இந்த வாரம் இப்படித்தான்! நட்சத்திரப் பலன்கள் (அக்டோபர் 28 முதல் நவம்பர் 3ம் தேதி வரை)  பூரம் முதல் சுவாதி வரை

By செய்திப்பிரிவு

- ஜோதிடர் ஜெயம் சரவணன்

பூரம் -
கவலைகள் எல்லாம் காணாமல் போகும் குருவின் அருளால். பணப் பிரச்சினைகள் படிப்படியாக தீரும். மருத்துவ செலவுகள் இனி இருக்காது. உடல் நலக் கோளாறுகள் தீரும். வீண் செலவுகள் இனி இருக்காது. தடைபட்டுக் கொண்டிருந்த திருமண முயற்சிகள் இப்போது நல்ல வரன் அமைந்து திருமணம் உறுதி செய்யப்படும். வீடு மாற்றங்கள் ஏற்படும். பழைய வாகனத்தை விற்று புதிய வாகனம் வாங்க முற்படுவீர்கள். வங்கியில் எதிர்பார்த்த வீட்டுக் கடன் இப்போது கிடைக்கும். இறை பக்தி அதிகரிக்கும். தாயாரின் உடல் நலம் சரியாகும்.


உத்தியோகம் - வேலையில் இருந்த நிர்ப்பந்தங்கள் விலகும். வேலையில் கவனம் அதிகரிக்கும். தேங்கிக் கிடந்த பணிகள் முடியும். வெளிநாட்டு வேலைக்கு செல்ல இருந்த தடைகள் விலகும். ஒரு சிலருக்கு பணி ஒப்பந்தம் ஏற்படும். வேறு நிறுவனத்துக்கு மாறும் முயற்சிகள் வெற்றியாகும். இதுவரை வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். வீட்டு அத்தியாவசியப் பணிகள் செய்யும் பணியாளர்கள் வருமானம் அதிகரிக்கும்.
தொழில் - மெல்ல வளர்ச்சிப் பாதைக்குச் செல்லும்.புதிய அல்லது இணையான தொழில் தொடங்குவீர்கள். தொழில் வளாகத்தை விரிவுபடுத்துவீர்கள்.

பழைய கடன்கள் தீரும். வர வேண்டிய நிலுவைத் தொகைகள் வரத்தொடங்கும். அரசின் நெருக்கடிகள் விலகும். வரி தொடர்பான வழக்குகள் பைசல் ஆகும். மருத்துவமனை நடத்துபவர்கள் புதிய தொழில்நுட்ப இயந்திரங்கள் வாங்குவார்கள். வழக்கறிஞர் தொழில் செய்பவர்கள் வருமானம் அதிகரிக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள், நிதி நிறுவனங்கள் நடத்துபவர்கள் வளர்ச்சி அடைவார்கள். கட்டுமான தொழில் மெல்ல சீராகும்.


பெண்களுக்கு - குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். திருமணம் உறுதி செய்யப்படும். பணியில் இடமாற்றம் ஏற்படும்.ஆபரணச் சேர்க்கை உண்டு. சொத்துக்கள் பாகப் பிரிவினை சுமூகமாக தீரும்.


மாணவர்களுக்கு - தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். நண்பர்கள் ஒத்துழைப்பு தருவார்கள்.


கலைஞர்களுக்கு - நண்பர்களால் ஆதாயம் அடைவீர்கள். ஒப்பந்தங்கள் ஏற்படும். கிடப்பில் போடப்பட்ட பழைய விஷயம் ஒன்று மீண்டும் விவாதத்திற்கு உட்பட்டு உடன்பாடு ஏற்படும்.


பொதுப் பலன் - பலவித ஏமாற்றங்களைச் சந்தித்த நீங்கள் இனி வெற்றியை மட்டுமே பார்க்கப் போகிறீர்கள். வீட்டை விற்க வேண்டிய நிர்பந்தம் இருந்தவர்களுக்கு இனி விற்க வேண்டிய அவசியம் ஏற்படாது. ஏதாவது ஒரு வகையில் தேவையான பணம் கிடைக்கும். வெளியிலிருந்து வரவேண்டிய பணம் இப்போது கிடைக்கும். உடல் நலத்தில் பெரிய பாதிப்பு ஏதும் வராது. ஆனாலும் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த வாரம் செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு இந்த ஐந்து நாட்களும் நன்மைகள் நடக்கும். முயற்சிகள் வெற்றியாகும்.
திங்கள் மற்றும் புதன் சாதகமாக இல்லை.


வணங்க வேண்டிய தெய்வம் -
சிவபெருமானுக்கு வெள்ளை வஸ்திரம் சாற்றி வழிபடுங்கள், நன்மைகள் பெருகும்.

*************************************************************


உத்திரம் -


வரவுகளும் உண்டு. அதே சமயம் வரவுக்கேற்ற செலவுகளும் உண்டு.


குருவின் பெயர்ச்சி நன்மைகளையும், சில பாதகங்களையும் செய்யும். இதுவரை எடுத்த முயற்சிகளில் தடைகளும் தாமதங்களும் ஏற்பட்டிருக்கும். இனி அந்தத் தடைகள் அகலும். முயற்சிகள் வெற்றி பெறும். பயணங்கள் அதிகரிக்கும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். அடிக்கடி ஆரோக்கியத்தில் பின்னடைவு ஏற்படும். வீட்டுப் பராமரிப்பு செலவுகள், வாகனச் செலவுகள் ஏற்படும்.


தாயாரின் உடல்நலனில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும். வீடு சம்பந்தமான வழக்குகள் ஏதும் இருந்தால் சாதகமான தீர்ப்புகள் எதிர்பார்க்கமுடியாது. அக்கம்பக்கத்தினருடன் வாக்குவாதங்கள் ஏற்படும். அதேசமயம் சொந்தத் தொழில் செய்து கொண்டிருந்தால் நல்ல வளர்ச்சி, முன்னேற்றம், லாபம் ஏற்படும்.


உத்தியோகம் - கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். அடுத்தவர் வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டியது வரும். அலுவலக விஷயமாக பயணங்கள் ஏற்படும். வேலை மாற்ற சிந்தனை ஏற்படும். ஒரு சிலர் வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்குச் செல்வார்கள். வியாபார நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் வேலையில் கவனமாக இருக்க வேண்டும். அலட்சியமாக இருந்தால் வேலைக்கு பாதிப்பு ஏற்படும். மராமத்துப் பணிகள் செய்பவர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும் வருமானம் சிறிது குறையும். ஒரே வேலையை திரும்பத் திரும்ப செய்ய வேண்டியது வரும்.


தொழில் - தொழில் வளர்ச்சி உண்டு. லாபமும் உண்டு. அதே சமயம் பயணங்களும் அதிகமாக ஏற்படும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் நீண்ட இழுபறிக்குப் பின் முடிவுக்கு வரும். தொழிலை விரிவுபடுத்துவதற்கு சில சொத்துக்களை அடகு வைப்பது அல்லது விற்பது போன்ற முடிவுகளை எடுப்பீர்கள். அதற்கான முயற்சிகளை இந்த வாரம் தொடங்குவீர்கள்.


சொந்தத் தொழில் தொடங்கும் எண்ணம் உடையவர்கள் இப்போது தொடங்கலாம். கட்டுமானத் தொழில் செய்பவர்களுக்கு இப்போது நல்ல நேரம், விற்க முடியாமல் இருந்த கட்டிடங்கள் விற்பனையாகும். சில சலுகைகளை அறிவித்து விற்க முற்படுவீர்கள். மொத்த வியாபாரிகள்,சில்லரை வியாபாரிகள் வியாபாரத்தில் பாதிப்புகள் ஏதும் இருக்காது. தரகு தொழில் செய்பவர்கள் கமிஷன் ஏஜெண்டுகள் எடுத்த முயற்சிகள் இழுபறியாகச் சென்று கடைசி நேரத்தில் வியாபாரம் முடியும்.


பெண்களுக்கு - திருமணம் நிச்சயமாகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஒரு சிலர் வெளிநாடு செல்வார்கள். வெளிநாடு வேலைவாய்ப்பு கிடைக்கும். தம்பதிகள் வேலையின் காரணமாக பிரிந்திருக்க வேண்டிய சூழல் உருவாகும். அசையும் அல்லது அசையாச் சொத்துக்களை அடமானம் வைக்க வேண்டியது வரும்.


மாணவர்களுக்கு - உயர் கல்வியில் இருந்த தடைகள் அகலும். தவறிய தேர்வுகளில் இப்போது நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெறுவீர்கள்.
கலைஞர்களுக்கு - பயணங்கள் அதிகரிக்கும். ஆதாயமுண்டு. அரை மனதுடன் சில ஒப்பந்தங்களை பெற்றுக்கொள்வீர்கள். நிர்ப்பந்தங்கள் அதிகரிக்கும்.


பொதுப்பலன் - உடல்நலத்தில் அக்கறை காட்டுங்கள். தொடர் மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்கள் தவறாமல் மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். புதிய வகை உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஒரு சிலருக்கு நுரையீரல் தொற்று, சிறுநீரகத் தொற்று ஏற்படும்,
ஏதேனும் ஒப்பந்தங்கள் கையெழுத்து போட வேண்டி வந்தால் முழுவதுமாகப் படித்துப் பார்த்து பிறகு கையொப்பம் இடுங்கள். அக்கம்பக்கத்தினர் உடன் அனுசரித்துச் செல்லுங்கள். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். மனதைத் தெளிவாக வைத்துக் கொள்ள வேண்டும். குழப்பத்திற்கு ஆட்படாதீர்கள்.


இந்த வாரம் திங்கள், புதன், வெள்ளி, சனி, ஞாயிறு சாதகமான நாட்கள்.
செவ்வாய் வியாழன் சாதகமாக இல்லை.


வணங்கவேண்டிய தெய்வம் - ஸ்ரீசக்கரத்தாழ்வார் சன்னதியில் நெய்தீபம் ஏற்றி வழிபடுங்கள் தடைகள் அகலும். ஆரோக்கியம் மேம்படும்.

***********************************************************************************************

அஸ்தம் -


குருவின் பெயர்ச்சியால் தடைப்பட்டிருந்த பணவரவுகள் இப்போது கைக்கு வந்து சேரும். முயற்சிகளில் ஏற்பட்ட பின்னடைவுகள் இப்போது சரியாகும். அலைச்சலும் அலைச்சலுக்கு உண்டான ஆதாயமும் ஏற்படும். ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் வரும், ஆனால் வந்த வேகத்தில் சரியாகிவிடும். தாயாரின் உடல்நலத்தில் அதிக அக்கறை செலுத்தவேண்டும். அலட்சியம் காட்டவேண்டாம்.


வீடுகளில் ஏற்படும் சிறு சிறு குறைபாடுகளை உடனுக்குடன் சரி செய்து கொள்ளுங்கள். இல்லை என்றால் பெரிய செலவாக மாறும். வாகனங்களைச் சரியாக பராமரியுங்கள். ஜாமீன் கொடுப்பது கடன் கொடுப்பது விரோதத்தை ஏற்படுத்தும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். ஒரு சிலர் சொத்துக்களை விற்று கடனை அடைப்பீர்கள்.


உத்தியோகம் -வேலையில் கூடுதல் சுமை ஏற்படும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பு தர மாட்டார்கள். அவர்களின் ஆதாயத்திற்காக உங்களைப் பயன்படுத்திக் கொள்வார்கள். பதவி உயர்வு தாமதப்படும். இடமாற்றம் ஏற்படும். ஒரு சிலர் வேறு வேலைக்கு செல்வார்கள்.
வெளிநாடு செல்லும் முயற்சி நல்ல பலனைத் தரும். உங்களுடைய திறமைக்கேற்ற வேலை இப்போது கிடைக்கும். இதுவரை வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும், அது தற்காலிகமானதாகக்தான் இருக்கும். அலுவலகக் கோப்புகளில் கையெழுத்து இடும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். அரசு ஊழியர்களாக இருந்தால் கூடுதல் கவனம் வேண்டும். ஒருசிலருக்கு நீண்ட தூரத்திற்கு பணியிட மாற்றம் ஏற்படும்.


தொழில் -தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். புதிய யுக்திகளைப் பயன்படுத்தி வெற்றி காண்பீர்கள். அயல்நாட்டில் இருந்து உதவிகள் கிடைக்கும். ஒருசிலருக்கு வெளிநாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தங்கள் உண்டாகும். தொழில் வளாகத்தை விரிவுபடுத்துவீர்கள். புதிய இயந்திரங்கள் வாங்குவீர்கள். கேட்டரிங் தொழில் செய்பவர்களுக்கு ஒப்பந்தங்கள் அதிக அளவில் கிடைக்கும். வியாபாரிகள் வளர்ச்சி காண்பார்கள். பங்கு வர்த்தகத் தொழில் செய்பவர்கள் சரிவிலிருந்து மீண்டு வருவீர்கள். மொத்த வியாபாரிகள் புதிய வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். வாகனங்களை அதிகப்படுத்துதல் ஊழியர்களை அதிகப்படுத்துதல் ஏற்படும். கிளை நிறுவனங்கள் ஆரம்பிப்பார்கள்.
பெண்களுக்கு - குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். செலவுகள் அதிகமாக இருக்கும். விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். இதுவரை வேலை இல்லாத பெண்களுக்கு இப்போது வேலை கிடைக்கும். அரசு உத்தியோகம் வாய்ப்பும் உண்டு.


மாணவர்களுக்கு - ஆரம்பக் கல்வி பயில்பவர்களுக்கு சோம்பலும் அலட்சியமும் உண்டாகும். உயர் கல்வி பயில்பவர்கள் கல்வியில் முன்னேற்றம் உண்டு. தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். விடுபட்ட தேர்வுகளை எழுதி முடிப்பீர்கள்.


கலைஞர்களுக்கு - நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நாட்டியக் கலைஞர்களுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். திரைத்துறையினருக்கு புகழ் பெருமை உண்டாகும்.


பொதுப்பலன் - ஆரோக்கியம் தவிர வேறு எந்த பாதிப்பும் இல்லை. கடன் வாங்க வேண்டிய சூழல் இருந்தாலும் நல்ல விஷயத்திற்கு தான் பயன்படும். பழைய கடன்கள் தீரும். வாகனங்களை கவனமாகப் பராமரியுங்கள். இறை நம்பிக்கை அதிகமாகும். ஆன்மிகத் தொடர்புடைய நபர்களை சந்திப்பீர்கள். பண வரவும் செலவும் சமமாக இருப்பதால், வீண் செலவுகளைத் தவிர்த்தாலே கையில் பணம் இருக்கும். நீரிழிவு நோய் இருப்பவர்கள் தவறாமல் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.


இந்த வாரம் செவ்வாய், வியாழன், சனி, ஞாயிறு இந்த நான்கு நாட்களும் சாதகமான நாட்கள். திங்கள், புதன், வெள்ளி மூன்று நாட்களும் சாதகமான பலன்களைத் தராது.


வணங்கவேண்டிய தெய்வம் - கால பைரவருக்கு செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். தடைகள் அகலும். ஆரோக்கியம் மேம்படும்.

*******************************************************************************************************

சித்திரை -


எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும் குருவின் அருளால் வெற்றியாகும். இதுவரை சரியான வேலை வாய்ப்பு இல்லாதவர்கள் இப்பொழுது நல்ல வாய்ப்புகளைப் பெறுவார்கள். பயணங்கள் அதிகரிக்கும். மனதில் தேவையற்ற பய உணர்வு உண்டாகும். ஆரோக்கியம் பற்றிய தேவையில்லாத பயம் உண்டாகும். ஆணாக இருந்தால் உங்கள் மனைவிக்கு, நீங்கள் பெண்ணாக இருந்தால் உங்கள் கணவருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். சிறிய அளவிலான அறுவை சிகிச்சை தேவைப்படும். ஆனால் பயம் தேவையில்லை. பூர்வீகச் சொத்து பிரச்சினைகள் ஒரு பொது மனிதரால் தீர்க்கப்படும். இளையசகோதரரால் மன வருத்தங்கள் ஏற்படும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வரும். விட்டுக்கொடுத்துச் சென்றால் பெரிய பிரச்சினைகள் ஏதும் வராது.


உத்தியோகம் - வேலையில் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படும். குறைந்தபட்சம் அலுவலகத்திற்கு உள்ளேயே இடமாற்றம் ஏற்படும். அவர் சிலர் தங்கள் அலுவலக அறையை மாற்றி அமைப்பீர்கள். அலுவலக விஷயமாக பயணங்கள் அதிகரிக்கும். அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.


இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு தற்காலிக வேலை கிடைக்கும். அயல்நாடு சென்று பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் நல்ல வேலை கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. கட்டுமானத் தொழிலாளர்கள் மராமத்துப் பணி வேலை செய்பவர்கள் வேலைப்பளுவும் கூடும் வருமானமும் கூடும்.


தொழில் - தொழில் வளர்ச்சி ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஏற்றுமதி தொழில் செய்பவர்களுக்கு கூடுதல் ஆர்டர்கள் பெறுவார்கள். லாபம் சிறக்கும். ரசாயனம் தொடர்புடைய தொழில் செய்பவர்கள், சாயத் தொழில் செய்பவர்கள் / ஆடை ஏற்றுமதி தொழில் செய்பவர்கள் இவர்களுக்கெல்லாம் இப்பொழுது பெரிய ஆதாயங்கள் ஏற்படும். மொத்த வியாபாரிகள் / சில்லரை வியாபாரிகள் நல்ல லாபம் பார்ப்பார்கள். அழகு நிலையம் நடத்துபவர்கள், சிகை அலங்காரம் செய்பவர்கள் புதிய கிளைகளைத் துவங்குவார்கள். தரகு தொழிலில் இருப்பவர்கள் அதிக ஆதாயம் பெறுவார்கள். புதிய தொழில்முனைவோர்கள் நல்ல வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று தொழிலைத் துவங்குவார்கள். தொழில் தொடர்பான வழக்குகள் ஏதும் இருந்தால் சாதகமாக தீர்ப்பு வரும். அரசுக்கு எதிரான வழக்குகள் அல்லது வரி தொடர்பான பிரச்சினைகள் சுமூகமாக தீரும்.


பெண்களுக்கு -சொத்துச் சேர்க்கை உண்டு. ஆதாயம் தரும் வியாபாரம் ஒன்றை ஆரம்பிப்பீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படும். நீண்ட நாட்களாக வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு இப்பொழுது வேலை கிடைக்கும். அரசு உத்தியோகத்திற்கு தேர்வு எழுதி காத்திருந்தவர்களுக்கு இப்போது நேர்முகத்தேர்வு அழைப்பு வரும்.


மாணவர்களுக்கு - ஞாபகத்திறன் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு தன்னம்பிக்கை குறையும். தைரியமாக இருந்தால் வெற்றி பெறலாம்.


கலைஞர்களுக்கு - பலவித ஒப்பந்தங்கள் உண்டாகும். நல்ல வாய்ப்புகளைப் பெற்று பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வீர்கள். ஓய்வுக்கு இனி இடமில்லை.


பொதுப்பலன் - மனதில் ஏற்படும் சங்கடங்களை தவிர்த்து விட்டாலே எல்லாம் நன்மையாகும். மற்றபடி பெரிய பிரச்சினைகள் ஏதும் இல்லை. கடன்கள் தீரும். சொத்து பிரச்சினைகள் பொது நபர் ஒருவரால் தீர்க்கப்படும். நண்பர்களால் செலவு உண்டாகும். புதிய வீடு வாங்கும் கனவு நனவாகும். பாதியில் நின்ற கட்டிடப் பணிகள் முழுமை பெறும். வங்கிக்கடன் இப்பொழுது கிடைக்கும். அரசுடன் இருந்த விரோதப் போக்கு மாறும். அரசின் சலுகைகள் கிடைக்கும்.


இந்த வாரம் திங்கள், புதன், வெள்ளி, ஞாயிறு இந்த நான்கு நாட்களும் சாதகமான நாட்கள். நற்பலன்கள் நடக்கும்.
செவ்வாய், வியாழன், சனி இந்த மூன்று நாட்களும் சாதகமாக இல்லை.


வணங்க வேண்டிய தெய்வம் - நவகிரகத்தில் உள்ள சூரிய பகவானுக்கு இளம் சிவப்பு வஸ்திரம் சாற்றி தீபமேற்றி வழிபடுங்கள். ஆதித்ய ஹிருதயம் பாராயணம் செய்யுங்கள் அல்லது அதிகாலையில் கேளுங்கள். வெற்றிகள் அதிகமாகும். தன்னம்பிக்கை பிறக்கும். சஞ்சலங்கள் அகலும்.

********************************************************************************

சுவாதி -


வெற்றியைத் தேடிப் போக வேண்டியதில்லை. வெற்றி தானாக வரும். குருவின் பெயர்ச்சியால் நன்மைகள் அதிகமாகும். எதிர்ப்புகள் குறையும். சொல்லைச் செயலாக்கிக் காட்டுவீர்கள். பயணங்கள் அதிகமாகும் அதனால் ஆதாயம் ஏற்படும்.


சொத்து சம்பந்தமான வழக்குகள் சாதகமாகும். பெரிய அளவிலான வியாபாரப் பேச்சுக்கள் நல்ல முடிவை எட்டும். சகோதரர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து சென்றால் பிரச்சினைகள் ஏதும் வராது, பிடிவாதமாக இருந்தால் வருத்தங்கள் மட்டுமே மிஞ்சும்.சொந்த வீடு கனவு நனவாகும். குடியிருக்கும் வீட்டை விரிவுபடுத்துவீர்கள். அல்லது புதுப்பித்தல் பணி செய்வீர்கள். வாகன மாற்றம் ஏற்படும். குறுகிய பயணமாக வெளிநாடு சென்று வருவீர்கள்.


உத்தியோகம் - வேலையில் இருந்த அழுத்தங்கள் குறையும். பதவி உயர்வு கிடைக்கும். அலுவலகத்தில் வரவேண்டிய நிலுவைத் தொகை இப்போது கிடைக்கும். வேறு வேலைக்கு முயற்சி செய்பவர்கள் இப்போது அந்த முயற்சி வெற்றியாகும். வெளிநாட்டு நண்பர் ஒருவரால் அயல்நாட்டில் வேலை கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது. இதுவரை வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு இந்த வாரம் நேர்முகத் தேர்வு அழைப்பு வரும்.


அலுவலக குழுவுக்கு தலைமை ஏற்க வேண்டியது வரும். அரசு ஊழியர்களுக்கு அழுத்தங்களும் கூடுதல் பொறுப்புகளும் ஏற்படும். உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்காது. இது அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும்.


தொழில் - தொழிலில் இருந்த மந்தநிலை மாறும். வளர்ச்சிக்கான வழி கிடைக்கும். அரசு வழியில் இருந்த அத்தனை பிரச்சினைகளும் இப்போது முடிவுக்கு வரும். உங்கள் மீதான வழக்குகளில் சாதகமான தீர்ப்பு பெறுவீர்கள். அயல்நாட்டு ஒப்பந்தங்கள் கிடைக்கப்பெறும். அயல்நாட்டிலிருந்து நிதி உதவி கிடைக்கும். புதிதாக தொழில் தொடங்குபவர்கள் தடையில்லாமல் தொடங்குவார்கள்.

அழகு சாதனப் பொருட்கள் விற்பவர்கள், கவரிங் நகை கடை வைத்திருப்பவர்கள், ஆபரணத் தொழில் செய்பவர்கள் வளர்ச்சி காண்பார்கள், லாபம் அதிகமாகும். காய்கறி வியாபாரிகள் கடையை விரிவுபடுத்துவீர்கள். மொத்த வியாபாரிகள் புதிதாக கிளை ஆரம்பிப்பீர்கள். பங்கு வர்த்தக தொழில் ஏற்றம் பெரும் .


பெண்களுக்கு -குடும்ப பிரச்சினைகள் தீரும். சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். சகோதரர்களுடன் வருத்தம் ஏற்படும். படிப்புக்குத் தகுந்த வேலை கிடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பதவிஉயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. இடமாற்றம் உண்டு.
மாணவர்களுக்கு - கல்வியில் சராசரியான போக்கே இருக்கும். ஞாபக மறதி இருக்கும். படிப்பைத் தவிர மற்ற ஆடம்பர விளையாட்டுக்களில் ஆர்வம் ஏற்படும்.


கலைஞர்களுக்கு - வாய்ப்புகள் பலவாறாக வரும். இசைக்கலைஞர்கள் ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். சிலர் அயல்நாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.


பொதுப்பலன் - சிறப்பான வாரம் . எடுத்த செயல்களில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியம் மேம்படும். மருத்துவச் செலவுகள் குறையும். வீட்டில் மராமத்து வேலைகள் செய்வீர்கள். வீட்டின் அறைகளை மாற்றியமைத்தல் வேலைகளைச் செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்களுக்கு சுப விசேஷங்கள் சுப விசேஷங்கள் செய்து மகிழ்வீர்கள். ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்புகள் இருக்காது என்றாலும் காது வலி,தொண்டை வலி, கணுக்கால் வலி போன்றவை வரும்.


இந்த வாரம் திங்கள், செவ்வாய், வியாழன், சனி இந்த நான்கு நாட்களும் நல்ல பலன்கள் நடக்கும். சாதகமான நாட்கள் ஆகும்.
புதன், வெள்ளி, ஞாயிறு இந்த மூன்று நாட்களும் சாதகமாக இல்லை.


வணங்கவேண்டிய தெய்வம் - ஸ்ரீஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சூட்டி அர்ச்சனை செய்யுங்கள். வெற்றிகள் அதிகமாகும். முயற்சிகள் பலன் தரும்.
************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

மேலும்