மேஷம்
எதிலும் முன்னேற்றம் உண்டு. தைரியமாக செயல்பட்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சொந்த பந்தங்களுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.
ரிஷபம்
விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். உங்களது ஆலோசனையை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். கேட்ட இடத்தில் பண உதவிகள் கிடைக்கும்.
மிதுனம்
பெற்றோருடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். சிறு விபத்துகள் வரக்கூடும். பயணத்தில் கவனம் தேவை. மின்னணு, மின்சார சாதனங்கள் பழுதாகும். ஆன்மிக நாட்டம் கூடும்.
கடகம்
சாதாரண விஷயத்துக்கு எல்லாம் கோபப்படாதீர்கள். எதிர்பார்த்த தொகைகள் சற்று தாமதமாகும். உடல்நலம், உணவு விஷயத்தில் கவனம் செலுத்துங்கள். பேச்சில் நிதானம் தேவை.
சிம்மம்
தொட்ட காரியங்கள் துலங்கும். கணவன் -மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வாகன வசதிகள் பெருகும். வீடு கட்டும் முயற்சியில் முன்னேற்றம் உண்டு. எதிலும் பொறுமை அவசியம்.
கன்னி
உங்கள் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சவாலான காரியங்களையும் சாதாரணமாக முடித்து பாராட்டு பெறுவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் மரியாதை உயரும். பணவரவு உண்டு.
துலாம்
தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும். வழக்குகளில் சாதகமான திருப்பம் ஏற்படும். புண்ணிய காரியங்கள், சுப காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். பொருள் வரவு உண்டாகும்.
விருச்சிகம்
வீடு, வாகன வகையில் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் வீண் சந்தேகத்தால் மனஸ்தாபம், பிரச்சினைகள் வரக்கூடும். ஆன்மிகத்தில் ஈடுபாடு ஏற்படும்.
தனுசு
பழுதான வாகனம் சரியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நடக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை கைகூடும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும்.
மகரம்
மனைவி வழியில் சில உதவிகள் கிடைக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். அரசு, வங்கி சம்பந்தப்பட்ட காரியங்கள் நல்லபடியாக முடியும். பிள்ளைகளால் பெருமை உண்டு.
கும்பம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழைய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அவர்களால் சில உதவிகளும் கிடைக்கும். ஆன்மிகம், யோகாவில் ஈடுபாடு, தெய்வீக சிந்தனைகள் அதிகரிக்கும்.
மீனம்
ஆன்மீக ஆற்றல் கிடைக்கும். மகிழ்ச்சியான சேதி தேடிவரும். வெளிவட்டாரத்தில் எல்லோரும் உங்களை மதிப்பார்கள். எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். பணவரவு உண்டாகும்.
*****
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago