குருப்பெயர்ச்சி : அஸ்தம் நட்சத்திரப் பலன்கள்

By செய்திப்பிரிவு

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கிரகநிலை:

குரு பகவான் உங்கள் நட்சத்திரத்துக்கு ஆறாவது நட்சத்திரத்தில் இருந்து ஏழாவது நட்சத்திரத்துக்கு மாறுகிறார்.

பலன்:

வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை ரகசியமாகவே வைத்திருக்கும் அஸ்தம் நட்சத்திர அன்பர்களே.

இந்த குருப்பெயர்ச்சியால் எதிலும் நிதானமாக செயல்படுவது நன்மை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடல்நலத்திற்கு செலவு செய்ய வேண்டி வரலாம். எதிர்பார்த்த பணவரத்து தாமதமாக வந்து சேரும். எந்த வாக்குறுதியும் கொடுக்கும் முன் யோசித்து செயல்படுவது நல்லது. மற்றவர்களின் செயல்கள் கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம்.

குடும்பத்தில் சிறுசிறு மனவருத்தங்கள் ஏற்படும் வகையில் சூழ்நிலை இருக்கும். கணவன் மனைவிக்கிடையில் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் முன்னேற்றத்தில் தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை. பொருட்களை கவனமாக பாதுகாப்பது நல்லது.

தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அவசரப்படாமல் நிதானமாக பணிகளைக் கவனிப்பது நல்லது.

கலைத்துறையினருக்கு : நீண்ட நாட்களாக இருந்த பழைய பகைகள் மாறும். எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் அதை எப்படி செய்வது என்ற மன த்தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நன்மை தரும்.

அரசியல்துறையினருக்கு : எதிர்காலம் பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது. எதிர்ப்புகள் அகலும்

பெண்களுக்கு : எந்த வாக்குறுதியையும் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. கோபத்தை குறைப்பது நன்மை தரும்.

மாணவர்களுக்கு : கல்வியில் முன்னேற்றமடைய கவனமுடன் படிப்பது நல்லது. எதிலும் நிதானம் தேவை.

பரிகாரம்: கருடாழ்வாரை வணங்கி வர அனைத்து நலன்களும் வளங்களும் உண்டாகும்.

மதிப்பெண்கள்: 65% நீங்கள் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.

+: காரிய வெற்றி உண்டாகும்.

-: பயணத்தின் போது கவனம் தேவை.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

16 hours ago

ஜோதிடம்

16 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

21 hours ago

ஜோதிடம்

22 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

மேலும்