இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவர்வீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வருங்காலத்துக்காக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

ரிஷபம்: தைரியமான முடிவுகள் எடுத்து வெற்றி காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். சகோதரர் வகையில் மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுனம்: மனக்குழப்பங்கள் விலகும். வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகையால் வீடு கலகலப்பாகும். குடும்பத்தினரின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்வீர்கள்.

கடகம்: பணப்பற்றாக்குறை விலகும். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். தாயின் உடல்நலம் சீராகும். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். திடீர் பயணம் உண்டு.

சிம்மம்:: திட்டமிடாத செலவு, பயணம் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட வேண்டாம். பிற்பகலில் மகிழ்ச்சியான சம்பவம் நிகழும்.

கன்னி: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். முக்கிய காரியங்களில் முன்யோசனையுடன் நிதானமாக செயல்படுவது நல்லது.

துலாம்: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்பொழுது பாராட்டப்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள்.

விருச்சிகம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். சிந்தனைத்திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும்.

தனுசு: எதிரிகளின் சூழ்ச்சிகளை வெற்றிகொள்வீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். விருந்தினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும்.

மகரம்: உங்களுடைய பலம், பலவீனத்தை உணர்ந்து செயல்படுவது நல்லது. சொந்தபந்தங்களால் அன்புத் தொல்லை உண்டு. பிற்பகல் முதல் தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

கும்பம்: புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். பழைய சிக்கல்களில் ஒன்று தீரும். காரியங்களில் நிதானித்து செயல்படுங்கள். கலைப்பொருட்கள் சேரும்.

மீனம்: பழைய இனிய சம்பவங்களை அவ்வப்போது நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த கருத்துவேறுபாடு நீங்கும்.. வாகன பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

மேலும்