இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: விடாப்பிடியாக செயல்பட்டு காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். கணவன் -மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். சகோதரர் வகையில் நன்மை உண்டு. பணவரவு திருப்தி தரும்.

ரிஷபம்: பேச்சில் கம்பீரம் பிறக்கும். முன்கோபம், வீண் அலைச்சல் விலகி மனதில் நிம்மதி கிட்டும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு.

மிதுனம்: குடும்பத்தினரின் எண்ணங்களைப் பூர்த்தி செய்ய முயற்சிப்பீர்கள். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். குலதெய்வப் பிரார்த்தனை நிறைவேறும். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

கடகம்: நீண்டநாட்களாக மனதில் இருந்துவந்த குழப்பங்களுக்குத் தீர்வு கிடைக்கும். விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

சிம்மம்: காரியங்களை முடிப்பதில் இருந்துவந்த தடுமாற்ற நிலை மாறும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். பணவரவு திருப்தி தரும்.

கன்னி: வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சிலர் உதவி கேட்டு நச்சரிப்பார்கள்.

துலாம்: சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டியது வரும். பிள்ளைகளால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். யாருக்காகவும் ஜாமீன், உத்தரவாதக் கையெழுத்திட வேண்டாம்.

விருச்சிகம்: சுறுசுறுப்பாகக் காணப்படுவீர்கள். ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்து சிக்கனமாக இருக்க விரும்புவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். திடீர் பயணம் உண்டு.

தனுசு: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் உண்டாகும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பண வரவு உண்டு. கலைப்பொருட்கள் சேரும்.

மகரம்: புது முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வீர்கள்.. நல்ல நண்பர்களைச் சந்திப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும்.

கும்பம்: உணர்ச்சி வேகத்தில் முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியதிருக்கும். எதிர்மறை எண்ணம் தோன்றும். வாகனம் செலவு வைக்கும்.

மீனம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கும். உடன்பிறந்தவர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்