இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: பூர்வீக சொத்தை புதுப்பிப்பீர்கள். நண்பர்கள் அனுசரணையாக இருப்பார்கள். குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். திடீர் பயணம் ஏற்படக்கூடும்.

ரிஷபம்: உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். அரசியலில் செல்வாக்கு கூடும். கணவன் - மனைவிக்குள் அவ்வப்போது மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். வாகனம் செலவு வைக்கும்.

மிதுனம்: அழகு, ஆரோக்கியம் கூடும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி வரும்.

கடகம்: பிரச்சினைகளை சாதுர்யமாக சமாளிப்பீர்கள். வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டு. புதிய நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகமடைவீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

சிம்மம்: முக்கிய காரியங்களில் இருந்துவந்த இழுபறி நிலை மாறும். மறைமுக எதிரிகளை கண்டறிந்து ஒதுக்குவீர்கள். அரசியல் பிரமுகரால் ஆதாயம் உண்டு. பணவரவு திருப்தி தரும்.

கன்னி: வங்கியில் அடமானமாக வைத்திருந்த சொத்துகளை மீட்பீர்கள். பழைய வாகனத்தை மாற்றி புதியது வாங்குவீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப புது வீடு வாங்கும் யோகம் கனிந்து வரும்.

துலாம்: உங்கள் அணுகுமுறையில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு அதிகரிக்கும். ஓரளவு பணம் வரும். தடைபட்டிருந்த அரசு வேலைகள் உடனே முடியும்.

விருச்சிகம்: பூர்வீக சொத்து கைக்கு வரும். உறவினர்களால் அனுகூலம் உண்டு. கோயில் விசேஷங்களுக்கு நன்கொடை வழங்குவீர்கள். காரியங்களில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.

தனுசு: வீடு கட்டுவதற்கான வங்கிக் கடன் கிடைக்கும். குடும்பத்தில் அவ்வப்போது கூச்சல், குழப்பங்கள் வந்து நீங்கும். பால்ய நண்பர் ஒருவரை எதிர்பாராது சந்தித்து மகிழ்வீர்கள்.

மகரம்: திடீர் பயணம் உண்டு. சகோதரர்களுடன் எதிர்பாராத வகையில் கருத்துவேறுபாடு வரும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். சமயோசிதமாக செயல்பட்டு காரியங்களை சாதிப்பீர்கள்.

கும்பம்: உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். டென்ஷன் குறையும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. பிள்ளைகளின் திறமைகளைக் கண்டறிந்து ஊக்குவிப்பீர்கள். பணவரவு திருப்தி தரும்.

மீனம்: சவாலான காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

20 hours ago

ஜோதிடம்

21 hours ago

ஜோதிடம்

22 hours ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

மேலும்