மேஷம்: ஓய்வெடுக்க முடியாமல் அடுத்தடுத்து வேலை இருந்துகொண்டே இருக்கும். கணவன் - மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து விலகும். அலைச்சலுடன் ஆதாயம் கிடைக்கும்.
ரிஷபம்: திட்டமிட்ட காரியங்கள் தாமதமாக முடியும். உறவினர்கள், நண்பர்கள் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள்.
மிதுனம்: எந்தப் பிரச்சினையையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள்.
கடகம்: உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி வாழ்க்கையில் உயர்வதற்கான வழிகளை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். சுபநிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள்.
சிம்மம்: கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். பணவரவு திருப்தி தரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்.
கன்னி: செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்து கொள்ளவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். வாகனம் திடீர் செலவு வைக்கும்.
துலாம்: மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக அமையும். கலைப்பொருட்கள் சேரும்.
விருச்சிகம்: எதிர்பாராத இடத்தில் இருந்து பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.
தனுசு: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. நினைத்த காரியங்கள் எளிதில் நிறைவேறும்.
மகரம்: எதிர்ப்புகளையும் தடைகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். புது வேலைக்கு முயற்சி செய்வீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.
கும்பம்: குடும்பத்துடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பால்ய நண்பரை எதிர்பாராது சந்திப்பீர்கள்.
மீனம்: வாழ்க்கையின் புது அத்தியாயத்தைத் தொடங்குவீர்கள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
13 hours ago
ஜோதிடம்
13 hours ago
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
16 hours ago
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago