இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: கடந்தகால இனிய சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். சிக்கனத்தை கடைபிடிப்பீர்கள். மனக்குழப்பங்கள் நீங்கும்.

ரிஷபம்: சத்தமே இல்லாமல் சில வேலைகளை கச்சிதமாக முடிப்பீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. விருந்தினர், நண்பர்களின் வருகையால் வீடு கலகலப்பாகும்.

மிதுனம்: சில நேரங்களில் மனம் சஞ்சலப்படும். கணவன் - மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து செல்லும். யாரையும் நம்பி உறுதிமொழி தரவேண்டாம். முன்கோபத்தால் பகை ஏற்படும்.

கடகம்: திட்டமிட்ட காரியங்களை பலமுறை போராடி முடிக்க வேண்டியது வரும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் நிதானத்தை கடைபிடிப்பது அவசியம்.

சிம்மம்: நம்பிக்கைக்கு உரியவர்களின் ஆதரவு கிட்டும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பணவரவு திருப்திகரமாக இருக்கும். கோபம் குறையும். வெளியூர் பயணம் மகிழ்ச்சி தரும்.

கன்னி: அதிரடியாக செயல்பட்டு சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும். கலைப்பொருட்கள் சேரும்.

துலாம்: இழுபறியாக இருந்துவந்த காரியங்கள் முடிவுக்கு வரும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள்.

விருச்சிகம்: புதிய முயற்சிகள் தாமதமாகி முடியும். குடும்பத்தில் ஒருவர் மீது ஒருவர் குறைகூறி கொண்டிருக்க வேண்டாம். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துங்கள்.

தனுசு: மனம் தெளிவடையும். மற்றவர்களுடன் கலகலப்பாக பேசுவீர்கள். கணவன் - மனைவி இடையே நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். வீடு, வாகனப் பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

மகரம்: ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். வியாபார ரீதியாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தினரின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். தாயின் உடல்நிலை சீராகும்.

கும்பம்: சோர்வு, அலைச்சல் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பணவரவு சரளமாக இருக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.

மீனம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரியங்களை முடிப்பீர்கள். குடும்பத்தினருடன் இருந்துவந்த கருத்துவேறுபாடு நீங்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த இனிய செய்தி வரும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

மேலும்