மேஷம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை தெரிந்து கொள்வீர்கள். அக்கம்பக்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.
ரிஷபம்: தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.
மிதுனம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். மற்றவர்களுக்காக செலவுகள் செய்து பெருமைப்படுவீர்கள். உறவினர், நண்பர்களின் வருகையால் வீடு களைகட்டும்.
கடகம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். சாதுர்யமான பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள்.
சிம்மம்: முன்கோபத்தை குறைப்பது நல்லது. பலமுறை முயன்று காரியங்களை முடிப்பீர்கள். சொந்தபந்தங்களால் அன்பு தொல்லை உண்டு. வீடு, வாகன பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.
கன்னி: வீண் விவாதங்கள் வந்து போகும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். உறவினர்கள், நண்பர்களால் வீண் பிரச்சினைகள் வரக்கூடும். திடீர் பயணம் உண்டு.
துலாம்: குடும்பத்தாரின் விருப்பங்களை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள். கடன் பிரச்சினை கட்டுப்பாட்டுக்குள் வரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். கலைப்பொருட்கள் சேரும்.
விருச்சிகம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். இழுபறியாக இருந்த பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும். வாகனம் செலவு வைக்கும்.
தனுசு: கடந்தகால இனிய சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். முக்கிய பிரமுகர் அறிமுகமாவார்.
மகரம்: திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். பிரார்த்தனைகள் நிறைவேறும்.
கும்பம்: உங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வாகனத்தை சரி செய்வீர்கள். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புது நட்பு மலரும்.
மீனம்: தொட்ட காரியங்கள் துலங்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். உதவி கேட்டு வருபவர்களுக்கு உங்களால் இயன்றதை செய்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
16 hours ago
ஜோதிடம்
16 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago