புரட்டாசி மாத நட்சத்திரப் பலன்கள்:  விசாகம் முதல் உத்திராடம் நட்சத்திரம் வரை (செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 17ம் தேதி வரை)

By செய்திப்பிரிவு

- ஜோதிடர் ஜெயம் சரவணன்

விசாகம் நட்சத்திரம் -


காரியத்தில் ஈடுபாட்டுடன் செயலாற்ற வேண்டிய மாதம் இது.


எடுத்த வேலைகளைக் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க பிரம்ம பிரயத்தனம் செய்வீர்கள். ஆனாலும் வெற்றி உண்டாகும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். செய்யாத தவறுக்கு பொறுப்பு ஏற்க நேரிடும்.


நெருக்கமான நண்பர் என்று யாரை நம்புகிறீர்களோ அவரே இக்கட்டான நேரத்தில் உங்களைக் கைவிடுவார். எனேவே உங்களை நீங்களே நம்புங்கள். எந்த வேலையையும் உங்கள் பார்வையிலேயே இருக்கும்படியாக பார்த்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் அசந்தாலும் குற்றம் குறைகள் ஏற்படும்.எனவே எதிலும் கவனம் தேவை. தொழிலில் நிதானமான போக்குதான் ஏற்படும். பொறுமை காத்தால் விரைவில் தொழிலில் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியை எதிர்பார்க்கலாம்.

பெண்களுக்கு - கண்ணால் கண்டது காதால் கேட்டது எல்லாம் உண்மை இல்லை. தீர அறிவதே நல்லது என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்களிடம் உதவி கேட்டு வருபவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். உதவி செய்வதே உபத்திரவமாக மாறும்.

மாணவர்களுக்கு - நண்பர்கள் அழைக்கிறார்கள் என எங்கும் செல்ல வேண்டாம். மீறிச் சென்றால் வேண்டாத வினையைத் தேடி வரவழைத்த கதையாகும். உஷார்.

கலைஞர்களுக்கு - உங்களுக்கான நல்ல நேரம் இன்னும் ஒரு மாதத்தில் தொடங்குகிறது. பொறுமையே உங்களை உயர்த்தும்.

பொதுப் பலன் - சூட்டுக் கொப்புளம், மூலம், பிறப்புறுப்பில் தொற்று, சிறுநீர் பிரச்சினைகள் வரலாம். கவனம் தேவை.

வணங்க வேண்டிய தெய்வம் - ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தியையும், முருகப் பெருமானையும் வணங்கி வாருங்கள். தன்னம்பிக்கை பெருகும்.

சந்திராஷ்டம தினம் - புரட்டாசி - 3 (செப்டம்பர் - 20)

*******************************************************************************


அனுஷம் நட்சத்திரம் -


நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வெற்றிகள் வந்து குவியும் மாதம் இது.


எடுத்த எந்தச் செயலும் வெற்றிதான். நீண்டகாலமாக கிடப்பில் போட்ட வேலைகளை எல்லாம் இப்போது முடித்து விடுவீர்கள். அலுவலகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். பதவி உயர்வு நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.


இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு இப்போது வேலை கிடைக்கும். வேலையில் மாற்றம் எதிர்பார்த்தவர்களும் இப்போது எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். திருமணம் உறுதியாகும். மனதுக்கு இனிய மணவாழ்க்கை அமையும்.


தொழிலில் வளர்ச்சியும், வருமானமும் பெருகும். பழைய பாக்கிகள் கைக்கு வந்துசேரும். அரசு சார்ந்த விஷயங்கள்,வழக்குகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். எல்லோரிடமும் இரக்கம் காட்டாதீர்கள். சூழலுக்குத் தக்க பரிவுடன் இருப்பது நல்லது. இல்லையெனில் ஏமாற வாய்ப்பு உண்டு.

பெண்களுக்கு - விசாலாமான சிந்தனை மனதை ஒரு நிலைப்படுத்தும், சேமிப்பு அதிகரிக்கும். பணி நிரந்தம் ஆகும்.

மாணவர்களுக்கு - மனம் அமைதியாக இருக்க முயற்சி செய்யும். ஆனாலும் பதட்டம் குறையாது. தியானம் செய்யுங்கள்.வெற்றி நிச்சயம்.

கலைஞர்களுக்கு - அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். இசைக் கலைஞர்களுக்கு உன்னதமான தருணம் இது. வாய்ப்புகள் வாசல் தேடி வரும்.

பொதுப் பலன் - வாய்ப்புண், அல்சர், ஆசன வாயில் வலி உண்டாகும் வாய்ப்பு உள்ளது.

வணங்க வேண்டிய தெய்வம் - சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது நல்லது. . எள்ளுருண்டை தானம் செய்தால், நற்பலன்கள் உண்டாகும்.

சந்திராஷ்டம தினம் - புரட்டாசி - 4 (செப்டம்பர் 21)

******************************************************************************


கேட்டை நட்சத்திரம் -


கொஞ்சம் அமைதியும் நிதானமும் தேவைப்படும் மாதம் இது.


நோயால் வரும் பாதிப்பை விட வாயால் வரும் பாதிப்பு ஆறாத வடுவை உண்டாக்கும். எனவே யாருக்கும் வாக்குறுதி தரவும் கூடாது, வீண் விவாதங்களில் ஈடுபடவும் கூடாது, குறிப்பாக சமூக வலைதளங்களில் உங்கள் கருத்தையும் சொல்லாதீர்கள், மற்றவர் கருத்துக்கு பதில் தருகிறேன் பேர்வழி என்று வம்பை விலை கொடுத்தும் வாங்க வேண்டாம்.


மேலே சொன்ன அனைத்தும் பணிபுரியும் இடத்திறகும் பொருந்தும். சக ஊழியர்களிடம் எதற்கும் எதற்காகவும் விவாதங்களில் ஈடுபடாமல் சிரித்த முகத்தோடு கடந்து செல்லுங்கள். உயரதிகாரிகளிடமும் அப்படியே நடந்து கொள்ளுங்கள்.


தொழிலில் லாபம் அதிகரிக்காது. அதேசமயம் குறையாது. புதிய வருமானம், வாய்ப்புகள் ஏதேனும் வந்தால் சிறிது காலம் தள்ளிப் போடுங்கள். திருமண முயற்சிகள் கடும் சிரமத்திற்குப் பின் உறுதியாகலாம். அயல்நாட்டு பயணம் மேற்கொள்ள விரும்புபவர்கள், இப்போது செல்லலாம். வழக்குகளில் வாய்தா வாங்குவது நல்லது. அதேபோல் பஞ்சாயத்துக்களையும் கொஞ்சம் தள்ளிப் போடுங்கள்.

பெண்களுக்கு - இரவலாக எதையும் வாங்காதீர்கள். வாங்கினால் அது பிரச்சினைகளை உண்டு பண்ணி நட்பையே பாழாக்கும்.

மாணவர்களுக்கு - புத்தகங்களையோ, உங்கள் கல்விக் குறிப்பு தொகுப்புகளையோ இரவல் தராதீர்கள். திரும்ப வராமல் போகலாம். ஆலோசனை தருகிறேன் பேர்வழி என வருபவர்களை நெருங்கவிடாதீர்கள்.

கலைஞர்களுக்கு - கிடைக்கும் வாய்ப்புகளை கெடுபிடிகள் செய்து கெடுத்துக் கொள்ளாதீர்கள். அமைதியும் பொறுமையும் ஆயிரம் வெற்றிகளைத் தரும்.

பொதுப் பலன் - யாருக்கும் வாக்கு கொடுக்காதீர்கள். வாக்கு தவறும் சூழ்நிலை உண்டாகும். பல் வலி அல்லது பல்லையே பிடுங்கும் நிலை வரலாம். எலும்பு சம்பந்தபட்ட பிரச்சினைகள் வரலாம்.

வணங்க வேண்டிய தெய்வம் - மகா பிரத்தியங்கரா தேவியை வணங்குங்கள்.

சந்திராஷ்டம தினம் - புரட்டாசி -5 (செப்டம்பர் - 22)

***********************************************************************


மூலம் நட்சத்திரம் -


அமைதியையும் சிக்கனத்தையும் கைக்கொள்ளும் மாதம் இது.


தலையில் பாரம் இருப்பதைப் போல் உணர்வீர்கள். ஏன் செலவாகிறது? எப்படிச் செலவாகிறது? என புரியாமல் திகைப்பீர்கள்.
ஆனாலும் தேவைக்கேற்ற உதவி கிடைத்துக் கொண்டே இருப்பது ஆறுதலைத் தரும். நீண்ட காலமாக, இழுபறியாக இருந்த சொத்துப் பிரச்சினை இப்போது முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

ஒரே வேலையை இரண்டு முறை செய்ய வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். காரணம் உங்கள் மனம் அமைதி இல்லாமல் இருப்பதுதான்.


சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு அரசு வழி சலுகைகள் கிடைக்கும். வங்கிக் கடன் கிடைக்கும். லாபம் ஓரளவு கிடைக்கும். கட்டுமானத் தொழில் செய்பவர்கள் விற்க முடியாமல் இருந்த கட்டிடங்கள் இப்போது விற்பனையாகும். லாபத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.


ஒரு சிலர் வீட்டுக் கடன் வாங்கி சொந்த வீடு வாங்கும் வாய்ப்பு உண்டாகும். திருமணம் ஆகதவர்களுக்கு திருமணம் நிச்சயதார்த்தமாகும். நீண்ட நாட்களாக கர்ப்பப்பை பிரச்சினை இருப்பவர்களுக்கு மாற்று மருத்துவத்தால் குணமாகும்.புத்திர பாக்கியம் உண்டாகும் வாய்ப்பு உள்ளது.

பெண்களுக்கு - மனதை ஒரு நிலையில் வைத்துக் கொள்ளுங்கள். தேவையற்ற சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள். எதிர்மறை சிந்தனைகளையும் தூக்கி எறியுங்கள்.

மாணவர்களுக்கு - பாடத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள். வேண்டாத விஷயங்களில் தலையிடாதீர்கள். எவரிடமும் தேவையில்லாமல் விவாதங்களில் ஈடுபடாதீர்கள்.

கலைஞர்களுக்கு - எந்த வாய்ப்பும் நல்ல வாய்ப்புதான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். கிடைக்கின்ற வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தினால் அடுத்த வாய்ப்பு சிறப்பான வாய்ப்பாக அமையும்.

பொதுப் பலன் - மனம் தேவையற்ற சிந்தனையில் குழம்பும். தியானம் செய்யுங்கள். மாலை வேளைகளில் ஆலயத்தில் அரை மணி நேரமாவது அமர்ந்து மனதை ஒருமுகப் படுத்துங்கள். விருப்பமான உணவுகளில் ஏதாவது ஒன்றை கைவிடுவதாக இறைவனிடம் சங்கல்பம் எடுங்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் - மதுரை இம்மையில் நன்மை தருவார் ஆலயத்துக்குச் சென்று அங்கே உள்ள சிவனை வணங்குங்கள். உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள சிவாலயத்துக்கும் சென்று தரிசியுங்கள்.

சந்திராஷ்டம தினம் -புரட்டாசி - 6 (செப்டம்பர் - 23)

************************************************************************


பூராடம் நட்சத்திரம் -


கவலைகளும் துக்கங்களும் விலகும் மாதம் இது.


தலையில் மட்டுமல்ல உடல் முழுவதும் ஏதோ கனத்துக் கிடப்பது போல சோகத்துடன் இருக்கிறீர்களா? கவலை வேண்டாம். இந்த புரட்டாசி 12ம் நாள் வரை தான் இந்த பிரச்சினைகள் எல்லாம்! அதன் பிறகு அனைத்தும் தானாக சரியாகும்.


இருந்த வேலையும் போய்விட்டதே என கவலையில் இருப்பவர்களுக்கு இப்போது வேலை கிடைக்கும். அயல் நாட்டில் வேலை தேடியவர்கள் இப்போது வெளிநாட்டில் இருந்து அனுமதி ஆணை பெறுவீர்கள். பணியில் இருப்பவர்களுக்கு ஒரு சில சலுகை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

தொழில் சீராகச் செல்லும். பழைய பாக்கிகள் வசூலாகும். ஒரு சில தொழில் நிறுவனங்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. மருத்துவத் துறை சார்ந்தவர்களுக்கு அரசுப் பணி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

பெண்களுக்கு - இதுவரை இருந்த குழப்ப நிலைகள் மாறும். மனம் தெளிவு பெறும்.பணிச்சுமை குறையும்.ஊதிய நிலுவைத் தொகை கிடைக்கும்.உங்கள் மீதான அதிருப்தி விலகும்.

மாணவர்களுக்கு - உயர் கல்விக்கான வாய்ப்பு அயல்நாட்டில் கிடைக்கும். படித்துக் கொண்டே வேலை பார்க்கும் வாய்ப்புகளும் உண்டாகும்.

கலைஞர்களுக்கு - எப்போதோ ஏற்பட்ட ஒப்பந்தம் இப்போது தேடி வரும். தன வரவு திருப்தி தரும்.

பொதுப் பலன் - சொத்து பிரச்சினை முடிவுக்கு வரும். வழக்கில் வெற்றி கிடைக்கும். காய்ச்சல், உடல் அசதி, முதுகில் கொப்புளம், படை முதலான அலர்ஜி பிரச்சினைகள் ஏற்படலாம். .

வணங்க வேண்டிய தெய்வம் - திருப்பட்டூர் பிரம்மா ஆலயம் சென்று வாருங்கள்.

சந்திராஷ்டம தினம் - புரட்டாசி -7 (செப்டம்பர் - 24)

**************************************************************


உத்திராடம் நட்சத்திரம் -


தன்னம்பிக்கை, தைரியம், உற்சாகத்துடன் திகழும் மாதம் இது.


உற்சாகம் ஊற்றாகப் பிறக்கும். நீண்டகாலப் பிரச்சினை அல்லது வழக்கு உங்களுக்கு சாதகமான தீர்ப்பைத் தரும் மாதம் இது.


புதிய வேலை கிடைப்பது, வேறு நிறுவனங்களுக்கு மாறுவது, பதவி உயர்வு பெறுவது என இதில் ஏதாவதொரு மாற்றம் உண்டு. தொழில் சிறப்பான பாதையில் செல்ல ஆரம்பிக்கும். அதாவது இதுவரை இருந்த சிக்கல்கள் விலகி நல்ல நிலைக்கு மாறும்.


அரசு வழியில் ஏற்பட்டிருந்த பிரச்சினை நல்ல முடிவுக்கு வரும். வருமான வரித்துறை பிரச்சினை சுமூகமாக மாறும். வங்கியில் பழைய கடன்களை அடைத்து புதிய கடன் வாங்கும் யோகம் உண்டு. தடைப்பட்டிருந்த திருமணம் இப்போது நடப்பதற்கான சூழல் ஆரம்பமாகும். முக்கியமாக கைம்பெண்களுக்கு இப்போது மறுமணம் நடக்கும்.

பெண்களுக்கு - குடும்பத்தில் சுபகாரியங்கள் நடப்பதற்கான அறிகுறிகள் ஏற்படும். பதவி உயர்வும் ஊதிய உயர்வும் ஏற்படும். வீடு முதலான அசையா சொத்துகளை வாங்குவீர்கள்.

மாணவர்களுக்கு - கல்வியில் அபரிமிதமான முன்னேற்றம் உண்டு. ஆராய்ச்சிக் கல்வியில் நல்ல முடிவுகள் ஏற்பட்டு, பட்டம் பெற அனைத்து வாய்ப்புகளும் உண்டாகும்.

கலைஞர்களுக்கு - தேடித்தேடி ஓடியும் கிடைக்காத வாய்ப்புகளும் வீடு தேடி வரும் தருணம் இது.

பொதுப் பலன் - இடுப்பு மற்றும் ஆசனவாய் பிரச்சினைகள் வரும். மூட்டு வலி, வீக்கம், சுளுக்கு முதலான பிரச்சினைகள் வர வாய்ப்பு உண்டு.

வணங்க வேண்டிய தெய்வம் - திருவந்திபுரம் ( திருவகீந்திரபுரம்) ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் ஆலயம் சென்று தரிசித்து வாருங்கள். அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று தரிசியுங்கள். நினைத்த காரியமெல்லாம் நடந்தேறும்.

சந்திராஷ்டம தினம் -புரட்டாசி - 8 (செப்டம்பர் - 25)

******************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

16 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

மேலும்