இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: நீண்ட நாட்களாக மனதை வாட்டிய பிரச்சினைகளுக்கு இன்று முடிவு கட்டுவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.

ரிஷபம்: குடும்பத்தில் அனுசரித்துப் போவீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சகோதர, சகோதரிகளால் நன்மையுண்டு. பால்ய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

மிதுனம்: ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கும் எண்ணம் வரும். பிள்ளைகளால் மகிழ்ச்சியுண்டு. மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். அக்கம்பக்கத்தினரின் ஆதரவு பெருகும்.

கடகம்: குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். திட்டமிட்டு செயல்பட்டு காரியங்களில் வெற்றி பெறுவீர்கள்.

சிம்மம்: எந்த ஒரு விஷயத்திலும் மற்றவர்களை முழுமையாக நம்பாதீர்கள். நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். திடீர் பயணம் ஏற்படக்கூடும்.

கன்னி: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். அலைபேசியில் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்காதீர்கள். உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படக் கூடும். பணவரவு உண்டு.

துலாம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். நண்பர்களால் சில காரியங்கள் நிறைவேறும். முகப் பொலிவு கூடும்.

விருச்சிகம்: சாதுர்யமான பேச்சால் சில காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. அரசாங்க காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும்.

தனுசு: குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பீர்கள். பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

மகரம்: இனந்தெரியாத சின்னச் சின்ன கவலைகள் வந்து நீங்கும். உடன்பிறந்தவர்களால் வீண் செலவும், மனக்கசப்பும் வந்து செல்லும். பணம், நகைகளை கவனமாக கையாளுங்கள்.

கும்பம்: சகோதரரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள் கல்யாண முயற்சிகள் வெற்றியடையும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள்.

மீனம்: கணவன் - மனைவிக்குள் மனம்விட்டுப் பேசி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். தாழ்வு மனப்பான்மை நீங்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

20 hours ago

ஜோதிடம்

21 hours ago

ஜோதிடம்

22 hours ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

மேலும்