பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
துலாம்
(சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
துலா ராசியினரே.
இந்த மாதம் ராசியாதிபதி ஆட்சியாக சஞ்சரிக்கிறார். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். புத்திசாதுர்யத்தால் எதையும் செய்து முடிக்க முடியும். அனுபவபூர்வமான அறிவுத்திறன் கை கொடுக்கும். பணவரத்து தாமதப்படும். மற்றவர்களுடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நன்மை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.
தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாகப் பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும்.
குடும்பத்தில் பிரச்சினைகள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை அகலும். பிள்ளைகள் உங்கள் ஆலோசனையைக் கேட்காமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கலாம். உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.
பெண்களுக்கு அனுபவபூர்வமான அறிவைக்கொண்டு எதையும் சாதிப்பீர்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும்.
கலைத்துறையினருக்கு தொழில் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பணிகள் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். புத்தி சாதுர்யத்தால் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
அரசியல் துறையினருக்கு நிதானமாகப் பேசுவது நன்மை தரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்பார்த்த தகவல்கள் வரும். மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்படியான காரியங்கள் நடக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்.
சித்திரை:
இந்த மாதம் அடுத்தவரை நம்பி காரியத்தில் இறங்கும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான சிறிய பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டி இருக்கும். தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்தப் பணியை முதலில் முடிப்பது போன்ற குழப்பத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும்.
ஸ்வாதி:
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பிரச்சினை குழப்பம் போன்றவை ஏற்பட்டு பின்னர் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றலாம். பிள்ளைகளிடம் பேசும்போது எச்சரிக்கை தேவை. உறவினர்களிடம் எந்த உறுதியையும் தராமல் இருப்பது நல்லது.
விசாகம்:
இந்த மாதம் அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் சங்கடமான சூழ்நிலை உண்டாகும். சமாளித்து முன்னேறும் திறமை இருக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற வேண்டும் என்று பாடுபடுவீர்கள். போட்டிகள் சாதகமான பலன் தரும்.
பரிகாரம்: மாரியம்மனை வணங்கி வர எதிர்ப்புகள் விலகும். காரிய வெற்றி உண்டாகும். மனமகிழ்ச்சி கூடும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், புதன், வெள்ளி; தேய்பிறை: திங்கள், வியாழன், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: 17, 18
அதிர்ஷ்ட தினங்கள்: 7, 8, 9
அதிர்ஷ்ட ஹோரைகள்: புதன், குரு சுக்கிரன்
அதிர்ஷ்ட வண்ணங்கள்: மஞ்சள், வெள்ளை
******************************************************************
விருச்சிகம்
(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
விருச்சிக ராசியினரே.
நீங்கள் தன்னம்பிக்கை மிக்கவர். இந்த மாதம் ராசியாதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் சூரியனுடன் சஞ்சரிக்கிறார். காரியத்தடை தாமதம் நீங்கும். வழக்கு விவகாரங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். எதிர்ப்புகள் விலகும். பொருளாதாரம் உயரும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தாமதமான காரியங்கள் வேகம் பிடிக்கும். வீண்கவலை விலகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும்.
ராசிநாதனும் தொழில் ஸ்தானாதிபதி சூரியனும் இணைந்து சஞ்சரிக்கிறார்கள். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னருடன் அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபார போட்டிகள் குறையும். எல்லாத் துறைகளிலும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவார்கள். வேலை பார்க்கும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். மேலதிகாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை நிலவும்.
குடும்பாதிபதி குரு ராசியில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். சிலருக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். வாய்க்கு ருசியான உணவு உண்பீர்கள். கணவன் மனைவி ஒருவரது பேச்சை மற்றவர் கேட்பதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நட்பு ரீதியில் நிதானத்தைக் கடைபிடிப்பது நன்மையைத் தரும்
பெண்களுக்கு எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். தடைகள் விலகும். பணவரத்து திருப்திதரும்.
கலைத்துறையினருக்கு ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். தொழில் திருப்திகரமாக நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக நடக்கும். முன்னேற்றம் காண்பார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.
அரசியல் துறையினருக்கு சந்தோஷமான நிலை காணப்படும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை விலகும். விளையாட்டுப் போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். விடுமுறையில் மகிழ்ச்சியான பொழுதுபோக்கில் ஈடுபடுவீர்கள்.
விசாகம்:
இந்த மாதம் ஆழ்ந்த யோசனையும், அனுபவ அறிவையும் கொண்டு எதையும் சாதிக்க முயற்சிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். எதிர்பாலினத்தாரிடம் பழகும்போது மிகவும எச்சரிக்கை தேவை. எந்தக் காரியத்தை செய்தாலும் அதில் வேகத்தை காட்டாமல் மெத்தனமாகவே செய்ய தோன்றும்.
அனுஷம்:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். பணவரத்து தாமதப்பட்டாலும் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை தொடர்பான கவலை உண்டாகும். சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.
கேட்டை:
இந்த மாதம் குடும்ப விஷயமாக அலைய வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருக்கும் நெருக்கம் குறையும். தாய், தந்தையரின் உடல்நலத்தில் கவனம் தேவை. எதிலும் உற்சாகம் குறைந்து சோம்பல் ஏற்படும்.
பரிகாரம்: குலதெய்வத்தை வணங்க எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், வெள்ளி; தேய்பிறை: திங்கள், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: 19, 20, 21
அதிர்ஷ்ட தினங்கள்: 10, 11
அதிர்ஷ்ட ஹோரைகள்: செவ்வாய், குரு, சுக்கிரன்
அதிர்ஷ்ட வண்ணங்கள்: சிவப்பு, மஞ்சள்
**************************************************************************
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
தனுசு ராசியினரே.
இந்த மாதம் ராசிநாதன் குருவின் சஞ்சாரத்தால் பலவகைகளிலும் நன்மை உண்டாகும். ராசியை செவ்வாய் தனது நான்காம் பார்வையால் பார்ப்பதால் இழுபறியாக இருந்த சில வேலைகள் சாதகமாக நடந்து முடியும். பணவரத்து அதிகரிக்கும். தெளிவான முடிவு எடுப்பதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். கடினமான வேலைகள் கூட சுலபமாக முடியும். மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். கடினமான முயற்சி இல்லாமலேயே வெற்றி காண்பீர்கள்.
தொழில் வியாபாரத்தில் இருந்த பணத் தட்டுப்பாடு நீங்கும். வசூலாக வேண்டிய கடன்பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பான பயணங்களினால் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை குறையும். வர வேண்டிய பணம் வந்து சேரும்.
குடும்பாதிபதி சனிபகவான் ராசியில் சஞ்சரிக்கிறார். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கைத் துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. அடுத்தவர் செயல்கள் உங்கள் கோபத்தைத் தூண்டுவதாக இருக்கலாம். அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளிடம் கனிவாக நடந்து கொள்வது நல்லது.
பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். கவுரவம் உயரும். மற்றவர்களிடம் நன்மதிப்பு உண்டாகும்.
கலைத்துறையினருக்கு விருப்பங்கள் கைகூடும். அக்கம்பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.
அரசியல்துறையினருக்கு எந்த ஒரு விஷயத்திலும் வேகம் காட்டினாலும் அதே நேரத்தில் அதில் உள்ள நன்மை தீமைகள் பற்றி ஆலோசித்து முடிவு எடுப்பது அவசியமாகிறது. காரிய அனுகூலம் உண்டாகும். காரிய தடைதாமதம் ஏற்படும். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் இழுபறியாக இருக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் காண்பீர்கள். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.
மூலம்:
இந்த மாதம் எடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து நற்பெயர் பெறுவீர்கள். அதே நேரத்தில் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் நன்கு கவனித்து படிப்பது நல்லது. சக மாணவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும்.
பூராடம்:
இந்த மாதம் மனஅமைதி உண்டாகும். எதிலும் நற்பலன் கிடைக்கும். திட்டமிட்டு செயலாற்றுவதிலும், உறுதியான முடிவு எடுப்பீர்கள். வாக்கு வன்மையால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத திடீர் செலவு உண்டாகலாம். அடுத்தவர் கூறுவதை தவறாக புரிந்து கொண்டு பின்னர் வருத்தப்படும் சூழ்நிலை ஏற்படலாம்.
உத்திராடம்:
இந்த மாதம் கடவுள் பக்தி அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல், சொத்து வாங்குவது ஆகியவற்றில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி நீங்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை.
பரிகாரம்: முருகனை வணங்கிவர கஷ்டங்கள் தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பீர்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, செவ்வாய், வியாழன்; தேய்பிறை: செவ்வாய், வியாழன்;
சந்திராஷ்டம தினங்கள்: 22, 23
அதிர்ஷ்ட தினங்கள்: 12, 13, 14
அதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன், செவ்வாய், குரு
அதிர்ஷ்ட வண்ணங்கள்: மஞ்சள், சிவப்பு
***********************************************************
மகரம்
(உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)
மகர ராசியினரே.
இந்த மாதம் ராசிநாதன் சனிபகவான் விரய ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் காரியங்களில் தாமதமான போக்கு காணப்படும். உங்கள் வார்த்தைக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். எவரிடமும் அளவுடன் பேசுவது நல்லது. உங்களது உடைமைகளை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.
தொழில் ஸ்தானாதிபதி சுக்கிரன் ஆட்சியாக சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் வேகமான போக்கு காணப்படும். சரக்குகளை அனுப்பும் போதும் பாதுகாத்து வைக்கும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கிடப்பில் இருந்த கடன்கள் பைசலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துs செல்வது நல்லது. செய்யும் வேலை பற்றி மனதில் திருப்தியற்ற எண்ணம் உண்டாகும்.
ராசிநாதனும் குடும்பாதிபதியுமாகிய சனிபகவானின் சஞ்சாரம் குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்களால் உங்களுக்கு மனவருத்தத்தை தருவதாக இருக்கலாம். கவனமாகக் கையாள்வது நல்லது. பிள்ளைகளுடன் அனுசரித்துச் செல்வது நன்மையை தரும். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் அடையும்படியான சூழ்நிலை வரலாம் கவனம் தேவை.
பெண்கள் உங்களது பொருள்களை கவனமாக பாதுகாத்துக்கொள்வது நல்லது. வீண்பிரச்சினைகளில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவது நன்மைதரும்.
கலைத்துறையினருக்கு இழுபறி நிலை மாறி மனம் மகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும். தொழில் மந்தமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து இருக்கும். பணிகள் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம்.
அரசியல்துறையினருக்கு மேலிடத்தில் இருப்பவர்களிடம் இருந்து மனம் நோகும்படியான வார்த்தைகள் வெளிப்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். பதவிகள் பற்றிய கவலை உண்டாகும். நிதானமாக செய்யும் செயல்கள் வெற்றியை தரும்.
மாணவர்களுக்கு கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நன்மை தரும். கவனமாக அடுத்தவர்களிடம் பழகுவது நல்லது.
உத்திராடம்:
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக பிரச்சினைகள் தீரும். தொடங்கிய வேலையை திட்டமிட்டபடி செய்ய முடியாமல் இழுபறியாக இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் நீங்கள் கூறுவதை ஏற்காமல் தங்களது விருப்பப்படி எதையும் செய்வார்கள்.
திருவோணம்:
இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை இருக்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். அடுத்தவர் கூறும் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அதில் உள்ள நல்லது கெட்டதை யோசிப்பது நல்லது. பண விவகாரங்களில் கவனம் தேவை.
அவிட்டம்:
இந்த மாதம் எதையும் நன்கு யோசித்து பின்னர் செய்வது நன்மை தரும். மாணவர்கள் நிதானமாக ஆழ்ந்த கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது. மனக் கஷ்டம், பணக் கஷ்டம் நீங்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
பரிகாரம்: சனி பகவானை சனிக்கிழமையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது கவலையைப் போக்கும். வீண் அலைச்சல் குறையும். வேலைப்பளு நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, செவ்வாய், வியாழன்; தேய்பிறை: செவ்வாய், வியாழன், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: 24, 25
அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16
அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், குரு, சுக்கிரன்
அதிர்ஷ்ட வண்ணங்கள்: நீலம், பச்சை
*************************************************
கும்பம்
(அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)
கும்ப ராசியினரே.
இந்த மாதம் ராசிநாதன் சனிபகவானின் சஞ்சாரத்தால் விரும்பாத இடமாற்றம் உண்டாகலாம். குறிக்கோள் இன்றி வீணாக அலைய நேரிடும். செலவும் அதிகரிக்கும். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். மனோதைரியம் கூடும். புதிய நட்பு கிடைக்கும். எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மைதரும்.
தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் தொழில், வியாபாரத்தில் தடங்கல்கள் அகலும். பணவரத்து இருந்தாலும் தேவை அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். அவர்களால் நன்மையும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற வேகத்தில் பணிபுரிவார்கள். சிலர், புதிய பதவி அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்க பெறுவார்கள். சிலருக்கு குடும்பத்தை விட்டு வெளியே சென்று தங்க நேரிடலாம். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும்.
குடும்பாதிபதி குருவின் சஞ்சாரத்தால் குடும்பத்தில் விருந்தினர்கள் வருகை இருக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். பிள்ளைகளுடன் சந்தோஷமாக பொழுதை கழிப்பீர்கள்.
பெண்கள் அடுத்தவர்களின் வேலைக்காக வீணாக அலைய நேரிடும். மனோ தைரியம் அதிகரிக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.
கலைத்துறையினர் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. கஷ்டம் தீரும். பேச்சின் இனிமையால் காரியம் கைகூடும். சுப பலன்கள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.
அரசியல் துறையினருக்கு எதிர்பார்த்த பண உதவி கிடைக்கலாம். மேலிடத்தை அனுசரித்துச் செல்வது நல்லது. பணிகள் நிறைவடைய அலைய வேண்டி இருக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம்.
மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற முழுமூச்சாக பாடுபடுவீர்கள். புதிய நட்பு கிடைப்பதுடன் அவர்களது ஆலோசனையும் வெற்றிக்கு உதவும். ஆனால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.
அவிட்டம்:
இந்த மாதம் மனத்தெளிவு உண்டாகும். எந்த காரியத்தையும் செய்து முடிக்கும் திறமை அதிகரிக்கும். வயிறு கோளாறு உண்டாகலாம். பணவரத்து கூடும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். ஆன்மிக நாட்டம் தெய்வ பக்தி அதிகரிக்கும்.
ஸதயம்:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். ஏற்றுமதி சிறக்கும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். பழைய பாக்கி வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.
பூரட்டாதி:
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களுடன் அனுசரித்து செல்வார்கள். விசேஷ நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்ள நேரிடும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளின் உடல்நிலையில் கவனம் தேவை.
பரிகாரம்: பெருமாளை தரிசித்து வணங்கி வர எதிர்பார்த்த காரிய அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சீர்படும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: செவ்வாய், வியாழன்; தேய்பிறை: செவ்வாய், புதன், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: 26, 27
அதிர்ஷ்ட தினங்கள்: 17, 18
அதிர்ஷ்ட ஹோரைகள்: புதன், சுக்கிரன்
அதிர்ஷ்ட வண்ணங்கள்: பச்சை, வெள்ளை
**************************************************************************
மீனம்
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
மீன ராசியினரே.
இந்த மாதம் ராசிநாதன் குரு பாக்கியஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிலும் வெற்றி கிடைக்கும். கோபம் அகலும். சமூகத்தில் உயர்ந்தவர்கள் மத்தியில் புதியதொரு மரியாதையும் வரவேற்பும் உங்களுக்கு கிடைக்கப்பெறும்.. உடல் நலம் பெறும். பூர்வ புண்ணிய சொத்துக்களும் அதனால் வரக்கூடிய தனலாபங்களும் உங்கள் தகுதியை உயர்த்தும். வெகுகாலம் தீராத பிரச்சினைகள் நல்ல தீர்வால், மனதுக்கு சந்தோஷம் தரும்.
ராசிநாதனும் தொழில் ஸ்தானாதிபதியுமான குரு ராசியைப் பார்க்கிறார். தனபாக்கியாதிபதி செவ்வாயும் ராசியைப் பார்க்கிறார். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த பின்தங்கிய நிலை மாறும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். வியாபாரப் போட்டிகள் தடை தாமதங்கள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு மேல் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவார்கள். பிடித்தமான இடத்திற்கு வேலை மாற்றம் உண்டாகும். சக ஊழியர்கள் நட்புடன் பழகுவார்கள்.
குடும்பாதிபதி செவ்வாய் சூரியனுடன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் அமைதி குறைவது போல் தோன்றும் சகோதரர்கள் வழியில் ஏதாவது பிரச்சினை தலைதூக்கலாம் கவனம் தேவை. பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். விருப்பமான நபரை சந்தித்து மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும்.
பெண்கள் வீண் பேச்சுக்களை குறைத்து செயலில் கவனம் செலுத்துவது நல்லது. பணவரத்து திருப்திதரும். கோபத்தை குறைப்பது நல்லது.
கலைத்துறையினருக்கு சகஜ நிலை காணப்படும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். சக கலைஞர்களுடன் இருந்து வந்த இடைவெளி குறையும். ஆன்மிக பயணம் செல்லும் நிலை உருவாகும். மற்றவர்கள், ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள். உங்களை விட்டுப் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள்.
அரசியல் துறையினருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. எல்லா வகையிலும் நல்லதே நடக்கும். அனுகூலமான பலன் கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும்.
மாணவர்களுக்கு தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகும்.
பூரட்டாதி:
இந்த மாதம் மனோதைரியம் கூடும். எதிர்ப்புகள் விலகும். எந்த சூழ்நிலையையும் அனுசரித்து செல்வீர்கள். வீண்குழப்பம், காரியத் தடை ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். கவனத்தில் தடுமாற்றம் உண்டாகலாம். பணவரத்து தாமதப்படும்.
உத்திரட்டாதி:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் சீரான நிலை காணப்படும். எதிர்பார்த்தபடி ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகலாம். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் மெத்தனப்போக்கு காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமற்ற இடமாற்றம் உண்டாகலாம்.
ரேவதி:
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் டென்ஷனை உண்டாக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை. தாய், தந்தையின் உடல்நிலையில் எச்சரிக்கை அவசியம்.
பரிகாரம்: விநாயகப் பெருமானை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். மனக்கஷ்டம் தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், வியாழன், வெள்ளி; தேய்பிறை: திங்கள், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 28, 29
அதிர்ஷ்ட தினங்கள்: 19, 20, 21
அதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன், செவ்வாய், குரு
அதிர்ஷ்ட வண்ணங்கள்: மஞ்சள், சிவப்பு
**************************************************************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
18 hours ago
ஜோதிடம்
18 hours ago
ஜோதிடம்
18 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
21 hours ago
ஜோதிடம்
22 hours ago
ஜோதிடம்
23 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago