மேஷம்: தேவையற்ற மனக் குழப்பங்கள் நீங்கும். நம்பிக்கைக்கு உரியவர்களின் ஆதரவு கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
ரிஷபம்: அதிரடியாக செயல்பட்டு சில காரியங்களை விரைந்து முடிப் பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். மனைவி வழியில் லாபம் அதிகரிக்கும். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.
மிதுனம்: முடியாமல் இழுத்தடித்த காரியங்கள் நல்லபடியாக முடியும். பிள்ளைகளின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்று வீர்கள். ஆன்மிகம், தியானம், யோகாவில் நாட்டம் ஏற்படும்.
கடகம்: மன உளைச்சல், வருத்தம் நீங்கி உற்சாகம், கலகலப்பு ஏற்படும். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி, அன்யோன்யம் அதிகரிக்கும். வாகனப் பழுது சரியாகும்.
சிம்மம்: வீண், ஆடம்பர செலவுகளை குறைப்பீர்கள். குடும்பத்தின ரின் எண்ணங்களை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். நண்பர்கள், உறவினர் களின் உதவி கிடைக்கும். பணவரவு, பொருள் வரவு உண்டு.
கன்னி: அலைச்சல், சோர்வு, அசதி நீங்கி உற்சாகத்துடன் செயல்படு வீர்கள். குடும்பத்தில் சலசலப்புகள் நீங்கி அமைதி, மகிழ்ச்சி திரும்பும். உறவினர்கள், பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
துலாம்: எந்த காரியத்தை தொட்டாலும் பலமுறை முயன்ற பிறகே முடிக்க நேரிடும். சிலரது தவறுகளை சுட்டிக்காட்டுவதால் சச்சரவுகளில் சிக்குவீர்கள். ஆன்மிக நாட்டம் கூடும்.
விருச்சிகம்: கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது. பணவரவு, பொருள்வரவு உண்டாகும்.
தனுசு: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளை கள் உடல்நலத்தில் அக்கறை காட்டுவீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். புதிய நபர்களால் ஆதாயம், லாபம் உண்டு.
மகரம்: நம்பிக்கை, மன உறுதியுடன் செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளின் எண்ணங்களைக் கேட்டறிந்து நிறைவேற்றுவீர்கள். தந்தை உடல்நலம் சீராகும்.
கும்பம்: புது முயற்சிகள் வெற்றி தரும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணவரவு உண்டு. கணவன் - மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
மீனம்: உங்களை அறியாமல் ஒருவித படபடப்பு, தாழ்வு மனப்பான்மை வந்துசெல்லும். நம்பிக்கையோடு செயலாற்றுங்கள். உதவி கேட்டு உறவினர்கள் தர்மசங்கடத்துக்கு ஆளாக்குவார்கள்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
18 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago