பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
நவகிரகங்களுடைய சஞ்சாரங்களில் மிக முக்கியமாக கருதப்படுவது சந்திரனுடைய சஞ்சாரம். நவக்கிரகங்களில் மிகவேகமாக நகரக்கூடிய கிரகமானது சந்திரன். ஒவ்வொரு ராசியிலும் சந்திர பகவான் இரண்டேகால் நாட்கள் சஞ்சாரம் செய்வார். அப்படி சஞ்சாரம் செய்யும் போது அந்த ராசியில் இருந்து ஆறாவது ராசிக்கு சந்திராஷ்டம தினமாக கருதப்படுகிறது. எளிமையாக சொல்வதென்றால் ஒரு ராசியில் இருந்து எட்டாவது ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் தினம் சந்திராஷ்டம தினம் என்று சொல்லப்படுகிறது.
ஏன் சந்திரனுடைய சஞ்சாரத்தை மட்டும் சந்திராஷ்டம தினமாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்? ஏன் மற்ற கிரகங்களை நாம் எடுப்பதில்லை?
ஏனென்றால் சந்திரன் என்பவர் மனோகாரகன். மனதை குறிக்கக்கூடிய கிரகம். ஸ்தானங்களில் நான்கு ஸ்தானங்கள் மறைவு ஸ்தானங்கள் என்று சொல்லப்படுகிறது. 3 - 6 - 8 - 12 ஆகிய ஸ்தானங்கள் மறைவு ஸ்தானங்கள். இதில் எட்டாவது ராசியில் சஞ்சாரம் செய்யக்கூடிய சந்திரன் சஞ்சாரம் செய்யக்கூடிய காலகட்டம் சந்திராஷ்டமமாக நாம் எடுத்துக் கொள்கிறோம். எட்டாம் இடம் என்பது ஆயுள் ஸ்தானம். இந்த நாட்களில் நமது மனம் ஒரு நிலைப்படுவது சிறிது சிரமமாக இருக்கும். அதனால்தான் சந்திராஷ்டம தினங்களில் மிக முக்கிய முடிவுகளை எடுப்பதை நமது முன்னோர்கள் தவிர்க்கச் சொன்னார்கள்.
ஒரு நட்சத்திரத்திற்கு நான்கு பாதங்கள். ஒரு ராசிக்கு ஒன்பது பாதங்கள். எனவே இரண்டேகால் நட்சத்திரம் அடங்கியது ஒரு ராசி.
இங்கு நாம் கொடுப்பது ராசிக்கு சந்திராஷ்டமம் இல்லாமல் எல்லோருடைய நட்சத்திரரீதியாக எப்படி எப்படி சந்திராஷ்டமம் கணக்கிட வேண்டும் என்பதை பற்றித்தான்!
அசுபதி - விசாகம் 4;அனுஷம் 1, 2, 3
பரணி - அனுஷம் 4;கேட்டை 1, 2, 3
கிருத்திகை - கேட்டை 4;மூலம் 1, 2, 3
ரோஹிணி - மூலம் 4;பூராடம் 1, 2, 3
மிருகசீரிஷம் - பூராடம் 4;உத்தராடம் 1, 2, 3
திருவாதிரை - உத்தராடம் 4;தி்ருஓணம் 1, 2, 3
புனர்பூசம் - தி்ருஓணம் 4;அவிட்டம் 1, 2, 3
பூசம் - அவிட்டம் 4;சதயம் 1, 2, 3
ஆயில்யம் - சதயம் 4;பூரட்டாதி 1, 2, 3
மகம் - பூரட்டாதி 4;உத்திரட்டாதி 1, 2, 3
பூரம் - உத்திரட்டாதி 4;ரேவதி 1, 2, 3
உத்திரம் - ரேவதி 4;அசுபதி 1, 2, 3
ஹஸ்தம் - அசுபதி 4;பரணி 1, 2, 3
சித்திரை - பரணி 4;கிருத்திகை 1, 2, 3
ஸ்வாதி - கிருத்திகை 4;ரோஹிணி 1, 2, 3
விசாகம் - ரோஹிணி 4;மிருகசீரிஷம் 1, 2, 3
அனுஷம் - மிருகசீர்ஷம் 4;திருவாதிரை 1, 2, 3
கேட்டை - திருவாதிரை 4;புனர்பூசம் 1, 2, 3
மூலம் - புனர்பூசம் 4;பூசம் 1, 2, 3
பூராடம் - பூசம் 4;ஆயில்யம் 1, 2, 3
உத்திராடம் - ஆயில்யம் 4;மகம் 1, 2, 3
தி்ருஓணம் - மகம் 4;பூரம் 1, 2, 3
அவிட்டம் - பூரம் 4;உத்தரம் 1, 2, 3
சதயம் - உத்திரம் 4;ஹஸ்தம் 1, 2, 3
பூரட்டாதி - ஹஸ்தம் 4;சித்திரை 1, 2, 3
உத்திரட்டாதி - சித்திரை 4;ஸ்வாதி 1, 2, 3
ரேவதி - ஸ்வாதி 4;விசாகம் 1, 2, 3
சந்திராஷ்டம தினங்களில் என்னென்ன செய்யலாம்?
பொதுவாக சந்திராஷ்டம தினங்களில் பலர் சுபமான விஷயங்களை தவிர்க்கிறார்கள்.
அதேவேளையில், கொடுத்த கடனை திருப்பி வாங்குவது - வாங்கிய கடனை திருப்பி அடைப்பது - ராமநாமம் எழுதுவது - புதிய கல்வி கற்க ஆரம்பிப்பது - கோவில்களுக்கு நேர்த்திக்கடனை ஏதேனும் செலுத்துவது - தீர்த்த யாத்திரை, புனித யாத்திரை செல்வது - புதிதாக மருந்து உட்கொள்ள ஆரம்பிப்பது போன்றவை செய்யலாம். உடல்நலம் சார்ந்த விஷயங்களில் எந்த முயற்சி வேண்டுமானாலும் எடுக்கலாம். வீடு மனை பூஜை செய்யலாம். புதிய ஆடைகள் ஆபரணங்கள் வாங்கலாம்.
சந்திராஷ்டம தினத்திற்கான ஒவ்வொரு நட்சத்திரத்திற்கான பரிகாரம்:
அசுபதி - முருகன்
பரணி - பைரவர்
கிருத்திகை - பெருமாள்
ரோஹிணி - ஆஞ்சநேயர்
மிருகசீரிஷம் - மஹாலக்ஷ்மி
திருவாதிரை - சிவன்
புனர்பூசம் - மஹாகணபதி
பூசம் - இந்திரன்
ஆயில்யம் - நாகதேவதை
மகம் - அம்மன்
பூரம் - முன்னோர்கள்
உத்திரம் - ஐயப்பன்
ஹஸ்தம் - ஆஞ்சநேயர்
சித்திரை - அம்மன்
ஸ்வாதி - நரசிம்மர்
விசாகம் - கிருஷ்ணர்
அனுஷம் - முருகன்
கேட்டை - சிவன்
மூலம் - ராமர்
பூராடம் - முருகன்
உத்திராடம் - பெருமாள்
தி்ருவோணம் - மஹாகணபதி
அவிட்டம் - மஹாலக்ஷ்மி
சதயம் - சூரியன்
பூரட்டாதி - இந்திரன்
உத்திரட்டாதி - முருகன்
ரேவதி - நரசிம்மர்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
45 mins ago
ஜோதிடம்
52 mins ago
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
13 hours ago
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago