நவம்பர் மாத ராசிபலன்கள் - துலாம் முதல் மீனம் வரை

By செய்திப்பிரிவு

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்)
துலா ராசியினரே. இந்த மாதம் ஆக்கப்பூர்வமான யோசனைகளை செயல்படுத்தி எதிலும் வெற்றி காண்பீர்கள். தெளிவான மனநிலை இருக்கும்.
ராசிநாதன் சுக்கிரன் சஞ்சாரத்தால் சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். செயல்திறன் அதிகரிக்கும் ஆனால் உங்களுக்கு எதிராக சிலர் செயல்படும் சூழ்நிலை இருப்பதால் கவனம் தேவை. நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பது தாமதப்படும். ரியல் எஸ்டேட் சம்பந்தமான விஷயங்களில் இருந்து வந்த மந்த நிலை மாறும்.
தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். சில நேரங்களில் முக்கிய முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டுவீர்கள். வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்கப் பெறுவார்கள். ஆனால் அலைச்சல் உண்டாகும். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
குடும்பாதிபதி செவ்வாய் ராசியில் நட்பாக சஞ்சரிக்கிறார். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்க மனம் விட்டுப் பேசுவது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும். அவர்களிடம் நிதானமாகப் பேசுவது நன்மை தரும். பிள்ளைகளிடம் கோபம் காட்டாமல் அன்பாக பேசுவது நல்லது. மகிழ்ச்சி உண்டாகும்.
பெண்களுக்கு : எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும்.
கலைத்துறையினருக்கு : உடன் பணிபுரிபவர்களுடன் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. எனவே அனுசரித்துச் செல்வது நல்லது. எதிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நன்மையைத் தரும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வீண் அலைச்சல் ஏற்படலாம். ஆனாலும் சுக்கிரன் சஞ்சாரத்தால் மனதில் இருந்த குழப்பம் நீங்கி நிம்மதி உண்டாகும். கடன் பிரச்சினை தீரும்.

அரசியல்துறையினருக்கு : நீங்கள் அவசரப்படாமல் நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். இந்த காலகட்டத்தில் எதிர்ப்புகள் விலகும். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நபர்களின் நட்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். சூரியன் சஞ்சாரத்தால் ஏற்கனவே செய்த ஒரு செயலை நினைத்து வருந்த நேரிடும்.

மாணவர்களுக்கு : செயல்திறமை அதிகரிக்கும். உயர்கல்வி கற்பவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது.

சித்திரை:
இந்த மாதம் தொழில் செய்பவர்கள் பின் தங்கிய நிலையில் இருந்து மீண்டு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பர். பணவரவு அதிகரிக்கும். தீயோர் சேர்க்கையால் அவதிப்பட்டவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவர். புதிய தொழில் தொடங்குவத்ற்கு உண்டான ஆர்வம் பிறக்கும். குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம்.

ஸ்வாதி:
இந்த மாதம் தொழில் நிமித்தமாக வெளியூர் அல்லது நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டி வரும். வழக்கில் வெற்றி அல்லது நீண்ட நாட்களாக இழுபறியில் உள்ள பிரச்சினை முடிவில் செல்வம், உரிமை, அதிகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். தவறான வழிமுறைகளில் செல்வம் கரையவும் வாய்ப்புண்டு. எச்சரிக்கையாக இருக்கவும்.

விசாகம்:
இந்த மாதம் சகோதர சகோதரி வேலை நிமித்தம் வெளியூர் செல்ல வேண்டி வரலாம். அண்டை அயலாருடன் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். பிள்ளைகளிடம் அன்பு, பாசம் காட்டுவது நல்லது. பணத்தேவை உண்டாகும். செயல்திறன் வெளிப்படும். புதிய முயற்சிகள் அலைச்சலை தரும்.

பரிகாரம்: ஸ்ரீசரஸ்வதி தேவதையை பூஜித்து வர அறிவுத் திறமை அதிகரிக்கும். கல்வியில் வெற்றி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: சந்திரன், சுக்கிரன்;
சந்திராஷ்டம தினங்கள்: 13, 14, 15
அதிர்ஷ்ட தினங்கள்: 6, 7, 8

***************************************************************************

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
விருச்சிக ராசியினரே. நீங்கள் எடுத்த வேலையைக் கொடுத்த நேரத்தில் செய்வீர்கள். இந்த மாதம் வாக்குவன்மையால் ஆதாயம் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும். எல்லா விதத்திலும் நன்மையை தரும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும். பணவரத்து கூடும். எதிர்பாலினத்தாருடன் பழகும்போது கவனம் தேவை. எதிர்ப்புகள் குறையும்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் செய்து முடிப்பதில் துணிச்சல் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். பதவி உயர்வு கிடைக்கும்.
குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப விஷயங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத விஷயங்களில் ஒரு முடிவு வந்து சேரும். உறவினர்களுடன் பேசும்போது கவனமாகப் பேசுவது நல்லது. வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின்போதும் கவனம் தேவை. அக்கம்பக்கத்தினரிடம் பழகும்போது கவனம் தேவை. சில்லறை சண்டைகள் ஏற்படலாம். எச்சரிக்கை அவசியம்.
பெண்களுக்கு : திறமையான பேச்சின்மூலம் எதையும் வெற்றிகரமாக செய்து முடித்து ஆதாயம் அடைவீர்கள். எதிர்ப்புகள் குறையும். பணவரத்து கூடும்.


கலைத்துறையினருக்கு : சுக்கிரன் சஞ்சாரத்தால் எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும். நினைத்த காரியத்தை நினைத்தபடி நடத்தி முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். சிறு பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். நண்பர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம்.

அரசியல்துறையினருக்கு : மனம் வருந்தும்படியான சூழ்நிலை ஏற்படும். மேலிடத்தில் நீங்கள் சொல்வதை காதில் வாங்காதவர் போல் இருப்பார்கள். எனவே எல்லோரையும் அனுசரித்துச் செல்வதால் நன்மை உண்டாகும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். நினைத்த காரியத்தை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் மனக்கவலை உண்டாகும்.
மாணவர்களுக்கு : பாடங்களை படிப்பதில் ஆர்வம் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி பெறவும் கூடுதல் மதிப்பெண் பெறவும் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.

விசாகம்:
இந்த மாதம் சீரான நிலையில் இருக்கும். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆனால் பணப்புழக்கம் கடந்த காலத்தை விட அதிகம் இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம்.

அனுஷம்:
இந்த மாதம் மாணவமணிகள் தீவிர முயற்சி எடுத்து படிப்பது அவசியமாகும். உடல்நலனைப் பொறுத்தவரை வயிறு உபாதைகள் வந்து மறையும். எந்த காரியத்திலும் எந்த சூழ்நிலையிலும் நீதியை நிலைநாட்டுவீர்கள். பிள்ளைகளால் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கி நல்லவை நடக்க ஆரம்பிக்கும். இறையருளும் தெய்வ நம்பிக்கையும் கூடும்.


கேட்டை:
இந்த மாதம் உங்கள் திறமையில் இருந்து வந்த பின்தங்கிய நிலை இனி மாறும். தைரியமாக பீடு நடை போட்டு உங்கள் வேலைகளைச் செய்வீர்கள். வெப்பம் சம்பந்தப்பட்ட உடல் உபாதைகள் ஏற்படலாம். கவனம் தேவை. தம்பதிகளிடையே ஒற்றுமை மேலோங்கும். எனினும் வாழ்க்கைத்துணை வழியில் உள்ள உறவினர்களுடன் கருத்து பரிமாற்றங்கள் செய்யும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை.

பரிகாரம்: ஸ்ரீபைரவரை தீபம் ஏற்றி வழிபட்டுவர எல்லா நன்மைகளும் உண்டாகும். தடை நீங்கி காரியங்கள் வெற்றிகரமாக நடந்து முடியும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: 16, 17
அதிர்ஷ்ட தினங்கள்: 9, 10

***********************************************************************************

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
தனுசு ராசி அன்பர்களே. நீங்கள் உயர்தரமான எண்ணங்களையும், உயர்ந்த திட்டங்களையும் உடையவர். இந்த மாதம் ராசிநாதன் குரு ராசியில் இருக்கிறார். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு காரியத்தில் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். முன்கோபம் குறையும். பேச்சினால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கி பிரிந்தவர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். பணவரத்து அதிகரிக்கும். செவ்வாய் ராசியில் பயணிப்பதால் மனதில் புதுத்தெம்பும் உற்சாகமும் தோன்றும். எதிர்பாரத உதவியால் நன்மை ஏற்படும்.
தொழில் வியாபாரம் தொடர்பாக இழுபறியாக இருந்த சில பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். ஏற்கனவே வியாபாரம் தொடர்பாக செய்து பாதியில் நின்ற பணிகளை மீண்டும் செய்து முடிப்பீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். பணவரத்து திருப்தியாக இருக்கும். புதிய பொறுப்புகள் ஏற்படலாம். மேலிடத்திலிருந்து முக்கியமான காரியம் உங்கள் வசம் ஒப்படைக்கப்படும்.
குடும்பத்தில் கணவர், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். குடும்பத்தில் அமைதி எற்படும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்களிடம் மரியாதை அதிகரிக்கும்.
பெண்களுக்கு : கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் கருத்து வேற்றுமை நீங்கி மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். மனதில் புது தெம்பும் உற்சாகமும் அதிகரிக்கும்.
கலைத்துறையினருக்கு : கிரக சூழ்நிலை சாதகமாக இல்லாததால் சோம்பேறித் தனத்தை விட்டுவிட்டு நன்கு உழைப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். அறிவுத்திறன் அதிகரிக்கும். உங்களது பேச்சு மற்றவரை மயக்குவதுபோல் இருக்கும். சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள்.

அரசியல்துறையினருக்கு : உங்கள் வளர்ச்சிக்காக சில திட்டங்களை செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். செயல்திறமை கூடும். பயணங்களும் செல்ல நேரிடலாம். மனதில் நிம்மதி ஏற்படும். சுற்றத்தினர் வருகை இருக்கும். நண்பர்கள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். இனிமையான வார்த்தைகளால் சிக்கலான காரியத்தைக் கூட எளிதாக செய்து முடிப்பீர்கள்.

மாணவர்களுக்கு : பாதியில் நிறுத்திய கல்வி தொடர்பான விஷயங்களை மீண்டும் தொடர்வீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

மூலம்:
இந்த மாதம் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சிறு சிறு தடைகள் வந்தாலும் உங்களுக்கு இருக்கும் சாதுர்யத்தால் அதையெல்லாம் முறியடித்து வெற்றிப் பாதையில் பயணிப்பீர்கள். தாய் வழி உறவினர்களுடன் சின்ன கருத்து மோதல்கள் வரலாம். நீங்கள் சொன்ன வாக்கைக் காப்பாற்ற சிறிது போராட வேண்டி வரலாம்.

பூராடம்:
இந்த மாதம் மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அகலும். எதிர்பார்த்த பணி இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் அடுத்தவர்களால் பிரச்சினைகள் தீரும். உங்களது கருத்துக்கு மாற்றுக் கருத்து உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசுவது நன்மை தரும். பிள்ளைகளிடம் கவனமாகப் பேசுவது நல்லது.

உத்திராடம்:
இந்த மாதம் மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும். எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும். பணவரத்து கூடும். கலைத்துறையினருக்கு உடல் ஆரோக்கியம் கூடும். கடன் பிரச்சினை தீரும். வாக்குவன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்கப் பெறுவீர்கள். பணவரவு மனதிருப்தியைத் தரும். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களது நட்பும் கிடைக்கப் பெறுவீர்கள். எதிலும் முன்னேற்றம் காணப்படும்.

பரிகாரம்: ராமாயணத்தில் சுந்தரகாண்டம் பாராயணம் செய்வது மனக்குழப்பத்தைப் போக்கும். காரிய வெற்றி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: 18, 19
அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12

*********************************************************************

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள் திருவோணம் அவிட்டம் 1,2 பாதங்கள்)
மகர ராசியினரே. இந்த மாதம் எந்த ஒரு விஷயத்திலும் இருந்து வந்த மந்தநிலை அடியோடு மாறும். அடுத்தவர் மூலமாக இருந்து வந்த பிரச்சினைகள் மாறும். பணவரத்து எதிர்பார்த்த நேரத்தை விட சீக்கிரமாக வந்து சேரும். பூர்வீக சொத்துக்களில் இருந்து பிரச்சினைகள் தீரும்.
தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத குறுக்கீடுகள் ஏற்பட்டு பின்னர் விலகும். வியாபாரம் தொடர்பான பிரச்சினைகளைக் கையாளும்போது கவனம் தேவை. பாக்கிகள் வசூலாவது தாமதமாகும். உத்யோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக தங்களது வேலைகளை செய்வது நல்லது. சக ஊழியர்களிடம் இருந்து வந்த பிரச்சினைகள் அடியோடு அகலும்.
குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வதன் மூலம் அமைதி ஏற்படும். விருந்தினர்கள் வருகை இருக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் கோபத்தை காண்பிக்காமல் பேசுவது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகலாம். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.
பெண்களுக்கு : எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பதில் தாமதம் உண்டாகும். கவனமாக வேலைகளை செய்வது நல்லது. பணவரத்து தாமதமாகலாம்.
கலைத்துறையினருக்கு : எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில திட்டங்களை ஆலோசிப்பீர்கள். எந்தச் சூழ்நிலையிலும் மனம் தளராது விடாமுயற்சியுடன் காரியங்களை செய்யுங்கள். வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சிலருக்கு மருத்துவச் செலவு ஏற்படும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். கடன் விவகாரங்களில் கவனம் தேவை. உபதொழில் தொடர்பான காரியங்கள் தாமதமாக நடக்கும்.

அரசியல்துறையினருக்கு : மேலிடத்திற்கு பயந்து வேலை செய்ய வேண்டி இருக்கும். உழைப்பு அதிகரிக்கும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகலாம். உங்கள் வசம் உள்ள ஆவணங்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. எதிர்பாராத செலவு உண்டாகும். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும்.

மாணவர்களுக்கு : கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும். சகமாணவர், நண்பர்கள் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

உத்திராடம்:
இந்த மாதம் அரசியல்துறையினருக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களைப் பயன்படுத்தும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண்பதில் ஆர்வம் உண்டாகும்.


திருவோணம்:
இந்த மாதம் மனதில் உற்சாகம் ஏற்படும். மாணவர்கள் எதிர்பார்த்த மேல்படிப்பு படிக்க வாய்ப்புகள் கிட்டும். பணகஷ்டம் தீரும். இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நல்லது. எடுத்த காரியங்கள் சாதகமாக முடிய உதவும். சொத்து மனை வீடு சம்பந்தமான காரியங்களில் தாமதம் உண்டாகலாம்.


அவிட்டம்:
இந்த மாதம் அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. எடுத்த வேலைகளை சரியான நேரத்தில் செய்ய திட்டமிடுவது நல்லது.

பரிகாரம்: ஸ்ரீகிருஷ்ண பகவானை பிரார்த்தனை செய்து வழிபட்டு வர எல்லா கஷ்டங்களும் நீங்கும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: 20, 21
அதிர்ஷ்ட தினங்கள்: 13, 14, 15

*************************************************************

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்)
கும்ப ராசியினரே. நீங்கள் உழைத்து முன்னேற வேண்டும் என நினைப்பவர்கள். இந்த மாதம் வீண் செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகலாம். காரியங்கள் முடிவதில் தாமதப்போக்கு காணப்படும். தேவையற்ற மன சஞ்சலம் உண்டாகலாம். யாரையும் நேருக்கு நேர் எதிர்க்காமல் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். கெட்ட கனவுகள் தோன்றலாம். வயிறு தொடர்பான நோய்கள் ஏற்பட்டு நீங்கும்.
தொழில் வியாபாரம் மெத்தனமாகக் காணப்பட்டாலும் பணவரவு இருக்கும். புதிய வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேசி வியாபாரம் செய்வது நல்லது. போட்டிகளை கண்டு கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், டென்ஷனும் ஏற்பட்டு நீங்கும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. மேலிடத்துடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும்.
குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே தேவையில்லாத விஷயத்தால் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளால் திடீர் செலவு உண்டாகலாம். கடன் தொல்லைகள் நீங்கும்.
பெண்களுக்கு : யாரையும் எதிர்த்துக் கொள்ளாமல் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். வீண் மனக்கவலை, காரிய தாமதம் உண்டாகலாம் கவனம் தேவை.


கலைத்துறையினருக்கு : மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போதும் வெளியூர்களுக்குச் செல்லும் போதும் கூடுதல் கவனம் தேவை. சூரியன் சஞ்சாரத்தால் முன் கோபம் ஏற்பட்டு அதனால் வீண்தகராறு ஏற்படலாம். நிதானமாகச் செயல்படுவது நல்லது.

அரசியல் துறையினருக்கு : வளர்ச்சி பெற மிகவும் கவனமாக இருப்பது நல்லது. செலவைக் குறைப்பதன் மூலம் பணத் தட்டுப்பாடு குறையலாம். பேச்சில் கடுமையை காட்டாமல் இருப்பது நன்மை தரும். மேலிடத்தின் மூலம் மனம் மகிழும்படியான சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறவினர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது.

மாணவர்களுக்கு : விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. பாடங்களைப் படிப்பதில் கூடுதல் கவனமும், ஆசிரியர்களிடத்தில் பேசும்போது நிதானமும் தேவை.

அவிட்டம்:
இந்த மாதம் பணி நிமித்தமாக பிரயாணம் ஏற்படலாம். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி சிந்தனை அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் மனக்கசப்பு ஏற்படலாம்.

ஸதயம்:
இந்த மாதம் எந்தக் காரியத்திலும் ஈடுபடும் முன்பு திட்டமிட்டு செயல்படுவது நல்லது. பணவரத்து தாமதப்படும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க பட்ட சிரமங்கள் குறையும். வேலைப் பளு குறையும். உழைப்பு வீணாகும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திடீர் செலவு உண்டாகும்.

பூரட்டாதி:
இந்த மாதம் அரசியல்துறையினருக்கு இறுக்கமான சூழ்நிலை நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். சந்தோஷமாக வெளியே சென்று வருவீர்கள். எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மனக் கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். பொருள் வரத்து அதிகரிக்கும். வாகனம், பூமி மூலம் லாபம் கிடைக்கும்.

பரிகாரம்: ஸ்ரீசரபேஸ்வரரை ஞாயிற்றுக்கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட்டு வர எல்லா தடங்கல்களும் நீங்கும். காரிய வெற்றி ஏற்படும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்;
சந்திராஷ்டம தினங்கள்: 22, 23
அதிர்ஷ்ட தினங்கள்: 16, 17

*************************************************************************************


மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
மீன ராசியினரே. நீங்கள் சமூக சிந்தனை அதிகம் இருப்பவர்கள். இந்த மாதம் எதிலும் சாதகமான நிலை காணப்படும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். வாக்கு வன்மை ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மற்றவர்கள் செவிசாய்ப்பார்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். வழக்குகளில் இருந்து வந்த மந்தநிலை மாறும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். லாபம் கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம், தொழில் தொடர்பான கடிதப்போக்கு சாதகமான பலன் தரும். புதிய ஆர்டர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக எதையும் செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். கவுரவம் கூடும். நிலுவைத் தொகை வந்து சேரும். பதவி உயர்வு கிடைக்கலாம்.
குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். வாகனம் வாங்கும் அல்லது புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். பயணம் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். உறவினர்களிடம் இருந்து வந்த கருத்து மோதல்கள் மறையும்.
பெண்களுக்கு : உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். தொலை தூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். எதிர்பார்த்த பணம் வரும் வாய்ப்பு உள்ளது.
கலைத்துறையினருக்கு : எந்த விவகாரத்தில் சிக்கினாலும் சாமர்த்தியமாக மற்றவரை முன் நிறுத்திதான் தப்பித்துக் கொள்ள வேண்டி வரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும். சாதூர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும்.

அரசியல் துறையினருக்கு : உங்கள் வளர்ச்சியில் இருந்த முட்டுக் கட்டைகள் நீங்கும். பயணங்கள் செல்ல நேரலாம். பணவரத்து திருப்தி தரும். கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழும்.

மாணவர்களுக்கு : கல்வியில் திறமை அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு பாராட்டு கிடைக்கும். மனதில் தைரியம் கூடும்.

பூரட்டாதி:
இந்த மாதம் மாணவர்களுக்கு கல்வியில் இருக்கும் மந்த நிலை மாற கூடுதல் கவனத்துடன் படிப்பது அவசியம். எந்த வேலையிலும் முழு கவனம் தேவை. குடும்பத்தில் குழப்பம் நீங்கி நன்மை உண்டாகும். ஆரோக்கியம் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த தடைகள் நீங்கும். எதிர்ப்புகள் விலகும்.
உத்திரட்டாதி:
இந்த மாதம் நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தது போல் இருக்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கலாம். பாதியில் நின்ற காரியங்களை தொடர்ந்து செய்து முடிப்பீர்கள். வழக்குகளில் திடீர் குழப்பம் ஏற்படலாம். தீ, எந்திரம் ஆகியவற்றை கையாளும் போது கவனம் தேவை.
ரேவதி:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். சரக்குகளை அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயலாற்றுவது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு சண்டைகள் உண்டாகலாம்.
பரிகாரம்: வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்தியை வணங்குவதும் வயதானவர்களுக்கு உதவிகள் செய்வதும் எல்லா நன்மைகளையும் தரும். செல்வச் சேர்க்கை உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்;
சந்திராஷ்டம தினங்கள்: 24, 25
அதிர்ஷ்ட தினங்கள்: 18, 19

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

மேலும்