இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: தடைபட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சிலவற்றுக்கு உங்களின் அவசர முடிவுகள்தான் காரணம் என்பதை தாமதமாக உணர்வீர்கள்.

ரிஷபம்: கவுரவப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்-. பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாகும். பணவரவு திருப்தி தரும்.

மிதுனம்: உங்களுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் நண்பர்களாவார்கள். சில பிரச்சினைகளை சாதுர்யமாகப் பேசி சமாளிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டு. கலைப்பொருட்கள் சேரும்.

கடகம்: புதிய சிந்தனைகள் தோன்றும். பிரபலமானவர்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். விருந்தினர் வருகை உண்டு.

சிம்மம்: கணவன் - மனைவிக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வாகனத்தை கவனமாக இயக்குங்கள். மின்சாரம், மின்னணு சாதனங்கள் திடீரென பழுதாகும்.

கன்னி: தடைபட்ட வேலைகள் திடீரென முடியும். விலகியிருந்த பழைய சொந்தபந்தங்கள் தேடிவந்து பேசுவார்கள். டி.வி. ஃபிரிட்ஜ் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

துலாம்: மனதில் நிலவி வந்த குழப்பங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். விருந்தினர்களின் வருகை உண்டு. பிள்ளைகளின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். திடீர் பயணம் ஏற்படலாம்.

விருச்சிகம்: உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் உண்டு. வீட்டில் மழலை குரல் கேட்கும் காலம் கனிந்து வரும்.

தனுசு: தெளிவான முடிவுகள் எடுத்து வெற்றி பெறுவீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கும். பேச்சில் சமயோசிதம் பளிச்சிடும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.

மகரம்: ஓரளவு பண வரவு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். அநாவசிய செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள்.

கும்பம்: புதிய திட்டங்கள் தடங்கல் இன்றி நிறைவேறும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். குடும்பத்தினரின் எண்ணங்களையும், ஆசைகளையும் உடனுக்குடன் பூர்த்தி செய்வீர்கள்.

மீனம்: வருங்காலத்தைப் பற்றிய கவலைகள் வரக்கூடும். கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பழைய நினைவுகளில் அடிக்கடி மூழ்குவீர்கள். திடீர் பயணம் உண்டு.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

26 mins ago

ஜோதிடம்

33 mins ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

12 hours ago

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

16 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

மேலும்