இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: எந்தக் காரியத்திலும் நிதானித்து செயல்படுவது நல்லது. பரணி நட்சத்திரக்காரர்களுக்கு டென்ஷன் அதிகரிக்கும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம்.

ரிஷபம்: பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்காதீர்கள். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துச் செல்லுங்கள். மனைவிவழி உறவினர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள்.

மிதுனம்: சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். விலகியிருந்த சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

கடகம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு. உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திப்பீர்கள். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.

சிம்மம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நீண்டநாள் பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். புண்ணியத் தலங்கள் சென்று வருவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள்.

கன்னி: வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். உறவினர்கள், நண்பர்களுடன் வரம்பு மீறி பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். திடீர் பயணம் ஏற்படலாம்.

துலாம்: விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் பலம், பலவீனத்தை உணர்ந்து செயல்படுவீர்கள். சகோதரர் வகையில் ஒற்றுமை பிறக்கும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும்.

விருச்சிகம்: அரசால் அனுகூலம் உண்டு. மனதுக்கு இதமான செய்திகள் வரும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். தொட்ட காரியங்கள் துலங்கும். பணவரவு திருப்தி தரும்.

தனுசு: நீண்டகாலக் கனவு நனவாகும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.

மகரம்: தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படக் கூடும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. அக்கம்பக்கத்தினரின் ஆதரவு கிடைக்கும்.

கும்பம்: தைரியம் கூடும். தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும்.

மீனம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் உண்டாகும். தோற்றப் பொலிவு கூடி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். தடைபட்ட வேலைகள் முடியும். உறவினர்களின் ஆதரவு கிட்டும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

12 hours ago

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

16 hours ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

மேலும்