய் - நிலம் பூமி சம்பந்தப்பட்ட லாபம் ஒன்று ஏற்படும். ஆரோக்கியம் மேம்படும். பதவி உயர்வு கிடைப்பதற்கு இன்று வாய்ப்பு இருக்கிறது. அதற்கான உத்தரவு இன்று கிடைக்கும்.
புதன் -இன்று எதை செய்தாலும் அதில் குற்றம் குறை காண்பார்கள். வெறுப்பு மனப்பான்மை உண்டாகும். உங்கள் செயல் வேகத்திற்கு தகுந்தாற்போல் உடல் ஒத்துழைப்பு இருக்காது.
வியாழன் - உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த கடன் கைக்கு வந்து சேரும். முக்கியமான பிரச்சினை ஒன்றை நண்பர்கள் உதவியோடு தீர்ப்பீர்கள். கலகலப்பாக இருப்பீர்கள்.
வெள்ளி - நண்பர்களோடு அல்லது குடும்பத்தினரோடு பயணங்கள் சென்று வருவீர்கள். வெளிநாட்டிலிருந்து மறந்துபோன நண்பர் ஒருவர் தொடர்பு கொள்வார்.
சனி- மனம் ஏதோ ஒரு சிந்தனையில் இருக்கும் வேலையில் கவனம் செலுத்த முடியாது. ஏதோ இழந்தது போல் பரிதவித்து இருப்பீர்கள்.
ஞாயிறு - ஞாயிறு பணவரவுகள் பலவழிகளிலும் வரும். நீண்டநாள் வராத தொகையும் கைக்கு வந்து சேரும். நீங்கள் ஏதேனும் பண உதவி கேட்டிருந்தால் இன்று அந்தப் பணம் உங்கள் கைக்கு வந்து சேரும்.
வணங்க வேண்டிய தெய்வம் - காளியம்மன் அல்லது பிரத்தியங்கரா போன்ற உக்கிரமான தெய்வங்களை வணங்குவது நன்மைகள் அதிகம் ஏற்படுத்தும். எதிர்ப்புகள் இல்லாமல் போகும்.

**********************************************************
மகம் -
ஆரோக்கிய பிரச்சினையிலிருந்து விடுபடுவீர்கள். மருத்துவச் செலவுகள் குறையும். வீடு மாற்றச் சிந்தனை வெற்றி பெறும். சொந்த வீடு வாங்குவீர்கள். குழந்தைகளின் நலன் கருதி சேமிப்பு தொடங்குகி வீர்கள். உறவினர்கள் வகையில் இருந்து ஒரு பெரிய தொகை உதவியாக கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். மனதை தைரியமாக வைத்துக்கொள்ளவேண்டும். முயற்சிகள் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உங்களுக்குள் இருக்க வேண்டும்..
உத்தியோகம் - வேலையில் இருந்த அழுத்தங்கள் குறையும். முக்கிய முடிவுகளை உங்களிடம் விட்டுவிடுவார்கள். நீங்களும் நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். அவர்களோடு இணைந்து ஒரு முக்கியமான வேலையை செய்து முடிப்பீர்கள். தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம் பெறுவார்கள். அயல்நாட்டிலிருந்து வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
தொழில் -தொழில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். . தடையாக இருந்த பிரச்சினைகள் அனைத்தும் அகலும். தொழிலை வேறு இடத்துக்கு மாற்றம் சிந்தனை இனி இருக்காது. இருக்கும் இடத்திலேயே தொழிலை விரிவுபடுத்துவீர்கள். அதற்கான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். அரசு வழியில் இருந்த நெருக்கடிகள் அகலும். தொழில் மனநிறைவோடு இருக்கும். மொத்த வியாபாரிகள் இப்பொழுது நல்ல லாபம் கிடைக்கப் பெறுவார்கள். சலுகை போன்ற விஷயங்களை அறிவித்து வியாபாரத்தை வளர்ச்சி அடைய முயற்சிப் பார்கள்.
பெண்களுக்கு - ஆரோக்கியத் தொல்லைகள் அகலும். மருத்துவ சிகிச்சைகள் இனி இருக்காது. இப்போது இருக்கும் வேலையை விட்டுவிட்டு நல்ல வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. அரசு வேலை கிடைக்க முழு வாய்ப்புகளும் இருக்கிறது. அரசு ஊழியர்களாக இருந்தால் இப்பொழுது நல்ல இடமாற்றம் ஏற்படும். பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புண்டு. திருமண முயற்சிகள் கைகூடும்.
மாணவர்களுக்கு - கல்வியில் அற்புதமான முன்னேற்றம் ஏற்படும். உயர் கல்வி கல்வி கற்பவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் எடுத்து பட்டமேற்படிப்பு தொடர வாய்ப்பு உண்டு.
கலைஞர்களுக்கு - நல்ல வாய்ப்புகள் கிடைத்து ஒப்பந்தங்கள் உண்டாகும். நீண்டநாள் பேச்சுவார்த்தை இந்த வாரம் முடிவுக்கு வந்து கையெழுத்தாகும். முன் பணம் பெறுவதற்கு வாய்ப்பு உண்டு.
பொதுப்பலன் -தேக ஆரோக்கியம் சீராகும். பலவீனமான உடல் இப்பொழுது பலமாகும். வீட்டை விற்க வேண்டிய சூழ்நிலைகள் மாறி பண உதவிகள் கிடைக்கும். பழைய கடன்கள் தீர வங்கிக்கடன் போன்று பெரிய அளவில் கிடைக்கும். இந்த சிறு கடன்களையெல்லாம் முழுவதுமாக அடைக்க வாய்ப்பு உண்டு. குடும்ப உறுப்பினர்களுக்கு திருமணம் போன்ற சுபகாரியங்கள் நீங்கள் நடத்த முன்வருவீர்கள்.


இந்த வாரம் -
திங்கள் - சொத்துக்கள் சம்பந்தப்பட்ட வியாபாரம் வெற்றியாகும். பயணங்களால் ஆதாயம் உண்டு. ஆரோக்கியம் முன்னேற்றம் ஏற்ப்படும் தாய்வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும்.
செவ்வாய் - உறவினர்களுக்கு உதவுவீர்கள். நண்பர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். இன்று வியாபார பேச்சுவார்த்தைகளை பிறகு ஒரு நாளுக்கு தள்ளி வையுங்கள்.
புதன் - நல்ல வாய்ப்புகள் ஏற்படும். கேட்ட கடன் இப்பொழுது கிடைக்கும். பழைய கடன்கள் தீரும். ஆதாயம் தரும் வியாபாரம் வெற்றியாகும். முயற்சிகள் அனைத்தும் வெற்றிதரும்.
வியாழன் -அமைதியாக இருப்பது நல்லது . விவாதங்கள் வேண்டாம். நீங்கள் சொல்லும் கருத்தை சரி என்ற பிடிவாதத்தை கைவிடுங்கள். அமைதி காப்பது நல்லது.
வெள்ளி - பயணங்களால் ஆதாயம் ஏற்படும். முகம் தெரியாத நபர்களும் வந்து உதவுவார்கள். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். வெளிநாட்டு நண்பர் ஒருவர் உங்களுக்கு பண உதவி செய்வார்.
சனி -அயல்நாட்டுப் பயணங்கள் முயற்சி வெற்றி தரும். அயல்நாட்டில் இருந்து வேலைக்கான உத்தரவு பெறுவீர்கள். குறைந்தபட்சம் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.
ஞாயிறு - தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும். மனம் ஒரு நிலையில் இருக்காது. சிந்தனைகள் பலவாறாக இருக்கும். முடிவுகள் எடுக்க தடுமாறுவீர்கள். அமைதியாக வீட்டிலேயே ஓய்வு எடுப்பது நல்லது.
வணங்கவேண்டிய தெய்வம் - விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி, ஆறு தீபம் ஏற்றி வழிபடுங்கள். நன்மைகள் பெருகும். ஆதாயங்கள் அதிகமாகும். ஆரோக்கியம் சீராகும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

மேலும்