மேஷம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.
ரிஷபம்: சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். நீண்டநாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். பேச்சில் இருந்த தடுமாற்றம் நீங்கும். பணவரவு சரளமாக இருக்கும். திடீர் பயணம் உண்டு.
மிதுனம்: உங்களின் நிர்வாகத் திறமை அதிகரிக்கும். அடகு வைத்திருந்த ஆபரணங்களை மீட்பீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை விலகும். பால்ய நண்பரை எதிர்பாராது சந்திப்பீர்கள்.
கடகம்: அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியோ, உத்தரவாதமோ தர வேண்டாம். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்காதீர்கள். உடல் நலத்தில் கவனம் தேவை.
சிம்மம்: எதிர்பாராத பயணங்கள் ஏற்படக் கூடும். சொத்து வாங்குவது, விற்பதில் அலட்சியம் காட்ட வேண்டாம். வேலைச்சுமை, மறைமுக எதிர்ப்பு, வீண் செலவுகள் வந்து போகும்.
கன்னி: தொட்ட காரியங்கள் துலங்கும். திடமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பாராத வகையில் பணவரவு உண்டு. கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த சண்டை, சச்சரவு நீங்கும்.
துலாம்: உங்களின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர் அறிமுகமாவார். எதிர்பாராத பணவரவு உண்டு. கணவன் - மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள்.
விருச்சிகம்: நேர்மறை எண்ணங்கள் தோன்றும். சகோதரிக்கு வேலை கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வீடு, மனை, வாங்குவது குறித்து ஆலோசிப்பீர்கள்.
தனுசு: முன்கோபம் அடிக்கடி தலைதூக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் ஏற்படலாம். சகோதரர்களை அனுசரித்து செல்லுங்கள்.
மகரம்: தேங்கிக் கிடந்த வேலைகளை மளமளவென்று முடிப்பீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் தொடர்பும். உதவியும் கிடைக்கும். தோற்றப் பொலிவு கூடும்.
கும்பம்: சவால்களில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்துவந்த கூச்சல், குழப்பங்கள் நீங்கி அமைதி திரும்பும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். திடீர் பயணம் உண்டு.
மீனம்: கடனாக கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். மகளுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைப் போல் நல்ல இடத்தில் வரன் அமையும். குடும்பத்தினரிடையே ஒற்றுமை, அமைதி நிலவும்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
23 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago