இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவெடுப்பீர்கள். வெளியூரிலிருந்து உறவினர், நண்பர்கள் வருகையால் வீடு கலகலப்பாகும். குடும்பத்தினரின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள்.

ரிஷபம்: வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பணவரவு சரளமாக இருக்கும். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். தாயின் உடல்நலம் சீராகும். திடீர் பயணம் உண்டு.

மிதுனம்: முக்கிய விஷயங்களில் அவசரப்பட வேண்டாம். சிலரின் விமர்சனங்களுக்கும், கேலி பேச்சுக்கும் ஆளாவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.

கடகம்: உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். மற்றவர்களை பின்பற்றாமல் உங்களின் தனித்தன்மையை கடைபிடிப்பது நல்லது.

சிம்மம்: சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சிந்தனைத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் உடல்நலம் சீராக இருக்கும். கலைப்பொருட்கள் சேரும்.

கன்னி: எதிரிகள் உங்களை புரிந்து கொள்வார்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். விருந்தினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும்.

துலாம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரியங்களை சாதிப்பீர்கள். குடும்பத்தினருடன் இருந்துவந்த கசப்புணர்வு நீங்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணவரவு உண்டு.

விருச்சிகம்: கல்யாண பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் உண்டாகும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். புது வீடு வாங்குவது குறித்து யோசிப்பீர்கள்.

தனுசு: ஆரவாரமின்றி சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. குலதெய்வ பிரார்த்தனை நிறைவேறும்.

மகரம்: மனஉளைச்சல் வந்து போகும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. குடும்பத்தில் ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

கும்பம்: சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. குடும்பத்தில் திடீர் சலசலப்புகள் வந்து நீங்கும். யாரையும் மனம் நோகும்படி எடுத்தெறிந்து பேசாதீர்கள்.

மீனம்: செயலில் வேகத்தைக் காட்டுவீர்கள். குடும்பத்தினரின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு பிள்ளைகளுடன் நேரத்தை செலவிடுவீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

20 hours ago

ஜோதிடம்

21 hours ago

ஜோதிடம்

22 hours ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

மேலும்