- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்)
எவரையும் தமது திறமையால் ஈர்க்கும் வசீகர சக்தி படைத்த துலா ராசியினரே.
இந்த மாதம் எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். தடைபட்டு வந்த காரியங்களில் தடை நீங்கும். சாமர்த்தியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். உங்கள் செயல்களுக்கு தடைகளை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகிச் செல்வார்கள்.
தொழில், வியாபாரம், போட்டிகள் நீங்கி நன்கு நடக்கும். உங்களது வியாபாரத்திற்கு பக்கபலமாக முக்கியஸ்தர் ஒருவரது உதவி கிடைக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாதுர்யமான பேச்சால் மேல் அதிகாரிகளின் கட்டளைகளை நிறைவேற்றி பாராட்டு பெறுவீர்கள். நீண்ட நாட்களாக நின்ற பதவி உயர்வு உங்களை தேடி வரலாம். சக ஊழியர்களிடம் உங்கள் மதிப்பு மரியாதை உயரும்.
வாழ்க்கைத் துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். தடைபட்டு வந்த திருமண காரியங்கள் சாதகமாக நடக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் வீண் விவாதங்கள் தோன்றும். கவனம் தேவை.
பெண்களுக்கு சாதுர்யமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரத்து கூடும். காரிய தடைகள் நீங்கும். உங்களது பேச்சிற்கு வீட்டில் மரியாதை கிடைக்கும்.
அரசியல் துறையினருக்கு விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும். வேலையில் கவனமுடன் செல்வது நல்லது.
கலைத்துறையினருக்கு சிறப்பான மாதமாக இருக்கும். தாமதமாகி வந்த வாய்ப்புகள் அனைத்தும் திரும்ப கிடைக்கும். சமூக சேவையில் உள்ளோர்க்கு சமூக அந்தஸ்து உயரும்.
மாணவர்களுக்கு ஆசிரியர்கள், சக மாணவர்கள் உதவிகள் கிடைக்கும். பாடங்களை நன்கு படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும்.
சித்திரை 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி விறுவிறுப்படையும். வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பான பிரச்சினைகள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணி தொடர்பான கஷ்டங்கள் குறையும்.
சுவாதி:
இந்த மாதம் குடும்பத்தில் மரியாதை கூடும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் மனம்விட்டு பேசி எடுக்கும் முக்கிய முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
விசாகம் 1, 2, 3 பாதங்கள்:
இந்த மாதம் அடுத்தவர் செய்யும் நற்காரியங்களுக்கு ஆதரவாக இருப்பீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். வீண்கவலை நீங்கும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை காணப்படும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் சப்தகன்னியரை அர்ச்சனை செய்து வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். செல்வம் சேரும். செல்வாக்கு உயரும்.
சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 20, 21 - அக்டோபர் 17
அதிர்ஷ்ட தினங்கள்: அக்டோபர் 10, 11
அதிர்ஷ்டகிழமைகள்: திங்கள், செவ்வாய்
------------------------------------------
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
முன்கோபத்தை குறைத்து செயல்படுவதன் மூலம் அதிர்ஷ்ட பாதையில் முன்னேற்றங்கள் பல காணும் விருச்சிக ராசிக்காரர்களே இந்த மாதம் வாழ்க்கை தரம் உயர எடுக்கும் முயற்சிகள் கை கூடும். நெருக்கமானவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். முன்பின் யோசிக்காமல் எதையாவது பேசி விடுவீர்கள். இதனால் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. வழக்கத்தை விட செலவு கூடும். செலவு செய்யும் முன் தகுந்த ஆலோசனைகள் அவசியமாகிறது.
தொழில், வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது மிகவும் நிதானமாக பேசுவது நன்மை தரும். எதிர்பார்த்த பணம் தாமதப்படும். புதிய ஆர்டர்கள் கிடைக்க அலைய வேண்டி இருக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு வகையில் அலைச்சல், கூடுதல் செலவை சந்திப்பார்கள். வேறு ஒருவர் செய்த செயலுக்கு வீண் பழி ஏற்க வேண்டி இருக்கும். எனவே கவனம் தேவை.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே வீண் மன வருத்தம் ஏற்பட்டு நீங்கும். அக்கம்பக்கத்தினருடன் அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். உறவினர்களிடம் பேசும் போதும் அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் போதும் நிதானமாக இருப்பது நல்லது. உங்களது பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்வது நல்லது.
பெண்களுக்கு... முன் பின் யோசிக்காமல் பேசுவதை தவிர்ப்பது நல்லது. செலவு கூடும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.
அரசியல் துறையினருக்கு அலைச்சல் இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் திண்டாட வேண்டிய நிலை ஏற்படலாம். உங்களுக்கு எதிரானவர்கள் மேல் ஆத்திரம் கொள்ள வேண்டாம்.
கலைத்துறையினருக்கு அனைத்து வகையிலும் நன்மைகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை மாறும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நன்மை தரும்.
மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் கவனம் செலுத்தி படிப்பது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகும். சகமாணவர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.
விசாகம் 4ம் பாதம்:
இந்த மாதம் தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இருந்த தடைகள் விலகும். போட்டிகள் குறையும், புதிய ஆர்டர்கள் பெறுவதற்கான தடைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான அலைச்சல் குறையும்.
அனுஷம்:
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களுடன் இணக்கமான போக்கு காணப்படும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் குறித்து கவலை உண்டாகலாம். வீண்செலவு குறையும். பயணங்கள் செல்ல நேரிடலாம்.
கேட்டை:
இந்த மாதம் திறமையான செயல்கள் மூலம் எடுத்த காரியம் சாதகமாக நடந்து முடியும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்திற்கு இருந்த முட்டுக்கட்டைகள் விலகும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.
பரிகாரம்: வேல்மாறல் வகுப்பு பாராயணம் செய்து முருகனை வழிபடுவது காரியத் தடைகளை நீக்கும். எதிர்ப்புகள் நீங்கும்.
சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 22, 23
அதிர்ஷ்ட தினங்கள்: அக்டோபர் 12, 13, 14
அதிர்ஷ்டகிழமைகள்: செவ்வாய், வெள்ளி
------------------------------------------
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
தெய்வத்திற்கும் மனசாட்சிக்கும் கட்டுப்பட்டு அனைத்து வேலைகளிலும் செயல்பட்டு வெற்றிகளைக் குவிக்கும் தனுசு ராசியினரே.
இந்த மாதம் எடுத்த முயற்சிகள் கை கூடும். வரவுக்கேற்ற செலவு ஏற்படும். எதையும் சாதிக்கும் திறமையும், சாமர்த்தியமும் உண்டாகும். மனோ தைரியம் கூடும். செய்யாத தவறுக்கு மற்றவர்களால் குற்றம் சாட்டப்படலாம். எனவே கவனம் தேவை. கண்நோய், பித்தம், வாதம் சம்பந்தப்பட்ட நோய் ஏற்பட்டு நீங்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு இருக்கும். திடீர் கோபம் உண்டாகும்.
தொழில், வியாபாரத்தில் செலவுகள் அதிகரிக்கும். உங்கள் கீழ் வேலை செய்பவர்களின் செயல்களால் உங்களுக்கு கோபம் உண்டாகலாம். நிதானமாக அவர்களிடம் பேசுவது நன்மை தரும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள்.
உத்தியோகம் தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். அலுவலகத்தில் உள்ள சக ஊழியர்கள், மேல் அதிகாரிகளிடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.
கணவன், மனைவிக்கிடையே திடீர் வாக்குவாதம் ஏற்படும். கவனமாகப் பேசுவதன் மூலம் நெருக்கம் அதிகரிக்கும். விருந்தினர் வருகை குடும்பத்தினரின் ஆரோக்கிய குறைவு ஆகியவற்றால் செலவு அதிகரிக்கும். சில்லறை சண்டைகள் அக்கம் பக்கத்தினருடன் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது.
பெண்களுக்கு... வலிய சென்று உதவுவதன் மூலம் வீண் பழி ஏற்படலாம். கவனம் தேவை. கோபத்தைத் தவிர்ப்பது நல்லது.
அரசியல் துறையினருக்கு நல்ல பெயர் வாங்குவீர்கள். மூலதனத்திற்குத் தேவையான பணம் வந்து குவியும். எதிரிகள் வகையில் சற்று கவனமுடன் செயல்படவும். அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும்.
கலைத்துறையினருக்கு அனைத்து விதமான நிலைகளிலும் நன்மைகளைப் பெறுவீர்கள். எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள் வந்து சேரும்.
மாணவர்களுக்கு எந்த வேலை செய்தாலும் கவனமாக செய்வது நல்லது. பாடம் தொடர்பான சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டு படிப்பது நல்லது. வாகனங்களை ஓட்டி செல்லும்போது கவனம் தேவை.
மூலம்:
இந்த மாதம் திட்டமிட்டு செயலாற்றுவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரலாம். வரவேண்டிய நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். தந்தை மூலம் நன்மை உண்டாகும். எந்தஒரு காரியத்திலும் தெளிவான முடிவினை எடுப்பீர்கள். மனதில் இருந்த வீண்கவலைகள் நீங்கும்.
பூராடம்:
இந்த மாதம் அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கும். தொழில் வியாபாரத்தில் பார்ட்னர்கள் மூலம் நன்மை உண்டாகும். வியாபாரத்திற்கு தேவையான நிதி உதவியும் கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்யும்படி இருக்கும்.
உத்திராடம் 1ம் பாதம்:
இந்த மாதம் தற்காலிக பதவி உயர்வு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கப் பெறலாம். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனக்குழப்பங்கள் தீரும். எதிலும் தெளிவான சிந்தனை இருக்கும். குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும். அவர்களின் நலனுக்காக பாடுபடுவீர்கள்.
பரிகாரம்: வியாழக்கிழமையில் மஞ்சள் நிற மலர் சாற்றி தட்சிணாமூர்த்தியை வழிபடுவது கடன் பிரச்சினையைத் தீர்க்கும். செல்வம் சேரும்.
சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 24, 25
அதிர்ஷ்ட தினங்கள்: செப்டம்பர் 18, 19 - அக்டோபர் 15, 16
அதிர்ஷ்டகிழமைகள்: வியாழன், சனி
------------------------------------------
மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள் திருவோணம் அவிட்டம் 1,2 பாதங்கள்)
தோல்விகளை வெற்றியின் படிகளாக கருதி எதைப் பற்றியும் கவலைப்படாமல் செயல்படும் மன உறுதி கொண்ட மகர ராசிக்காரர்களே.
இந்த மாதம் பணவரத்து கூடும். வாக்கு வன்மையால் லாபம் உண்டாகும். வீண் பயணங்களும் அலைச்சலும் உண்டாகும். இடமாற்றம் ஏற்படலாம். கெட்ட கனவுகள் தோன்றும். உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் வந்து நீங்கும். நேரம் தவறி உண்பதை தவிர்ப்பது நல்லது.
தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். வரவேண்டிய பணம் தாமதமாக வரும். சரக்குகள் வருவதும் புதிய ஆர்டர்கள் கிடைப்பதும் எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல்களும் ஏற்படும். கவனமாக இருப்பது அவசியம்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடுமையான வேலை இருக்கும். உத்தியோகம் காரணமாக வெளியில் தங்க நேரிடும். அலுவலகத்தில் அனுசரித்து செல்வது நல்லது. முக்கியமாக மேலதிகாரிகளிடம் சொன்ன வாக்கைக் காப்பாற்றவும்.
கணவன், மனைவிக்கிடையே திடீர் பூசல்கள் ஏற்பட்டு சரியாகும். குடும்பச் செலவுகள் கூடும். குடும்பம் பற்றிய கவலைகள் உண்டாகும். உறவினர்கள், நண்பர்களிடம் பேசும்போது நிதானமாக பேசுவது நன்மை தரும். நெருப்பு ஆயுதங்களை பயன்படுத்தும் போது மிகவும் எச்சரிக்கை தேவை. பிள்ளைகள் தங்களை அனுசரித்து செல்வார்கள்.
பெண்களுக்கு வீண் அலைச்சலும் பயணங்களும் ஏற்படலாம். நேரம் தவறி உண்பதை தவிர்ப்பது நல்லது. சாமர்த்தியமான பேச்சு லாபம் தரும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பொருளாதார நெருக்கடி நீங்கும்.
அரசியல் துறையினருக்கு எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும். சில காரியங்களில் தாமதமாக வெற்றி ஏற்படும். உங்கள் விடாமுயற்சிதான் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். பழகும் நண்பர்களை எடைபோட முடியாது.
கலைத்துறையினருக்கு எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். கடன் பிரச்சினை தீரும். எதிர்ப்புகள் அகலும், தொழில் வியாபாரம் தொடர்பான போட்டிகளும் நீங்கும்.
மாணவர்களுக்கு கவனம் சிதற விடாமல் பாடங்களைப் படிப்பது நல்லது. விளையாட்டுகளின் போது கவனம் தேவை. நண்பர்களுடன் நிதானமாக பழகுவதும் நன்மை தரும்.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் உறவினர் மூலம் நன்மை உண்டாகலாம். மனக்குழப்பம் நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுக்கும் மனநிலை ஏற்படும். காரியத் தடைகள் விலகும். எதிர்பார்த்த பணம் வரலாம். காரிய அனுகூலம் உண்டாகும்.
திருவோணம்:
இந்த மாதம் மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். விளையாட்டுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். உயர்வான எண்ணங்களுடன் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களுடன் நட்பு கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
அவிட்டம் 1,2 பாதங்கள்:
இந்த மாதம் கடன் பிரச்சினைகள் தொல்லை தராமல் இருக்கும். எதிர்பார்த்த பணவசதி கிடைக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த எதிர்ப்புகள் நீங்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும்.
பரிகாரம்: சனிக்கிழமையில் ஆஞ்சநேயரை வழிபடுவது கஷ்டங்களைப் போக்கும். மனதில் தைரியம் உண்டாகும்.
சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 26, 27, 28
அதிர்ஷ்ட தினங்கள்: செப்டம்பர் 20, 21 - அக்டோபர் 17
அதிர்ஷ்டகிழமைகள்: ஞாயிறு, சனி
-----------------------------------------
கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்)
அனைத்து விதத்திலும் ஆதரவற்றவர்களை ஆதரிக்கும் குணமுடைய கும்ப ராசிக்காரர்களே.
இந்த மாதம் பொன், பொருள் சேரும். வாகன யோகம் உண்டாகும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைக்கும். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும்.
தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். முன்னேற்றம் காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். தொழில் விரிவாக்கத்திற்கான பண உதவி கிடைக்கும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த கசப்பு உணர்வு நீங்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைச் சுமை குறையும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கடினமான காரியங்களையும், திறமையாக செய்து முடிப்பீர்கள்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குடும்பத்தினருக்காக பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வாழ்க்கையில் புதிய முன்னேற்றம் ஏற்படும். தாயார் வழி உறவினர்களிடம் உறவு நல்ல நிலையில் நீடிக்கும்.
பெண்களுக்கு புதிய தொடர்புகள் மூலம் லாபம் உண்டாகும். மனம் மகிழும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும்.
அரசியல் துறையினருக்கு கடந்தகாலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவார்கள். உறவு பலப்படும். தொலைபேசித் தொடர்பு மூலமாக சிலர் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம்.
கலைத்துறையினருக்கு கவனம் தேவை. எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது எச்சரிக்கை அவசியம். எதைப் பற்றியும் கவலைப்படாமல் தீர ஆலோசித்து எதையும் செய்வது நல்லது. கடன் கொடுப்பது, பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது.
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். பாடங்கள் படிப்பது பற்றிய கவலை நீங்கும். புதிய நட்பால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
அவிட்டம் 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். எதிர்பார்த்த பணவரத்து இருந்தாலும் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். போட்டிகள் தொல்லை தராமல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிச்சுமை குறைந்து காணப்படுவார்கள். வேலையில் திறமைக்கு பாராட்டு கிடைக்கும்.
சதயம்:
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த நோய் நீங்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். பிள்ளைகளிடம் கவனமாக எதையும் எடுத்துச் சொல்வது நல்லது. பூர்வீகச் சொத்துக்களில் இருந்த பிரச்சினை தீரும்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்:
இந்த மாதம் மாணவர்கள் அவசரப்படாமல் நிதானமாக மனதில் பதியும்படியாக பாடங்களைப் படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும். திறமை வெளிப்படும். அடுத்தவர் யாரும் குறைகூறக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பீர்கள். எதிலும் லாபம் கிடைக்கும். காரியங்கள் வெற்றிகரமாக நடக்கும்.
பரிகாரம்: பிரதோஷ காலத்தில் சிவனை வணங்கி நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது துன்பங்களைப் போக்கும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 29, 30
அதிர்ஷ்ட தினங்கள்: செப்டம்பர் 22, 23
அதிர்ஷ்டகிழமைகள்: வெள்ளி, சனி
------------------------------------------
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
தம்மைப் போலவே மற்றவர்களும் காலத்தை வீணாக்காமல் நடந்து கொள்ள வேண்டும் என்று எண்ணும் மீன ராசியினரே.
இந்த மாதம் பல வழியிலும் பணவரத்து இருக்கும். காரியத் தடைகள் நீங்கும். மற்றவர்களின் மீது இரக்கம் ஏற்பட்டு உதவிகள் செய்வீர்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். பெரும் புள்ளிகளின் அறிமுகம் கிடைக்கும்.
தொழில், வியாபாரம் மூலம் லாபம் அதிகம் வரும். வாக்குவன்மையால் தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். கடன் வசதி கிடைக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கும். அந்தஸ்து உயரும். நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். குடும்ப சுகம் பூரணமாக கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே திருப்தியான நிலை காணப்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சுப காரியங்களில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். வாய்க்கு ருசியான இனிப்பு மற்றும் உணவு கிடைக்கும்.
பெண்களுக்கு... எடுத்த வேலையை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும்.
அரசியல்வாதிகளுக்கு... லாபமான காலமாக அமையும். பண வரவு திருப்தி தரும். எதிர்பார்த்த செய்தி உங்களுக்கு வந்து சேரும். சிலர் மேலிடத்தின் நேரடி அங்கீகாரத்தைப் பெறுவர்.
கலைத்துறையினருக்கு... உங்கள் கௌரவம் உயரும். விரும்பிய பதவி கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். அலட்சியப் போக்கை கைவிடுவது நல்லது.
மாணவர்களுக்கு... படிப்பில் முன்னேற்றம் காணப்படும். கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகள் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள்.
பூரட்டாதி 4ம் பாதம்:
இந்த மாதம் உடல் ஆரோக்கியம் உண்டாகும். வீண்கவலை நீங்கும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரம் விருத்தியடையும். தடைபட்ட நிதி உதவி கிடைக்கும்.
உத்திரட்டாதி:
இந்த மாதம் ஏற்கெனவே வரவேண்டி இருந்து வராமல் நின்ற ஆர்டர்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் வேலைப்பளு, வீண் அலைச்சல் குறையும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் குறையும். புதிய வீடு வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். சிலர் பழைய வீட்டைப் புதுப்பிப்பார்கள்.
ரேவதி:
இந்த மாதம் வாகனம் மூலம் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகள் சந்தோஷமாக காணப்படுவார்கள். குடும்பத்தினருடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடலாம். மனக்குழப்பம் தீரும். தைரியமாக எந்தக் காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும்.
பரிகாரம்: குருவிற்கு வியாழக்கிழமையில் கொண்டைக் கடலை நிவேதனம் செய்து வணங்குவதும் வருமானத்தை உயர்த்தும். மன அமைதி கிடைக்கும்.
சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 01, 02
அதிர்ஷ்ட தினங்கள்: செப்டம்பர் 24, 25
அதிர்ஷ்டகிழமைகள்: புதன், வியாழன்
------------------------------------------
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
13 hours ago
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
23 hours ago
ஜோதிடம்
23 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago