மேஷம்: சமூகத்தில் பிரபலமானவர்கள் அறிமுகமாவார்கள். அரசு காரியங்கள் தடையின்றி முடியும். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். வழக்குகள் சாதகமாகும். விருந்தினர் வருகை உண்டு.
ரிஷபம்: எதிர்பாராத திடீர் திருப்பங்கள் உண்டாகும். பிரபலமானவர்களின் சந்திப்பால் முக்கிய காரியங்கள் நிறைவேறும். புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பணவரவு உண்டு.
மிதுனம்: ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். சாதாரணமாக பேசியதைக் கூட மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்வார்கள். யாருக்காகவும் உத்தரவாத கையெழுத்திட வேண்டாம்.
கடகம்: ஆடம்பர செலவுகளைக் குறைத்து சிக்கனமாக இருக்க முயலுங்கள். அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. முன்கோபத்தால் சிலரின் நட்பை இழக்க நேரிடலாம்.
சிம்மம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிரபலமானவர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள்.
கன்னி: மற்றவர்களின் ரசனைக்கேற்ப உங்களின் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.
துலாம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வீட்டை விரிவுபடுத்துவது, அழகுபடுத்துவது போன்ற காரியங்களில் இறங்குவீர்கள்.
விருச்சிகம்: உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். யாருக்காகவும் ஜாமீன், உத்தரவாத கையெழுத்திட வேண்டாம். கணவன் - மனைவிக்குள் வீண் வாக்குவாதங்கள் ஏற்படக் கூடும்.
தனுசு: மற்றவர்களால் செய்ய முடியாத சவாலான காரியங்களையெல்லாம் முடித்து காட்டுவீர்கள். முக்கியப் பிரமுகரின் அறிமுகம் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
மகரம்: தன்னம்பிக்கை பிறக்கும். குழப்பமான விஷயங்களில் தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். பாகப்பிரிவினை நல்ல விதத்தில் முடியும். வீடு, வாகன பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.
கும்பம்: வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். நல்ல நிறுவனத்தில் புது வேலை அமையும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்து கொள்வீர்கள். திடீர் பயணம் உண்டு.
மீனம்: பிரபலங்களின் உதவியால் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணவரவு உண்டு. விலகியிருந்த உறவினர், நண்பர்கள் வீடு தேடி வருவார்கள்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
28 mins ago
ஜோதிடம்
35 mins ago
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
13 hours ago
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
16 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago